Saturday, April 16, 2005

மாமனிதர்

வரலாற்றை புரட்டிப்பார்த்தால் எத்தனையோ தலைவர்களும் அறிஞர்களும் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் நிச்சயமாக ஒரு இறைத்தூதராகத்தான் இருக்கவேண்டும் என்று அவரின் வாழ்க்கையை படித்து தன் கருத்துகளை தெரிவித்துள்ளார்கள்.

இறுதி மூச்சுவரை ஏகத்துவத்தை, ஒருவனே தேவன் என்பதை பிரச்சாரம் செய்து, அசைக்கமுடியாத இறைநம்பிக்கையுடன் இருந்து, தாமே இறைவனின் தீர்க்கதரிசி என்ற உள்ளுணர்வுடன் உரிமை கொண்டாடிய முஹம்மது நபி அவர்களின் நபித்துவத்தை எவரே மறுக்க முடியும்?
- வாஷிங்டன் இர்விங் -


ஆனால் துவேசம் கக்கும் ஒருசிலர் முஹம்மது நபியின் வாழ்க்கையை படித்திராதவர்களிடம் அவதூறு பரப்புவதில் தீவிரமாக இருந்தாலும் இத்தகைய எள்ளல்களின் விளைவுகள் அவர்களின் எண்ணங்களுக்கு எதிராகத்தான் இதுவரை அமைந்துவந்திருக்கிறது.

இஸ்லாத்தின் நிறுவனருடையதைக் காட்டிலும் அதிக ஆச்சரியம் தரக்கூடிய வாழ்க்கை முறை வரலாற்றிலே வேறெங்கும் இல்லை. அவரைப்போல் உலகத்தின் தலைவிதியில் ஆழ்ந்த விளைவுகளை ஏற்படுத்திய மனிதர்களைக் காணுதலும் அரிது.
- ஜி.ஜி. கெல்லட் -

துவேஷம் என்னும் கருமேகக் கூட்டத்தை விலக்கி விட்டு உண்மையென்னும் கதிரவன் ஒளிபரப்பும் நன்னாள் ஒன்று வரலாம். அப்போது மேல் நாட்டு ஆசிரியர்கள், 'முஹம்மது ஒரு சரித்திர நாயகர்' என்று கூறுவதோடு இப்போது நிறுத்திக்கொள்கிறார்களே, அப்படியின்றி, அதற்கப்பால் சென்று அவர்களுடைய வாழ்க்கையை அணுகி ஆராய்ந்து மனிதத்துவத்தின் வரலாறு என்ற பொன்னேடுகளில் நபிகள் நாயகம் அவர்களுக்குரிய இடத்தை அளிப்பார்கள்.
- எஸ். எச். லீடர் -


இத்தகைய போற்றுதலுக்கு காரணம் உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவராக, ஏழைகளின் துயர் நீக்க பாடுபட்டவராக, நம்பிக்கைக்கு உரியவராக, பொய் சொல்லாதவராக, ஆன்மீக தலைவராக, சிறந்த ஆட்சியாளராக, மெளட்டீகத்தை உடைத்தெரிந்தவராக, எளிமையை கடைப்பிடித்தவராக இன்னும் பல நற்பண்களை தனது வாழ்க்கையில் கடைப்பிடிப்பவராக இருந்ததால்தான்.

முஹம்மது நபியின் நற்பண்புகள் எனக்குப் பிடித்திருக்கின்றன. மனித வாழ்க்கையைப் பற்றிய அவருடைய கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன். இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் பிரிட்டன் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டு விடும் என்று எதிர்பார்க்கிறேன்.
- பெர்னாட்ஷா -


முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்தபின்னர், மற்ற அரசர்கள் அச்சம் கொள்ளும் அளவுக்கு வல்லரசாகவே திகழ்ந்தார். ஆனால் வல்லரசு நாட்டின் ஆட்சித் தலைவர் விரும்பி ஏற்றுக் கொண்ட வாழ்க்கை பின்வருமாறுதான் இருந்தது.

