Sunday, May 29, 2005

இஸ்லாம் - முஸ்லிம் அல்லாதோர் பார்வையில் - 6

முஸ்லிம்களைப் பூண்டோடு ஒழிக்க, அவரவர் ஒவ்வொரு திட்டத்தின் அடிப்படையில் காய்களை நகர்த்துகிறார்கள். இதில் அமெரிக்காவின் ஜார்ஜ் புஷ், இஸ்ரேலின் ஏரியல் சாரோன், காவி இயக்கங்கள் மற்றும் அவர்களின் சேவகர்களால் செய்யப்படும் ஊடக வழி பிரச்சாரங்கள் போன்றவை உதாரணங்களாக இருந்தாலும் இதற்கு முன்மாதிரி ஸ்பெயினில் முஸ்லிம்கள் அழிக்கப்பட்ட வரலாறாகும்.

இந்திய முஸ்லிம்கள் எவ்வாறெல்லாம் "வகுப்புவெறி கூடிய வன்முறைக் கூட்டங்களால்" பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு எவ்வாறெல்லாம் செயல் திட்டங்கள் தீட்டப்படுகின்றன? என்பதை விளக்கியிருக்கும் இந்தச் சிற்றேட்டை உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன். இக்கட்டுரையை மேற்கண்ட தொடரில் இணைத்ததன் காரணம், இன்று இஸ்லாத்தை விமர்ச்சிப்பவர்கள் முஸ்லிம்கள் அனைவரின் மேலும் கண்ணை மூடிக்கொண்டு செய்யும் அவதூறு பிரச்சாரங்களின் நோக்கம் இந்தியாவிலுள்ள முஸ்லிம் சகோதரர்களை மற்றவர்களிலிருந்து அந்நியப்படுத்த செய்யும் முயற்சிகளே ஆகும்.

ஒரு சாமியார் தவறு செய்தார் என்றால் எல்லா சாமியார்களும் அப்படியல்ல என்று இந்துக்களுக்கு அறிவுரை சொல்லுபவர்களுக்கு, தனக்கு ஒரு அளவுகோலும் மற்றவர்களுக்கு வேறு அளவுகோலும் தேவைப்படுகிறது.

வி.டி இராஜ சேகர் எழுதி, 1997 ஆம் ஆண்டு ஐந்தாம் பதிப்பாக பிரசுரமாகியிருந்த 'தலித் வாய்ஸ்'. குஜராத் கலவரங்கள் போன்று முஸ்லிம்களுக்கு எதிராக ஆங்காங்கே அரங்கேறிவரும் வன்முறைகளுக்குக் காரணங்கள் என்ன என்பது இச் சிற்றேட்டின் மூலம் புலப்படுகின்றது.


முஸ்லிம்களைப் பூண்டோடு ஒழிக்கத் திட்டம்

கிறிஸ்தவர்கள் ஸ்பெயினில் மேற்கொண்ட முறைமை இன்று இந்தியாவில் கடைபிடிக்கப்படுகின்றது.

கி.பி 712 லிருந்து கி.பி 1492 வரை ஸ்பெயினில் முஸ்லிம்களின் ஆட்சி. 780 ஆண்டுகள் அந்த மண்ணில் நீதி மிக்கதொரு ஆட்சி நிலைத்திருந்தது.

இன்றைக்கும் ஸ்பெயின் நாட்டு மக்கள் பேசிடும் மொழியில் அரபி மொழி அப்படியே விரவி வரக் கேட்கலாம். அவர்களுடைய பண்பாடு அந்த இஸ்லாமியப் பண்பாட்டின் அரவணைப்பிலிருந்து இன்றும் விடுபடவில்லை. அடுத்தடுத்து அந்த மக்களை ஆட்கொண்ட ஐரோப்பிய பண்பாடு இந்த இஸ்லாமியப் பண்பாட்டின் ஆதிக்கத்தை அசைக்க முடிந்ததே தவிர அழிக்க முடியவில்லை.

இஸ்லாம் வகுத்து வழங்கிய சமூகப் பாதுகாப்புத் திட்டம், பொருளாதாரப் பாதுகாப்புத் திட்டம், ஸ்பெயின் நாட்டு மக்களின் வாழ்க்கையில் மட்டுமல்ல, ஐரோப்பாவின் சமூக-பொருளாதார பாதுகாப்புத் திட்டத்திலும் ஊடுருவி நிலைத்து நிற்கின்றது. இஸ்லாம் கற்றுத்தந்த அரசியல் இங்கிதங்களின் இதத்தை அவர்கள் இன்னும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த ஸ்பெயினில் இன்று ஒரு முஸ்லிம்கூட இல்லை எனலாம்.

780 ஆண்டுகள் ஆட்சி செலுத்திய மண்ணில், ஆட்சி செலுத்திய மார்க்கத்தைச் சார்ந்த ஒருவரும் இல்லை. இது எப்படி? பிற்றை நாட்களில் முஸ்லிம்களை வேரோடும், வேரடி மண்ணோடும் களைந்திட வேண்டும் என்பதை இலட்சியமாக ஆக்கிக் கொண்டு அங்கே ஒரு கூட்டம் திட்டம் தீட்டிற்று. அந்தத் திட்டம் ஓராண்டு திட்டமோ, ஒரு ஐந்தாண்டு திட்டமோ, ஒரு ஐம்பதாண்டு திட்டமோ அல்ல. அது 120 ஆண்டுகாலத் திட்டம்.

இப்படியொரு நீண்டகாலத் திட்டத்தைத் தீட்டி அதன் வழியில் அந்தச் சதிக் கும்பல் செயல்பட்டபோது, தன் திட்டத்தைத் துல்லியமாக நிறைவேற்றியபோது.. 1612-இல் ஸ்பெயினில் கடைசி முஸ்லிமும் தன் வாழ்வை இழந்தான். இந்தக் காலக்கட்டத்தில்.. அதாவது ஸ்பெயினில் முஸ்லிம்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, முஸ்லிம்கள் இந்த உலகில் அநாதையாக இருந்து கொண்டிருக்கவில்லை. இந்தக் காலக்கட்டத்தில் உலகத்தில் நாகரிகமடைந்த பகுதிகள் அனைத்தும் முஸ்லிம்களின் ஆட்சியின் கீழ்தான் இருந்தன.

துருக்கி முஸ்லிம்கள் கான்ஸ்டாண்டி நோபிள் நாட்டை 1553-இல் தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார்கள். பால்கான் தீபகற்பம் முழுவதும் முஸ்லிம்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. எகிப்தில் பணபலமும் படைபலமும் நிறைந்ததொரு ஆட்சியை முஸ்லிம்கள்தான் நடத்திக் கொண்டிருந்தார்கள். இந்தியத் துணைக்கண்டமோ முகலாயர்களின் ஆட்சியின் கீழ்.

இப்படி, உலகில் ஒரு பெரும் நிலப்பரப்பை முஸ்லிம்கள் ஆட்சி செய்து கொண்டிருந்தபோதே.. ஸ்பெயினிலிருந்த முஸ்லிம்கள் சின்னாபின்னமாகத் துண்டாடப்பட்டார்கள். கூட்டாகக் கொலை செய்யப்பட்டார்கள். இறுதியில் பூண்டோடு ஒழிக்கப்பட்டார்கள். உலகில் நீண்ட நெடியதொரு நிலப்பரப்பை முஸ்லிம்கள் ஆட்சி செய்துகொண்டிருக்கும்போதே.. ஸ்பெயின் வாழ் முஸ்லிம்கள் எப்படி நசுக்கப்பட்டு, விரட்டப்பட்டு, வெட்டப்பட்டு, தடம் தெரியாமல் ஆக்கப்பட்டார்கள்?

இதை முஸ்லிம்கள் ஆய்வு செய்தார்களோ இல்லையோ, இந்தியாவில் உள்ள இந்து வெறியர்கள் ஆய்வு செய்தார்கள்! இந்த ஆய்வை இவர்கள் நடத்தியதும் அதன் அடிப்படையில் இந்திய முஸ்லிம்களைப் பூண்டோடு அழிக்கத் திட்டம் தீட்டியதும் இப்போதல்ல. 1920 முதல் 1930 வரை. அதாவது..

இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் உலகில் முஸ்லிம் அரசுகளால் சூழப்பட்டிருக்கும்போதே அவர்களை அழிப்பது எப்படி என்பதைப் பற்றி ஆய்வு செய்யவும், திட்டம் தீட்டவும் 10 ஆண்டுகள் எடுத்துக்கொண்டனர். இந்த இந்து வெறியர்கள் ஸ்பெயினில் முஸ்லிம்களை அழிக்க கங்கணங்கட்டிக் கொண்டு செயல்படுத்திட முன் வந்தார்கள்.

இதில் மிகவும் வருந்தத்தக்க செய்தி என்னவெனில், இன்றைக்கு இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு ஸ்பெயினில் முஸ்லிம்கள் அழிக்கப்பட்ட வரலாற்றையும் தெரியாது, தங்களைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ள சதியையும் தெரியாது.

முஸ்லிம்களில் உள்ள சிந்தனையாளர்கள் இதைப் பற்றிச் சிந்திப்பார்கள், இந்தியாவில் வாழுகின்ற முஸ்லிம்கள் பூண்டோடு ஒழிக்கப்படுமுன் அதை முறியடிக்க முன் வருவார்கள், அதற்கான செயல் திட்டத்தை வகுத்திடுவார்கள் என்ற நல்ல நோக்கத்தோடுதான் இந்தச் சிற்றேடு உங்கள் கைகளில் சமர்க்கப்படுகின்றது.

ஸ்பெயினில் முஸ்லிம்கள் அழிக்கப்பட்ட வரலாறு

இந்தியாவில் இன்று இருப்பதைப் போல் அன்று ஸ்பெயினில் வாழ்ந்த முஸ்லிம்கள் மூன்று வகைப்படுவார்கள்:
1. அரபுகளின் கிளைஞர்கள்
2. அரபு முஸ்லிம்களுக்கும் ஸ்பெயினில் இஸ்லாத்தைத் தழுவியர்களுக்கும் பிறந்த குழந்தைகள்.
3. கிறிஸ்தவர்களாக இருந்து இஸ்லாத்தின் சீரிய கொள்கைகளால் கவரப்பட்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள்.

முஸ்லிம்களின் கையிலிருந்த கடைசி பகுதியான 'கிரனடா' வீழ்ந்தவுடன் அரபுகளின் கிளைஞர்களாக இருந்த முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் துனீஸியா, மொராக்கோ போன்ற பகுதிகளுக்குக் குடிபெயர்ந்து போய்விட்டார்கள். இப்படி ஸ்பெயினிலிருந்து குடி பெயர்ந்து சென்ற அத்தனை அரபு முஸ்லிம்களும் தாங்கள் போய்ச் சேர்ந்திட வேண்டும் என்று விரும்பிய பகுதிகளுக்குப் போய்ச் சேர்ந்து விடவில்லை. அவர்களில் ஒரு பெரும் பகுதியினர் கிறிஸ்தவர்களால் வழியிலேயே கொலை செய்யப்பட்டார்கள்.

ஸ்பெயினிலேயே தங்கிவிட்ட அரபுகளின் கிளைஞர்களான முஸ்லிம்களை-"வெளிநாட்டிலிருந்து ஊடுருவியர்கள்" 'ஸ்பெயினை அலைக்கழித்தவர்கள்' என்றெல்லாம் குற்றம்சாட்டி பாமர மக்களின் கோபத்தை அந்த முஸ்லிம்களின் மேல் பாய்ச்சினார்கள்.

ஏனைய முஸ்லிம்கள், அதாவது.. அரபு முஸ்லிம்களுக்கும் ஸ்பெயினில் இஸ்லாத்தைத் தழுவியர்களுக்கும் இடையே பிறந்த முஸ்லிம்கள்- கிறிஸ்தவர்களாக இருந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள்- இவர்களெல்லாம் ஸ்பெயினிலேயே எப்படியும் வாழ்ந்து விடலாம் என்ற எண்ணத்தில் அங்கேயே தங்கி விட்டார்கள். இவர்களின் இந்த எண்ணத்தை வலுப்படுத்துகின்ற வகையில் - ஸ்பெயினில் ஆட்சி செய்து கொண்டிருந்த கிறிஸ்தவ மன்னர் ஓர் அறிவிப்பைச் செய்தார். அப்போது ஸ்பெயினை ஆண்டு கொண்டிருந்தவர் 'பெர்டினன்டு' என்ற கிறிஸ்தவ மன்னர்.

கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களை அழிப்பதிலேயே கவனமாக இருந்தார்கள் என்றாலும் கிறிஸ்தவ மன்னரின் இந்த உறுதி மொழியை முஸ்லிம்கள் அப்படியே நம்பினார்கள். இன்றைக்கு இந்திய ஆட்சியாளர்கள் முஸ்லிம்களுக்குத் தந்து கொண்டிருக்கும் உறுதி மொழியைப் போன்றதே இந்த உறுதி மொழியும்! இதை அன்றைய ஸ்பெயின் வாழ் முஸ்லிம்கள் புரிந்து கொள்ளவில்லை. கிறிஸ்தவ மன்னர் தந்த உறுதிமொழி வேறொன்றுமில்லை. அது இதுதான் 'எல்லா மதத்தவர்களுக்கும் சம உரிமையுண்டு, பாதுகாப்பு உண்டு' இந்த உறுதிமொழி உயிருடன் இருக்கும்போதே.. கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களை ஆங்காங்கே கொலை செய்துகொண்டே இருந்தார்கள்.

திட்டமிட்டுச் செய்யப்பட்ட இந்தக் கொலைகள் ஏதோ எப்போதோ நடக்கின்ற சிறு தவறுதான் என்ற அளவில் பிரச்சாரம் செய்யப்பட்டன. இந்தக் கொலைகள் முஸ்லிம்களைப் பூண்டோடு ஒழிக்கத் தீட்டப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதி என்பது திறமையோடு மறைக்கப்பட்டது. இந்தத் தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது 50 ஆண்டுகள் தொடர்ந்து நடந்தன.

ஆரம்ப நாட்களில் முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்ட போது, அவர்கள் இயன்ற வரை எதிர்த்துப் போராடினார்கள். போகப் போக எதிர்ப்பின் வேகம் குறைந்தது. பின்னர் எதிர்ப்பே இல்லை என்றானது.

ஆரம்ப நாட்களில் அவர்கள் எதிரிகளை எதிர்த்து நின்றார்கள் என்றாலும் பெருமளவில் அழிந்தார்கள். எதிர்ப்பு கடுமையாக இருந்த இடங்களில் மன்னர் பெர்டினன்டின் பட்டாளம் முஸ்லிம்களைப் பலி கொண்டது. முடிவில் மன்னரின் பட்டாளமே முன்னின்றது.

அன்று ஸ்பெயினில் நடந்த இந்த வரலாற்று நிகழ்வுகளை இந்தியா விடுதலையடைந்த 1947 ஆம் ஆண்டு முதல் இன்று வரை நடந்து வரும் முஸ்லிம் கொலைகளின் வரலாற்றோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.

இவையாவும் ஒன்று போல் ஒரே திட்டத்தின் கீழ் நடந்து வருவதைக் காணலாம். அன்றைக்கு ஸ்பெயினில் கிறிஸ்தவ சதிக்கூட்டம் திட்டம் போட்டு முஸ்லிம்களைக் கொலை செய்து கொண்டிருக்கும் போது, ஸ்பெயினை ஆண்டு கொண்டிருந்த பெர்டினன்ட் அரசரின் கிறிஸ்தவ அரசு முஸ்லிம்களை அரசுப் பணிகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அகற்றிக் கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து அவர்களை வேரறுக்க பின்வரும் வழி முறைகளைப் பின்பற்றிற்று அரசு. அவைகளாவன:

1) அரபு மொழி நிர்வாகத் துறையிலிருந்து முற்றாக அகற்றப்பட்டது,
2) (மஸ்ஜித்) பள்ளிவாயில்களோடிருந்த கல்விக் கூடங்களில் (மதரசாக்களில்) மார்க்கக் கல்வியை மட்டுந்தான் போதிக்க வேண்டும் என்றும், அவர்கள் ஏற்கனவே போதித்துக் கொண்டிருந்த வரலாறு, விஞ்ஞானம், கணக்கு போன்ற பாடங்களைக் கற்றுத் தரக்கூடாது என்று கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.
3) அரசின் நிர்வாகத்தின் கீழ் நடந்த பாடசாலைகளில் முஸ்லிம்களின் வரலாற்று திரிக்கப்பட்டு 'அவர்கள் கொடுமையாளர்கள்' என்று போதிக்கப்பட்டது. முஸ்லிம்கள் ஸ்பெயினை ஆண்ட காலம் 'இருண்ட காலம்' என இட்டுக்கட்டப்பட்டது.
4) முஸ்லிம்களின் வீடுகள் அடிக்கடி காவல் துறையினராலேயே சூறையாடப்பட்டன. இதற்கு 'அவர்கள் வீடுகளில் ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கிறார்கள்' 'வீடுகளில் இரகசியக் கூட்டங்களைக் கூட்டினார்கள்' – என்றெல்லாம் காரணங்கள் கூறப்பட்டன.
5) உண்மையாக அரபு நாட்டிலிருந்து வந்து ஸ்பெயினில் குடியேறிய அரபு நாட்டு முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களின் பரம வைரிகள் ஸ்பெயினை அழித்தவர்கள் என்பன போன்ற அவதூறுகளை இடைவிடாமல் பிரச்சாரம் செய்தார்கள். இந்தப் பொய்ப் பிரச்சாரங்களால் பாமர மக்கள் 'முஸ்லிம்கள் வெட்டி வீழ்த்தப்பட வேண்டிய வீணர்கள்' என்ற முடிவுக்கு வந்தனர்.
6) கிறிஸ்தவர்களிலிருந்து இஸ்லாத்திற்கு மதம் மாறிப் போனவர்கள் மீண்டும் கிறிஸ்தவத்திற்கு வந்துவிடும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.
7) அரபு நாட்டு முஸ்லிம்களுக்கும் ஸ்பெயினில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களுக்கும் பிறந்த முஸ்லிம்கள் 'சட்ட விரோதமாகப் பிறந்தவர்கள்' என்று அறிவிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்கள் அவர்கள் மீண்டும் கிறிஸ்தவத்திற்கு மதம் மாற்றப்பட்டார்கள்.
8) இஸ்லாமிய முறைப்படி செய்யப்பட்ட திருமணங்கள் 'மீண்டும் அரசாங்கத்தில் பதிவு செய்யப்படவேண்டும்' என்று சட்டம் வந்தது. பின்னர் இஸ்லாமிய முறைப்படிச் செய்யப்பட்ட திருமணங்கள் செல்லாது' என்று அறிவிக்கப்பட்டது.
9) ஸ்பெயினில் வாழ்ந்த முஸ்லிம்கள் கடைசி முயற்சியாக தங்கள் தலைமுறையை இஸ்லாத்தில் தக்கவைத்துக் கொள்ள தங்கள் குழந்தைகளுக்கு அடிப்படை மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொடுத்தார்கள். ஆனால் காலப் போக்கில் தங்களுக்கேற்பட்ட அளவுக்கதிகமான இழப்பைக் கண்டு நிலை குலைந்தனர். 'இஸ்லாமிய முறைப்படி செய்யப்பட்ட திருமணங்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ஆரம்ப நாட்களில், முஸ்லிம்கள் முதலில் இஸ்லாமிய முறைப்படி தங்கள் திருமணங்களைத் தங்கள் இல்லங்களில் வைத்து இரகசியமாகச் செய்து கொள்வார்கள்.

பின்னர் அரசின் அதிகாரிகள் முன் அரசு விதிகளுக்கேற்ப ஒரு முறை சடங்குகளை நிறைவேற்றுவார்கள். காலப்போக்கில் முஸ்லிம்கள் இன்னும் இரகசியமாக இஸ்லாமிய முறையைப் பின்பற்றுகிறார்கள் என்பதை அறிந்த அதிகாரிகள், அந்த திருமணங்களைக் கண்டுபிடித்துத் தண்டனைகள் தந்தார்கள்.

ஆகவே முஸ்லிம்கள் இஸ்லாமிய முறைப்படித் திருமணங்கள் செய்வதை நிறுத்தினார்கள். முஸ்லிம்கள் இத்தகைய கெடுபிடிகளைச் சந்திக்க இயலாமல் திக்குமுக்காடிக் கொண்டிருந்தபோது, பல முஸ்லிம்கள் இஸ்லாத்தை விட்டு கிறிஸ்தவர்களாகி விட்டார்கள் என்ற பிரச்சாரம் முழுவேகத்தில் அவர்களை வந்து தாக்கிற்று.

விரக்தி, பீதி - இவை முஸ்லிம்களை முழுமையாக ஆட்கொண்டன. கற்றறிந்த முஸ்லிம்கள் ஸ்பெயினைக் காலி செய்து விட்டு துனீசியா, மொராக்கோ போன்ற நாடுகளில் குடியேறினர். அங்குள்ள முஸ்லிம்கள் அவர்களை அனுதாபத்தோடு அரவணைத்துக் கொண்டார்கள்.

உலமாக்கள் சிலர்தான் ஸ்பெயினின் முஸ்லிம்களைக் காப்பாற்றிடும் முயற்சிகளை மேற்கொண்டார்கள். ஆனால், மார்க்க விதிமுறைகளை மட்டுமே கற்று வைத்திருந்த இவர்களால் அந்த முஸ்லிம்களைக் காப்பாற்றிட இயலவில்லை. அன்றைய முஸ்லிம்களைக் காப்பாற்றிட அரசியல் அறிவு, உலக நிலை பற்றிய அறிவு, முஸ்லிம்களைச் சுற்றிப் பின்னப்பட்டிருந்த சதியின் விபரம், நிலையான தன்மை, இஸ்லாத்தைப் பற்றிய முழுமையான அறிவு-இவையாவும் தேவைப்பட்டன. இவற்றோடு கிறிஸ்தவ கொலை வெறிக் கும்பலைச் சமாளித்து முஸ்லிம்களின் உயிரைக் காப்பாற்ற ஓர் வலுவான தற்காப்புப் படையும் தேவைப்பட்டது.

மார்க்க நெறிமுறைகளை மட்டுமே கற்று வைத்திருந்த அந்த உலமாக்களிடம் இவற்றில் எதுவும் இருக்கவில்லை. ஸ்பெயினிலிருந்து வெளியேறி துருக்கி போன்ற நாடுகளில் குடியேறிய முஸ்லிம்கள் அந்த நாட்டு ஆட்சியாளர்களிடம் ஸ்பெயினின் முஸ்லிம்களைக் காப்பாற்றச் சொல்லி முறையிட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் - ஸ்பெயினிலிருந்து வெளியேறி துருக்கி போன்ற நாடுகளில் குடியேறிய முஸ்லிம்கள் - அந்த முஸ்லிம் ஆட்சியாளர்கள் மேற்கொண்ட முயற்சிகளையும் முடக்கிப் போட்டார்கள். அந்த முஸ்லிம் ஆட்சியாளர்களிடம், நீங்கள் ஸ்பெயினில் வாழ்ந்திடும் முஸ்லிம்களைக் காப்பாற்றிட ஏதேனும் செய்தால் அதைக் காரணங்கள் காட்டி அங்குள்ள முஸ்லிம்களை ஆட்சியாளர்கள் அதிகமாகக் கொடுமைப் படுத்துவார்கள் என்று கூறி அந்த முஸ்லிம் ஆட்சியாளர்களைத் தடுத்தார்கள்.

அன்றைக்கு ஸ்பெயின் இருந்த சூழ்நிலையில் ஓர் 'அஹமது ஷா அப்தாலி' தேவைப்பட்டார். ஆனால் அப்படி யாரும் அன்றைக்கு இருக்கவில்லை. காலப்போக்கில் ஸ்பெயின் முஸ்லிம்கள் தங்கள் தனித்தன்மைகள் அனைத்தையும் இழந்தார்கள். பின்னர் முஸ்லிம்கள் என்ற நிலையை இழந்தார்கள். எஞ்சி இருந்த மார்க்க அறிஞர்கள் தங்களுக்கு வேலை இல்லை என்பதை உணர்ந்தார்கள், வெளிநாடுகள் நோக்கி நடந்தார்கள்.

