Wednesday, August 24, 2005

குஜராத் திட்டமிட்ட வெறியாட்டம் - 1

குஜராத் வகுப்பு கலவரங்களுக்கு முன்னதாக நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் தொடர்பாக கோல்கத்தா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி உமேஷ் சந்திர பானர்ஜி தலைமையிலான கமிஷன் விசாரித்தது. கரசேவகர்கள் ரயிலிலேயே சமையல் செய்ததால்தான் ரயில் பெட்டியில் தீப்பிடித்தது. வெளியிலிருந்து யாரும் தீ வைக்கவில்லை என்று பானர்ஜி இடைக்கால அறிக்கை அளித்தார். (தினமணி ஞாயிறு 22 ஜனவரி 2005)


கோத்ரா ரயில் எரிப்பு ஆதாரங்களை பாதுகாக்க ரயில்வே தவறிவிட்டது
பானர்ஜி குழு அறிக்கை: மாநிலங்களவையில் தகவல்

புதுதில்லி. மார்ச் 19: கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் தொடர்பான சில முக்கிய ஆதாரங்களை பாதுகாக்க ரயில்வே நிர்வாகம் தவறிவிட்டதாக இது குறித்து ஆராய்ந்த நீதிபதி யு.சி. பானர்ஜி குழு தெரிவித்தது.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் மத்திய ரயில்வே இணையமைச்சர் ஆர். வேலு இதை தெரிவித்தார்.

பல்வேறு கேள்விகளுக்கு அவர் அளித்த பதிலில்:
இச்சம்பவத்தில் முழுவதும் எரிந்த எஸ்-7 பெட்டியில் சில பாகங்கள், தேவையில்லாத பொருள்களாக அறிவிக்கப்பட்டு விற்கப்பட்டுவிட்டன.

கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் தொடர்பாக விசாரணைக் கமிஷனுக்கு மாநில அரசு உத்திரவிட்டிருந்தது. அதனால் இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணை மேற்கொள்ள முடியவில்லை.

-தினமணி சனி 19, மார்ச் 2005


கோத்ராவில் நடைபெற்ற ரயில் எரிப்பு சம்பவம், முஸ்லிம்களை கொன்றுபோட சங்பரிவாருக்கு சாதகமான சூழலாக அமைந்துவிட்டது என்பதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. இதற்காகத்தான் காக்கி கால்சட்டைகளின் சாகா பயிற்சி என்று நடுநிலையாளர்களே ஏற்றுக்கொண்ட உண்மை. இந்த ரயில் எரிப்பு சம்பவம் நடைபெறாது இருந்திருந்தாலும் அங்கு ஒரு இனசுத்திகரிப்பு நடந்தே இருந்திருக்கும்.

இந்த ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து நடத்தப்பட்ட இனவெறியாட்டம் ஒரு வகுப்பு கலவரம் அல்ல. அது ஒரு இனசுத்திகரிப்பு. பலகீனமான ஒரு சமுதாயத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அராஜகம். நன்கு பயிற்றுவிக்கப்பட்ட இனவெறியர்களை கொண்டு தன்னை காத்துகொள்ளவும் எதிர்த்து போராடவும் மனதால்கூட நினைக்காத பெண்களையும், குழந்தைகளையும், வயோதிகர்களையும், மேலும் பலகீனமான ஆண்களையும் மிகக்கொடூரமான முறையில் கொலை செய்த இந்த செயலை எப்படி ஒரு வகுப்பு கலவரம் என்று கூறமுடியும்? இரண்டு வகுப்பாரும் சரி சமமாக நின்று போராடாத இந்த சம்பவம் நிச்சயமாக ஒரு வகுப்பு கலவரம் அல்ல. இது நன்கு திட்டமிடப்பட்ட, ஒருமுகப்படுத்தப்பட்ட ஓர் இனசுத்திகரிப்பு என்பதே சரியாகும்.

தொடரும்..

2 comments:

நல்லடியார் said...

இந்தியாவில் இஸ்லாமிய, கிறிஸ்தவ, தலித் சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டால், பாதிப்பை ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக "பத்வா" கொடுக்க மடாதிபதிகளோ அல்லது காவி முல்லாக்களோ முன்வருவதில்லை. மாறாக 'உணர்ச்சி வசப்பட்ட தேசபக்தர்களின் செயல்" என்ற புகழாரம். ஆனால் எங்காவது ஒரு முஸ்லிம் பெயர் தாங்கி பிறருக்கு பாதிப்பை ஏற்படுத்தினால், இஸ்லாமிய தீவிரவாதிகள் அட்டூழியம்!

நம்மை நம்பி இந்தியாவுடன் இணைந்து இந்தியரக இருக்கும் காஷ்மீரில் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் முஸ்லிகளின் "குருதிகள்" கணக்கில் வருவதில்லை. ஆனால் ஒரு சில 'குடுமிகள்' மட்டும் இந்தியர்களாக கணக்கில் கொண்டு நியாயம் கேட்கும் நீல(லிக் கண்(ணீர்)டன்கள்.

ஈராக்கிலும்,ஆப்கானிஸ்தானிலும் இன்னும் உலகமெல்லாம் முஸ்லிம்கள் கொன்றொழிக்கப் படும்போது நினைவில் வராத மதபயங்கரவாதம், இரட்டைக் கோபுரம் உடைக்கப்பட்டபோதும், ரயிலில் குண்டு வெடித்தபோதும் மட்டுமே நினைவில் வருகிறது.

காவி(ய) இந்துத்துவாவாதிகளின் வன்செயல்களை நியாயப்படுத்தினால், நடு நிலையான விமரிசனம்! காஷ்மீர்,குஜராத் முஸ்லிம்களின் பாதிப்பை எழுதினால், தீவிரவாத ஆதரவு!

வாழ்க ஜனநாயகம்.

Anonymous said...

முஸ்லிம்களுக்கு எதிரான ஒவ்வொரு கலவரத்தின்போதும் அதிகாரத்தில் இருப்பவர்களின் அவசரக் குடுக்கை அறிக்கைகளை மையமாக வைத்து நடத்தப்படும் கொடூர செயல்களினால் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் தன் இயல்பு வாழ்க்கையை இழந்து விட, பின்பு எல்லாம் முடிந்த நிலையில் அமைக்கப்படும் கமிஷன்களால் உண்மை வெளிப்படும்போது அது பாதிக்கப்பட்டவர்களுக்கு இழந்த அமைதியைத் திருப்பித் தந்து விடுமா என்ன? இந்திய ஜனநாயகத்தின் ஓட்டைகளுள் இதுவும் ஒன்று.