Sunday, October 30, 2005

யூத பாசிசவாதிகளின் மனிதாபிமானம்

யூத பாசிச காவலர்களின் அடாவடிதனத்தைப் பார்வையிட இங்கு சொடுக்குங்கள்.

Thursday, October 20, 2005

குஜராத்: திட்டமிட்ட வெறியாட்டம் - 12

சங்பரிவாரின் இந்த கொடிய செயலை ரீனு கன்னா என்ற சமுதாய ஆர்வலர் இப்படி கூறுகிறார். கலவரத்தில் பங்கெடுத்து கொண்ட சங்பரிவாரத்தினர் குறிப்பாக VHPவினர் முஸ்லிம் பெண்களை கொடூரமாக கற்பழிப்பதையே தங்களின் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் மனோரீதியான ஆழமான காயத்தை ஏற்படுத்துகின்றார்கள்.

குஜராத்தை சேர்ந்த ஆறு பெண்களை கொண்ட ஒரு குழு கலவரத்தை பற்றிய ஓர் ஆய்வறிக்கை தயார் செய்தது. அந்த அறிக்கையின் தலைப்பு 'குஜராத் இனபடுகொலை எப்படி சிறுபான்மையினரை பாதித்துள்ளது: எஞ்சியவர்கள் பேசுகிறார்கள்' என்பதாகும்.

இந்த அறிக்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த கொடுமைகள் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. மதவெறியர்களின் மிருகத்தனமான பாலியல் பலாத்காரத்தில் முஸ்லிம் பெண்கள் அடைந்த வேதனையும், பாதிப்பையும் எடுத்துரைக்கபட்டுள்ளது.

பெரும்பாலான பெண்கள் கற்பழிக்கப்பட்டு பின்னர் உயிருடன் எரித்து கொள்ளப்பட்டார்கள் என்று மாலினி கோஷ் என்ற அறுவர் குழுவின் உறுப்பினர் ஏப்ரல் 18, 2002 அன்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது கூறியிருக்கிறார். மேலும் சில சம்பவங்களையும் தொகுத்து உலகுக்கு அறிவிக்கிறார்கள்.
சாய்ரா பானு என்ற ஒரு பெண். அஹமதாபாத் அகதிகள் முகாமில் இருக்கிறார். இவர் சம்பவங்களை நேரில் கண்ட சாட்சிகளில் ஒருவர். இவர் இப்படி கூறுவதாக அறிக்கை தெரிவிக்கிறது. மதவெறி கும்பல் ஒன்று சாய்ராவின் உறவு பெண்ணான நிறைமாத கர்பிணி பெண்ணின் வயிற்றை தான் கொண்டு வந்த ஆயுதங்களினால் பிளந்தது. இன்னும் சிறிது காலத்தில் ரத்தகரை படிந்த இந்த உலகை பார்க்க வர இருக்கும் அந்த குழந்தை அமைதியான உறக்கத்தில் இருந்தது. கல் நெஞ்சம் கொண்ட கயவர்கள் அந்த சிசுவை கூரிய கத்தியால் குத்தி வயிற்றிலிருந்து வெளியே எடுத்தனர். பின்னர் எரிந்து கொண்டிருந்த தீயில் வீசியெறிந்தனர். ஆரவாரம் இல்லாமல் அந்த சிசு எரிந்து மறைந்து போனது.

Ref:
ரியாஸ் அஹ்மத் அவர்களின் குஜராத் கலவர தொகுப்பு

(குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த திட்டமிடப்பட்ட மனித உரிமை மீறலை மூடி மறைத்திட நினைக்கும் பாசிச சங்பரிவார கூட்டத்தினருக்கு எதிரான தொடர்)

Wednesday, October 19, 2005

யூத பாசிசவாதிகளால் கொல்லப்பட்டவர்கள்

யூத பாசிசவாதிகளால் கொல்லப்பட்ட குழந்தைகளின் படங்கள்


குஜராத்: திட்டமிட்ட வெறியாட்டம் - 11

குஜராத்தில் ஒரு பகுதியான ரந்திக்பூரில் பல்கீஸ் யாகூப் படேல் என்றொரு பெண். மிகவும் மோசமாக பாதிக்கபட்டவர்களில் ஒருவர். இவருக்கு நடந்ததை கேட்டால் கண்களிலிருந்து ரத்தகண்ணீர் வடிக்காதவர் எவரும் இருக்கமாட்டார். ஐந்து மாத கர்பிணியான இவருக்கு 20 வயது. மரணத்தின் வாயிலுக்குள் தலையை விட்டு மீண்டு வந்தவர்.