இப்படிக் கடைசி முஸ்லிமும் ஸ்பெயினைக் காலி செய்த ஆண்டுதான் கி.பி 1612.

இந்திய முஸ்லிம்களின் நிலை
ஸ்பெயினில் முஸ்லிம்களைப் பூண்டோடு ஒழிக்க தீட்டப்பட்ட நீண்ட காலத்திட்டத்தைப் போன்றதொரு திட்டம் இந்தியாவிலும் தீட்டப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றிட ஸ்பெயினை விட அதிகமான துல்லியமும் துரிதமும் கடைப்பிடிக்கப்படுகின்றன.

இந்தியாவில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துபவர்களுக்கும் அன்று ஸ்பெயினில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துபவர்களுக்கும் இடையே ஒரு வேற்றுமை. இவர்கள் ஸ்பெயினில் இந்தத்திட்டத்தைச் செயல்படுத்தியவர்களைவிட, நயவஞ்சகர்களை விட, நயவஞ்சகத் தனத்திலும் - நம்பவைத்து ஏமாற்றுவதிலும் கை தேர்ந்தவர்களாக இருக்கின்றார்கள்.

இந்தியாவில் உருது மொழி முஸ்லிம்களின் மொழியாகக் கருதப்படுகின்றது. இஸ்லாமிய இலக்கியங்கள் நிறைந்து கிடைப்பதாலேயே இது முஸ்லிம்களின் தொழி எனக் கருதப்படுகின்றது.
இந்த உருது மொழியை இந்தியாவை விட்டு வெளியேற்ற எத்தனையோ வியூகங்களை வகுத்துச் செயல்படுத்தினார்கள்.

முஸ்லிம்களைக் காப்பாற்றிட வேண்டும் என்று எந்த முஸ்லிமாவது விரும்பினால் அவன் உடனேயே 'வகுப்புவாதி' என முத்திரை குத்தப்படுகின்றான். எந்த முஸ்லிமாவது இஸ்லாத்தை விட்டுக் கொடுத்து உயர்சாதி இந்துக்களுக்குப் பக்க தாளம் போட்டால் அவன் 'தேசிய முஸ்லிம்' எனப் போற்றப்படுகின்றான்.

ஆங்கிலம் கற்ற முஸ்லிம்கள் பிராமணர்களோடு கை கோர்த்துக் கொண்டு அவர்களைப் போல வாழ ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் குடியிருப்பதைவிட இந்துக்கள் வாழும் பகுதிகளில் குடியமர்வதையே விரும்புகின்றார்கள். பாமர முஸ்லிம்கள் சேரிகளிலும் சாலையோரங்களிலும் வாழ்கின்றார்கள். இவர்கள் இஸ்லாத்தை இதய சுத்தியோடு பின்பற்றும் உணர்வுள்ள முஸ்லிம்கள்.

இவர்கள் தாம் ஒவ்வொரு வகுப்புக் கலவரங்களின் போதும் அழிவுக்கும் இழிவுக்கும் ஆட்படுகின்றார்கள். இவர்கள் மொத்த முஸ்லிம்களில் 95 சதவிகித்தினர். மேட்டுக்குடியில் குடியிருக்கும் மெத்தப் படித்த மேதாவி முஸ்லிம்கள் 'இந்தப் பாமர முஸ்லிம்கள்தான் கலவரங்களுக்குக் காரணம்' என்ற அடிக்கடி ஆள்காட்டி இந்து வெறியர்களின் திருப்தியைப் பெறத்துடிக்கின்றனர். படித்த முஸ்லிம்களுக்கும் பாமர முஸ்லிம்களுக்கும் இடையேயுள்ள இடைவெளி இணைக்க இயலாத ஒன்றாகவே இருந்து வருகின்றது.

பாமர முஸ்லிம்கள் கூட்டம் கூட்டமாக, கிராமம் கிராமமாகக் கொலை செய்யப்படுகின்றார்கள். மேட்டுக்குடியில் வாழும் படித்த முஸ்லிம்கள் 'இதை பாமர முஸ்லிம்கள் தங்கள் கைகளாலேயே தேடிக்கொண்டது' என்று பசப்புகின்றார்கள். எதுவும் செய்ய இயலாத முஸ்லிம் தலைமை, முறையிட இடம் தெரியாமல் திண்டாடுகின்றது.

இந்தியாவில் பொட்டுப் பூச்சிகளைப் போல முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்படுகின்றார்கள் 'இது அநியாயம், அவர்களைக் காப்பாற்றிட வேண்டும்' என்று உலக முஸ்லிம்கள் பேசினால் 'ஐயோ! இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில், தலை இட்டுவிட்டார்கள்' என்று உரக்க முழங்கி அவர்களின் அபயக் குரலை அடக்கிப் போட்டு விடுகிறார்கள். ஆனால் இங்கே உள்நாட்டு விவகாரம் முஸ்லிம்களைக் கூட்டமாகக் கொலை செய்வதும், அந்தக் கொலைவெறிக் கும்பலுக்கு ஆதரவு தருவதும் தான்.

இந்தியாவில் வாழும் முஸ்லிம்களின் வரலாறு திட்டமிட்டே சிதைக்கப்படுகின்றது. "குரூரமானவர்கள் இந்த உலகில் உண்டு என்றால் அவர்கள் முஸ்லிம்கள்தான்" எனப் பள்ளிக்குப் பாடம் பயிலவரும் பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சை விதைக்கின்றார்கள். இந்த இந்திய மண்ணின் விடுதலைக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட முஸ்லிம் வீரர்கள், தியாகிகளின் பெயர்கள் முழுமையாக இருட்டிப்புச் செய்யப்பட்டுள்ளன.

ஆங்கில ஏகாதிபத்தியத்தைத் திணற அடித்து, 'சரணடைய மாட்டேன்' சாவை சலனமின்றி ஏற்றுக் கொள்வேன்' என்று நெஞ்சுயர்த்தி நின்று தன் உயிரைத் தந்த உண்மை வீரன் தியாகி திப்பு சுல்தானின் பெயர் இந்திய இளைய தலைமுறையினருக்குத் தெரியாமல் போய்விடும்படி செய்கிறார்கள்.

ஆங்கிலேயனுக்கு அடிமை சேவகம் செய்து இந்தியர்களைக் காட்டிக்கொடுத்த் துரோகிகள் - ' தியாகிகள்' எனப் போற்றப் படுகிறார்கள். தனது ஓய்வு ஊதியத்திற்காகப் போராடிய 'தான்தியா தோப்பே', தான் தத்தெடுத்த மகன் ஆட்சியாளனாக ஆக்கப்பட வேண்டும் என்று போராடிய 'ஜான்சி ராணி லட்சுமி பாய்' இவர்களெல்லாம் இந்தியா முழுவதும் 'தேசியத் தலைவர்கள்' எனவும் , விடுதலைப் போர்வீரர்கள் எனவும் பிரச்சாரம் செய்யப்படுகிறார்கள்.

விஞ்ஞானம், மருத்துவம் இன்னுமுள்ள துறைகள் இவற்றில் எத்துனைதான் சாதனைகளை முஸ்லிம்கள் சாதித்துக் காட்டினாலும் அவர்களுக்கு விருதுகளோ, பரிசுகளோ தரப்படுவதில்லை. அவர்கள் விரக்திக்கே உள்ளாக்கப்படுகிறார்கள்.

இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சிக்குக் காலமெல்லாம் விசுவாசமாக இருந்த 'மௌலானா ஆஸாத்' 'ரபீ அஹ்மத் கித்வாய்', 'செய்யத் மஹ்மூத்', 'ஹுமாயூன் கபீர்' போன்றவர்களின் பெயர்களை நினைவு கூர ஒரு தெருவின் பெயர் கூட இல்லை.

ஆனால் உயர் ஜாதிக்காரர்களில் நாட்டுக்கு எதுவுமே செய்யாதவர்களின் எத்தனையோ வீதிகள்! சாலைக்கள்!! நகரங்கள்!!!

வரலாற்றைத் திருத்தி - திரித்து - எழுதி, அதனை முழுமையாக முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்பிவிட்டார்கள். இதன் விளைவாக நித்தமும் முஸ்லிம்கள் கொலை செய்யப்படுகின்றார்கள்.

இராணுவம், காவல் துறை, அரசு நிர்வாகம் இவற்றில் முஸ்லிம்கள் மெல்ல மெல்ல புறக்கணிக்கப்பட்டு வருகின்றார்கள். இத்தனைக்கும் இலக்காக்கி நிற்கும் முஸ்லிம்களைக் காப்பாற்ற யாரும் முன்வரவில்லை.

இதில் வேதனைக்குரிய செய்தி என்னவெனில் எத்தனையோ இயக்கங்கள் முஸ்லிம்களுக்கிடையோ தோன்றுகின்றன. இவற்றில் எதுவும் முஸ்லிம்களைக் காப்பாற்ற முன்வரவில்லை. அத்தனையும் இஸ்லாத்தைக் காப்பாற்ற இருப்பதாகவே அறிவிக்கின்றன.

இந்தியாவில் முஸ்லிம்களே இல்லை என்றாகி விட்டால் இஸ்லாம் எப்படிக் காப்பாற்றப்படும்? ஸ்பெயினில் முஸ்லிம்களே இல்லை என்றாக்கிவிட்டார்கள். ஆகவே அங்கே இஸ்லாம் இல்லை என்றாகிவிட்டது!

- முஸ்லிம்களைத் திட்டம்போட்டுக் கொலைசெய்தது,
- முஸ்லிம்களின் சொத்துக்களையும், தொழில்களையும், வியாபாரங்களையும் குறிவைத்துத் தாக்கி அவர்களை ஓட்டாண்டி ஆக்கி விட்டது,
- காவல் துறை, இராணுவம் அரசு நிர்வாகம் இவற்றில் அவர்கள் புறக்கணிக்கப் பட்டுவிட்டார்கள்.
- மக்கள் தொடர்பு கருவிகளான வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் வகுப்புவெறி இந்துக்களை ஊடுருவ விட்டது.
- அரசின் நிர்வாக மொழிகளில் ஒன்றாக இருந்த உருது மொழியை 1948-1949 இல் ஒரே இரவில் அது இனி நிர்வாக மொழிகளுள் ஒன்றாக நீடிக்காது என அறிவித்துவிட்டது. அது முதல் உருது மொழிக் கல்விக் கூடங்களை மூடியது.
- முஸ்லிம் தனியார் சட்டத்தை 'பொது சிவில் சட்டம்' என்ற முழக்கத்தைக் கொண்டு சின்னா பின்னப்படுத்தியது.
- வரலாற்றைத் திருத்தி எழுதி முஸ்லிம்கள் இந்த நாட்டுக்குச் செய்த தியாகங்களை மறைத்து அவர்களை எதிரிகளாகக் காட்டியது.
- முஸ்லிம்களினன் விரோதிகளைத் தேசிய தலைவர்களாகக் காட்டியது.
- முஸ்லிம்கள் செய்யும் ஏற்றுமதி இறக்குமதி வாணிபத்தைக் 'கடத்தல்' என முத்திரை குத்தி அவர்கள் செய்யும் தொழில்களாலேயே அவர்களைத் தேச விரோதிகள்' என விஷ வித்தை விதைத்தது.
- முஸ்லிம்கள் விரும்பாத தலைமைகளை அவர்கள் பால் திணித்தது.
- முஸ்லிம்கள் இந்து தலைமைக்குத் தலையசைத்துப் போகும்படி செய்தது.

