Monday, August 29, 2005

குஜராத்: மறைக்கப்படாத இறுதித்தீர்வுகள்

The Final Solution - குஜராத் படுகொலை: ஆவணப்படம்

நிறையப் படித்துவிட்டோம். குஜராத்தில் இந்து மதவெறி சங்கப் பரிவாரக் குரங்குகள் நடத்திய கொடூரத்தை. எழுத்துக்களாய் நீங்கள் படிக்கும் போது உங்களுக்குள் உருவகப்படுத்திக் கொண்ட காட்சிகளால் அல்லது வார்த்தைகள் தந்த உணர்ச்சிகளால் தாக்குண்டு, வெகுண்டெழுந்த உங்களது கோபம், இப்போது ஒருவேளை மட்டுப்பட்டிருக்கலாம். இந்துமத வெறியர்களின் கொலைவெறித் தாண்டவத்திற்கு உதாரணமாகக் குஜராத்தைச் சொல்லிச் சொல்லி உங்களையறியாமலேயே சலிப்படைந்து சடங்குத்தனமாய் வார்த்தைகள் உங்களிடமிருந்து வந்து கொண்டிருக்கலாம்.

உணர்ச்சி வசப்பட வைக்கும் எழுத்துக்களின் தீவிரம் நம்மை ஆட்கொள்ளும் காலத்தின் அளவு குறித்த வரையறை எதுவுமில்லைதான். ஆனால், அது நிச்சயமாகக் காட்சி ஊடகத்தின் தீவிரம் நம்மை ஆட்கொள்ளும் காலத்தின் அளவை விடக் குறைவுதான்.









சங்கப் பரிவாரக் குரங்கு ஒன்று இரண்டு கைகளையும் விரித்துக் கொண்டு வெறியோடு அலறும் புகைப்படத்தையும், இசுலாமியர் ஒருவர் இரு கைகளையும் கூப்பி வணங்கி கண்ணில் நீர் மல்க, மரண பீதியுடன் நிற்கும் புகைப்படத்தையும், ஏற்கெனவே பத்திரிக்கைகளில் பார்த்திருந்ததால், குஜராத் படுகொலை குறித்த ஆவணப்படம் ஒன்றைப் பார்த்தபோது, ஆரம்பத்தில் "ஒரே அழுகுரல், எங்கும் புகை, ஆங்காங்கே ஏதேதோ எரிந்து கொண்டிருக்கின்றன, வெட்டிச் சாய்க்கப்பட்ட பிணங்களாக மனிதர்கள், அலறி ஓடுகின்ற மக்கள், துரத்தி வரும் இந்து மதவெறியர்கள்....'' — இப்படித்தான் கற்பனை செய்து கொண்டிருந்தேன். ஆனால் படத்தில் அப்படி ஏதுமில்லை. பிஜேபியின் சித்தாந்தம் பாசிசம்தான் என்பதையும், பிஜேபி, விஎச்பி, ஆர்எஸ்எஸ், பஜ்ரங்தள் உள்ளிட்ட இந்து மதவெறிக் கும்பலெல்லாம் பாசிசக் கூட்டம்தான் என்பதையும், மிகத் தெளிவாக, ரத்த சாட்சியங்களாக நம்முன் வைக்கிறது இந்த ஆவணப்படம், நாம் இனிமேல் குஜராத்தை என்றென்றைக்கும் மறந்து விட முடியாதபடி. இப்படத்தின் பெயர்: (ஃபைனல் சொல்யூஷன்) இறுதித் தீர்வு படத்தை எடுத்தவர் ராகேஷ் சர்மா.

இந்து நஞ்சு

படத்தின் துவக்கத்திலேயே, படுகொலையினால் பாதிக்கப்பட்ட, படுகொலைகளை நேரில் பார்த்த முசுலீம் குடும்பத்துச் சிறுவன் இஜாஜ் உடன் நேர் காணல் வருகிறது. ஒரு நொடியில் நாம் அதை உணர்ந்து விடுவதால் ஓடிச் சென்று, கள்ளங்கபடமில்லாமல் மலங்க மலங்க விழித்தபடி பேசும் அவனைக் கட்டியணைத்து ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் எனச் சொல்ல வேண்டும் என மனம் துடிக்கிறது. படம் இரண்டரை மணி நேரம் ஓடுகிறது.

பக்தியை, கடவுளை, மதத்தை, மதவெறியை, கலவரம் மூலமாக, படுகொலைகள் மூலமாக, பாலியல் வன்முறை மூலமாக, தேர்தல் வெற்றியாக மாற்ற முடியும் என்பதைப் பாசிஸ்டுகள் நிரூபித்துக் காட்டுகிற விதத்தை தெளிவாக நாம் புரிந்து கொள்ளும்போது, படம் முடியப் போகும் நேரத்தில், மீண்டும் அதே சிறுவன் இஜாஜ் உடன் நேர் காணல் வருகிறது. கேள்விகளுக்கு அவன் பதில் சொல்வதைக் கேளுங்கள். இஜாஜ் படித்துக் கொண்டிருப்பது யூ.கே.ஜி.


இஜாஜ்: 1... 2... 3... எனக்கு எல்லா எண்களும் தெரியும். வீடு... பூக்கள் எல்லாம் செய்யத் தெரியும்.

கேள்வி: பெரியவனான பிறகு என்ன ஆவாய்?

இ: சோல்ஜராவேன்! பிறகு அவர்களைச் சுடுவேன்!

கே: யாரை?

இ: இந்துக்களை!

கே: ஏன்?

இ: ஏன்னா, அவர்களும் இதைத்தான் செய்தார்கள்!

கே: நீ ஏன் அவர்களை மோசமானவர்களாக நினைக்கிறாய்?

இ: .....கட்டாயம் அவர்களைக் கொல்வேன்!

கே: ஏன்?

இ: நான் அவர்களைச் சேதப்படுத்துவேன்!

கே: எல்லா இந்துக்களும் மோசமானவர்களா?

இ: அவர்கள் கெட்ட வார்த்தைகளைப் பேசினார்கள்!

கே: எந்த மாதிரி?

இ: நான் அந்தக் கெட்ட வார்த்தைகளைப் பேசமாட்டேன்.

கே: நான் ஒரு இந்து. நான் மோசமானவன்னு நெனக்கிறியா?

இ: (யோசித்து) இல்லை.

கே: நீ ஒரு சோல்ஜர். என்னைக் கொல்லணுமல்லவா?

இ: (தலையசைத்து) ஆமா, நா வேற யாரையும் தாக்க மாட்டேன். இந்துக்களை மட்டும்தான் கொல்வேன்.

கே: சரி! நா ஒரு இந்து.

இ: இல்லை. நீங்கள் அவர்களில்லை.

கே: நான் அவர்களைப் போல இல்லையா?