முஸ்லிம்களை கொலை செய்ய வந்தவர்களுக்கு, ஆணென்ன, பெண்ணென்ன, குழந்தை என்ன, கர்ப்பிணி என்றால் இவர்களுக்கு என்ன? முஸ்லிமாக பிறந்தால் இந்த நாட்டில் வாழ உரிமையில்லை. மண்ணுக்குள்ளோ அல்லது பூமிக்கு மேலோ ஏதோ ஒரு இடத்தில் வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.
பல்கீஸை கொல்ல வந்த 3 பேரும் அவள் 5 மாத கர்ப்பிணியா? நிறைமாத கர்ப்பிணி என்றெல்லாம் அலட்டி கொள்ளவில்லை. வந்தார்கள். பல்கீஸை நிர்வாணப்படுத்தினார்கள். தானும் நிர்வாணமானார்கள். அவளை கற்பழித்ததோடு மட்டுமல்லாமல் கடுமையாக அடித்தார்கள். இவர்கள் மூவரும் பல்கீஸின் சொந்த கிராமத்தை சேர்ந்தவர்கள்.

பல்கீஸை போல அவளின் உறவினரும், இந்தியாவில் பிறந்ததற்காக இதே பரிசை பெற்றனர். அவர்களில் பல்கீஸின் சகோதரி சமீம், ஆமினா ஆதம், ஹலிமா, முன்னிபென் அப்துல் மற்றும் மதீனா ஆகியோரும் பாசிஸ வெறியர்களால் கற்பழிக்கபட்டு கொல்லப்பட்டனர். இவர்கள் 9 வயதே ஆன முன்னிபென் அப்துலையும் விட்டு வைக்கவில்லை. 45 வயதான ஹலிமாவையும் விட்டுவைக்கவில்லை. அவர்களையும் கற்பழித்தே கொன்றனர். பாசிஸ்ட்டுகளுக்கு வயதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. காட்டு மிருகங்களே பார்த்து வெட்கப்படும் அளவுக்கு இவர்கள் காட்டுமிராண்டிகள் போல நடந்து கொண்டார்கள்.

இதெல்லாவற்றையும் விட வேதனையையும், ஆத்திரத்தையும் தூண்டும் ஒரு சம்பவம் ஒன்று நடந்தது. பல்கீஸின் சகோதரி சமீம் குழந்தை ஈன்றெடுத்து இரண்டு நாள் தான் ஆகிறது. பாசிஸ கும்பலிடமிருந்து தப்பி பிழைக்க அந்த குழந்தையும் தூக்கி கொண்டு ஓடும் போது, நெங்சில் ஈரம் இல்லாதவர்கள் அவளை வழி மறித்து இரண்டு நாளே ஆன அந்த குழந்தையை எரிந்து கொண்டிருந்த தீயில் வீசியெறிந்தனர். தன் பச்சிளம் குழந்தை சூடு தாங்க முடியாமல் கதறியதை கண்டு, பாவம் சமீம் துடியாய் துடித்தாள். கதறி அழுதாள். இரக்கமில்லாத பாசிஸ வெறியர்கள் இத்துடன் விடவில்லை. குழந்தை பெற்று இரண்டு நாளே ஆன அவளை தொடர்ந்து கற்பழித்ததோடு மட்டுமல்லாமல் கடுமையாக சித்ரவதை செய்து கொன்றேவிட்டார்கள் ஈனர்கள்.
அங்கே ஒவ்வொரு பெண்ணுக்கும் இதுவே நடந்தது. கொலை வெறிபிடித்த கயவர்கள் தன் ரத்த பசியை தீர்த்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்கள்.

பல்கீஸ் மயங்கி கிடப்பதை இவர்கள் கவனிக்கவில்லை. அவளும் இறந்து விட்டதாக எண்ணி கிளம்பிவிட்டார்கள். தனக்கு சுய நினைவு வந்தபோது தான் தெரிந்தது நிர்வாணமாக நடு ரோட்டில் நாம் கிடக்கிறோம் என்று.

கணவனை இழந்து, இரண்டு வயது பிள்ளையை இழந்து, மானத்தை இழந்து, அவமானப்பட்டு கூனி குருகி போய் இருக்கும் பல்கீஸ்க்கு கண்ணீரும், வயிற்றில் வளரும் குழந்தையுமே ஆறுதல்.

பல்கீஸை கற்பழித்து அவமானப்படுத்திய இந்து வெறியர்கள் வேறு யாருமில்லை. அக்கம் பக்கத்து வீட்டு இந்துக்கள். சகோதர வாஞ்சையுடன் பழகிவந்தவர்கள். அவர்களுகென்று ஒரு நேரம் குறிப்பிடப்படும் போது, தன் புத்தியை காட்டிவிடுகிறார்கள். இப்படி எத்தனையோ சம்பவங்கள் இந்தியா முழுதும் நடந்திருக்கிறது. இதற்கு காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால், 'முஸ்லிம்களிடம் அன்யோன்யமாக பழகி அவர்களின் கழுத்தை அறுங்கள்' என்ற ஆர்.எஸ்.எஸின் மறைமுக செயல்திட்டமே விடையாக வந்து நிற்கிறது. பல்கீஸை இந்நிலைக்கு ஆளாக்கியவர்களில் 23 வெறியர்களை பெயர் சொல்லி குறிப்பிட்டிருந்தார்.