இப்படி முஸ்லிம்களை அழிக்கும் திட்டம் முழுமையாக்கப்பட்டுவிட்டது.
இந்தத் திட்டத்தை விதையாகத் தூவியவர்கள் அறுவடைக்காகக் காத்திருக்கின்றார்கள். அறுவடைக் காலம் வருமுன் இந்தச் சதித்திட்டங்களை முறியடிக்க முஸ்லிம்கள் முன்வரவில்லை என்றால் அன்றை ஸ்பெயினைப் போல் இந்தியாவும் ஆகிவிடும்.

இன்னொன்றையும் நினைவுபடுத்த விரும்புகின்றோம். இஸ்லாமும் அதனைப் பின்பற்றும் முஸ்லிம்களும் பாமர முஸ்லிம்களால் தான் வரலாறு நெடுகிலும் காப்பாற்றப்பட்டிருக்கின்றார்கள். இந்தப் பாமர முஸ்லிம்கள்தான் முஸ்லிம் மக்கள் தொகையில் 95 சதவிகித்தினர். வசதியான முஸ்லிம்கள் மொத்த முஸ்லிம் மக்கள் தொகையில் 5 சதவிகிதம் மட்டுமே. இவர்கள் பெரும்பாலும் பாமர முஸ்லிம்களைக் குறை காண்பதிலும் உயர்ஜாதி இந்துக்களுக்கு துதிபாடுவதிலும்தான் தங்கள் காலத்தைக் கழித்து வருகிறார்கள்.

இவர்கள் இஸ்லாத்தைப் பற்றி அதிகமாகக் கவலைப்படுவார்கள். ஆனால் முஸ்லிம்களைப் பற்றி அதிகமாகக் கவலைப்படமாட்டார்கள். ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.. மதம் அதனைப் பின்பற்றுபவர்களைப் பாதுகாப்பதில்லை, மாறாக மதத்தைப் பின்பற்றுபவர்கள் தாம் அதனைக் காப்பாற்ற வேண்டும்.

இந்தியாவில் இஸ்லாம் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் முஸ்லிம்கள் காப்பாற்றப்பட்டாக வேண்டும்.

இது இயலாத ஒன்றல்ல, முஸ்லிம்கள் முன்வந்தால்!

- வி.டி. இராஜசேகர் -

Sunday, May 15, 2005

தலாக் புகழ் நந்தலாலாவிற்கு

நந்தலாலாவின் தலாக்.. தலாக்.. தலாக் பதிவிற்காக

அன்பின் நந்தலாலா,
வித்தியாசமாக எழுதும் பழக்கம் உள்ளவரான நீங்கள், தவறான விபரங்களை உங்களின் கட்டுரையில் இடம்பெறச் செய்துள்ளீர்கள்.

விவாகரத்து சட்டத்தை அரசாங்க சட்டத்திலிருந்து எடுக்கவேண்டும் என்று நீங்கள் சொல்ல மாட்டீர்கள். ஆனால் தலாக்கிற்கு தலாக் விடவேண்டும் என்று சொல்வதற்கு காரணம், அதனை புரிந்துக்கொண்ட விதமும் முஸ்லிம்கள் அதனை தவறாக பயன்படுத்திய விதமும்தான். தலாக் என்பது உங்களுக்கு வெறுப்பாக இருந்தால் விவாகரத்து என்று சொல்லலாம். தவறொன்றும் இல்லை.

முஸ்லிம் பெண்களின் உரிமைகள்:
முஸ்லிம் பெண் ஆர்வல் சல்மாகூட தனது பேட்டியில் இஸ்லாம் பெண்களுக்கு கொடுக்கும் உரிமைகளை முஸ்லிம்கள் நடைமுறைப் படுத்தவில்லை என்கிறார். தவிர இஸ்லாத்தில் இவ்வுரிமை இல்லை என்று சொல்லவில்லை.

இஸ்லாம் சொன்ன முறைப்படி பெண்களே ஆண்களை விவாகரத்து செய்யும் முறையும், ஒரு மனைவியை மட்டுமே திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் செய்ய விரும்பும் திருமணத்தை நடத்திவைக்கவும் கீழ்கண்ட அமைப்புகளின் ஒத்தாசையை நாடலாம். toabuumar@gmail.com என்ற முகவரிக்கு அவ்வமைப்புகளின் விபரங்கள் கேட்டு எழுதினால் தருவதற்கு தயார். இதுபற்றி சல்மா போன்றவர்கள்கூட தெரிந்துக்கொள்ளாதது ஏன் என்று தெரியவில்லை.

ஜம்மியத்துல் அஹ்லுல் குர்ஆன் வல் ஹதீஸ் (JAQH) என்ற அமைப்பும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) என்ற அமைப்பும் ஆயிரக்கணக்கான பகுத்தறிவு திருமணங்கள் (புரோகித தனம் தவிர்த்து) வரதட்சணை இல்லாமல் நடத்திக்காட்டியிருக்கிறது. இந்த இரண்டு அமைப்புக்கும் தமிழ்நாட்டில் பல கிளைகள் உண்டு. இந்த அமைப்பின் உதவிகள் இல்லாமல்கூட உள்ளூர் ஜமாஅத்துகளின் மூடத்தனமாக புரோகிதத் தனங்களையும், வரதட்சணை பழக்கத்தையும் எதிர்த்து என்னைப்போல எத்தனையோ இளைஞர்கள் ஒரு சவாலாக எடுத்து திருமணங்கள் செய்துள்ளார்கள்.

இஸ்லாமிய பெண்களுக்கான உரிமையை மீட்டித்தர பாடுபடும் சல்மா போன்ற ஆர்வலர்களுக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால், இஸ்லாம் தரும் பெண் உரிமையை தெரிந்துக்கொள்ளுங்கள், அதனை அவர்கள் பெற்றுக்கொள்ள போராடுங்கள். கூடவே சில முஸ்லிம் பெண்களின் தர்கா போன்ற மூட நம்பிக்கைகளை அடித்து விரட்டுங்கள். முஸ்லிம் பெண்கள் கல்வியறிவு பெற வகை செய்யுங்கள் என்பவைதான் அது.

டிஜிட்டல் விவாகரத்து:
sms, email மூலம் விவாகரத்து கோரல் சம்பந்தமாக நான்கு மாதங்களுக்கு முன்பு தமிழ்முஸ்லிம் கூட்டுப்பதிவில் எழுதியிருக்கிறேன். படித்துப்பார்க்கவும்.

ஜீவனாம்சம்:
இஸ்லாம் ஒப்பந்தத்திற்கு பிறகு கணவனிடம் பிச்சை எடுக்கச் சொல்லவில்லை. முன்பணமாக ஜீவனாம்சத்தை அல்லது மஹர் என்னும் மணக்கொடையை வாங்கிக்கொள்ளச் சொல்கிறது. இந்திய முஸ்லிம்களில் இவ்விஷயத்தில் தவறான பல விஷயங்கள் நடைமுறையில் உள்ளன.

அதாவது பெயருக்காக நூற்று ஒன்று, ஆயிரத்து ஒன்று என்று மஹர் தொகையை எழுதிக்கொள்வதும் அந்த பிச்சைக்காசைக் கூட அப்பெண்ணிடம் கொடுக்காமல் இருப்பதும்தான்.

திருமணம் என்பது இஸ்லாத்தைப் பொறுத்தவரை ஒரு ஒப்பந்தம் மட்டுமே. ஒப்பந்தம் செய்பவர்கள் தனக்கு உரிமையானதை மற்றும் தனக்கு பாதகம் இல்லாததை ஒப்பந்தத்தில் எழுதி பெற்றுக்கொள்வார் தவிர ஒப்பந்தத்தில் எழுதாமல் பிறகு கேட்டால் எதுவும் நடக்காது என்பது தெரிந்ததே. அதுபோலத்தான் பெண்கள், தன்னை திருமண ஒப்பந்தம் செய்ய விரும்பும் தனது எதிர்கால கணவனிடத்தில் தனக்கு தேவையானதை அட்வான்ஸ் ஜீவனாம்சமாக மஹர் என்னும் மணக்கொடையின் பெயரால் முதலிலேயே பெற்றுக்கொள்ளச் செய்கிறது இஸ்லாம். இந்த தொகையை இவ்வளவுதான் கேட்க வேண்டும் என்ற அதிகபட்ச வரையறைகூட இஸ்லாமிய ஆட்சியாளர்களால் நிறைவேற்ற முடியாது. இன்று சவுதிபோன்ற நாடுகளில் இந்த அட்வான்ஸ் ஜீவனாம்சத்தை (மஹர்) கொடுக்க முடியாத ஆண் குமர்கள் திருமணம் செய்ய முடியாமல் இருப்பதை பார்க்க முடியும். இதனை பெண் கேட்டும் வரதட்சணை என்று கொச்சைப்படுத்துவது நம்மவர்களுக்கு வழக்கம்.

இது ஜீவனாம்சம்தான் என்று சொல்வதற்கு காரணம், மனைவி கணவனை விவாகரத்து கோரினால் அப்பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும். ஆண் விவாகரத்து கோரினால் அவள் திருப்பி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நம்நாட்டில் ஆண்கள் வரதட்சணையாக பெற்றுக்கொண்ட தொகையை ஏப்பம் விடுவது போல் அல்ல.

இந்த முஸ்லிம்பெண்களின் உரிமைகளை கலங்கப்படுத்தும் எத்தனையோ ஊர் ஜமாஅத்தார்கள் உண்டு என்பதில் எனக்கு கருத்து வேறுபாடு இல்லை. இதற்காக நாங்கள் போராடுகிறோம். அதற்காக எங்களைப் போன்றோர்களை ஊர்விட்டு விலக்கி வைத்துள்ளார்கள். இது குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் வசிக்கும் முஸ்லிம்களிடம் உள்ள குறைபாடுகள் என்று சொல்லாமல் இஸ்லாத்தில் இந்த உரிமை மறுக்கப்படுகிறது என்பதுதான் தவறான பிரச்சாரமாகும்.

பலதார மணம்:
பலதார மணம் என்பது இஸ்லாத்தில் ஒரு அனுமதியே தவிர அது மார்க்கத்தின் கடமையோ வணக்கமோ கிடையாது. சின்ன வீடு வைத்துக்கொண்டு கும்மாளம் இடுபவர்களுக்கு அவளும் ஒரு மனைவிதான் என்றும் அவளுக்கு பிறந்தவர்களும் சமசொத்துரிமை பெற்றுள்ளார்கள் என்று ஆணின் தலையில் சுமத்துகிறது. இன்னும் சொல்லப்போனால் மனைவிகளிடையே பாரபட்சம் காட்டவேண்டிவரும் என்று பயந்தால் அவனுக்கு பலதாரமணம் செய்துகொள்வதை ஹராமாக (தடுக்கப்பட்டதாக) ஆக்குகிறது இஸ்லாம். எனக்கு தெரிந்தவர்களில் யாரும் (தமிழ்மணத்தில் எழுதும் நண்பர்கள் உட்பட) பலதார மணம் புரிந்துக்கொள்ளவில்லை. எனக்கும் ஒரு மனைவிதான் ஐயா. பலதாரமணம் பற்றி பிறகு எழுதும் எண்ணம் உண்டு. (கடவுள் நாடினால்).

கற்பத்தடை
பெண் குழந்தையை கருவிலியே சமாதிகட்டுவதும், கள்ளிப்பால் இட்டு நிரந்தரத்தூக்கத்தை இட்டுச்சொல்வதும் இந்த கால வழக்கம் என்றால் பெண் குழந்தையை உயிரோடு புதைக்கும் காலம் முஹம்மது நபி எந்த அரபு சமுதாயத்தில் பிறந்தார்களோ அத்தகையவர்களின் பழக்கமாக இருந்தது. இதனை முற்றாக ஒழித்தவர்தான் முஹம்மதுநபி. மேலும் குழந்தைகளை வறுமைக்கு பயந்து கொள்வதையும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை. அதுபோன்ற ஒரு வசனத்தைத்தான் திருக்குர்ஆனிலிருந்து (6:151) நீங்கள் எடுத்துக்காட்டியிருந்தீர்கள். தவிர இவ்வசனம் குழந்தைகளை கணக்கின்றி பெற்றுப்போடச் சொல்லவில்லை.