எங்கள் வீடுகளில் மூன்று மாதங்கள் அடுப்பு பற்ற வைக்கப்படாமலே கழிந்திருக்கிறது என்று முஹம்மது நபி(ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள். என் சிறிய தாயாரே அப்படியானால் உயிர் வாழ எதை உண்பீர்கள்? என்று நான் கேட்டேன். அதற்கு ஆயிஷா(ரலி) அவர்கள் பேரீச்சம் பழமும் தண்ணீரும் தான் எங்கள் உணவாக இருந்தது சில நேரங்களில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த தோழர்கள் கறந்த பாலை அன்பளிப்பாகத் தருவார்கள் அதை அருந்துவோம் என விடையளித்தார்கள்.
நூல்: புகாரி, முஸ்லிம்

நபிகள் நாயம்(ஸல்) அவர்கள் தீட்டப்பட்ட (தோல் நீக்கப்பட்ட) கோதுமையில் தயாரான ரொட்டியைச் சாப்பிட்டதுண்டா? என்று நபிகள் நாயகத்தின் பணியாளர்களில் ஒருவரான ஸஹல் பின் ஸஅது அவர்களிடம் கேட்டேன் அதற்கு அவர்கள் முஹம்மது நபி(ஸல்) அவர்களை இறைவன் தனது தூதராக அனுப்பியது முதல் அவர்கள் மரணிக்கும் வரை சலிக்கப்பட்ட மாவில் தயாரான ரொட்டியைச் சாப்பிட்டதேயில்லை என்றார்கள். முஹம்மது நபி(ஸல்) அவர்களின் காலத்தில் உங்களிடம் சல்லடைகள் இருந்தனவா? என்று கேட்டேன். அதற்கவர்கள் முஹம்மது நபி(ஸல்) அவர்களை அல்லாஹ் தனது தூதராக அனுப்பியது முதல் அவர்கள் சல்லடையைப் பார்த்ததில்லை என்றார்கள். தீட்டப்படாத (தோல் நீக்கப்படாத) கோதுமை மாவைச் சலிக்காமல் எப்படி சாப்பிடுவீர்கள்? என்று நான் கேட்டேன். அதற்கவர்கள் நாங்கள் தீட்டப்படாத கோதுமையைத் திருவையில் அரைப்போம் பின்னர் வாயால் அதை ஊதுவோம் உமிகள் பறந்துவிடும் எஞ்சியதைத் தண்ணீரில் குழைத்துச் சாப்பிடுவோம் என்று விடையளித்தார்கள்.
நூல்: புகாரி

ஹஜ் பெருநாள் பண்டிகையின் போது கறிக்குழம்பில் மீதமாகக் கிடக்கும் ஆட்டின் கால் பகுதியை பதினைந்து நாட்களுக்குப் பிறகு எடுத்து வைப்போம் அதை முஹம்மது நபி(ஸல்) அவர்கள் சாப்பிடுவார்கள் என்று நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா(ரலி) கூறினார்கள் இதற்கு என்ன அவசியம் நேர்ந்தது? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர்கள் சிரித்து விட்டு குழம்புடன் கூடிய ரொட்டியை முஹம்மது நபி(ஸல்) அவர்களின் குடும்பத்தினாராகிய நாங்கள் மூன்று நாட்கள் வயிறார உண்டதில்லையே என விளக்கமளித்தார்கள்.
நூல்: புகாரி

முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பசியோடு இருந்ததை அறிந்து எனது வீட்டிலிருந்து கோதுமை ரொட்டியையும் வாசனை கெட்ட கொழுப்பையும் கொண்டு சென்றேன். அவர்களின் வீட்டில் ஒரு சந்தர்ப்பத்திலும் ஒரு மரக்கால் கோதுமையோ அல்லது வேறு ஏதேனும் தானியமோ இருந்ததில்லை என்று நபிகள் நாயகத்தின் பணியாளர் அனஸ்(ரலி) கூறினார்கள்.
நூல்: புகாரி

முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் வயிறு ஒட்டிய நிலையில் படுத்திருந்ததை நான் பார்த்தேன் உடனே என் தாயார் உம்மு சுலைம் அவர்களிடம் வந்து இதைக் கூறினேன். அதற்கவர்கள் என்னிடம் ஒரே ஒரு ரொட்டித்துண்டும் சில பேரீச்சம் பழங்களும் தான் உள்ளன. அவர்கள் மட்டும் வருவார்களானால் அவர்களின் வயிறு நிரம்பும். யாரையேனும் உடன் அழைத்து வந்து விட்டால் அவர்களுக்குப் போதாமல் போய்விடும் என்றார்கள், என நபிகள் நாயகத்தின் பணியாளர் அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி

ரொட்டியுடன் தொட்டுக் கொள்வதற்கு குழம்பு இல்லாமல் வினிகரை வைப்போம் வினிகர் சிறந்த குழம்பாகவுள்ளதே எனக் கூறி அதை முஹம்மது நபி(ஸல்) அவர்கள் சாப்பிடுவார்கள் என்று நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல். புகாரி

(தொடரும்)

Thursday, April 14, 2005

இஸ்லாம் - முஸ்லிம் அல்லாதோர் பார்வையில் - 4

"நபிகள் நாயகம்தான் கல்கி அவதாரம்!"(?)