இ: (இல்லையெனும்படித் தலையசைக்கிறான்)

கேள்வி: அப்புறம்?

இஜாஜ்: நீங்கள் ஒரு முசுலீம்.

குஜராத்தில் நடத்தப்பட்ட படுகொலைகள், இசுலாமிய இளைஞர்கள், பெண்கள், குழந்தைகளிடம் என்ன எதிர்விளைவுகளை உண்டாக்கும்? அவைகள் எதிர்வன்முறைகளாக அமைந்தால், அது இந்துவெறியர்களுக்குத்தான் சாதகமானதாக இருக்கும் என்பதை எப்படி அவர்களிடம் விளக்கலாம் என்பதும்; கொழுந்துவிட்டு எரியும் இவர்களின் கோபத் தீக்கு என்ன சமாதானம் சொல்வது? எம்மாதிரியான தண்டனைகளை இந்து மதவெறிக் கும்பலுக்கு வழங்கினால், இவர்களின் ஈடு செய்ய முடியாத இழப்புகளைச் சமன் செய்ய முடியும் என்கிற கேள்வியும் — படத்தின் இடையிடையே அலைபோல எழும்பியெழும்பித் தணிந்து கொண்டிருந்தபோது இறுதியில் வரும் இஜாஜின் சொற்கள் நம்மை அதிர வைக்கின்றன.

இந்துக்கள் என்றாலே கொடூரமானவர்கள் என்கிற ஆழமான வடுவை இஜாஜ் போன்ற குழந்தைகளின் மனதில் பதித்து விட்டார்கள், ராமபக்தர்களான இந்துப் பாசிஸ்டுகள். தம்மை இந்துக்கள் என்று நம்பிக் கொண்டும், சொல்லிக் கொண்டும் திரிபவர்கள் இஜாஜின் கேள்விக்கு என்ன பதில் சொல்வார்கள்?

அது யாரோ வெறியர்கள் செய்தது என்றால், உங்களின் பெயரைப் பயன்படுத்தித்தான் அவர்கள் இதைச் செய்தார்கள் என்பதால் அவர்களுக்கு நீங்கள் என்ன தண்டனை வழங்கப் போகிறீர்கள்? பிஞ்சு மனதில் நஞ்சைக் கலந்து என்பார்களே, அதை அப்படியே பார்க்க முடிகிறது. அதுவும் இது இந்து நஞ்சு.

பிரச்சாரம் பயம் வெற்றி

பிஜேபியின் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களுடன் படம் துவங்குகிறது. முசுலீம்களை இழிவாகத் திட்டும் சிறுவர்கள். இஜாஜின் நேர் காணல். முசுலீம் முகாம்கள் இடிக்கப்பட்ட வீடுகள் — "போலீசு பஜ்ரங்தளுடன் சேர்ந்து கொண்டனர்'' என ஆவேசப்படும் முசுலீம்கள். போலீசு சுடும் காட்சி கலவரத்தை அடக்க போலீசால் சுடப்பட்டுச் செத்த 40 பேர்களில் 36 பேர் முசுலீம்கள். பாதிக்கப்பட்டவர்களின் நேர் காணல்கள். மோடியின் மதவெறியூட்டும் தேர்தல் பிரச்சாரப் பேச்சு. எல்லா இடங்களிலும் கோத்ரா பற்றியே பேச்சு.

கோத்ரா ரயிலில் இறந்த ஒரு பெண்ணின் இரண்டு புகைப்படப் பிரதிகளை வாங்கிக் கொண்டு போய், ஒன்றை விஎச்பி அலுவலகத்தில் கரசேவத் தியாகிகள் என கட்டம் போட்டும், இன்னொன்றை, வில்லோடும் வெறியோடும் சீறும் "ராம்'போவின் படத்துடன் இணைத்து லேமினேட் செய்தும் கொடுத்துள்ளார்கள். "எங்கம்மா கரசேவகர் இல்லை. விஎச்பிக்காரர்கள் அப்படி மாற்றி விட்டார்கள்'' என்று அவரது மகள், ஒரு சிறுமி சொல்கிறார்.

தேர்தல் பிரச்சாரம் ராவணனால் வாலில் தீ வைக்கப்பட்ட ஹனுமான் குஜராத்திற்கு வந்திருந்தார் எனப் பிரச்சாரம். நடக்கும் தேர்தல் பிஜேபிக்கும் காங்கிரசிற்குமல்ல; இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் பாகிஸ்தானே நமது எதிரி முஸ்ரஃபே எச்சரிக்கை இந்து வன்முறையாளர்கள் என்று சொல்கிறார்கள், இந்துக்களுக்கு வன்முறையில் நம்பிக்கையில்லை, இந்துக்கள் வன்முறையில் இறங்கினால் உலக வரைபடத்தில் பாகிஸ்தான் இல்லாமல் போகும் - பிரச்சாரம், இந்துமதவெறிப் பாசிசத்தின் உச்சகட்டப் பிரச்சாரம்.

இடையில் இந்துக்களுக்கு ஆதரவாகச் சிலர், ஒரு டாக்ஸி டிரைவர், இளம்பெண், கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள்... எனப் பேசுகிறார்கள். அவர்கள் பேசுவது பொய்தான் என்பதையும், உண்மையைச் சொல்ல வரும்போது அவர்கள் தடுமாறுவதையும் பேச்சை நிறுத்திக் கொள்வதையும், அவர்கள் மறைக்க நினைக்கும் இந்துத்துவச் சார்பை, டாக்ஸியில் இருக்கும் கண்ணாடிப் பிள்ளையார், பிரார்த்தனையை வலியுறுத்திப் பேசி, ஊதுபத்தி காட்டி, போலீசுக்குக் கும்பிடு போடும் இளம்பெண்... போன்றவைகளைக் கவனமாகக் காட்சிப்படுத்தியிருப்பதன் மூலமும் சிறப்பாக அம்பலப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

ஒரு ஆவணப்பட இயக்குநருக்கு அவசியம் இருக்க வேண்டிய "கருத்துக்களின் சார்பை வெளிக் கொணருதலை' ராகேஷ் சர்மா இதில் முழுமையாகச் செய்திருக்கிறார்.

ஒரு இந்துக் கோயிலில் குண்டைத் தேடியும், தீவிரவாதிகளைச் சுட்டதாகவும் காட்டும் ராணுவ நடவடிக்கைகளைக் காண்பித்து "சான்சூய் டிவி'யின் விளம்பரத்தைக் காண்பித்திருப்பது பொருத்தமான அம்பலப்படுத்துதலோடு கிண்டலாகவும்இருக்கிறது.