திருக்குர்ஆனில் 6:137, 6:140, 6:151 ஆகிய வசனங்களில் குழந்தைகளை கடவுளின் பெயரால் கொல்லாதீர்கள் என்றும் வறுமைக்கு பயந்து கொல்லாதீர்கள் என்றும் சொல்லப்படுகிறது. இதில் என்ன பழைமைவாதம் இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை.

அதே நேரத்தில், இஸ்லாம் குழந்தை வளர்ப்பில் மிக்க கண்ணும் கருத்துமாக இருக்கச் சொல்கிறது. கவனிக்க முடியாத குழந்தைகளை பெற்றுப்போடச் சொல்லவில்லை. குழந்தைக்கு அறிவை ஊட்டுவது தந்தைக்கு கடமையாக்கியிருக்கிறது இஸ்லாம்.

இரண்டு குழந்தைகளுக்கு மேல், பெற்றுக்கொள்ள கூடாது என்பதற்காக ஒரு பெண் தன்னை தற்காலிக மலடாக ஆக்கி கொள்வதை இஸ்லாம் விரும்பவில்லை. ஆனால் தற்காலிக கருத்தடை ஏற்பாடுகளை செய்வதை தடுக்கவில்லை. நீங்கள் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுவிட்டால் என்று கவலைப்படுகிறீர்கள். நான் இறந்த பிறகு என் மனைவி மறுமணம் செய்துக்கொள்ள தடையாக எதுவும் இருக்கக்கூடாது என்று இஸ்லாம் கவலைப்படுகிறது. இது இருபாலருக்கும் பொருந்தும்.

கல்வியும் விழிப்புணர்வும் இருந்தால் அழகிய சமுதாயத்தை உருவாக்கலாம். நாங்கள் முயற்சி செய்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

இத்தனை மாற்று ஏற்பாடுகளும் இஸ்லாம் காட்டித்தந்த புரட்சி ஏற்பாடுகளாகும். "அம்மா" என்று அழைப்பது பழைமையானது என்பதால் "மாமி"(ஆன்ட்டி) என்று மாற்றிக்கொள்வோமா?. பழைமையான விஷயம் என்பதால் ஒரு விஷயத்தை நாம் எதிர்ப்பதில்லை. அதில் பாதிப்பு இருந்தால்தான் எதிர்ப்போம். முத்தலாக் என்பது முஹம்மது நபி தடைசெய்த ஒன்று. மொத்தத்தில் இஸ்லாம் வெறுக்கும் ஒன்றை இஸ்லாத்தில் இருப்பதாக சொல்ல இத்தனை ஆர்பாட்டமா?

கடவுள் அனுமதித்த விஷயத்தில் வெறுக்கக்கூடிய ஒன்றுதான் இந்த விவாகரத்து(தலாக்) என்றும் ஆண்களுக்கு பெண்களை விவாகரத்து செய்ய திருப்பி அழைத்துக்கொள்ளக்கூடிய வாய்ப்பின் ஊடே இரண்டு விவாகரத்தும் மூன்றாவதில் நிரந்தரமாகவும் ஆக்குகிறது இஸ்லாம். ஆனால் பெண்களுக்கு ஒரே வாய்ப்பில் ஆண்களை விவாகரத்து செய்யும் உரிமை கொடுத்திருக்கிறது. முஸ்லிம்களில் சிலர் இஸ்லாத்தை அறியாமல் டிஜிட்டல் மற்றும் அதிரடி விவாகரத்து (முத்தலாக்) செய்கிறார்கள். இதில் எதை பழைமைவாதம் என்கிறீர்கள்?

திருமணம் செய்யப்போகும் கணவனிடம் ஜீவனாம்சத்தை அல்லது மணக்கொடையை (மஹர்) முதலிலேயே பெற்றுக்கொள் என்கிறது இஸ்லாம். அதுவல்லாமல், விவாகரத்து செய்யப்பட்ட பின்புதான் கணவனிடம் யாசித்து நிற்கவேண்டும் என்று சொல்வது. இதில் எது பழைமைவாதம்?

வேசிகளிடம் செல்லாதே, நல்ல பெண்களை வேசிகளாக்காதே என்று சொல்லி பாரபட்சம் இல்லாமல் சரிசமமாக நடத்த முடியும் என்றால் மட்டுமே மற்றவளை திருமணம் செய்துக்கொள் என்கிறது இஸ்லாம். அதுவல்லாமல், தெருவுக்கு தெரு சின்ன வீடு வைத்துக்கொள்ளலாம், அவளுக்கு சொத்துரிமை கொடுக்க வேண்டாம். நீ எறிந்த பிச்சைக்காசு போதும் என்னும் முறை பழைமைவாதமா?

தற்காலிக கருத்தடைகளுக்கு அனுமதியளித்த பின்னர், பிறக்கும் குழந்தைகளுக்கு அறிவு, ஒழுக்கம் போன்ற நற்பண்புகளை போதிப்பதில் மிகக் கண்டிப்பாகவும் குழந்தைகளை கொலை செய்யாதே என்றும் சொல்கிறது இஸ்லாம். அதுவல்லாமல் குழந்தைகளை கொலைசெய்வது, கருவிலேயே சமாதி கட்டுவது, இறைவன் தந்த அருட்கொடைகளை நீக்கிக்கொள்வது இவற்றில் எது பழைமைவாதம்?

ஐயா, முஸ்லிம்கள் செய்வதெல்லாம் இஸ்லாம் இல்லை. நீங்கள் முஸ்லிம்கள் செய்வதை எதிர்ப்பதை நாங்கள் வரவேற்கிறோம். முத்தலாக் என்ற பெயரில் தன்னை நாடிவந்த பெண்ணை சட்டென்று நிற்கதியாக்கும் முஸ்லிம்களை வன்மையாக கண்டிக்கிறோம். இஸ்லாத்தை கொச்சைப்படுத்த இதனை வாய்ப்பாக்கி கொள்ளாதீர்கள் என்று அன்பாக கேட்டுக்கொள்கிறோம்.

இஸ்லாத்தைப்பற்றி விமர்சனம் செய்ய விரும்புகிறீர்களா? தாராளமாக. இஸ்லாம் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதல்ல. இதுவரை மிக மோசமாக இஸ்லாத்தின்பால் சேற்றை இறைத்தவர்களை எல்லாம்கூட விமர்சனம் செய்ய வரவேற்றே இருக்கிறோம். உதாரணத்திற்கு ஒரு சில சுட்டிகள் மட்டும்:

இஸ்லாம் குறித்த விமர்சனங்கள் (அக்பர் பாட்சா)
வாருங்கள் விவாதிக்கலாம் (அப்துல்லாஹ்)
விவாதங்கள் விவாதங்களாகவே.. (நல்லார்க்கினியன்)
மற்றும் சுடர்

ஆனால் அதற்கு முன்பு எது இஸ்லாத்தின் ஆதாரம் என்பதையும் படித்துக்கொள்ளுங்கள்.

இஸ்லாம் மார்க்கம் தனது கொள்கையை அறிவுப்பூர்வமாக சிந்தித்து மட்டுமே ஏற்றுக்கொள்ளச் சொன்ன மார்க்கம். அதனால்தான் திருக்குர்ஆனில் பல இடங்களில் சிந்திக்க மாட்டீர்களா என்று இறைவன் கேட்கிறான். இக்காலத்தில் மூட பழக்க வழக்கங்களை கண்டிப்பவர்களை அறிவு ஜீவிகள் என்கிறோம். அந்த அறிவு ஜீவிகளே செய்யக்கூடிய மூட பழக்கங்களையும் வன்மையாக கண்டித்ததுதான் இஸ்லாம். அதனால்தான் முஹம்மது நபிக்கு முஸ்லிம்கள் சிலை வைக்கவில்லை. இஸ்லாம் சொல்லும் பகுத்தறிவு கொள்கைகளை எனது அடுத்த (மாமனிதர்) தொடரில் எழுதலாம் என்று உள்ளேன். (கடவுள் நாடினால்).

திராவிட கழகத்தின் ஒரு சில கொள்கைகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. நம்மிடம் காசு கேட்கும், பலி கேட்கும், மூடபழக்கங்களின் திறவுகோலான இந்த கடவுள்களை வணங்க வேண்டுமா என்ற இந்த கருத்து என்னை அதிகமாக சிந்திக்க வைத்திருக்கிறது. தர்கா வாசல்களில் தவம் கிடப்பவர்களையும், வரதட்சணை வாங்கும் எங்கள் மார்க்கத்தை சார்ந்தவர்களையும் ஹஜ்ரத்துகளின் புரோகித தனத்தையும் எனக்கு கருத்து தெரிய வந்த நாட்களில் பார்த்தபோது இஸ்லாமும் மற்ற மதங்களைப் போன்றுதானோ என்று நினைத்ததுண்டு. ஆனால் இஸ்லாம் பற்றி படித்தபோதுதான் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் தற்போது உள்ள வேறுபாடு புரிந்தது.

"கடவுள் இல்லை, (லாயிலாஹ) அல்லாஹ்வை தவிர (இல்லல்லாஹு)" என்கிறது இஸ்லாம். அதாவது கடவுளுக்கு நாம் கொடுக்கும் இலக்கணமான ஆசை, தூக்கம், குழந்தை உண்டு, பெற்றோர் உண்டு, கடவுளுக்குள் சண்டை இதுபோன்றவைகளை எப்படி கடவுள் என்று சொல்லமுடியும் என்று சொல்லிவிட்டு, இத்தகைய குறைபாடுகள் எவையும் அற்ற ஒருவன்தான் கடவுள் என்கிறது இஸ்லாம்.

இஸ்லாத்தை பலர் போற்றுவதற்கு காரணம் அது சொல்லும் பகுத்தறிவு கருத்துகள். இஸ்லாம் என்பது இறைவன் திருக்குர்ஆன் மூலமும், கடவுளின் தூதராக வந்த முஹம்மது நபி அவர்களின் மூலம் சொன்ன போதனைகள்தான் தவிர மற்ற எதுவும் இல்லை.

இஸ்லாம் பற்றி பலர் குறை சொல்லக் காரணம் முஸ்லிம்களின் தவறுகள் மட்டுமே. எல்லாருக்கும் இஸ்லாத்தைப்பற்றி படிக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. மற்றவர்கள் முஸ்லிம்களின் செயல்பாடுகள்தான் இஸ்லாம் என நோக்குகிறார்கள். ஆனால் முஸ்லிம்களில் பலர் தனது மனோ இச்சையை செயல்படுத்தி இஸ்லாத்திற்கு அவப்பெயர் உண்டாக்குகிறார்கள்.

என்னுடைய பதிவு உங்களின் கட்டுரைக்கு பதில் அல்ல. சிறு குறிப்புகள் மட்டுமே.

இதன் விரிவாக்கத்தை நண்பர் அபூமுஹையின் தொடரில் பார்ப்போம். முதலாம் தொடரின் சுட்டி:

தலாக் ஓர் விளக்கம்-1

_________________________________________
நந்தலாலா,
பெற்ற பெண்ணை ::மொட்டையடித்து, நிர்வாணப்படுத்தி, ஊரை வலம் வரச்செய்யும்:: மற்றவர் கலாச்சாரத்துடன்::தலாக் என்று சேர்த்திருப்பது யாரை திருப்தி படுத்துவதற்காக?

Wednesday, May 04, 2005

இஸ்லாம் - முஸ்லிம் அல்லாதோர் பார்வையில் - 5

வேண்டாம் அற்புதங்கள்!

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் காயல்பட்டினத்துக்குச் சென்றிருந்தேன். அப்போது என்னுடன் திருப்பூர் மொய்தீனும், முஹம்மது ஹூசைன் நயினார் அவர்களும் வந்திருந்தார்கள். நாங்கள் மூவரும் முஹம்மது நபி விழாவிலே பேசினோம். அப்பொழுது அந்த விழாவிலே பேசிய ஒருவர் இஸ்லாமிய கதை என்று ஒன்றைச் சொல்லி குர்ஆனுக்கும் அதற்கும் சம்பந்தப்படுத்தி விளக்கினார்.