Ref:
ரியாஸ் அஹ்மத் அவர்களின் குஜராத் கலவர தொகுப்பு

(குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த திட்டமிடப்பட்ட மனித உரிமை மீறலை மூடி மறைத்திட நினைக்கும் பாசிச சங்பரிவார கூட்டத்தினருக்கு எதிரான தொடர்)

Tuesday, October 11, 2005

இந்தியாவில் இஸ்லாம்-5

வரலாற்றுத் தொடர்:5 - தோப்பில் முஹம்மது மீரான்

இருமதங்களின் அழிவு...!

கி.பி.52-ல் கிருத்தவமும் கி.பி.68-ல் யூத மதமும் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் வந்ததாக வரலாறு கூறுகின்றது. பிரச்சாரம் குன்றி நின்ற சமண புத்த மதங்கள் வெளியிலிருந்து வந்த மதங்களின் வளர்ச்சிக்கொப்ப மதமற்றம் திராவிட மக்களுக்கிடையில் வரைந்து பரவியது. ஆனால் கிருத்தவம், சமணம், புத்தம் இம்மூன்று மதங்களும் பரவியது போல் யூத மதம் இங்கு பரவவில்லை.

கி.பி.எட்டாவது நூற்றாண்டில் ஆரிய மதத்தின் இரு பிரிவுகளான சைவ வைஷ்ணவ மதங்கள் வலுப்பெற்றபோது சமண மதம் வலிமை இழந்து போய்விட்டது. சைவமும் வைணவமும் இணைந்து சமண புத்த மதங்களை ஒழித்துக் கட்டுவதில் தீவிரமாக ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 'சிதறால்' என்ற ஊரில் 'திருச்சாணத்து மலையில்' இன்று காணப்படும் பகவதிக் கோயில் தென்னாட்டில் சமணர்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த கோயிலாக விளங்கியதாகும். அக்கோயிலில் இருந்த 'பத்மாவதி' சிலையை பகவதி சிலையாக மாற்றி இந்துக்கள் வசப்படுத்தி விட்டனர்.

உலகப் புகழ்பெற்ற இந்த திருச்சாணத்து மலையைப் பற்றி நமது முன்னாள் பிரதமர் திரு. பண்டித நேரு, சீனா பயணம் மேற்கொண்டிருந்த போது திரு. சுவன்லாய், நேருவிடம் விசாரித்தார். (மாத்ருபூமி வார இதழ் வாசகர் பகுதி 1989 ஜூலை 2-8) அந்த அளவுக்கு புகழ்வாய்ந்த சமணக் கோயிலாக விளங்கியது சிதறால் கோயில். நேருவின் வேண்டுகோளின்படி இன்று அக்கோயில் தொல்பொருள் பாதுகாப்புத் துறையின் கீழ் இருந்து வருகிறது 'சிதறால் அம்மா' என்ற பேரில் இந்துக் கோயிலாக இவை இருந்து வருகிறது. திருவிதாங்கூர் ஆண்டு வந்து ஸ்ரீமூலம் திருநாள் (இவருடைய காலம் 1885-1924) காலத்தில் இக்கோயிலில் 'சிதறாலம்மா' என்ற பகவதி பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இதுபோன்று நாகர்கோவிலில் உள்ள 'நாகர் அம்மன்' கோயில் ஒரு சமணக் கோயிலாகும். கி.பி.1589-க்குப் பின் இது இந்துக் கோயிலாக மாற்றப்பட்டது. அக்கோயிலின் நிர்வாகப் பொறுப்பில் குணவரே பண்டிதர் என்றும் கமல வாகன பண்டிதர் என்று இரு சமண அறிஞர்கள் இருந்து வந்தனர். இந்துக் கோயிலாக மாற்றப்பட்டதும் துளு நாட்டைச் சார்ந்த போற்றிமார் (பிராமணர்கள்) அங்கு பூஜாரிகளாக பொறுப்பேற்றனர். (கேரள வரலாறு: ஏ.ஸ்ரீதரமேனோன் பக்கம் 87)

வயநாடு காட்டிற்குள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சிங்ஙேரத் தேவரையும் செல்வரத் தேவியையும் பிரதிஷ்டை செய்துள்ள கோயில், இந்துக் கோயில் மாற்றம் செய்த சமணக் கோயிலாக என்று தெரிய வந்துள்ளது (மாத்ருபூமி வார இதழ். டாக்டர் நெடுவட்டம் கோபால கிருஷ்ணன் 1989).

சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகளும் சமணர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

புத்த மதம், சங்க காலத்தில் அதன் முழு வளர்ச்சியை அடைந்திருந்தது. 'மணிமேகலை' புத்த மத நூல் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாகோதை என்றும் மகோரயபுரம் என்று அறியப்படும் கொடுங்கல்லூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்த சேர நாட்டு அரசரான பள்ளிபாணப் பெருமாளும் புத்த மதத்தை சார்ந்தவரேயாகும் (இவர் பிறகு இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டார்).