படத்திலுள்ள செய்திகள் ஏராளம், ஒரு நூல் எழுதுமளவிற்கு. மந்திரம், வேதம், புனிதம், பக்தி, கடவுள், தியானம், யோகம், ஆன்மீகம், காவி, துறவு, பூஜை, தேசபக்தி, ஸ்ரீராம், காளி, கணபதி... இன்னும் தான் அணிந்திருக்கிற எல்லாவிதமான முகமூடிகளையும் கழற்றி எறிந்துவிட்டு, தான் ஒரு பாசிசம்தான் என முழு அம்மணமாய் குஜராத்தில் நின்றிருக்கிறது இந்துத்துவம். அதற்கு ஆதாரம் இப்படம்.


···

சுகானா, அவரது மகள்கள் ரேஷ்மா, சபானா மூன்று பேரும் வன்புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்படுகின்றனர். பறிகொடுத்த உறவினரின் நேர் காணலுக்குப் பிறகு, அவர்கள் சீரழிக்கப்பட்ட, கொல்லப்பட்ட இடங்களையும், பார்வையிட்ட பிறகு, அத்தொகுதியின் பிஜேபி எம்.பி. பிரபலமான வக்கீல், கோபால்சிங் சோலங்கியிடம் அவரோடு காரில் பயணித்துக் கொண்டே நேர்காணல் துவங்குகிறது:

கே: நீங்கள் வழக்கறிஞராகச் செயல்பட்டு வருகிறீர்கள்.

எம்.பி: ஆம்! நான் முதலில் வக்கீல், அரசியல்வாதி பிறகுதான். அரசியல் என்னோடு கூடவே ஓடிவந்து கொண்டிருக்கிறது.

(கார் வக்கீல் அலுவலகத்திற்கு வந்துவிட்டது. ஏராளமான புகார்தாரர்கள். போலீசும் அமர்ந்திருக்கிறது. கேள்விகளுக்குச் சிலர் பதில் சொல்கிறார்கள்.)

பதில்: ஆம்! அவர் எங்கள் வக்கீல்!

கே: எப்படிப்பட்ட வக்கீல்?

ப: மிகத் திறமைசாலி அவருக்கு எல்லாச் சட்டமும் தெரியும்.

கே: என்ன வழக்கில் நீங்களெல்லாம் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறீர்கள்?

ப: செக்ஷன் 302, 307 அப்புறம் 376.

கே: எதுக்காக?

ப: 376 ரேப்... 302 கொலை

இசுலாமியப் பெண்கள் நரவேட்டையாடப்பட்டிருக்கிறார்கள். வேட்டையாடிய இந்து ஓநாய்களின் வக்கீல் பிஜேபியின் பாராளுமன்ற உறுப்பினர். வக்கீல் த எம்பி த கலவரம் த பாலியல் வன்முறை த படுகொலை த வக்கீலிடம் குற்றவாளிகள் கூட்டம் த சிறந்த வக்கீல் த பாலியல் வன்முறை, படுகொலை வழக்குகள் த வெற்றிகரமான வக்கீல் தொழில் த மிகத் துல்லியமாக இந்த வலைப்பின்னலை அம்பலப்படுத்தியிருக்கும் இயக்குநர் பாராட்டப்பட வேண்டியவர்.

ஆவணப்படம் எனும் வடிவத்தில் இச்செய்தியை ராகேஷ் சர்மா வெளிக் கொணரக் கையாண்டிருக்கும் பொருத்தமான தொகுப்பும், உத்தியும், ஆவணப்பட உலகினர் கவனம் கொள்ள வேண்டிய ஒன்று. இந்தப் பொருத்தமும், தொகுப்பும் ராகேஷ் சர்மாவிற்குக் கனகச்சிதமாய் அமைந்ததற்கு, பிரச்சினையின் உண்மையை அவர் தெளிவாகப் புரிந்து கொண்டிருப்பதுதான் அடிப்படை.

குற்றங்களைச் செய்வதற்கான குற்றவாளிகளை உருவாக்கிப் பணமும் சம்பாதிப்பதற்கு, பிஜேபிக்கு பயன்பட்டிருக்கிறது வக்கீல் தொழில். மைக்கேல் மூரின் "பாரன்ஹீட் 9/11''ஐ நினைவூட்டுகிறது இக்காட்சி. பணம் சம்பாதிக்க புஷ் குடும்பம் துவக்கிய ஈராக் போர். அங்கே அமெரிக்க "அப்பன் புஷ்'; இங்கே பிஜேபி எம்.பி சோலங்கி.

இவ்வளவு குரூரமான கலவரத்திற்குப் பிறகும் பிஜேபி தேர்தலில் எவ்வாறு வெற்றியடைந்தது என்பதைப் படம் தெளிவாக விளக்குகிறது.

சங்பரிவாரக் குரங்குகளால் தாக்கப்பட்ட முசுலீம் பகுதியிலுள்ள ஒரு இந்துவின் வீடு. வீட்டைச் சீர் செய்து கொடுத்திருக்கிறது இசுலாமியக் கமிட்டி — இவற்றையெல்லாம் சொல்லும் அந்தப் பெண்ணிடம், "யாருக்கு ஓட்டு போடுவீர்கள்?'' எனக் கேட்கப்படும் கேள்விக்கு அவர் சொல்லும் பதில் "பிஜேபிக்கு.'' காரணம்? பயம்.

"ஏன் மோடிக்கு ஓட்டுப் போடுவேன் என்கிறீர்கள்?'' இதற்கு ஒரு இளைஞனின் பதில், "அப்பத்தாங்க டென்ஷன் இல்லாமல் இருக்கலாம்.'' டென்ஷன் என்பது பயம்தான்.

பயத்தை விதைத்து தேர்தல் வெற்றியை அவர்கள் அறுவடை செய்திருக்கிறார்கள். முசுலீம்களிடம் மட்டுமல்ல இந்துக்களிடமும் அந்தப் பயம் மிக அதிகமாகவே இருந்திருக்கிறது. இந்தப் பயம்தான் பாசிஸ்டுகளுக்குத் தேர்தலில் வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது.


···

நாமும் இங்கிருந்தே கற்றுக் கொள்வோம். தேர்தலில் தோல்வியடைய வைப்பதன் மூலம் பாசிஸ்டுகளுக்குப் பாடம் கற்பிக்க முடியாது என்பதைத் தெளிவாக உணர்ந்திருக்கிற நாமும் அதே "பயம்' எனும் ஆயுதத்தையே எடுத்துக் கொள்வோம். பயம் என்பதை "பயப்பட வைத்தல்'' என்று மாற்றிக் கொள்வோம். தேர்தலில் அல்ல, தெருவில் திருப்பியடிப்போம். மதவெறிக் குரங்குகளைக் கட்டிவைத்து வாலில் தீ வைப்போம். பயம் அறுப்போம். துணிச்சல். துணிச்சல் ஒன்றுதான் வழி. மதவெறியர்களைப் பயப்பட வைக்கும் நடவடிக்கையில் இறங்கும் துணிச்சல் ஒன்றுதான் பாசிஸ்டுகளை ஒழித்துக் கட்டப் பயன்படும் முதல் ஆயுதம் என்பதை இறுதித் தீர்வு (The Final Solution) எனும் இந்த ஆவணப்படம் முகத்தில் அறைந்து சொல்கிறது.