யாரோ ஒருவர் காட்டு வழி செல்கையில், தனது செருப்பையும், கைத்தடியையும் மற்றொருவருக்குத் தானம் கொடுக்கும்படி ஆண்டவன் கட்டளையிட்டாராம். உடனே அவர் தானம் கொடுத்து விட்டாராம். அதன் பிறகே அவர் காட்டுவழியே செல்லுகையில் கள்வரிடம் சிக்கிக்கொண்டாராம். அந்தச் சமயத்தில், முன்பு தான் தானம் கொடுத்த கைத்தடியும் செருப்பும் வந்து, கள்வர்களிடமிருந்து அவரைக்காப்பாற்றினவாம்.

அந்தக் கதையைக் கேட்டதும் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. ஏனக்கு அருகிலிருந்த முஹம்மது ஹூசைன் நயினார் அவர்களிடம் இக்கதையைப் பற்றிக் கேட்டேன் - இந்தக் கதை குர்ஆனில் இருக்கிறதா? முஹம்மது நபி இதைச் சொல்லியிருக்கிறாரா? என்று. அதற்கு அவர் - அதெல்லாம் ஒன்றுமில்லை. குர்ஆனுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. பிற்காலத்தில் யாராலோ கட்டிவிடப்பட்ட கட்டுக்கதை அது என்றார்.

அதன்பிறகு நான் பேசுகையில், இதைப்பற்றிக் குறிப்பிட்டு கட்டுக்கதை என்பதை விளக்கி, இப்படிப்பட்ட அற்புதங்களை காட்ட வேண்டுமென்பது ஐயன் கட்டலையல்ல என்பதையும் எடுத்துச் சொன்னேன். காயல்பட்டினத்து மக்கள் அதனாலே என்னை எதிர்க்கவோ, கண்டிக்கவோ இல்லை. தமிழ்நாட்டிலே மிகப்பெரிய அரபுக்கல்லூரி ஒன்றும் இருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பே அங்குள்ள மக்கள் நான் எடுத்துச் சொன்ன உண்மையை உணர்ந்தார்கள் என்றால், இன்று ஒப்ப மறுத்து விடமாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

இந்த நேரத்தில் இஸ்லாமிய சமூகத்தினருக்கு நான் ஒன்று சொல்லிக்கொள்வேன்! அற்புதங்களைக் காட்டி, அதனாலே இஸ்லாம் சிறந்தது என்று நீங்கள் வாதாடினால் உங்களிடமுள்ள அற்புதங்களுக்கு அப்பன், பாட்டன் என்று சொல்லும்படியான அற்புதங்களெல்லாம், எங்களுடைய மதம் என்று வர்ணிக்கப்படும் இந்து மதத்திலே இருக்கின்றன.

உலகத்தில் இஸ்லாம் கடைசி வரை நிலைத்து நிற்கும் என்று ஜார்ஜ்பெர்னாட்ஷா கூறியதற்குக் காரணம், அந்த மதத்தில் அற்புதங்கள் குறைவு - அறிவுக் கருத்துக்கள் நிறைவு என்பதால்தான்!

அறிவுக்கொவ்வாத அற்புதக் கதைகள் இந்துக்களிடத்திலே ஏராளமுண்டு. நமது தாய்மார்களைக் கேட்டுப்பாருங்கள் பிரகலாதன் கதையை விடவா அற்புதக் கதை ஒன்று இருக்கிறது? என்பார்களே! அற்புதங்களை விற்பனை செய்தவர்களே நாங்கள் - அற்புதங்களின் பிறப்பிடமே நாங்கள் - என்று சொல்லிக்கொள்ளும்படியான எண்ணற்ற கதைகளை இந்துக்கள் எடுத்துச்சொல்வார்கள்!

எனவே, அற்புதங்களைக் காட்டி இஸ்லாமிய கொள்கைக்கு அருமை பெருமை தேடாதீர்கள்! நபிகள் நாயகத்தின் அஞ்சா நெஞ்சுருதியாலும், அவர் செய்த அறப்போரினாலும் தான் இஸ்லாம் பரவியது.

அடிக்கடி ஆண்டவன் அவதாரம் எடுக்காமலே இஸ்லாத்தில் அரிய கருப்பொருள்கள் ஏராளமாக இருக்கின்றன!

இஸ்லாத்தின் மாண்பைப் போற்றுவதற்குக் காரணம் அந்த மார்க்கதிலே "இதை நம்பு" என்று ஆண்டவனால் கட்டளை பிறப்பிக்கப்படவில்லை, காரணம் கூறுவதால் தான் நம்பப்படுகிறது.

சீனாவுக்குச் சென்றேனும் (தொலைவுகருதி) கல்வி கற்கவேண்டும் என்று அந்த மார்க்கத்திலே சொல்லப்படுகிறது.

இன்றைய இஸ்லாமியச் சமுதாயத்திலே பெரும்பாலோர் கல்வியறிவு பெறாமலிருக்கின்றனர். அந்த மார்க்கத்திலே சொல்லப்பட்டிருக்கின்ற கட்டளை - கருப்பொருள் - கல்வியறிவு பரப்பப்படவேண்டும்.

- அறிஞர் அண்ணா -

தொடரும்..

நன்றி:
அண்ணல்நபி பற்றி அறிஞர் அண்ணா
வெளியீடு:
காஜியார் புக் டிப்போ
முஸ்லிம் தெரு, மானம்புச்சாவடி
தஞ்சாவூர்

Tuesday, May 03, 2005

மாமனிதர் [தொடர்.. 3]

முஹம்மது நபி ஒரு ஆன்மீக தலைவராக மட்டும் இருந்துவிட்டால் அவரின் அடக்கமான பண்பிற்கு ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. ஒரு வல்லரசின் அதிபதியாக இருந்துக்கொண்டு மக்கள் பணத்தில் பகட்டு வாழ்க்கை வாழவில்லை என்பதுதான் இங்கு குறிப்பிடப்படவேண்டிய ஒரு விஷயமாகும்.

வியக்க வைக்கும் புரட்சிப் பிரகடனம்
நபிகள் நாயகத்தின் தலைமைச் செயலகமாக இருந்த பள்ளிவாசலின் மூலையில் ஸகாத் என்னும் பொதுநிதிக்குச் சொந்தமான பேரீச்சம் பழங்கள் குவிந்து கிடந்தன. ஒரு முறை நபிகள் நாயகத்தின் பேரர் அவற்றிலிருந்து ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்து வாயில் போட்டு விட்டார். இதை முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பார்த்து விட்டார்கள். உடனே விரைந்து வந்து துப்பு துப்பு என்று தமது பேரணிடம் கூறி துப்பச் செய்தார்கள். அத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை நாம் ஸகாத் (பொதுநிதி) பொருளைச் சாப்பிடக்கூடாது (ஹராம்) என்பது உமக்குத் தெரியாதா? என்றும் பேரனிடம் கேட்டவர்தான் முஹம்மது நபி அவர்கள் (1)

எனது வாரிசு தங்க காசுகளுக்கு, வாரிசாகமாட்டார்கள். என் மனைவியரின் குடும்பச் செலவுக்குப் பின்பு, எனது பணியாளரின் ஊதியத்துக்குப் பின்பு நான் விட்டுச் சென்றவை பொது நிதியைச் சேரும். (எனது வாரிசுகளைச் சேராது என்று அறிவித்துச் சென்றார்கள்.) (1)

அதனால்தான் முஹம்மது நபிக்கு அடுத்து வந்த ஆட்சியாளர் கலீஃபா அபூபக்கர்(ரலி) அவர்கள், முஹம்மது நபியின் சொத்து ஒன்றை கேட்க வந்த முஹம்மது நபியின் மகள் ஃபாத்திமா(ரலி) அவர்களிடம்

"எனக்கு யாரும் வாரிசாக முடியாது. நான் விட்டுச் சென்ற யாவும் பொது உடமையாகும்" என்று உங்கள் தந்தை முஹம்மது நபி(ஸல்) கூறினார்கள். எனவே அதை உங்களிடம் தர இயலாது நபிகள் நாயகத்தின் மகளாகிய நீங்கள் எனது எல்லா உறவினர்களை விடவும் விருப்பமானவராக இருக்கிறீர்கள் ஆயினும் நான் தர மறுப்பதற்கு காரணம் நபிகள் நாயகத்தின் கட்டளை தான் என்று கூறிமறுத்து விட்டார்கள். (1)

பொது நிதியை பேணியவர்
ஏழைகளுக்கு தர்மம் கொடுப்பதற்காக வந்த பொது பணத்தைக்கூட அவர்களிடத்தில் சேர்ப்பதற்கு தாமத படுத்தாத மனிதர்தான் முஹம்மது நபி(ஸல்) அவர்கள்.

முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தொழுகையை நடத்தி விட்டு வேகமாக வெளியேறினார்கள். சற்று நேரத்தில் பள்ளிவாசலுக்கத் திரும்பி வந்துவிட்டார்கள். ஒரு நாளும் இல்லாமல் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வேகமாகப் புறப்பட்டுச் சென்றதையும், உடனேயே திரும்பி வந்ததையும் நபித்தோழர்கள் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர். தான் அவசரமாகச் சென்று திரும்பியதன் காரணம், "அரசுக் கருவூலத்துக்குச் சொந்தமான வெள்ளித்துண்டு என் வீட்டில் இருந்தது. அதை ஏழைகளுக்கு விநியோகம் செய்யுமாறு குடும்பத்தாரிடம் தெரிவித்து விட்டு வந்தேன்" என்று தெரிவித்தார்கள். (1)

குடிமக்களின் உரிமையை பேணியவர்
நாங்கள் முஹம்மது நபி(ஸல்) அவர்களுடன் பள்ளிவாசலில் இருந்தோம். அவர்கள் எழுந்ததும் நாங்கள் எழுந்தோம். அவர்கள் பள்ளிவாசலின் மையப்பகுதிக்கு வந்த போது அவர்களைக் கண்ட ஒருவர் அவர்களின் பின்புறமிருந்து மேலாடையை இழுத்தார். அவர்களின் மேலாடை முரட்டுத் துணியாக இருந்ததால் அவர்களின் பிடரி சிவந்துவிட்டது. முஹம்மதே எனது இரு ஒட்டகங்கள் நிறையப் பொருட்களை எற்றி அனுப்புவீராக! உமது செல்வத்திலிருந்தோ உமது தகப்பனாரின் செல்வத்தில் இருந்தோ நீர் ஏற்றி அனுப்பப் போவதில்லை என்று அந்த மனிதர் கூறினார். இழுத்துக் கொண்டிருக்கும் என் மேலாடையை விடும் வரை பொருட்களை ஏற்ற மாட்டேன் என்று முஹம்மது நபி(ஸல்) கூறினார்கள். நான் விடமாட்டேன் என்று அவர் கூறினார். இவ்வாறு மூன்று முறையும் விடமாட்டேன் என்றார். அந்தக் கிராமவாசியின் கூற்றை நாங்கள் செவியுற்றபோது அவரை நோக்கி (தாக்குவதற்கு) விரைந்தோம். நான் அனுமதிக்கும் வரை தமது இடத்தை விட்டு யாரும் நகரக்கூடாது என்று முஹம்மது நபி(ஸல்) கூறினார்கள். பின்னர் கூட்டத்திலிருந்த ஒருவரை நோக்கி இவரது ஒர ஒட்டகத்தில் கோதுமையையும் இன்னொரு ஒட்டகத்தில் பேரீச்சம் பழத்தையும் ஏற்றி அனுப்புவீராக என்றார்கள். பின்னர் மக்களை நோக்கி நீங்கள் புறப்படுங்கள்! என்றார்கள்.(6)

முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஹுனைன் எனும் போர்க்களத்திலிருந்து மக்களுடன் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடன் நானும் இருந்தேன் நபிகள் நாயகத்தை அறிந்து கொண்ட மக்கள் (அவர்கள் மன்னராக இருந்ததால்) அவர்களிடம் தமது தேவைகளைக் கேட்கலானார்கள். கூட்டத்தால் நெருக்கித் தள்ளியதால் அவர்கள் முள் மரத்தில் சாய்ந்தார்கள். அவர்களின் மேலாடை முள்ளில் சிக்கிக் கொண்டது. எனது மேலாடையை எடுத்துத் தாருங்கள் என்று கூறினார்கள். இம்மரங்களின் உண்ணிகையளவு என்னிடம் ஒட்டகங்கள் இருந்தால் அவை அனைத்தையும் உங்களுக்கு நான் பங்கிட்டிருப்பேன். என்னைக் கஞ்சனாக நீங்கள் காணமாட்டீர்கள். எனவும் கூறினார்கள். (1)

