கோவையில் நடந்த கலவரத்தில் முஸ்லிம்கள் 4 பேர் கொலை
11 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து
சென்னை, ஜுன் 28,
கோவையில் நடைபெற்ற கலவரத்தில் முஸ்லிம்கள் 4 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 11 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்தது.
கோவை கலவரம்
கோவை போக்குவரத்து போலீஸ்காரர் செல்வராஜ். இவர் 29.11.97 அன்று கொலைச் செய்யப்பட்டார். இதனால், அப்பகுதியில் இனக்கலவரங்கள் ஏற்பட்டன. இதைத்தொடர்ந்து முஸ்லிம் வகுப்பை சேர்ந்தவர்களை சிலர் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டனர்.
செல்வராஜ் கொலை செய்யப்பட்ட மறுநாள் கோவைஅரசு ஆஸ்பத்திரி வளாகத்திலும் கலவரம் ஏற்பட்டது. அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நின்றிருந்த கும்பலை சேர்ந்த பலர் அங்கிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கியும், தீவைத்தும் எரித்தனர். அந்த பரபரப்பான சூழ்நிலையின்போது உக்கடத்தில் நடந்த கலவரத்தில் காயம் அடைந்ததாக சிலர் ஒரு வேனில் கொண்டுவரப்பட்டனர். அந்த வேனை பார்த்த கலவர கும்பல் நேராக அந்த வேனுக்கு சென்று வேனில் இருந்த அபீப் ரகுமான் என்பவரை கத்தியால் குத்தியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
4 பேர் படுகொலை
பின்னர் வேனில் இருந்த ஆரிஸ் என்பவரை இழுத்துப்போட்டு ஆஸ்பத்திரி வளாகத்தில் உயிரோடு பெட்ரோல் ஊற்றி கொளுத்தியது. இதில் அவரும் இறந்தார். சற்று நேரத்தில் உக்கடம் கலவரத்தில் காயம் அடைந்து அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அயூப்கான் என்பவரை பார்ப்பதற்காக அவருடைய தம்பி ஆரிப்பும், சுல்தானும் ஒரு ஸ்கூட்டரில் வந்தனர். அவர்கள் கூட்டத்தினரை பார்த்ததும் அரசு ஆஸ்பத்திரி வாசலிலேயே ஸ்கூட்டரை போட்டுவிட்டு ஓடினார்கள். ஆனால் வன்முறை கும்பல் அவர்களை விரட்டியது. இதில் ஆரிப்பை துரத்தி அடித்து கொன்றனர்.
சுல்தான் காயத்துடன் தப்பிவிட்டார். மேலும் லியாகத் அலிகான் என்பவர் காயம் அடைந்து ஆஸ்பத்திரிக்கு வந்தபோது அவரை ஆஸ்பத்திரியின் கேட்டிலேயே வன்முறை கும்பல் தடியால் அடித்துக்கொன்றது. இந்த கலவரத்தில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் மட்டும் அபீப் ரகுமான், ஆரிஸ், ஆரிப், லியாகத் அலிகான் ஆகிய 4 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் 30.11.97 அன்று நடந்தது.
11 பேருக்கு ஆயுள் தண்டனை
இது தொடர்பாக 14 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது கோவை 2-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி எம்.பூபாலன் இந்த வழக்கை விசாரித்தார்.
பிரபாகரன், மகேஸ்வரன், விவேகானந்தன், உமாசங்கர், நாராயணன், குமரன், குருநாதன், மணிகண்டன், சீனிவாசன், மாணிக்கம், நாகராஜ் ஆகிய 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ëப்பு வழங்கினார்.
சி.எஸ்.ராஜு, சம்பத், ஆனந்தன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த தீர்ப்பு 18.8.2000 அன்று கூறப்பட்டது.
ஐகோர்ட்டு தீர்ப்பு
11 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை எதிர்த்து 11 பேரும் சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். நீதிபதிகள் எம்.கற்பகவிநாயகம், ஏ.ஆர்.ராமலிங்கம் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கினார்கள்.
11 பேர் மீதும் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று கூறி 11 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நீதிபதிகள் ரத்து செய்தனர். இந்த வழக்கில் இருந்து 11 பேரையும் விடுதலை செய்தனர்.
நன்றி: தினத்தந்தி
6 comments:
ஸ்ரீநிதி,
தலைப்பைப் படித்து உங்களால் தாங்க முடியாமல் போய்விட்டது போலும்.