("மக்களுக்கு வழிகாட்ட இறைவனே மனித வடிவில் பிறக்கிறான்" எனும் அவதாரக் கொள்கையை இஸ்லாம் ஒப்புக் கொள்வதில்லை. மனிதர்களுக்கு வழிகாட்ட மனிதர்களில் இருந்தே தன் தூதர்களை இறைவன் தேர்ந்தெடுக்கிறான் என்பதே இஸ்லாம் கூறும் தூதுத்துவம். இறுதித்தூதர் வர இருக்கிறார் எனும் முன்னறிவிப்பு எல்லா வேதங்களிலும் சொல்லப்பட்டுள்ளது. இந்து வேதத்திலும் "கல்கி" பற்றி கூறப்பட்டுள்ளது. அந்த "கல்கி" வந்துவிட்டார், அவர்தாம் முஹம்மது நபி(ஸல்) என்று இந்துமத அறிஞர் ஒரு கூறியுள்ளார். அவருடைய ஆய்வுத்தகவலை இங்கு தந்துள்ளோம்)

இந்து வேதங்களில் சொல்லப்பட்டுள்ள கல்கி அவதாரம் முஹம்மது நபி அவர்கள் தாம் என்று இந்துமத அறிஞர்கள் சிலர் ஆதாரங்களின் அடிப்படையில் தங்கள் கருத்துகளைச் சொல்லியுள்ளனர். கல்கியைப் பற்றி சொல்லப்பட்டுள்ள முன்னறிவிப்புகள் பல முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு அப்படியே பொருந்துகின்றன..

பவிஷ்ய புராணத்தில் பின்வரும் சுலோகம் காணப்படுகிறது:

"ஏதஸ் மின்னந்தரே மிலேச்சர் ஆச்சார்யண ஸமன் வித மஹாமத் இதிக்கியாத"

சிஷ்ய சாகா ஸமன்விதம்.."


(பாகம் 3, சுலோகம் 3, சூத்திரம் 5-7)

இதன் பொருள்:
"அந்நிய நாட்டிலே ஒரு ஆசாரியார் (ஆன்மிக குரு) தம் சீடர்களுடன் வருவார். அவருடைய பெயர் மஹாமத் (முஹம்மத்)."

இந்த சுலோகம் ஆதாரப்பூர்வமானதுதானா என்பது பற்றி இந்துப் பண்டிதர்களிடையே கருத்துவேறுபாடுகள் காணப்பட்டாலும், பெரும்பாலான சமஸ்கிருத அறிஞர்கள் இந்த சுலோகம் ஆதாரப்பூர்வமானதே என்று ஏற்றுக்கொள்கிறார்கள்.

அலஹாபாத் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், புகழ்பெற்ற சமஸ்கிருத அறிஞரும், வங்காள பிராமணருமான பண்டிட் வேத் பிரகாஷ், இந்துப் புராணங்களையும் வேதங்களையும் நன்கு ஆராய்ந்து இந்துக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் கல்கி அவதாரம் வேறு யாருமல்ல, அது நபிகள் நாயகம் தான் என்று ஆணித்தரமாக நிரூபிக்கும் வகையில் ஓர் ஆய்வு நூலை வெளியிட்டுள்ளார்.

அதுமட்டுமல்ல, சமஸ்கிருதத்தில் புகழ்பெற்ற இன்னும் எட்டு அறிஞர்களிடம் தம் ஆய்வு முடிவுகளைச் சமர்ப்பித்து, அவர்களின் ஒப்புதலையும் பெற்ற பிறகுதான் அந்த நூலை அவர் வெளியிட்டுள்ளார்.. அவருடைய ஆய்வு முடிவுகளின் சுருக்கமான விவரம் வருமாறு:

உலக மக்கள் அனைவருக்கும் பகவானின் செய்தியைக் கொண்டு வருபவராக கல்கி இருப்பார் என்று வேதங்கள் கூறுகின்றன. இது நிச்சயமாக முஹம்மது நபி அவர்களுக்குத்தான் பொருந்துகிறது.