கடன் கொடுத்தவனின் உரிமைக்கு மதிப்பளித்தவர்
முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்குக் கடன் கொடுத்திருந்த ஒரு மனிதர் அதை வசூலிப்பதற்காக முஹம்மது நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது கடுமையான முறையில் அவர் நடந்து கொண்டார். நபிகள் நாயகத்தின் தோழர்கள் அவரைத் தாக்க முயன்றனர். அப்போது முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அவரை விட்டு விடுங்கள்! ஏனெனில் கடன் கொடுத்தவருக்கு (கடுமையாகப்) பேசும் உரிமை உள்ளது எனக் கூறினார்கள். அவர்கள் மேலும் தம் தோழர்களிடம் அதே வயதுடைய ஒட்டகத்தை இவருக்குக் கொடுங்கள் எனக் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! அதை விடக் கூடுதல் வயதுடைய ஒட்டகம் தான் உள்ளது என்று நபித்தோழர்கள் கூறினார்கள். அதையே அவருக்குக் கொடுங்கள் ஏனெனில் அழகிய முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவராவார் எனக் கூறினார்கள். (1)

மற்றவர்களின் சுமையை தன்மீது ஏற்றிக்கொண்டவர்
ஒரு மனிதர் கடன் பட்ட நிலையில் (மற்றவர் பாதிக்கப்பட்ட நிலையில்) இறைவனை சேறுவதை முஹம்மது நபி அவர்கள் விரும்பவில்லை. அக்கடனை நண்பர்கள் அடைக்க வேண்டும் அல்லது தான் அடைக்கவேண்டும் என்று விரும்பினார்கள்.

முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த ஆரம்ப காலத்தில் யாரேனும் ஒருவர் இறந்துவிட்டால் அவரது உடல் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்வதற்காக (ஜனாஸா தொழுகை நடத்துவதற்காக) அவர்களிடம் கொண்டு வரப்படும் இவர் யாருக்கேனும் கடன் தர வேண்டியுள்ளதா என்று அப்போது முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கேட்பார்கள். ஆம்! எனக் கூறப்பட்டால் கடனை நிறைவெற்றிட எதையாவது விட்டுச் சென்றிருக்கிறாரா? எனக் கேட்பார்கள் ஆம்! எனக் கூறப்பட்டால் உங்கள் தோழருக்காக நீங்களே பிரார்த்தனை செய்து கொள்ளுஙகள் என்று கூறி விடுவார்கள். அவரது கடனுக்கு யாரேனும் பொறுப்பேற்றுக் கொண்டால் அவருக்காகப் பிரார்த்தனை செய்வார்கள். பின்னர் அல்லாஹ் அவர்களுக்குப் பல வெற்றிகளை வழங்கிய போது இறை நம்பிக்கையாளர்களைப் பொறுத்த வரை அவர்கள் விஷயத்தில் அவர்களை விட நானே அதிகம் பொறுப்பாளியாவேன். எனவே யாரேனும் கடன் வாங்கிய நிலையில் மரணித்தால் அந்தக் கடனை அடைப்பது என் பொறுப்பு. யாரேனும் சொத்தை விட்டுச் சென்றால் அது அவரது வாரிசைச் சேரும் என்று கூறலானார்கள். (1)

கடமையை உணர்ந்த மாமன்னர்
என்னை முஹம்மது நபி(ஸல்) அவர்கள் எமன் நாட்டுக்கு (Yemen) ஆளுநராக அனுப்பினார்கள். நான் எமன் நோக்கிப் புறப்படும் போது முஹம்மது நபி(ஸல்) அவர்கள் என்னுடன் ஊர் எல்லை வரை வந்தார்கள். நான் வாகனத்தில் அமர்ந்திருக்க முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வாகனத்திற்குக் கீழே தரையில் கூடவே என்னுடன் நடந்து வந்தார்கள். விடைபெறும் போது முஆதே! இவ்வருடத்திற்குப் பின் அநேகமாக என்னைச் சந்திக்கமாட்டீர்! அல்லது எனது பள்ளிவாசல் அல்லது அடக்கத்தலத்தைத் தான் சந்திப்பீர் எனக் கூறினார்கள். இதைக் கேட்டு நான் அழலானேன். முஹம்மது நபி(ஸல்) அவர்கள் முகத்தைத் திருப்பி மதீனாவை நோக்கி நடந்தார்கள் என்று முஆத் பின் ஜபல்(ரலி) குறிப்பிடுகிறார்கள் (5)

முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தமது கரத்தால் கட்டிய பள்ளிவாசலில் தொழுகையின் போது முன்னோக்கும் சுவற்றில் யாரோ மூக்குச் சளியை சிந்தியிருந்தனர். இதை கண்ட முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தாமே அதை நோக்கிச் சென்று தமது கரத்தால் அதைச் சுத்தம் செய்தார்கள். (1)

தனக்கென்று தனித்தன்மை பார்க்காத ஆட்சியாளர்
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டபோது குடி தண்ணீர் விநியோகிக்கப்படும் தண்ணீர்ப் பந்தலுக்கு வந்தார்கள். குடிக்க தண்ணீர் கேட்டார்கள். நபிகள் நாயகத்தின் பெரிய தந்தை அப்பாஸ் தண்ணீர் பந்தலின் பொறுப்பாளராக இருந்தார் அவர் தமது இளைய மகன் ஃபழ்லு என்பவரை அழைத்து வீட்டிற்குச் சென்று உன் தாயாரிடம் நபிகள் நாயகத்துக்காக குடிதண்ணீர் வாங்கி வா என்று கூறினார். உடனே முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இந்தத் தண்ணீரையே தாருங்கள் எனக் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! இதில் மக்கள் தங்கள் கைகளைப் போட்டுள்ளனரே என்று அப்பாஸ் கூறினார். அதற்கு முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பரவாயில்லை! இதனையே எனக்குக் குடிக்கத் தாருங்கள் எனக் கேட்டு அந்தத் தண்ணீரைக் குடித்தார்கள்.

பின்னர் புனிதமான கிணறாகக் கருதப்படும் ஸம்ஸம் கிணற்றுக்கு வந்தார்கள். அங்கே சிலர் அந்தக் கிணற்று நீரை மக்களுக்கு வழங்கிக் கொண்டும். அது தொடர்பான பணிகளிலும் ஈடுபட்டிருந்தனர். அவர்களை நோக்கி இந்தப் பணியைத் தொடர்ந்து செய்யுங்கள்! நீங்கள் சிறப்பான பணியையே செய்கிறீர்கள். நானும் இப்பணியைச் செய்வதால் நீங்கள் எனக்காக ஒதுங்கிக் கொள்வீர்கள் என்ற அச்சம் இல்லாவிட்டால் நானும் கிணற்றில் இறங்கி இந்தத் தோளில் தண்ணீர் சுமந்து மக்களுக்கு விநியோகம் செய்திருப்பேன் என்று கூறினார்கள். (1)

குடைப் பிடிக்கச் சொல்லாத தலைவர்
முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு ஆடு ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அப்போது உணவுகள் குறைவாக இருந்த காலம். தமது குடும்பத்தாரிடம் இந்த ஆட்டைச் சமையுங்கள் என்று கூறினார்கள். நான்கு பேர் சுமக்கக் கூடிய பெரிய பாத்திரம் ஒன்று இருந்தது. அதில் அந்த உணவு வைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டது. உணவு கிடைக்காத தோழர்கள் எல்லாம் அழைக்கப்பட்டனர். உணவுத் தட்டைச் சுற்றி அனைவரும் அமர்ந்து சாப்பிடலானார்கள். முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அவர்களுடன் அமர்ந்து கொண்டார். கூட்டம் அதிகமாகச் சேர்ந்ததால் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மண்டியிட்டு அமர்ந்து மற்றவர்களுக்கு இடம் கொடுத்தார்கள். அப்போது கிராமவாசி ஒருவர் என்ன இப்படி உட்கார்ந்திருக்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ் என்னை அடக்குமுறை செய்பவனாகவும், மமதை பிடித்தவனாகவும் ஆக்கவில்லை. பெருந்தன்மைமிக்க அடியானாகவே ஆக்கியுள்ளான். என்று விடையளித்தார்கள். (4)

ஒரு மனிதர் முதன் முதலாக நபிகள் நாயகத்தைச் சந்திக்க வந்தார். பொதுவாக மன்னர்கள் முன்னிலையில் நடுநடுங்கிக் கொண்டுதான் மக்கள் நிற்பார்கள். நபிகள் நாயகத்தையும் அதுபோல் கருதிக்கொண்டு உடல் நடுங்கிட வந்தார். சாதாரணமாக இருப்பீராக! உலர்ந்த இறைச்சியைப் சாப்பிட்டு வந்த குரைஷி குலத்துப் பெண்ணுடைய மகன் தான் நான் என்று அவரிடம் கூறி சகஜ நிலைக்குக் கொண்டுவந்தார்கள். (7)

ஒரு முறை முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் நடந்து சென்றார்கள். அவர்களின் தலை மீது மட்டும் நிழல் படுவதைக் கண்டார்கள். தலையை உயர்த்திப் பார்த்த போது ஒரு துணிக்குடையால் அவர்களுக்கு நிழல் தரப்படுவதைக் கண்டார்கள். விடுங்கள் எனக்கூறி அந்தத்துணியை வாங்கி மடக்கி வைத்தார்கள். நானும் உங்களைப் போன்ற மனிதன்தான் எனவும் கூறினார்கள். (2)

போலி கவுரவம் பார்க்காத தலைவர்
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் நம்மோடு இன்னும் எவ்வளவு காலம் இருப்பார்கள் என்பதை நாம் அறியமாட்டோம் எனவே அவர்கள் நம்மால் சிரமப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அப்பாஸ்(ரலி) அவர்கள் மக்களிடம் கூறினார்கள். பின்னர் முஹம்மது நபி(ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு நிழல் தரும் கூடாரத்தைத் தனியாக நாங்கள் அமைத்துத் தருகிறோமே என்று கேட்டார்கள் அதற்கு நபிகள் நாயம்(ஸல்) அவர்கள் மக்கள் என் மேலாடையைப் பிடித்து இழுத்த நிலையிலும் எனது பின்னங்காலை மிதித்த நிலையிலும் அவர்களும் கலந்து வாழவே நான் விரும்புகிறேன். மரணிக்கும் வரை இப்படித்தான் இருப்பேன் எனக் கூறினார்கள். (3)

வீட்டில் நமது செருப்பைத் தாமே தைப்பார்கள் தமது ஆடையின் கிழிசலையும் தாமே தைப்பார்கள் வீட்டு வேலைகளையும் செய்வார்கள். (5)

மக்களோடு மக்களாக
அகழ் யுத்தத்தின் போது அவர்களும் மக்களுடன் சேர்ந்து அகழ் வெட்டினார்கள் மண் சுமந்தார்கள் அவர்களின் வயிற்றை மண் மறைத்தது. (1)

அவர்கள் மதீனா வந்தவுடன் பள்ளிவாசலைக் கட்டியபோது அவர்களும் மக்களோடு சேர்ந்து கல் சுமந்தார்கள். (1)

ஒரு இளைஞர் அறக்கப்பட்ட ஆட்டின் தோலை உரித்துக் கொண்டிருந்தார். அவரைக் கடந்து சென்ற முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஓதுங்கிக் கொள்! உனக்கு எப்படி உரிப்பது என்று காட்டித் தருகிறேன் என்றார்கள் தமது கையை அக்குள் வரை தோலுக்கும் இறைச்சிக்குமிடையே விட்டு உரித்தார்கள். (4)