இஸ்லாமியர்களில் ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்கு ஒட்டு மொத்த சமுதாயத்தையே குற்றம் சுமத்துவது போல் வாடிக்கையாக ஊடகங்கள் சூட்டும் இது போன்ற தலைப்பின்போது, உங்களைப் போலவே முஸ்லிம்களும் அவ்வப்போது கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
பயங்கரவாதி என்றாலே இஸ்லாமியர்களாகத்தான் இருப்பர் என்ற விஷ(ம)த்துடன் ஊடகங்கள் பரப்பும் செய்தியை மனதில் நிறுத்தி, முஸ்லிமல்லாதவர்கள் விடுதலையாகியுள்ளனர் என்று தெளிவு படுத்த இப்பதிவர் இவ்வாறு தலைப்பிட்டு இருக்கிறாரென வைத்துக்கொண்டாலும், ஒரு சமூகத்தை பயங்கரவாதிகளாக குறிப்பிடும் இப்பதிவின் தலைப்பு கண்டிக்கத்தக்கதே!
//Will you brand them also terrorists//
இதென்ன கேள்வி? பயங்கரவாத்தை யார் செய்திருந்தாலும் மதப்பாகுபாடு இன்றி கண்டிக்க வேண்டியதுதானே மனிதப்பண்பு.
பயங்கரவாதம் யார் செய்தாலும் அது பயங்கரவாதம் தான்.
நச்சு ஊடகங்கள் 'முஸ்லிம் பயங்கரவாதிகள்' என்றொரு சொல்லாடலை திட்டமிட்டு பரப்பிவர அச்சமயம் முதல்வராக இருந்தவரும் சட்டமன்றத்திலேயே அந்தச் சொல்லை குறிப்பிட்டுவிட்டு பின்னரே உணர்ந்தார்.
இந்தப்பதிவிலும் 'இந்து பயங்கரவாதிகள்' என்று குறிப்பிட்டதற்கு காரணம் 'முஸ்லிமல்லாதவர்கள்' என்று சுட்ட வேண்டிய நிர்ப்பந்தம் தான் என்பது புலனாகிறது.
அபூ உமர்,
இதே சம்பவங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்களில் சில அப்பாவி இளைஞர்களும் இன்று வரை பிணையில் கூட விடுவிக்கப்படவில்லை என்று எங்கோ படித்த நினைவு. தெளிவுபடுத்த முடியுமா?
என் முந்தைய பின்னூட்டத்தில் 'அப்பாவி' என்பதன் அர்த்தம் 'நிரூபிக்கப்படாத' என்றறிக! (அப்பாவி என்று உனக்கெப்படித் தெரியும் என்றும் 'யாரும்' கேட்டுவிடும் அபாயம் காரணமாக:-))
தீவிரவாதிகளோ பயங்கரவாதிகளோ யாராக இருந்தாலும் குற்றவாளியாகவே பார்க்கப்பட்டு தண்டிக்கப் வேண்டும்.
முஸ்லிம்களில் எவரேனும் குற்றம் செய்தால் அவர்களை இஸ்லாமிய தீவிரவாதிகளென்று மதத்தோடு தொடர்பு படுத்தியும், பிற மதத்தவர் குற்றம் செய்தால் மதம் குறிப்பிடப்படாமல் (உ.ம். சந்தனக் கொள்ளையன் வீரப்பன், பிரேமானந்தா ஆகியோர்) ஊடகங்களால் சொல்லப்படுவது, முஸ்லிம்கள் மீதான பாரபட்சத்தையே காட்டுகிறது.
விடுவிக்கப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் என்பது செய்தியிலிருந்து அறிய முடிகிறது. இருந்தும் காவல்துறை சரியாக நிரூபிக்கத் தவறி விட்டதால் விடுவிக்கப் பட்டார்களாம்! எனில் கொல்லப்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? அதெப்படி முஸ்லிம்கள் குற்றம் செய்தால் மட்டும் தோண்டித் துருவி எடுத்துவிடும் காவல்துறை இவர்கள் விசயத்தில் அலட்சியமானார்கள்?
இது போன்ற மதப்பாகுபாடு காவல் துறையில் இருக்கும் வரை தமிழகக் காவல்துறையை மக்கள் காவித் துறையாகவே பார்ப்பார்கள்!
Post a Comment