ஹிட்லர் தனது இறுதித் தாக்குதலுக்கு வைத்துக் கொண்ட பெயர் இறுதித் தீர்வு. படத்தின் தலைப்பாக இருக்கும் இந்த வார்த்தைகளுக்கு நாம் கொள்ளும் அர்த்தமும் இதுதான்.

குஜராத்திற்குப்பின் தமிழகம்தான் என்கிற கனவைத் தற்காலிகமாகத் தள்ளி வைத்திருக்கிறது காவிக் கும்பல். தேர்தலும் சட்டமன்றமும் பாராளுமன்றமும் பாசிஸ்டுகளை ஒழிக்காது. அவை பாதுகாக்கும், வளர்க்கும். குஜராத்தைவிட வேறு எடுத்துக்காட்டு இனித் தேவையே இல்லை.

இவர்களின் பிரச்சாரத்தையும், நடவடிக்கைகளையும் எதிர்க்கும் துணிச்சலும், நேருக்கு நேர் சந்திக்கும், மோதும் துணிச்சலும்தான், பாசிஸ்டுகளை ஒழிக்கும், அழிக்கும். அதற்குத் தமிழகம் ஓர் எடுத்துக்காட்டு என்பதை புரட்சிகர அமைப்புகள் நிரூபித்தே தீரும்.

- குருசாமி மயில்வாகனன்

http://www.tamilcircle.net

Saturday, August 27, 2005

குஜராத்: திட்டமிட்ட வெறியாட்டம் - 2

இந்த இனசுத்திகரிப்பு எப்படி நடைபெற்றது? இதை நடத்தியவர்கள் கையாண்ட விதங்கள் எப்படி? என்பதை விரிவாக காண்போம்

கலவரத்திற்கான முன் ஏற்பாடு

"If you hate a society, kill them all" (நீங்கள் ஒரு சமுதாயத்தை வெறுத்தால், அவர்கள் அனைவரையும் கொலை செய்யுங்கள்) - இது குஜராத் மாநிலத்தில் பிளஸ் 2 பாடத்தில் ஹிட்லரின் 'இறுதித் தீர்வு' என்ற பாடத்தில் வரும் ஒரு வரி.

பாசிஸ்ட்டுகள், முஸ்லிம்கள் மேல் வீசிய அவதூறுகளாலும், ஐஎஸ்ஐ ஏஜென்டுகள், உஸாமாவின் ஆதரவாளர்கள், அல்-காயிதா தீவிரவாதிகள் என்றெல்லாம் பழித்ததாலும் ஒட்டு மொத்த இந்துக்களாலும், முஸ்லிம்கள் வெறுக்கப்பட்டார்கள்.

இது போன்று, உலக மக்கள் அனைவராலும் வெறுக்கப்பட வேண்டும் என்று தொடருவதுதான் மீடியாக்களின் இஸ்லாம் மற்றும் முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரங்கள்.

இந்த வெறுப்பு, வெறும் வெறுப்பாகவே போய்விடகூடாது "இந்து" மக்களை கொண்டே அவர்களை (முஸ்லிம்களை) அழித்து ஒழிக்கவேண்டும் என்று கங்கனம் கட்டிய இவர்கள், மேற்கண்ட ஹிட்லரின் பாடம் சொல்லி கொடுத்தார்கள் மாணவர்களுக்கு. இதனால் முஸ்லிம்கள் மேல் வெறுப்பை வளர்த்து கொண்ட மிகவும் நாகரிகமாக, அப்பாவியாக, இவனா இப்படி செய்வான் என்று ஆச்சரியப்படும் அளவுக்கு காட்சி தரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் கூட குஜராத் முஸ்லிம்களை கொல்லும் பணியில் தாராளமாக ஈடுபட்டார்கள். அவர்கள் அந்த அளவுக்கு முஸ்லிம்களை வெறுக்க பயிற்றுவிக்கபட்டார்கள்.

பாசிஸ்ட்டுகள் இத்தோடு நிறுத்திகொள்ளவில்லை இவர்களின் வேலையை, மேலும் கற்று கொடுத்தார்கள் இப்படி: 'உங்களுக்கு பிடிக்காத மக்களை கொலை செய்யுங்கள். அவர்களை பிரித்து விடுங்கள். அவர்கள் முன் அகம்பாவத்தோடு நடங்கள். நாங்களே எல்லாம் என காட்டுங்கள்.'

இப்படி இவர்கள் மாணவர்களை மட்டும் தயார்படுத்தவில்லை. பொது மக்களையும் தயார்படுத்தினார்கள். இதற்காக பல பொதுக்கூட்டங்கள் ஏற்பாடுகள் செய்தார்கள். அங்கெல்லாம் முஸ்லிம்களின் மீது வெறுப்பேறும் படி பேசினார்கள். அந்த இடத்தில் ஒரு முஸ்லிம் கிடைத்தால் ஒரு எலும்பு கூட மிஞ்சாது செய்திருப்பார்கள். அந்த அளவுக்கு வெறுப்பூட்டப்பட்டார்கள் அந்த இந்து மக்கள்.

இதற்கு ஒரு நல்ல உதாரணம் பண்டார்வாடா என்ற குக்கிராமம். அந்த கிராமத்தில் VHP-யினர் கோத்ரா சம்பவத்திற்கு 3 வாரம் முன்பு ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்தார்கள். அந்த கூட்டத்தில் பல தலைவர்கள் பங்கெடுத்து கொண்டார்கள். முஸ்லிம்களை அழிப்பதே இவர்களின் குறிக்கோள். கூட்டத்திற்கு வந்திருந்த மக்களின் இரத்தத்தை சூடேற்றி அவர்களை கொண்டு முஸ்லிம்களை அழிக்கவேண்டும் என்பதே இவர்களின் திட்டம்.