அடக்கமான அரசர்
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தமது பத்தாண்டு கால ஆட்சியில் தமது பதவிக்காக எந்த மரியாதையையும் புகழையும் மக்களிடம் எதிர்பார்க்கவில்லை இப்பதவியை அடைவதற்கு முன்னர் அவர்களின் நிலை எதுவோ அதுவே அவர்கள் மிகப் பெரிய பதவியைப் பெற்ற பிறகும் அவர்களின் நிலையாக இருந்தது. மக்களிடத்தில் மிகவும் உயர்ந்த நிலையை அடைந்து விட்ட நேரத்தில்கூட, மக்காவாசிகளின் ஆடுகளை அற்பமான கூலிக்காக மேய்த்தவன் தான் நான் என்பதை மக்களிடம் அடிக்கடி அவர்கள் நினைவு கூர்ந்துள்ளனர். (1)

நபிகள் நாயகம் ஸல்) அவர்கள் சாய்ந்து கொண்டு சாப்பிட்டதையோ அவர்களுக்குப் பின்னால் இரண்டு பேர் அடியொற்றி நடப்பதையோ எவரும் பார்த்ததில்லை என்று நபிகள் நாயகத்தின் உற்ற தோழர் அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) அவர்கள் கூறிகிறார்கள். (4)

மாறுபட்ட ஆன்மீகத் தலைவர்
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தனக்கு தெய்வத்தன்மை இருப்பதாக வணக்க வழிபாடு விஷயங்களில்கூட கூறிக்கொண்டது கிடையாது. அதனால்தான் முஸ்லிம்கள் அவரை, இறைவனிடமிருந்து ஜிப்ரீல் என்னும் வானவ தூதர் மூலம் வரும் இறைச்செய்தியை மக்களுக்கு தெரிவித்து அதன்படி வாழ்ந்து காட்டும் ஒரு மாமனிதராகவே பார்க்கிறார்கள்.

முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள் அப்போது வழக்கமாக தொழுவதை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தொழுதார்கள் தொழுது முடிந்தவுடன் மக்கள் சுட்டிக் காட்டினார்கள். அப்போது முஹம்மது நபி(ஸல்) அவாகள் நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே! நீங்கள் மறப்பதைப் போலவே நானும் மறப்பேன் எனவே நான் மறந்து விட்டால் எனக்கு நினைவூட்டுங்கள் என்று குறிப்பிட்டார்கள். (1)

ஒரு நாள் வைகறைத் தொழுகையை நிறைவேற்ற முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வந்தனர் அனைவரும் வரிசையில் நின்றனர் தொழுகைக்கு தலைமை தாங்கிட நபிகள் நாயகமும் நின்றனர். அப்போதுதான் தாம்பத்தியத்தில் ஈடுபட்ட பின் குளிக்கவில்லை என்பது அவர்களுக்கு நினைவுக்கு வந்தது. உடனே மக்களிடம் அப்படியே நில்லுங்கள் எனக் கூறி விட்டு சென்றார்கள். குளித்து விட்டு தலையில் தண்ணீர் சொட்ட வந்து தொழுகையை நடத்தினார்கள். (1)

தன்விஷயத்திலும் பிறரின் சுயமரியாதையை பேணச் செய்தவர்
நான் ஹியரா என்னும் நகருக்குச் சென்றேன் அங்குள்ளவர்கள் தமது தலைவருக்கு ஸஜ்தா (சிரம் பணிந்து கும்பிடுதல்) செய்ததைப் பார்த்தேன் இவ்வாறு சிரம் பணிவதற்கு நபிகள் நாயகமே அதிகத் தகுதியுடையவர்கள் என்று (எனக்குள்) கூறிக் கொண்டேன் முஹம்மது நபி(ஸல்) அவர்களிடம் வந்ததும் நான் ஹியரா என்னும் ஊரக்குச் சென்றேன் மக்கள் தமது தலைவருக்கு சிரம் பணிவதைக் கண்டேன் நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர் என்று கூறினேன். அதற்கு முஹம்மது நபி(ஸல்) அவர்கள் (எனது மரணத்திற்குப் பின்) எனது அடக்கத் தலத்தைக் கடந்து செல்ல நேர்ந்தால் அதற்கம் சிரம் பணிவீரோ எனக் கேட்டார்கள் மாட்டேன் என்று நான் கூறினேன் அதற்கு முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஆம் அவ்வாறு செய்யக் கூடாது என்றார்கள். (4)

எனது அடக்கத்தலத்தை வணங்கி விடாதீர்கள்! (5) எனது அடக்கத்தலத்தில் எந்த நினைவு விழாவும் நடத்தாதீர்கள். (4) என்று சொல்லிச் சென்ற ஒரே ஆன்மீக தலைவரும் இன்றுவரை கடவுளாக மதிக்காமல் ஒரு மாமனிதராகவும் ஆன்மீக தலைவராகவும் நினைக்கப்படுபவர்தான் முஹம்மது(ஸல்) அவர்கள்.


நபிகள் நாயகம் ஸல்) அவர்கள் நோய் வாய்ப்பட்டிருந்து போது அவர்களிடம் நான் சென்றேன். அவர்களுக்கருகில் கட்டுப் போடுவதற்குரிய சிவப்புத் துணி இருந்தது என் பெரிய தந்தை மகனே! இதை என் தலையில் கட்டுவீராக என்றார்கள் அதை எடுத்து அவர்களின் தலையில் கட்டினேன் பின்னர் என் மீது அவர்கள் சாய்ந்து கொள்ள நாங்கள் பள்ளிவாசலுக்குள் நுழைந்தோம் (நபிகள் நாயகம் ஸல்) மரணப்படுக்கையில் இருந்ததால் மக்கள் பெருமளவு அங்கே குழமியிருந்தனர்) மக்களே நிச்சயமாக நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன் தான் உங்களை விட்டுப் பிரியும் நேரம் நெருங்கி விடலாம் எனவே உங்களில் எவருடைய மானத்திற்காவது எவருடைய முடிக்காவது எருடைய உடம்புக்காவது எவருடைய செல்வத்திற்காவது நான் பங்கம் விளைவித்திருந்தால் இதோ இந்த முஹம்மதிடம் கணக்குத் தீர்த்துக் கொள்ளுங்கள்! இதோ முஹம்மதின் மானம் முஹம்மதின் முடி முஹம்மதின் உடல் முஹம்மதின் செல்வம்! பாதிக்கப்பட்டவர் எழுந்து கணக்குத் தீர்த்துக் கொள்ளுங்கள்! அவ்வாறு செய்தால் முஹம்மதின் வெறுப்புக்கும் பகைமைக்கும் ஆளாக நேரிடுமா என்று நான் அஞ்சுகிறேன் என்று உங்களில் எவரும் கூறவேண்டாம் அறிந்து கொள்க! நிச்சயமாக பகைமையும் வெறுப்பும் எனது சுபாவத்திலேயே இல்லாததாகும் அவை எனது பண்பிலும் இல்லாததாகும் என்று கூறிவிட்டு திரும்பினார்கள்.

மறுநாளும் இது போன்றே பள்ளிவாசலுக்கு வந்து இவ்வாறே பிரகடனம் செய்தார்கள் யார் என்னிடம் கணக்குத் தீர்த்துக் கொள்கிறீர்களோ அவர்கள் தாம் எனக்கு மிகவும் விருப்பமானவர்கள் என்பதையும் சேர்த்துக் கூறினார்கள் என்று ஃபழ்லு(ரலி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். (8)

முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இறக்கும்போது தன் உணவுக்காக தனது கவச ஆடையை ஒரு யூதரிடம் அடகுவைத்துவிட்டு மீட்காமலேயேதான் இறந்து போனார்கள்.

முப்பது படி கோதுமைக்காக முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தமது கவச ஆடையை ஒரு யூதரிடம் அடைமானம் வைத்தார்கள். அதை மீட்காமலேயே மரணித்தார்கள் என்று நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள். (1)

(தொடரும்..)

குறிப்பு நூல்கள்:
(1) புகாரி
(2) தப்ரானி
(3) பஸ்ஸார்
(4) அபூதாவூத்
(5) அஹமத்
(6) நஸயீ
(7) ஹாக்கீம்
(8) முஸ்னத் அபீயஃலா

Sunday, May 01, 2005

மாமனிதர் [தொடர்.. 2]

பஞ்சு தலையணை இல்லாத அரசர்.
கூளம் நிரப்பப்பட்ட தோல் தலையணை தான் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் சாய்ந்து கொள்ளும் தலையணையாக இருந்தது (2) என்றும் முஹம்மது நபி(ஸல்) அவர்களிடம் ஒரு பாய் இருந்தது. அதைப் பகலில் விரித்துக் கொள்வார்கள். இரவில் அதை கதவாக பயன்படுத்திக் கொள்வார்கள் (1) என்றும் நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள்.

முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பாயின் மேல் எதையும் விரிக்காமல் படுத்திருந்தார்கள். இதனால் விலாப்புறத்தில் பாயின் அடையாளம் பதிந்திருந்தது. கூளம் நிரப்பப்பட்ட தோல் தலையணையைத் தலைக்குக் கீழே வைத்திருந்தார்கள். அவர்களின் கால்மாட்டில் தோல் பதனிடப் பயன்படுத்தப்படும் இலைகள் குவிக்கப்பட்டு இருந்தன. தலைப்பகுதியில் தண்ணீர் வைக்கும் தோல் பாத்திரம் தொங்கவிடப்பட்டிருந்தது. இதைக் கண்டதும் நான் அழுதேன். ஏன் அழுகிறீர் என்று முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள் அல்லாஹ்வின் தூதரே! (பாரசீக மன்னர்) கிஸ்ராவும் (இத்தாலியின் மன்னர்) கைஸரும் எப்படி எப்படியோ வாழ்க்கையை அனுபவிக்கும் போது அல்லாஹ்வின் தூதராகிய நீங்கள் இப்படி இருக்கிறீர்களே என்று நான் கூறினேன். அதற்கு முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இவ்வுலகம் அவர்களுக்கும் மறுமை வாழ்வு நமக்கும் கிடைப்பது உமக்கு திருப்தியளிக்கவில்லையா? எனக் கேட்டார்கள் என உமர்(ரலி) அவர்கள் இந்த சம்பவத்தைப் பற்றி குறிப்பிடுகிறார்கள். (1)

மேலே போர்த்திக் கொள்ளும் ஒரு போர்வை கீழே அணிந்து கொள்ளும் முரட்டு வேட்டி ஆகிய இரண்டையும் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா எடுத்துக்காட்டி இவ்விரு ஆடைகளை அணிந்த நிலையில் தான் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மரணித்தார்கள் என்று குறிப்பிட்டார்கள். (1)


அரண்மனை இல்லாத அரசர்
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஆன்மீக தலைவராகவும், அரசராகவும் இருந்தாலும் கூட தங்களுக்கென்று அரண்மனை கட்டிக்கொள்ளவில்லை. அவர்களின் வீட்டில் தொழுவதற்கு கூட இடம் பற்றாக்குறைதான் என்பதை பின்வரும் சம்பவம் விளக்குகிறது:

நான் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் முன்னே உறங்கிக் கொண்டிருப்பேன். எனது இரு கால்களையும் அவர்கள் ஸஜ்தாச் செய்யும் (தொழுகையின் போது தலையை கீழே வைக்கும்) இடத்தில் நீட்டிக் கொண்டிருப்பேன். அவர்கள் ஸஜ்தாச் செய்யம்போது தமது விரலால் எனது காலில் குத்துவார்கள் உடனே நான் எனது காலை மடக்கிக் கொள்வேன். அவர்கள் ஸஜ்தாச் செய்து முடித்ததும் மீண்டும் காலை நீட்டிக் கொள்வேன். இவ்வாறு நடந்ததற்குக் காரணம் அன்றைய காலத்தில் எங்கள் வீட்டில் விளக்குகள் கிடையாது என முஹம்மது நபி(ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா(ரலி) கூறினார்கள். (1)


தொடரும்..

ஆதார நூல்கள்:
(1) புகாரி
(2) முஸ்லிம்