சபரி மலை ஐய்யப்பனும் புத்த மதத்தைச் சார்ந்த ஒரு அரசர் என்று தெரிய வருகிறது. பிற்காலத்தில் இவர் இந்து தேவனாக்கப்பட்டார்.

"சாஸ்தா, அல்லது ஐய்யப்பன் இந்து தேவனாக்கப்பட்ட புத்தன் என்றும், சபரி மலையில் உள்ள சாஸ்தாக் கோயிலுக்கு செல்லும் புனித யாத்திரையில் புத்தமத சடங்குகள்தான் பெருவாரியாக காணப்படுகிறது என்றும் சில அறிஞர்கள் கூறுகின்றனர்" என்று திரு.ஸ்ரீதரமேனோன் குறிப்பிடுகிறார் (பக்கம் 89). 'சரணம் ஐய்யப்பா' என்று கூப்பிடுவது புத்த மதக் கொள்கையான 'சரணத்றணயத்தை' நினைவு கூறுவதாக அமைந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதை வேறு பல வரலாற்று பண்டிதர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். திருச்சூரிலுள்ள வடக்குந்நாதர் கோயிலும் 'கொடுங்கல்லூர் பரணிபாடும்' புகழ்பெற்ற கொடுங்கல்லூர் பகவதிக் கோயிலும் புத்த பள்ளிகளாக இருந்து பிறகு இந்துக் கோயில்களாக மாற்றப்பட்டவைகளில் குறிப்பிடத்தக்க சிலவாகும். தமிழ் நாட்டிலும் பல புத்த பள்ளிகள் இந்துக் கோயில்களாக மாற்றப்பட்டன.

தொடரும்..

மக்கள் உரிமை வாரஇதழ் : செப் 23 - 29, 2005

Sunday, October 09, 2005

குஜராத்: திட்டமிட்ட வெறியாட்டம் - 10

கலவரங்கள் நடந்த அனைத்து பகுதிகளிலும் முஸ்லிம் பெண்களே குறிவைக்கப்பட்டார்கள் என்பதை நாம் மறந்துவிட கூடாது. இந்த கோரதான்டவம் ஆடுவதற்காக 15, 20 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள கிராமங்களிலிருந்து மதவெறியர்கள் வரவழைக்கப்பட்டார்கள். இந்த கலவரத்தின் போதுதான் முதல் முதலாக இப்படி கொலையாளிகளை ஒரேயடியாக வெளிக்கிராமங்களிலிருந்து கொண்டு வந்திருக்கிறார்கள் என்கிறார் பான்சமஹால் என்ற மாவட்ட காவல்துறை துணைக்கண்காணிப்பாளர்.

இப்படி திரட்டப்பட்ட கொலையாளிகள் ஒருவர் அல்ல ஒரு நூறு பேர் அல்ல ஓராயிரம் பேர் அல்ல 12 லட்சம் பேர் இந்த கலவரத்தில் கலந்து கொண்டார்கள். வந்தவர்கள் வெறும் கையுடனும் வரவில்லை. அரிவாள், வீச்சு, சூலம், துப்பாக்கி, கேஸ் சிலிண்டர், பெட்ரோல், வெடிபொருட்கள் இப்படி அனைத்து தயாரிப்புடனும் வந்து காரியத்தை கட்சிதமாக முடித்துவிட்டு சென்றார்கள்.

இவர்களுக்கு அனைத்து பாதுகாப்பும் மத்திய மாநில அரசுகள் கொடுத்தது. கலவரக்காரர்களுக்கு ரூ.500 தின கூலி, உணவு மற்றும் மது. இவர்கள் இறந்தால் 2 லட்சம் பணம். கைதானால் அனைத்து செலவும் VHP ஏற்கும். இப்படியாக அவர்கள் முஸ்லிம்கள் மீது பிரகடனப்படுத்தாத ஒரு போரையே தொடுத்தார்கள். எவ்வித தயாரிப்பும் இல்லாத அந்த முஸ்லிம்களுக்கு சாவதை தவிர வேறு வழியில்லாமல் போனது.

தன்னை பெற்றெடுத்த பெற்றோர், பாசத்துடன் வளர்த்து வந்த பிள்ளைகள், தன் சகோதர, சகோதரிகள், தன் மனைவி, உற்றார், உறவினர், சொத்து, சுகம் அனைத்து விட்டுவிட்டு நாளை நாம் மரணிக்க போகிறோம் என்று இந்த முஸ்லிம்கள் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. கயவர்கள் வந்தார்கள். கையில் கிடைத்ததை சுருட்டினார்கள். முஸ்லிம்களை துண்டாடி குவியலாக்கினார்கள். கேஸ் அடித்து கொன்றார்கள். சென்றார்கள் அடுத்த வீடுகளை நோக்கி.