விஹிப தலைவர்கள் ஒவ்வொருவராக பேச தொடங்கினர். கூடியிருந்த மக்களின் இரத்தம் சூடேற்றப்பட்டது. அதிலே போதுமான அளவுக்கு வெறியூட்டபட்டது. அந்த மக்களுக்கு முன் இப்படி பேசினார்கள்: 'எனதருமை இந்து சமுதாயமே! நாம் தெய்வமாக வழிபடும் கோமாதாவை, முஸ்லிம்கள் என்று சொல்லும் இந்த அரக்கர்கள் வெட்டி திண்கிறார்கள். நம் தெய்வத்தையே வெட்ட துணியும் இந்த அரக்கர்கள் நம்மை வெட்டி கொல்ல மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? இவர்கள் மனிதர்கள் அல்ல, அரக்கர்கள். நம் தெய்வத்தை வேட்டையாடும் இந்த அரக்கர்களை உங்கள் கிராமங்களை விட்டும் அப்புறப்படுத்துங்கள். கிராமங்களை தூய்மைபடுத்துங்கள். அவர்களை விரட்டுங்கள். கொல்லுங்கள். நெறுப்பிட்டு கொளுத்துங்கள்.' என்றெல்லாம் பேசி அங்கு கலவரத்தை தூண்டும் அத்துணை வேலைகளையும் செய்தார்கள்.

குஜராத்தை கலவர பூமியாக்க ஒரு பெரும் திட்டம் ஒன்று அரங்கேற இருப்பதை கண்டு பல அரசு அதிகாரிகள் அதிர்ச்சிக்கு உள்ளனார்கள். அதில் ஒருவர் தான் சக்கரவர்த்தி (காவல்துறை உயர் அதிகாரி, குஜராத்). இவர் VHP-யினர் ஒரு பெரும் கலவரத்துக்கு ஏற்பாடு செய்கிறார்கள். அவர்களை கட்டுபடுத்துங்கள் என்று பிப்ரவரி 27, 2002 அன்று முதல்வர் நரேந்திர மோடியை கேட்டு கொண்டார். அதனால் அவர் இடமாற்றத்திற்கு ஆளானார்.

இப்படியெல்லாம் பேசி ஒன்றுமறியா அப்பாவி மக்களின் உள்ளத்தில் முஸ்லிம்களின் மேல் வெறியை ஊட்டினார்கள். மேலும் கலவரத்தை மிகவும் கச்சிதமாக நடத்தி முடிக்க ஒரு யுத்ததிற்கு எப்படி திட்டமிடப்படுமோ அதை போல கனகச்சிதமான முறையில் திட்டங்கள் தீட்டப்பட்டது.
கலவரத்திற்கு பல மாதங்களுக்கு முன்பே, VHP, பஜ்ரங்தள் தொண்டர்களுக்கு கடுமையான பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் துப்பாக்கி பயிற்சியும் அடங்கும். பல இடங்களில் இவர்கள் துப்பாக்கியை பயன்படுத்தியே முஸ்லிம்களை கொன்றார்கள் என்பதற்கு இதுவே சான்று. (Outlook March 25, 2002).

முஸ்லிம்களை திட்டமிட்டு கலவரத்தின் பெயரால் கொல்வதோடு மட்டுமல்லாமல், இந்த பாசிச சக்திகளுக்கு எதிராக கோர்ட், வழக்கு என்று சென்றாலும் தீர்த்து கட்டிவிடுவார்கள் என்பதற்கு "மீண்டும் பெஸ்ட் பேக்கரியை நடத்த ஜகீராவின் உறவினர் முடிவு" என்ற தலைப்பில் தினமணி செய்தியை ஆதாரமாக உங்கள் முன் வைக்கிறேன்.

வதோதரா, மார்ச் 27: குஜராத்தில் பெஸ்ட் பேக்கரி எரிக்கப்பட்டது தொடர்பான வழக்கின் சாட்சிகளில் ஒரவரான நபிதுல்லா ஷேக், பெஸ்ட் பேக்கரியை மீண்டும் நடத்த முடிவு செய்துள்ளார்.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து மூண்ட வன்முறைகளில் ஒன்றாக வதோதரா பகுதியின் ஹனுமான் தெகாரி என்ற இடத்தில் உள்ள இந்த பேக்கரி 2002 மார்ச் 1-ல் வன்முறை கும்பலால் எரிக்கப்பட்டது. அதில் 14 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த துயர சம்பவத்துக்கு முக்கிய சாட்சியாக இருப்பவர் ஜகீரா, இவரது சகோதரர் நபிதுல்லா ஷேக். இவர் தமது குடும்பத்தாருடன் புதுப்பிக்கப்பட்ட பெஸ்ட் பேக்கரி கடையின் பகுதியில் வசிக்க வந்துவிட்டார். இவரது இரண்டாவது மனைவியான ஹீனா, 2 குழந்தைகளும் கடந்த 1 மாதமாகவே இங்கு வசித்து வருகின்றனர்.

அவ்வப்போது வாடகை வீடுகளை மாற்றவேண்டிய நிலை ஏற்பட்டதால் சிரமம் அடைந்துள்ள நபிதுல்லா, பெஸ்ட் பேக்கரி கடைப்பகுதிக்கே வந்துவிட்டார். இனிமேல் இந்த தொழிலை மீண்டும் தொடங்குவது எனவும் அவர் முடிவு செய்துள்ளார்.

இவரது முதல் மனைவி யாஷ்மின் பானு, இரு வயது மகளுடன் இந்த பேக்கரியில் வசித்துவந்தார். ஆனால், பேக்கரி எரிப்பு வழக்கு தொடர்பாக மும்பையில் மறுவிசாரணை நடத்தும் சிறப்பு நீதிமன்றத்தின் முன் சாட்சியம் சொல்ல கடந்த ஆண்டு சென்ற யாஷ்மின் பானு, அதன்பிறகு திரும்பவேயில்லை.

பெஸ்ட் பேக்கரி அருகே எவ்வித அசம்பாவித சம்பவமும் மீண்டும் நடக்கக்கூடாது என்ற நோக்கில் போலீஸ் சாவடி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. (தினமணி ஞாயிறு 27, மார்ச் 2005)



Ref:
ரியாஸ் அஹ்மத் அவர்களின் குஜராத் கலவர தொகுப்பு
மற்றும் தினமணி

Wednesday, August 24, 2005

குஜராத் திட்டமிட்ட வெறியாட்டம் - 1

குஜராத் வகுப்பு கலவரங்களுக்கு முன்னதாக நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் தொடர்பாக கோல்கத்தா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி உமேஷ் சந்திர பானர்ஜி தலைமையிலான கமிஷன் விசாரித்தது. கரசேவகர்கள் ரயிலிலேயே சமையல் செய்ததால்தான் ரயில் பெட்டியில் தீப்பிடித்தது. வெளியிலிருந்து யாரும் தீ வைக்கவில்லை என்று பானர்ஜி இடைக்கால அறிக்கை அளித்தார். (தினமணி ஞாயிறு 22 ஜனவரி 2005)


கோத்ரா ரயில் எரிப்பு ஆதாரங்களை பாதுகாக்க ரயில்வே தவறிவிட்டது
பானர்ஜி குழு அறிக்கை: மாநிலங்களவையில் தகவல்

புதுதில்லி. மார்ச் 19: கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் தொடர்பான சில முக்கிய ஆதாரங்களை பாதுகாக்க ரயில்வே நிர்வாகம் தவறிவிட்டதாக இது குறித்து ஆராய்ந்த நீதிபதி யு.சி. பானர்ஜி குழு தெரிவித்தது.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் மத்திய ரயில்வே இணையமைச்சர் ஆர். வேலு இதை தெரிவித்தார்.