கல்கியின் தந்தை பெயர் விஷ்ணு பகத், தாயின் பெயர் சோமாநிப் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்தில் "விஷ்ணு" என்றால் இறைவன்(அல்லாஹ்), "சோமாநிப்" எனும் சொல்லுக்குப் பொருள் அமைதி - சமாதனம் என்பதாகும். "ஆமினா" என்பதற்கும் அதுதான் பொருள். அப்துல்லாஹ்வும் ஆமினாவும் தான் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் தந்தையும் தாயும்.

கல்கி ஆலிவ் எண்ணையையும் பேரீச்சம் பழங்களையும் உணவாகக் கொள்வார் என்றும், "நம்பிக்கையாளர்" என்று மக்களால் போற்றப்படுவார் என்றும் வேதங்களில் சொல்லப்பட்டுள்ளது. ஆலிவ் எண்ணையையும் பேரீத்தம் பழங்களையும் உணவாக் கொண்ட நபிகள் நாயகம் அவர்களை "அல் அமீன்" (நம்பிக்கையாளர்) என்று மக்கள் போற்றினர்.

மிகவும் உயர்ந்த குடும்பத்தில் - உயர்ந்த கோத்திரத்தில்தான் கல்கி பிறப்பார் என்று வேதம் கூறுகிறது. மக்காவில் மிக உயர்ந்த குடும்பமான குறைஷிக் குடும்பத்தில் - ஹாஷிம் கோத்திரத்தில்தான் நபிகளார் பிறந்தார்.

குகையில் வைத்துதான் பகவானின் செய்திகள் தேவதூதன் மூலம் கல்கிக்கு கிடைக்கும் என்று வேதம் கூறுகிறது. "ஹிரா" குகையில் இருக்கும்பொதுதான் ஜிப்ரீல் எனும் வானவர் மூலம் இறைவனின் திருச்செய்திகள் அண்ணல் நபிகளாருக்கு அருளப்பட்டன.

கல்கிக்கு அதி வேகமுள்ள ஒரு குதிரையை பகவான் அருளுவார் என்றும், அதன் மூலம் அவர் உலகத்தையும் ஏழு வானங்களையும் சுற்றி வருவார் என்றும் வேதத்தில் பதிவாகியுள்ளது. இது அண்ணலார் அவர்களின் விண் பயணத்தைதான் (மிஃராஜ்) குறிக்கிறது.

பகவானின் அளவற்ற அருளும் துணையும் கல்கிக்கு கிடைக்கும் என்றுள்ளது. நபி(ஸல்) அவர்களின் வாழ்வு முழுவதிலுமே இந்த தெய்வீகத்துணை கிடைத்துள்ளது.

குதிரையேற்றத்திலும், அம்பு எய்வதிலும், வாள் போரிலும் கல்கி நிபுணராய் இருப்பார் என்ற அறிவிப்பு உள்ளது. முஹம்மது நபி இவை எல்லாவற்றிலும் சிறப்புற்று விளங்கினார்.

ஆகவே 1400 ஆண்டுகளுக்கு முன்பே கல்கி அவதரித்து விட்டார். அவர் தாம் முஹம்மது நபி என்று அழுத்தம் திருத்தமாக கூறுகிறார் பண்டிட் வேத் பிரகாஷ்.

-சசி-

நன்றி : சமரசம் 1-15 ஜுன் 2004

Sunday, April 10, 2005

இஸ்லாம் - முஸ்லிம் அல்லாதோர் பார்வையில் - 3

அறிஞர்கள் போற்றும் பெருமானார்

முஹம்மது நபியின் வெற்றிக்கு முதல் காரணம், அவர்கள் கொண்டிருந்த உறுதியும் ஊக்கமும். இத்தகைய உறுதி அந்தக் காலச் சூழ்நிலையில் ஏற்படுவது எளிதன்று. இரண்டாவது காரணம். இஸ்லாம் போதிக்கும் சமத்துவமும் சகோதரத்துவமுமாகும்.
- ஜவஹர்லால் நேரு -