இப்படியாக பெற்றோர்களையும், உற்றார்களையும் இடிந்து தவிப்பவர்களில் ஜாவிதும் ஒருவன். இவனுக்கு வயது 11. குடும்பத்தில் உள்ள அனைவரையும் இடிந்து தனிமரமாக நின்று கொண்டிருக்கிறான் இன்று. ஜாவிதின் தந்தையையும், தாயையும் மற்றும் சகோதரியையும் உயிருடன் எரித்து கொன்றார்கள். மேலும் ஜாவிதின் ஒன்று விட்ட அண்ணனையும் கொன்றார்கள், அவரின் மனைவியையும், சகோதரியையும் கற்பழித்து கொன்றார்கள். இன்று இவன் அகமதாபாத்தில் உள்ள ஷா ஆலம் தர்கா அகதிகள் முகாமில் இருக்கிறான்.

மதவெறி பிடித்த மிருகங்களின் செயல்களை கண்ணால் கண்ட ஜாவித், நடந்ததை மறக்க முடியாமல் தவித்து கொண்டிருக்கிறான். ஜாவிதுக்கு ஆறுதல் கூற இன்று யாருமில்லை. பாசம் காட்டி வந்த பெற்றோர்கள் எரிந்து சாம்பலாகிவிட்டனர். உறவினர் என்று சொல்லி கொள்வதற்கும் யாருமில்லை. அவர்களையும் கொன்று விட்டனர். என்ன செய்வது என்று தெரியாமல் கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் ஜாவிதின் வாழ்க்கை. இப்படி நூற்று கணக்கான ஜாவித்கள் இன்று குஜராத்தில். பாசிஸ்ட்டுகளின் கொலை வெறியாட்டத்தால் நாளை நம் பிள்ளைகளும் ஜாவித் ஆக மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை இந்தியாவில். முஸ்லிம்களை வேரறுப்பதே பாசிஸ்ட்டுகளின் வாழ்க்கை இலட்சியம்.

Ref:
ரியாஸ் அஹ்மத் அவர்களின் குஜராத் கலவர தொகுப்பு

(குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த திட்டமிடப்பட்ட மனித உரிமை மீறலை மூடி மறைத்திட நினைக்கும் பாசிச சங்பரிவார கூட்டத்தினருக்கு எதிரான தொடர்)

Thursday, October 06, 2005

குஜராத்: திட்டமிட்ட வெறியாட்டம் - 9

பாத்திமா பீவி முஹம்மத் யாகூப் ஷேக் என்றொரு பெண். இவர் தன் குடும்பத்தை சேர்ந்த 19 பேரை ரத்த வெறிபிடித்த பாசிஸ பேய்களுக்கு இறையாக்கிவிட்டு பரிதவித்து நின்ற பெண்களில் ஒருவர். நம் குடும்பத்தில் ஒருவர் இறந்து போனாலே நம்மால் தாங்கி கொள்ளமுடியவில்லை. பாவம் இந்த பாத்திமா பீவி 19 பேரை பறிகொடுத்துவிட்டு படும் வேதனை.

இவர் கூறுகிறார், இந்த பாசிஸ வெறியர்களின் எல்லா காட்டுமிராண்டி தனங்களையும் மன்னித்துவிட முடியும். ஆனால் இவர்கள் நம் பெண்களிடம் நடந்து கொண்ட விதம் மன்னிக்கவே முடியாது என்று கூறுகிறார். அந்த அளவுக்கு நம் பெண்களிடம் மிக கொடூரமாக நடந்துகொண்டார்கள் காட்டுமிராண்டிகள்.

நரோடா பாடியா என்பது இவர் வசித்து கொண்டிருந்த இடத்தின் பெயர். இங்கு தான் 90 முஸ்லிம்கள் உயிருடன் எரித்து கொல்லப்பட்டார்கள். அவர்கள் காவல்துறையினரிடம் தங்களை காப்பாற்றும் படி வேண்டினார்கள், கெஞ்சினார்கள், கதறினார்கள், உயிர்பிச்சை கேட்டார்கள். இவர்களை பாதுகாக்க வேண்டிய அந்த காவல்துறையினர், காப்பாற்றுவதற்கு பதிலாக அறிவுரை கூறினார்கள். உங்களை காப்பாற்ற முடியாது. நீங்கள் அனைவரும் உங்களை கொலைகார கும்பலிடமே ஒப்படைத்துவிடுங்கள் என்று கூறினார்கள். இதை சொல்வதற்காகவா இவர்கள் நம் வரி பணத்தில் உடம்பை வளர்க்கிறார்கள்? தப்பிப்பதற்கு வேறு வழியில்லாத முஸ்லிம்கள் பாசிஸ்ட்டுகளின் கைகளால் உயிருடன் எரிந்தார்கள்.

அந்த கிராமத்திலிருந்து தப்பித்துகொள்ள பாத்திமா ஷேக் குடும்பத்தினருடன் முயற்சி செய்து கொண்டிருந்த போது, பாசிஸ்ட்டுகளின் கைகளில் அகப்பட்டு கொண்டார்கள் அனைவரும்.

இவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக தன்னுடன் கொண்டுவந்த ரூ.20,000 பணத்தை எடுத்து கொடுத்து, தங்களை விட்டுவிடும்படி கெஞ்சினார் பாத்திமா ஷேக்கின் சகோதரி. அந்த வெறிபிடித்த கூட்டம் அவரிடமிருந்து பணத்தையும் பறித்து கொண்டதோடு மட்டுமல்லாமல், ஒருவர் பின் ஒருவராக அந்த சகோதரியை கற்பழித்தனர். பாவம் அந்த சகோதரி தன்னை விட்டுவிடும்படி கத்தியும், கெஞ்சியும் எந்த பயனும் இல்லை. அவரை கந்தலாக்கிவிட்டு பின்னர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டார். இதையே பாத்திமா ஷேக்கின் சகோதரி மகளுக்கும் நடந்தது. நடு ரோட்டில் அவர்கள் அசிங்கப் படுத்தப்பட்டார்கள். இவை அனைத்தையும் தன் கண்ணால் கண்ட இந்த பாத்திமா தன்னுடைய அழுகையை அடக்கமுடியாமல் தேம்பி தேம்பி அழுது கொண்டே இருந்தார்.

மேலும் பாத்திமா கூறுகிறார் தன் சகோதரியும், சகோதரியின் மகளும் மட்டும் இந்த கொடுமைக்கு ஆளாகவில்லை. குறைந்தது 25 பேர் இதேபோல் பாதிக்கப்பட்டார்கள். நடு ரோட்டில் அந்த பெண்கள் முழு நிர்வாணமாக்கபட்டு பாசிஸ வெறியர்களால் கற்பழிக்கப்பட்டு எரித்து கொல்லப்பட்டார்கள். வயது முதிர்ந்த பெண்களையும் கூட முழு நிர்வாணப்படுத்தி தீயில் வீசியெறிந்தார்கள். இவர்களெல்லாம் மனிதர்களே அல்ல, காக்கி அரைகால் சட்டை அணிந்த பேய்கள் என்று கூறுகிறார் அந்த பெண்மனி.

எரித்து கொல்லப்பட்ட இந்த முஸ்லிம்களின் சடலங்கள் அனைத்தும் ஒரு கபர்ஸ்தானுக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. எரிந்து போன அந்த முஸ்லிம்களின் சடங்களை மனதில் தைரியம் இல்லாதவர்கள் நிச்சயமாக பார்க்கவே முடியாது. அந்த அளவுக்கு கொடூரம். முஸ்லிம்களை எரித்த கயவர்கள் பாதியிலேயே அணைந்துவிடகூடாது என்பதற்காக அவர்களின் மீது முதலில் பெட்ரோலை, கேஸை ஊற்றி எரித்தார்கள். அதனால் எரிந்த முஸ்லிம்களில் பெரும்பான்மையோரின் உடல் முழுதும் வெந்து போன நிலையிலேயே இறந்திருக்கிறார்கள்.

தீயில் வெந்த முஸ்லிம்களின் உடல் கொஞ்சம் கொஞ்சமாக பருத்து, வயிறு வெடித்து குடல்கள் அனைத்து வெளியில் தள்ளி மிகவும் கொடூரமாக காட்சியளித்தது. சில சடலங்கள், முகம் வீங்கி கண்கள் வெளியில் பிதிங்கிய நிலையில் விகாரகமாக காட்சியளித்தது. இன்னும் சில உடல்கள் கறிகட்டையை போல் கருப்பாகவும், சில உடல்கள் சதைகள் வெடித்த நிலையிலும், மாம்பழ கொட்டையின் மீது ஈக்கள் கூட்டாக உட்கார்ந்தால் எப்படி காட்சியளிக்குமோ அப்படி தான் முஸ்லிம்கள் ஆக்கப்பட்டிருந்தார்கள். நெங்சு வெடித்து விடும் அளவுக்கு கொடூரங்கள் அங்கே நிறைவேற்றப்பட்டன.

Ref:
ரியாஸ் அஹ்மத் அவர்களின் குஜராத் கலவர தொகுப்பு

(குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த திட்டமிடப்பட்ட மனித உரிமை மீறலை மூடி மறைத்திட நினைக்கும் பாசிச சங்பரிவார கூட்டத்தினருக்கு எதிரான தொடர்)

Sunday, October 02, 2005

இந்தியாவில் இஸ்லாம்-4

ஒரு புது மதத்தின் வருகையை ஏற்றுக் கொள்வதற்கு தென் இந்தியாவில் நிலவியிருந்த சாதமான சூழ்நிலை.

எ) ஆதிமக்கள்: இன்றைய கேரளம் உட்பட, மண்டைய தமிழகத்தில் ஆதிகுடிமக்கள் எனப்படுபவர்கள் இன்று நம் அரசால் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள மக்களும் இன்று காடுகளில் தங்கிவரும் மலைவாசிகளுமாவார்கள். ஆதி திராவிடர்கள் என அழைக்கப்படுபவர்கள் இவர்களே ஆவர். மதங்களின் வருகைக்கு முன் இவர்களுக்கிடையில் ஒரு ஆட்சி முறையோ, சமூக சட்ட வரம்புகளோ யாதும் இல்லாமலிருந்தது. கேரளப் பகுதியை பொறுத்த மட்டில் செல்வாக்கு வாய்ந்த நாயர் வகுப்பினருக்குக் கூட எந்தவிதமான மதமும் இல்லாமதிருந்தது.