பல்வேறு கேள்விகளுக்கு அவர் அளித்த பதிலில்:
இச்சம்பவத்தில் முழுவதும் எரிந்த எஸ்-7 பெட்டியில் சில பாகங்கள், தேவையில்லாத பொருள்களாக அறிவிக்கப்பட்டு விற்கப்பட்டுவிட்டன.

கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் தொடர்பாக விசாரணைக் கமிஷனுக்கு மாநில அரசு உத்திரவிட்டிருந்தது. அதனால் இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணை மேற்கொள்ள முடியவில்லை.

-தினமணி சனி 19, மார்ச் 2005


கோத்ராவில் நடைபெற்ற ரயில் எரிப்பு சம்பவம், முஸ்லிம்களை கொன்றுபோட சங்பரிவாருக்கு சாதகமான சூழலாக அமைந்துவிட்டது என்பதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. இதற்காகத்தான் காக்கி கால்சட்டைகளின் சாகா பயிற்சி என்று நடுநிலையாளர்களே ஏற்றுக்கொண்ட உண்மை. இந்த ரயில் எரிப்பு சம்பவம் நடைபெறாது இருந்திருந்தாலும் அங்கு ஒரு இனசுத்திகரிப்பு நடந்தே இருந்திருக்கும்.

இந்த ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து நடத்தப்பட்ட இனவெறியாட்டம் ஒரு வகுப்பு கலவரம் அல்ல. அது ஒரு இனசுத்திகரிப்பு. பலகீனமான ஒரு சமுதாயத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அராஜகம். நன்கு பயிற்றுவிக்கப்பட்ட இனவெறியர்களை கொண்டு தன்னை காத்துகொள்ளவும் எதிர்த்து போராடவும் மனதால்கூட நினைக்காத பெண்களையும், குழந்தைகளையும், வயோதிகர்களையும், மேலும் பலகீனமான ஆண்களையும் மிகக்கொடூரமான முறையில் கொலை செய்த இந்த செயலை எப்படி ஒரு வகுப்பு கலவரம் என்று கூறமுடியும்? இரண்டு வகுப்பாரும் சரி சமமாக நின்று போராடாத இந்த சம்பவம் நிச்சயமாக ஒரு வகுப்பு கலவரம் அல்ல. இது நன்கு திட்டமிடப்பட்ட, ஒருமுகப்படுத்தப்பட்ட ஓர் இனசுத்திகரிப்பு என்பதே சரியாகும்.

தொடரும்..

Saturday, August 13, 2005

லண்டன் குண்டுவெடிப்பும் பர்தாவும்

லண்டன் மாநகரில் குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு முஸ்லிம்களுக்கு எதிரான இன வெறித் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதில் குறிப்பாக ஹிஜாப் (பர்தா) அணியும் பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இச்சூழலில் லண்டனில் உள்ள முஸ்லிம் கல்லூரியின் முதல்வரும், பிரிட்டன் பள்ளிவாசல் மற்றும் இமாம்கள் குழுமத்தின் தலைவருமான ஷேக் ஜக்கி பதாவி அவர்கள், "ஹிஜாப் அணிவதால் தாங்கள் தாக்குதலுக்கு இலக்காகுவோம் என்று அஞ்சும் பெண்கள் ஹிஜாப் அணிவதைத் தவிர்த்துக் கொள்ளலாம்" என்று கூறியிருக்கிறார்.


குண்டு வெடிப்பு நடைபெற்ற பிறகு மூன்று நாட்களில் 1500 முஸ்லிம் பெண்கள் இனவெறித் தாக்குதல்களுக்கு இலக்கானார்கள். லண்டன் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து 5 லட்சம் முஸ்லிம்கள் பிரிட்டனை விட்டு செல்ல முடிவெடுத்திருப்பதாக கார்டியன் நாளிதழ் நடத்திய ஆய்வில் வெளியான தகவலை தொடர்ந்து இந்த முடிவு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

"எனது முஸ்லிம் அடையாளத்தின் ஒரு பிரிக்க முடியாத அங்கமாக ஹிஜாப் அமைந்துள்ளது. பிரிட்டன் நாட்டின் குடிமகள் என்ற முறையில் ஹிஜாப் அணிய எனக்கு எல்லா உரிமையும் உண்டு. பிரிட்டனின் அரசியல் சாசனச் சட்டம் எனக்கு இந்த உரிமையை அளித்துள்ளது. ஹிஜாப் அணிவதால் என்னை யாராவது துன்புறுத்தினால் நான் உடனடியாக மாநகர காவல்துறையிடம் இனவெறியர்களிடமிருந்து எனக்கு பாதுகாப்பு தருமாறு கோருவேன்" என்று உறுதிபட ஒரு பேட்டியில் கூறியுள்ளார் யுஸ்ரா என்ற லண்டன் பல்கலைகழகத்தில் பயிலும் முஸ்லிம் மாணவி. "எனது ஹிஜாபை நான் கழற்றி விட்டால், நான் தீவிரவாதிகளுக்கும், இனவெறியர்களுக்கும் பணிந்து விட்டதின் அடையாளமாகிவிடும். அவர்கள் அத்துடன் நிற்க போவதில்லை" என்று ஆவேசமாக இந்த பேட்டியில் பேசியுள்ளார் அந்த மாணவி.

"இச்சூழலில் ஹிஜாபை அணிவதா வேண்டாமா என்பதை அவரவர் தான் முடிவுச் செய்ய வேண்டும். அது அவர்களது உரிமை. அவரது கருத்தை ஆதாரமாக கொண்டு ஹிஜாபை கைவிடுவது அவர்களது தனிப்பட்ட உரிமை. ஆனால் இறைவனிடம் நற்கூலியை பெறுவதற்காக நான் ஹிஜாபை கைவிட மாட்டேன்" என்று ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் இன்னொரு மாணவியான அல்லா அல் சமராய்.

இவரது வகுப்பு தோழியான ஹிபா அல் ரமழானி இன்னும் தெளிவாக தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். "பிரச்சனைகளை சந்திக்கும் போதெல்லாம் முஸ்லிம் பெண்கள் தங்கள் ஹிஜாபை அகற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறுவது அர்த்தமற்றதாகும். இப்படியே தொடர்ந்தால் நாம் முஸ்லிம்களுக்குரிய தனித் தன்மைகளை சிறிது சிறிதாக இழந்து விடுவோம். இது பிரிட்டனில் வாழும் சிறுபான்மை முஸ்லிம்களைப் பெரிதும் பாதிக்கும்." என்று தனது உள்ளக் குமுறலை வெளிப்படுத்தியுள்ளார் ஹிபா அல் ரமழானி.

இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் ஹிஜாபை அகற்றிக் கொள்ளலாம் என்ற கருத்தை ஜக்கி பதாவி வழங்கியது தேவையற்றது என்று கூறியுள்ளார் லீட்ஸ் பல்கலைகழகத்தில் பயிலும் விசான் அல் திக்ரிட்டி என்ற மாணவி. "பிரிட்டனில் வாழும் முஸ்லிம் பெண்களின் உயிரையும் கண்ணியத்தையும் காப்பதற்காக பாடுபடும் ஜக்கி பதாவியை நான் பெரிதும் மதிக்கிறேன். ஆனால் ஹிஜாபை களையும் தேவை எழுந்துள்ளதாக நான் கருதவில்லை" என்று அந்த மாணவி மேலும் கூறியுள்ளார்.

குறிப்புகள்: "மக்கள் உரிமை" ஆகஸ்ட் 05 - 11, 2005

Wednesday, August 03, 2005

காவல் ஆய்வாளரின் கொலைவெறித் தாக்குதல்

முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் போராடத் தெரியாது என்ற காலம் போய், போராட்டமும், சட்டமும் பேசுவது பாசிசவாதிகளுக்கு எரிச்சலை தந்துள்ளது. முஸ்லிம்களை ஒழிக்க காவி சிந்தனையாளர்கள் போட்ட திட்டத்தில் முக்கியமானது அனைத்து துறையிலும் பாசிச காவி சிந்தனையாளர்களை புகுத்துவது. ஆகவே ஆட்சி மாறினாலும் அடாவடித்தனம் மாறுவதில்லை. அப்படித்தான் பின்வரும் நிகழ்ச்சி நடந்துள்ளது.

நெல்லை மாவட்டம் தாழையூத்து தமுமுக தலைவர் எம். அப்துல் பஷீர். இவரைக் களங்கப்படுத்தும் விதமாக sms அனுப்பிய ஏ. முஹம்மது மீரான் மீது எம். அப்துல் பஷீர் தாழையூத்து காவல் நிலையத்தில் புகார் செய்ததின் பெயரில் 21.07.2005 அன்று காலை 10 மணியளவில் இருதரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தினார் காவல்துறை உதவி ஆய்வாளர் ராஜீ.

முஹம்மது மீரான் தன்னுடைய தவறை ஒப்புக் கொண்டதும், இதுபோன்ற தவறான செயல்களை இனி செய்ய மாட்டேன் என்று எழுதித் தரும்படி உதவி ஆய்வாளர் கூறினார். அப்போது தாழையூத்து காவல் ஆய்வாளர் சங்கரலிங்கம், களக்காடு காவல் ஆய்வாளர் முத்துராமலிங்கம், சிறப்பு படையினர்கள் காவல் நிலையத்தில் நுழைந்தனர். தமுமுகவினரைப் பார்த்த காவல் ஆய்வாளர் சங்கரலிங்கம், "அந்த துலுக்க நாய்களை என் ரூமுக்கு வரச்சொல்லு" என்று கோபமாகக் கூறிச் சென்றார்.

ஆய்வாளர் அறைக்குச் சென்ற தமுமுகவினரை எவ்வித விசாரணையும் இன்றி "டேய்! உங்களையெல்லாம் பார்த்தா தீவிரவாதி மாதிரி தெரியுது" என்று கூறியுள்ளார். உதவி ஆய்வாளர் ராஜீ குறுக்கிட்டு, "தமுமுகவினர் மீது எந்தத் தவறும் இல்லை, இந்த மீரான்தான் தவறு செய்தவன்" என்று கூறியுள்ளார். இதைக் காதில் போட்டுக் கொள்ளாத சங்கரலிங்கம், மீண்டும் ஆவேசமாகப் பேசினார்.

மாவட்ட தொண்டரணிச் செயலாளர் பீர்மரைக்காயர் "நீங்கள் பேசுவது சரியில்லை" என்று கூறி அனைவரையும் காவல் நிலையத்தை விட்டு அழைத்து வந்து ஆட்டோவில் ஏற முற்பட்டார். அப்போது காவல்துறை உதவி ஆய்வாளர் ராஜீ, பஷீரிடம் வந்து, "சுமூகமாகப் பேசிக் கொள்ளலாம், காவல் நிலையத்திற்கு வாருங்கள்" என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே காவல் நிலையத்திலிருந்து ஆவேசமாக வெளியில் வந்த ஆய்வாளர் சங்கரலிங்கம், "இந்தத் துலுக்க நாய்களை அடிச்சு ஸ்டேஷனுக்கு கொண்டு வாங்க" என்று கூற, அங்கிருந்த சிறப்புப் படையினர் பஷீர் மற்றும் நிர்வாகிகளை காவல் நிலையத்திற்குள் இழுத்துச் சென்று கேட்டை பூட்டிவிட்டு அடிக்க ஆரம்பித்துள்ளனர்.

"துலுக்க நாய்களா... சட்டமாடா பேசுறீங்க... உங்களைக் கொல்லாம விடமாட்டேன்" என சங்கரலிங்கம் ஆவேசமாகப் பேசி அடிக்க, களக்காடு காவல் ஆய்வாளர் முத்துராமலிங்கம் வெறிகொண்டு "துலக்க நாய்களா... தீவிரவாதிதாண்டா தாடி வைச்சுருப்பான்..." என்று சொல்லி பீர்மரைக்காயர் தாடியை பிய்க்க, வலிதாங்க முடியாமல் பீர்மரைக்காயர் காவல் நிலையத்தில் கதறியுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து அறிந்து மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர், தாழையூத்து காவல் நிலையத்திற்கு போன் செய்து விசாரித்தபோது, "ஒன்றும் இல்லை சார்" என்று கூறியுள்ளார் சங்கரலிங்கம். காவல் நிலையத்திற்கு டி.எஸ்.பி. வருவதாக கண்காணிப்பாளர் கூற செய்வதறியாது திகைத்தார் அந்த காக்கிச்சட்டை ரவுடி. உடன் பஷீர் உள்ளிட்ட அனைவரையும் முகம் கழுவி வரும்படியும், இதுபற்றி டி.எஸ்.பி.யிடம் கூறினால் உங்கள் அனைவரையும் கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.