துவேஷம் என்னும் கருமேகக் கூட்டத்தை விலக்கி விட்டு உண்மையென்னும் கதிரவன் ஒளிபரப்பும் நன்னாள் ஒன்று வரலாம். அப்போது மேல் நாட்டு ஆசிரியர்கள், 'முஹம்மது ஒரு சரித்திர நாயகர்' என்று கூறுவதோடு இப்போது நிறுத்திக்கொள்கிறார்களே, அப்படியின்றி, அதற்கப்பால் சென்று அவர்களுடைய வாழ்க்கையை அணுகி ஆராய்ந்து மனிதத்துவத்தின் வரலாறு என்ற பொன்னேடுகளில் நபிகள் நாயகம் அவர்களுக்குரிய இடத்தை அளிப்பார்கள்.
- எஸ். எச். லீடர் -

இறுதி மூச்சுவரை ஏகத்துவத்தை, ஒருவனே தேவன் என்பதை பிரச்சாரம் செய்து, அசைக்கமுடியாத இறைநம்பிக்கையுடன் இருந்து, தாமே இறைவனின் தீர்க்கதரிசி என்ற உள்ளுணர்வுடன் உரிமை கொண்டாடிய முஹம்மது நபி அவர்களின் நபித்துவத்தை எவரே மறுக்க முடியும்?
- வாஷிங்டன் இர்விங் -

நபிகள் நாயகம் தோற்றுவித்த தெய்வத்தன்மை பொருந்திய புனிதமான அரசாங்கம் முற்றமுற்ற ஜனநாயகக் கொள்கையை மேற்கொண்டதாகும் மனித குலம். முழுவதும் பின்பற்றத் தக்க உயரிய கோட்பாடுகளை உடையது நபிகள் நாயகம் கொண்டுவந்த இஸ்லாம். அனைத்தையும் உள்ளடக்கியது இஸ்லாம். அகிலமே ஏற்றுக்கொள்ளக் கூடியது. அண்ணல் நபிகள் எளிய வாழ்க்கை அவருடைய மனிதத்தன்மையை தெளிவாக்கியுள்ளது.
- டாக்டர் ஜான்சன் -

முஹம்மது நபியின் நற்பண்புகள் எனக்குப் பிடித்திருக்கின்றன. மனித வாழ்க்கையைப் பற்றிய அவருடைய கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன். இந்த நூற்றான்டின் இறுதிக்குள் பிரிட்டன் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டு விடும் என்று எதிர்பார்க்கிறேன்.
- பெர்னாட்ஷா -

திருக்குர்ஆனுக்கும் தூதர் முஹம்மது அவர்களுக்கும் என் விசுவாசத்தை வழங்குகிறேன். குர்ஆனின் கொள்கைக்கு இணங்க ஒரே விதமான ஆட்சியை உலகெங்கும் நிறுவக்கூடிய காலம் வெகுதூரத்தில் இல்லை.
- நெப்போலியன் -

இஸ்லாத்தின் நிறுவனருடையதைக் காட்டிலும் அதிக ஆச்சரியம் தரக்கூடிய வாழ்க்கை முறை வரலாற்றிலே வேறெங்கும் இல்லை. அவரைப்போல் உலகத்தின் தலைவிதியில் ஆழ்ந்த விளைவுகளை ஏற்படுத்திய மனிதர்களைக் காணுதலும் அரிது.
- ஜி.ஜி. கெல்லட் -

சர்வ சக்தியும் படைத்த இறைவன் தனக்குத் துணையாக நிற்கிறான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை நபிகள் நாயகம் அவர்களுக்கு இல்லாதிருந்தால் இவ்வளவு பிரமாண்டமான சாதனைகளை அவர் சாதித்திருக்கமுடியாது.
- வில்லியம்மூர் -

ஆட்சி புரியும் அமைச்சர்கள் நபிபெருமான் வகுத்த சீர் திருத்தங்களை பின்பற்றி நடக்கவேண்டும்.
- காந்திஜி -

நபிகள் நாயகம் இவ்வுலகில் மக்களுக்குப்புரிந்த போதனைகள் அனைத்தும் உண்மை பொதிந்தவை. கருத்தாழம் மிக்கவை. விசுவாசம் கொள்ளத்தக்க வேதம் ஒன்றிருந்தால் அது நபிகள் நாயகத்துக்கு அருளப்பட்ட திருக்குர்ஆனேயாகும்.
- தாமஸ் கார்லைல் -