ஆரியர்கள் எனப்படுபவர்கள் வெளியே இருந்து இப்பகுதிக்கு வரும்முன் இங்குள்ள மக்கள் சடலங்களை புதைத்தே வந்தனர். இப்ராஹீம் நபிக்குப் பின் அராபியர் மத்தியில் நடைமுறையில் இருந்து வந்த "சுன்னத்" முறையை இங்குள்ள ஆண்களும் பின்பற்றி வந்ததாக 'கேரளா மகா சரித்திரம்' என்ற நூலின் முதற்பாகத்தில் பய்யம்பள்ளி 'கோபால குறுபு' குறிப்பிட்டுள்ளார். (சேரமான் பெருமகன் - கே.கே. அப்துல் கரீம், பக்கம் 77) மதத்தை இங்குள்ள மக்கள் மத்தியில் திணிப்பதற்கு முன் இம்மக்களுக்கு இந்து மதக் கொள்கை என்னவென்றுகூட தெரியாத நிலை.

இப்பகுதியில் வாழ்ந்திருந்த திராவிட மக்கள் நீர் வழங்கும் நதிகளையும், உணவுக் குண்டான பலனளிக்கும் மரங்களில் குடிகொள்ளும் சக்திகளையும் நன்றியுடன் வணங்கி வந்தனர். நோய் நொம்பலங்களை வழங்கும் பேய் பிசாசுகளை ஆடிப்பாடி திருப்திப்படுத்தினர். இப்பவும்கூட சில வகுப்பினர் சில கோவில்களுக்கு முன் கொடைவிழா நாட்களில் ஆட்டம் போடுவதைக் காணலாம். ஆலமரங்களில் தெய்வம் குடிகொண்டிருப்பதாக நம்பி ஆலமரங்களையும் வணங்கி வந்தனர். இன்று கூட பல பகுதிகளில் கோவில் முன்பகுதியில் ஆலமரங்கள் வளர்க்கப்படுவதும், அதை வலம் வந்து பக்தியுடன் வணங்குவதையும் நாம் காண்கிறோம். கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை கணபதி பூஜை இங்கு நடந்ததில்லை என்று ஏ. சீதரமேனான் தமது 'கேரள வரலாறு' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார் (பக்கம் 85). கி.பி. ஆறாவது நூற்றாண்டு வரை திராவிட வணக்க முறைகளும், பழக்கவழக்கங்களுமே இங்கு இருந்து வந்ததாக சங்க இலக்கியங்களிலிருந்து தெரிய வருகிறது. ஆனால் இவையாவும் எந்த வித மத கோட்பாடுகளின் அடிப்படையில் செய்துவந்த வணக்கமல்ல.

"சங்க காலத்தில் வாழ்ந்திருந்த மக்களில் பெரும்பான்மையோருக்கு கி.பி.500 வரை தனிமதம் எதுவும் இல்லை. 'கொற்றவை' என அழைக்கப்படும் பொர் தேவதையை (திராவிட துர்க்கை) விருப்பமுடன் வழிப்பட்டு வந்தனர்" (ஏ. சீதரமேனோன் - கேரள வரலாறு, பக்கம் 82)

கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே சமண மதமும் புத்த மதமும் இப்பகுதியில் பரவிவிட்டன. ஆனால் இங்குள்ள ஆதி குடிமக்களை அம்மதங்களால் கவர முடியவில்லை. அம்மதங்களைப் பின்பற்றி வந்த மக்களையும், அம்மதங்களையும் மிக சகிப்புத்தன்மையுடன் இங்குள்ள மக்கள் பார்வையிட்டனர்.

ஆரியர்கள் வரும் முன் இங்கு வாழ்ந்திருந்த விராவிட மக்கள் தங்களுக்கே உரிய ஓர் ஆட்சி முறையை அமுல்படுத்தி தனி நாட்டை அமைத்து, சுற்றிலும் கோட்டைகளையும் கட்டினர். திருவனந்தபுரத்தில் உள்ள 'புலயனார்' கோட்டை மலபார் பகுதியில் ஏறநாட்டில் உள்ள கண்ணன் பாறையும் கும்மிணிப் பாறையும் இம்மக்கள் கோட்டை கட்டி ஆட்சிபுரிந்து வந்த இடங்களில் சில ஆகும்.

ஆரியர்கள் இங்கு செல்வாக்கு பெறுவதற்கு முன் இங்குள்ள மக்களுக்கிடையே ஜாதி முறை இல்லவே இல்லை. இன்று காணப்படும் ஜாதிப்பிரிவுகள் எட்டாவது நூற்றாண்டிற்குப் பிறகுதான் தோன்றின.