இது பற்றிய தகவல் மாநிலப் பொதுச் செயலாளர் எஸ். ஹைதர் அலிக்கு வந்த போது அவர் நெல்லை டி,ஐ,ஜி.யிடம் இது பற்றி புகார் தெரிவித்தார். அப்போது டி,ஐ,ஜி., இரண்டு தரப்பினர் காவல் நிலையத்திற்குள் தகராறுச் செய்து கொண்டதாக கூறினார். பொதுச்செய லளார் நடந்த சம்பவங்களை விவரித்த துடள் ஆய்வாளர் முத்துராமலிங்கம் போதையில் இருக்கிறார் என்று கூறியுள்ளார். டி.ஐ.ஜி. கோபாலகிருஷ்ணன் காவல் நிலையத்திற்குள்ளேயே போதையில் இருக்க முடியாது என்று கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த பொதுச் செயலாளர் அவர் போதையில் இல்லாவிட்டால் நான் என் பொது வாழ்க்கையை விட்டு விலகுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதன் பிறகு டி,ஐ.ஜி. துணைக் கண்காணிப்பாளரை நிலையத்திற்கு அனுப்பி உண்மையை தெரிந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் காவல் நிலையத்தில் நுழைந்த டி.எஸ்.பி, பஷீரின் முகத்தில் இருந்த இரத்த காயத்தைப் பார்த்துவிட்டு சங்கரலிங்கத்திடம் காரணம் கேட்க செய்வதறியாது திகைத்துள்ளார். இதற்கிடையே மாவட்ட தமுமுக நிர்வாகிகள் காவல் நிலையத்திற்கு வந்து பஷீர், பீர்மரைக்காயர், ராஜாமுஹம்மது ஆகியோரை காவல் நிலையத்தை விட்டு வெளியே அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்பு மாநிலச் செயலாளர் ஜே.எஸ். ரிஃபாயி தலைமையில் கூடிய தமுமுகவினர் மற்றும் ஜமாஅத்தார்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை சந்தித்து இதுகுறித்து புகார் செய்ய முடிவு செய்தனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்தபோது, ஒருவரை இடமாற்றம் செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இவ்விஷயத்தில் தமிழக அரசு தலையிட்டு மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல்துறை ஆய்வாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நெல்லையில் வாழும் அனைத்து மக்களின் எண்ணமும் ஆகும்.


http://www.tmmkonline.org/tamil/tmmk_news/068thalai.HTM

Tuesday, August 02, 2005

பச்சைப்பொய்களின் நாயகன் புஷ்

பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களை ஈராக் குவித்துள்ளது மற்றும் செப்டம்பர் 11 தாக்குதலுக்கும் சதாமுக்கும் பங்கு உண்டு என்ற இரண்டு பச்சைப்பொய்களை சொல்லி ஈராக் நாட்டு பெண்கள், குழந்தைகள் உட்பட பொதுமக்களை துவம்சம் செய்துக்கொண்டிருக்கும் உலக பயங்கரவாதி புஷ்ஷுக்கு எதிராக அமெரிக்காவில் 11 புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன் பெயர்கள்:

1. Plan of Attack
2. Against All Enemies
3. Worse than Watergate
4. Lies of George Bush
5. All the President's Spin: George W. Bush, the media and the Truth
6. The Family: The Real Story of Bush Dynasty
7. Bush World : Enter at your own Risk
8. House of Bush, House of Saud
9. American Dynasty : Aristocracy, Fortune and Politics of Deceit in House of Bush
10. Price of Loyalty : George W Bush, the White house and the Education of Paul O' Neill
11. Bushwhacked : life in George W Bush's America


இந்நூல்களில் சுயநலம், பேராசை, பொறாமை, ஆணவம், கர்வம், செருக்கு, பதவிப் பித்து, மோசடி, ஏமாற்றுதல், பொய் என ஒழுக்கச் சீர் குலைவுகளின் ஒட்டுமொத்த அயோக்கியராக புஷ் மிரட்டுகிறாராம்.

செப்டம்பர் 11 தாக்குதலை தனது அயோக்கியத்தனத்துக்கு சாதகமாக ஆக்கியவருக்கு எதிராக 11 புத்தகங்கள்.

"கப்சா விடாதே" என்று சொல்லுவதற்கு பதிலாக இனி "புஷ் விடாதே" என்று சொல்லலாம்.

Monday, August 01, 2005

மதியழகி

2005 ஜனவரி மாதம் ஒரு விடுமுறை நாளில் அது நடந்தது.

பொது பேருந்து வசதி இல்லாத அந்த ஊரிலிருந்து நான் வசிக்கும் நகருக்குத் திரும்பிக்கொண்டிருந்தேன். வழியில் ஒருவர் தன் மனைவியை நான் வந்த காரில் (illegal taxi) ஏற்றிவிட்டார். நகரத்தில் நர்ஸாக பணிபுரியக்கூடும்.

நாங்கள் போய் சேர வேண்டிய நகரம் 4 கி.மீட்டர் என்று வழிகாட்டியது.

இவ்வாறு வரும் பயணிகளை பொது நிறுத்தங்களில் இறக்கிவிடுவது வாடிக்கை.

டிரைவர், அப்பெண்ணை எங்கு போய் சேரவேண்டுமோ அங்கேயே போய் இறக்கிவிடுகிறேன் என்றான்.

அந்த பெண் "தேவையில்லை நன்றி!", என்றாள்

அவனும் விடவில்லை. நச்சரித்தான்.


3 கி.மீட்டர்


தன்னைப்பற்றி அதுமாதிரியான பெண் என்று நினைத்துக்கொண்டான் என்பதை புரிந்து, அவனிடம், "என் கணவனை பொது நிறுத்தத்திற்கு வரச் சொல்லி அழைக்க உங்கள் கைத்தொலைபேசியை சற்று தரமுடியுமா" என்றாள்.

"போதுமான கிரெடிட் இல்லை" என்றான் அவன்.


2 கி.மீட்டர்


"மிஸ்டு கால் (missed call) தர மட்டும்தான்", என்றாள்.

கைத்தொலைபேசி Caller I.D. வசதி மூலம் தன்னை சிக்க வைக்க முயலுகிறாள் என்பதை புரிந்துக்கொண்டு அமைதியானான்.


1 கி.மீட்டர்


மீண்டும் கேட்டாள் அப்பெண்.

கார் பொது நிறுத்தத்தை வந்தடைந்தது.

சவுதி மன்னர் ஃபஹத் காலமானார்

சவுதி அரேபியாவின் மன்னர் ஃபஹத் இப்னு அப்துல் அஜீஸ் அல்-சவூத் காலாமனார். மன்னர் ஃபஹத் நோயுற்று இருந்ததால் இளவரசர் அப்துல்லாஹ் இப்னு அப்துல் அஜீஸ் அல்-சவூத் ஆட்சி பொறுப்பை கவனித்து வந்தது குறிப்பிடத்தக்கது.