நாகரிகம் முதிர்ந்த இந்நாளில் கூட மக்களைச் சீர்திருத்த முனைகிறவர்கள் படுகிற பாட்டைப் பார்க்கும்போது, பல நூற்றாண்டுகளுக்கு முன் அநாகரிகத்தில் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் முஹம்மது நபி அவர்கள் புரிந்த சாதனைகளும், சீர்திருத்தங்களும் முரடர்களுக்கும் சகிப்புத் தன்மையும் நேர்மையையும் வழங்கி, அவர்களை மெய்யான வாழ்க்கையின் பக்கம் இழுத்துவந்து வெற்றியை நிலைபெறச் செய்த பெருமை வெறும் நாவினால் புகழ்ந்து விடக்கூடியதல்ல.
- டால்ஸ்டாய் -

அறம் செய்வது எப்படி என்பதைப் பற்றி தெளிவாக திட்டவட்டமாக வரையறுத்துக் கூறிய ஒரே ஒரு சட்டமேதையாக விளங்குபவர் முஹம்மது நபி ஒருவரே.
- கிப்பன் -

செந்தழலைக் குளிராகவும், சினங்கொண்டு சீறிவரும் பகையைக் குணங்கொண்ட நட்பாகவும் மாற்றவல்ல மனவலிமைமிக்க மேலோர் நபிகள் நாயகம்.
- கலைஞர் கருணாநிதி -

எந்த சகோதரத்துவ அடிப்படையில் புதிய உலகத்தை நிர்மாணிக்க வேண்டுமென்று இன்றைய நாகரிக உலகம் விரும்பி நிற்கிறதோ, அதே சகோதரத்துவத்தை அன்றைக்கே பாலைவனத்தில் ஒட்டகம் ஒட்டிக்கொண்டிருந்த மனிதரால் பிரசாரம் செய்யப்பட்டது.

எனது முன்னோர்கள் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு தத்துவ ஞான உபதேசம் செய்து கொண்டிருந்த காலத்தில் அரபுநாடு அந்தகாரத்தில் மூழ்கிக் கிடந்தது. அநாகரிகமும் காட்டுமிராண்டித்தனமும் அங்கு குடி கொண்டிருந்தன. புத்தர், புத்தகயாவில் போதி மரத்தடியிலும் சாரநாத்திலும் நிர்வாணம் பற்றி பிரச்சாரம் செய்து கொண்டிருந்த காலத்தில் உலக ஜனநாயம் என்றால் என்னவென்றே ஒருவருக்கும் தெரியாது. ஆனால் அது எதிர்த்தும் போரிடப்பட்டது. கால்களால் மிதித்துத் துவைக்கப்பட்டது.

எனவே, ஆரேபியாவிலே ஒட்டகம் ஒட்டிக்கொண்டிருந்த ஒரு மனிதர் இறுதியாக இந்த உலகில் தோன்றி ஏக சகோதரத்துவத்துக்கு ஒரு சரியான விளக்கம் கூற வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது. எந்த விதமான உயர்வும் தாழ்வும் வேற்றுமையும் இல்லாத மக்களைக்கொண்ட ஒரு 'குடிஅரசு' எப்படி இருக்கவேண்டும் என்பதை அவரே விளக்க வேண்டியிருந்தது.
ஒட்டகம் ஒட்டிக்கொண்டிருந்த இந்த மனிதர் யார்? இவர் உலகத்துக்கு நம்பிக்கையூட்டும் நல்ல செய்தியைக் கொண்டு வந்தது ஏன்?
பல பெரிய மதங்கள் மீது மாசு படிந்து விட்டது. அந்த மதங்களின் குருமார்கள் இழைத்த கொடுமைகள் சகிக்கமுடியவில்லை. என வேதத்துக்கு மாசு கற்பித்த அந்தக் கொடுமைகளிலிருந்து விடுதலைபெற வேண்டும் என்று இந்த உலகம் விழைந்தது.

உலக மக்களுக்கு அவ்வப்போது இழைக்கப்படுகின்ற கொடுமைகளிலிருந்து அவர்களை எப்படியாவது விடுவித்து வருகின்ற ஆண்டவன் இந்த சாதாரண பாலைவன மனிதரின் இதயத்திலே, 'ஆண்டவன் ஒருவன்' என்ற உண்மையை உணர்த்தினான். ஆண்டவனால் படைக்கப்பட்ட மக்கள் அனைவரும் சகோதரர்கள் என்ற உண்மையை உணர்த்த இந்த ஏக தெய்வக் கொள்கையே போதிய ஆதாரமாயிருக்கிறது.