தொடரும்..

மக்கள் உரிமை வாரஇதழ் : செப் 16 - 22, 2005

குஜராத்: திட்டமிட்ட வெறியாட்டம் - 8

பம்பாய் கலவரத்தின் போது ஹிட்லரின் பாணியை கையாண்டது போல இங்கும் கையாளப்பட்டுள்ளது. ஹிட்லரின் நாஜி படை யூதர்களை கொலை செய்தது போல, இவர்கள் முஸ்லிம்களை கொலை செய்து குன்றுகளாக குவித்தனர் என்று ஜரோப்பிய யூனியன், தான் தயாரித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அந்த அளவுக்கு இவர்கள் தன் கைவரிசையை காட்டியிருக்கிறார்கள். இந்த அறிக்கையில் பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் உட்பட 15 நாடுகள் கையெழுத்திட்டுள்ளது.

இந்த கலவரத்தில் அதிகமான பாதிப்புக்கு உள்ளானது பெண்களே. எங்கு நோக்கினாலும் முஸ்லிம் பெண்களை பாசிஸ வெறியர்கள் கும்பல் கும்பலாக கற்பழித்துள்ளனர். கற்பழித்ததோடு மட்டும் இல்லாமல், அவர்களின் மர்ம ஸ்தானத்தை சிதைத்து, தீயிட்டு கொளுத்தி வேடிக்கை பார்த்து ரசித்தனர்.

பங்ச்மகால், பரோடா, ஆனந்த் மற்றும் அகமதாபாத் ஆகிய மாவட்டங்கள் இந்த கலவரத்தில் அதிக பாதிப்புக்குள்ளானது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வார்த்தைகளை கொண்டு, பெண்களே அதிக பாதிப்புக்குள்ளானார்கள் என்றும் பெண்களே கலவரத்தின் முக்கிய இலக்கானார்கள் என்றும் நம்மால் முடிவுக்கு வரமுடிகிறது.

முஸ்லிம் பெண்களிடம் இவர்கள் காட்டுமிராண்டிகளை போல நடந்து கொண்டார்கள். போஸ்னியாவிலும், கோசோவோவிலும் கொலை வெறி பிடித்து அலைந்த செர்பியர்களையே வெட்கப்பட வைக்கும் விதமாக இவர்கள் நடந்து கொண்டார்கள்.

எங்கெல்லாம் இந்த முஸ்லிம் பெண்கள் கண்டந்துண்டமாக வெட்டி கொலை செய்யப்படுகிறார்களோ, அவர்களின் அங்கங்கள் துண்டாடப்பட்டு, சிதைக்கப்பட்டு கொல்லப்படுகிறார்களோ, தீயில் கருகி, வெந்து சாகடிக்கப்படுகிறார்களோ அங்கெல்லாம் இந்த முஸ்லிம் பெண்கள் கற்புடன் கொலை செய்யப்பட்டார்கள் என்பதற்கு எந்த முகாந்திரமுமில்லை. கொல்லப்பட்ட அனைத்து பெண்களும் கற்பழிக்கப்பட்ட பிறகே கொலை செய்யப்பட்டார்கள்.

இதில் இந்த மதவெறிபிடித்த மிருகங்களுக்கு வயது என்பது ஒரு பொருட்டே அல்ல. 9 வயதிலிருந்து 50 வயது வரை உள்ள பெண்களை கூட இவர்கள் விட்டு வைக்கவில்லை. அவர்களையும் கற்பழித்தார்கள். கொன்றார்கள். அந்த அளவுக்கு மதம் பிடித்து திரிந்தார்கள் இந்த மதவெறியர்கள். இவையனைத்தை அந்த பெண்களின் தந்தைமார்களையும், சகோதரர்களையும், கணவன்மார்களையும் சாட்சியாக வைத்தே அரங்கேற்றினார்கள். யார் வாழ்விலும் நடக்க கூடாத சம்பவம் தன் வாழ்வில் நடந்ததை எண்ணி உள்ளம் குமுறினார்கள் இந்த பலகீனமான ஆண்கள்.

இதை விட கொடுமை என்னவென்றால், கற்பழிப்பதையும், எரித்து கொல்வதையும் பாவிகள் பள்ளிவாசலில் வைத்தே செய்தார்கள். அப்பாவி முஸ்லிம்கள் எதுவும் செய்ய வழி தெரியாது, குரங்கு கையில் பூமாலை கொடுத்தது போல, இந்த காம வெறியர்களின் கையில் தம் பெண்கள் சிக்கி சின்னாபின்னப்படுவதை கண்டு விக்கி விக்கி அழுதார்கள்.

Ref:
ரியாஸ் அஹ்மத் அவர்களின் குஜராத் கலவர தொகுப்பு

(குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த திட்டமிடப்பட்ட மனித உரிமை மீறலை மூடி மறைத்திட நினைக்கும் பாசிச சங்பரிவார கூட்டத்தினருக்கு எதிரான தொடர்)