மேல் நாடுகள் எதையெல்லாம் புதிய கருத்துக்கள் என்றும் மகத்தான சாதனைகள் என்றும் கூறுகின்றனவோ, அவையெல்லாம் அந்த அரேபியாவின் பாலைவனச் சோலையிலே விதைக்கப்பெற்ற வித்துக்களின் விருட்சங்களேயன்றி அவற்றில் புதியது ஒன்றுமில்லை.

இன்று ஐரோப்பாவில் தோன்றியுள்ள நாகரிகத்துக்கு மூல காரணம், ஆழ்கடல்களைக் கடந்து சென்று ஸ்பெயினில் குடியேறிய முஸ்லிம்களின் கலைஞானமும், கல்வியுமே என்ற உண்மைதான் எத்தனை பேருக்குத் தெரியும்? பாரசீக இலக்கியம் ஆரியர்களுடையது என்று சொல்லிக்கொண்டு அதனை ஆர்வத்துடன் படிக்கின்றனர். சிலர் ஆனால் அந்த அழகிய மொழிக்கு ஆண்மையும் வீரமும் அளித்தவர்கள் அரபு நாட்டுப் போர் வீரர்கள் என்ற உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்?
- கவியரசி சரோஜினி நாயுடு -

Tuesday, April 05, 2005

மேல்மாடி மின்னல்கள்

கங்காவின் "தினம் ஒரு ஸென் கதை" விஷயங்கள் மேல்மாடி Capacity பிரச்சினையால் மண்டையில் ஏறுவதில்லை. ஆனால் "ஆமைகளின் சுற்றுலா" என்ற தலைப்பு ஈர்த்ததால் சொடுக்கி பார்த்தபோது மேல்மாடியில் பல மின்னல்கள் எழுந்தன.
கங்கா தனது பதிவில் இட்ட அக்கதை இதுதான்:ஆமைகளின் சுற்றுலா

ஒரு ஆமைக் குடும்பமானது சுற்றுலா செல்ல முடிவெடுத்தது. குடும்பத்தில் இருந்த எல்லா ஆமைகளும் சுற்றுலாவுக்கு வருவதற்கு சம்மதிக்க ஏழு வருடங்கள் பிடித்தன. இயல்பிலேயே மிகவும் மந்தமாக சுறுசுறுப்பின்றி செயல்பட்டதால், எல்லா குடும்ப உறுப்பினர்களுக்கும் பிடித்தமான சுற்றுலா இடத்தினைக் கண்டு பிடிக்க அடுத்த இரண்டு வருடங்கள் ஆனது. சுற்றுலாவுக்காக கண்டு பிடித்த இடத்தினை சுத்த படுத்த அடுத்த ஆறு மாதங்கள் எடுத்துக் கொண்டன. அடுத்த இரண்டு மாதங்களில் தாங்கள் கொண்டு வந்த கூடையிலிருந்து எல்லா சாமன்களையும் எடுத்து வைத்து, சிற்றுலாவுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்தன.

எல்லாவற்றையும் முடித்த போது, தாங்கள் வரும் போது உப்பினை கொண்டு வராததைக் கண்டு பிடித்தன. உப்பு இல்லாத பிக்னிக், நிறைவானதாக இருக்காது என்று எண்ணி அவர்களில் ஒருவரை அனுப்பி உப்பு கொண்டு வருவது என தீர்மானித்தன. இருந்த ஆமைகளிலிலேயே மிகவும் வேகமாக செல்லக் கூடிய ஒரு குட்டி ஆமையை உப்பு கொண்டு வருவதற்க்காக தேர்ந்தெடுத்தன. ஆனால் சின்ன ஆமையோ போவதற்கு மனம் இல்லாமல் சோம்பல் பட்டுக் கொண்டு அழுதது. தன்னுடைய தலையை ஓட்டுக்குள் இழுத்துக் கொண்டு செல்ல மாட்டேன் என்று அங்கிருந்து நகராமல் அடம் பிடித்தது.

கடைசியாக மற்ற எல்லா ஆமைகளின் வற்புறுத்தலுக்காக அங்கிருந்து செல்வதற்கு ஒப்புக் கொண்டது. ஆனால் தான் திரும்பி வரும் வரை யாரும் சாப்பிடக் கூடாது அப்பொழுதுதான் தான் செல்வேன் என்று உறுதி மொழி வாங்கிக் கொண்டு அங்கிருந்து நகன்றது. குடும்ப உறுப்பினர்களும் தங்களுடைய உறுதி மொழியின் படி சாப்பிடாமல் அங்கேயே சின்ன ஆமைக்காக காத்திருக்க ஆரம்பித்தன. ஐந்து வருடங்கள்.. ஆறு வருடங்கள்.. கடைசியாக ஏழு வருடமும் முடிந்தது. ஆனால் அந்தக் குட்டி ஆமை திரும்பி வரவே இல்லை.

பசி பொறுக்காத ஒரு பெரிய ஆமை கடைசியாக கொண்டு வந்திருந்த பொட்டலத்தினை பிரிக்க ஆரம்பித்தது. பின்பு மற்ற ஆமைகளையும் சாப்பிடுவதற்காக சத்தமாக அழைத்தது. அந்த சமயத்தில் பக்கத்திலிருந்த மரத்தின் பின்புறத்திலிருந்து தலையை தூக்கி வெளியே வந்த குட்டி ஆமை "ஆ, எனக்குத் தெரியும், நான் வரும்வரை உங்களால் காத்திருக்க முடியாது என்று, அதனால் நான் உப்பு எடுப்பதற்காக போக மாட்டேன்" என்று சத்தமாக கத்திக் கொண்டே கூறியது.

http://zendaily.blogspot.com/2005/04/blog-post_04.html

(இந்தக் கதைகளை உங்கள் வலைப்பூக்களில் தேவையான இடங்களில் பொருத்தமாக உபயோகித்துப் பாருங்களேன் என்று கங்கா எழுதியதை அனுமதியாக நினைத்து இங்கு பதிந்துள்ளேன்).


இக்கதை சொல்லும் ஒருசில விஷயங்கள் நம்மூர் அரசியல்வாதிகளுக்கும் மற்றவை தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் மிகப்பொறுத்தமாக இருக்கும்.

மின்னல்கள் இதோ:

மின்னல்-1) தற்போதைய சூழ்நிலையை சரிகட்டுவதற்காக தகுதியற்ற ஆளுக்கு பொறுப்பு கொடுத்து பிறகு குய்யோ முறையோ என புலம்புவது. என் கோபமெல்லாம் தகுதியற்ற ஆளிடம் கொடுக்க சிபாரிசு செய்து தன் தலைக்கு அவ்வேலை வராமல் பார்த்துக்கொண்ட ஆசாமிகளின் (ஆமைகளின்) மீதுதான்.

மின்னல்-2) தம் தலையில் பொறுப்பு சுமத்தியவர்களை பழிதீர்க்கவும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்றால் அதனை தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்வது. இச்சந்தர்ப்பத்தில் தன் தலையை பாதுகாத்துக்கொள்ள பதில் சொல்ல முடியாத எதிர் கேள்வியை கேட்டு தப்பித்துக்கொள்வது.

மின்னல்-3) பொதுசேவை என வந்தபின்னரும் ஒருவருக்கு ஒருவர் நம்பிக்கையின்மை. அடுத்தவரின் நேர்மையின்மையை நிரூபிக்க யார் பாதிப்படைந்தாலும் பரவாயில்லை என வெறித்தனமான ஈடுபடுவது.

மின்னல்-4) சில நேரத்தில் நமக்கு கிடைக்கக்கூடிய பாடங்களுக்காக மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டி வரும். நமது புராஜக்ட் ஏற்பாட்டில் எல்லாம் கைகூடி ஒரு பொருள் குறைந்தால், அதனை சமாளிக்க முடியும் என்றால் சமாளித்துவிடுவது சிறந்தது. இல்லையென்றால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை கதைதான்.

மின்னல்-5) ஆமையின் தகுதிக்கு சுற்றுலாவுக்கு சம்மதிக்க ஏழு வருடங்கள் பரவாயில்லை. ஆமைக்கு வேண்டுமானால் சோம்பல் காரணமாக இருக்கலாம். பகுத்தறிவு பெற்ற மனிதனுக்கு அப்படியல்ல. யோசனை கேட்கப்பட்டதால் நடைமுறைக்கு ஒவ்வாத கருத்துகளை யோசனை என்ற பேரில் சபையில் வைத்து நேரத்தை வீணாக்குவது.