Tuesday, January 04, 2005

இனி தேவை மறுவாழ்விற்கான உதவிகள் (சுனாமி)

இனி பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவை மறுவாழ்விற்கான உதவிகளாகும். அவர்களுக்கு குடியிருப்புகள், தொழில் கருவிகள் முதலியவைத் தான் அத்தியவசியமாக தேவைப்படுகின்றன.

TMMK-வின் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நிவாரண பணிக்காக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் அனைத்து மாவட்ட தலைவர்களும் அதன் கிளையின் தன்னார்வ தொண்டர்களும் முடுக்கிவிடப்பட்டுள்ளனர். மத்திய அமைச்சர் எ.ராஜா ஆளுநர் பர்னாலாவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் தமுமுக தொண்டை குறிப்பாக எழுதியுள்ளார்.

பி.டி.ஐ. செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் பொறையாரிலிருந்து எழுதியுள்ள செய்தியில் நாகை மாவட்டத்தில் எவ்வித வேறுபாடுமின்றி தமுமுக செய்துள்ள சேவையை பாராட்டியுள்ளார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் காஞ்சி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் தமுமுக ஆற்றி வரும் சேவையை வெகுவாக பாராட்டி எழுதியுள்ளது.

உணவு, உடை, மருந்து போன்ற உதவிகளை தமிழக மக்கள் மிக தாராளமாக செய்து வருகின்றனர். தேவைக்கு அதிகமாகவே பழைய ஆடைகள் வந்து சேர்ந்துள்ளன. ஆனால் இனி பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவை மறுவாழ்விற்கான உதவிகளாகும். அவர்களுக்கு குடியிருப்புகள், தொழில் கருவிகள் முதலியவைத் தான் அத்தியவசியமாக தேவைப்படுகின்றன.

ஆகவே முடிந்தவரை நம்மாள் ஆன உதவிகளை செய்வோமாக.

7 comments:

ஜெ. ராம்கி said...

பூம்புகாரிலிருந்து காரைக்கால் வரையிலான பாதிக்கப்பட்ட பகுதிகளை சுற்றிப்பார்த்த வகையில் இதை எழுதுகிறேன். களத்திலிறங்கி வேலை செய்வார்கள் என்று திராவிட கட்சிகளையோ கம்யூனிஸ்ட் கட்சிகளையோ நான் எதிர்பார்த்து ஏமாந்திருந்தேன். ஆனால் நான் ஆச்சரியப்பட்டது ஆர்.எஸ்.எஸ், திருச்சபையினர் இணைந்து செய்த களப்பணிகளைத்தான். நாகை மாவட்டத்தில் முக்கியமாக காரைக்கால், நாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரை விட கிறிஸ்துவ, இஸ்லாமிய சமூகத்தினர்தான் அதிகம் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி. ஆனால், தமுமுக களத்தில் இறங்கி வேலை செய்தாக நீங்கள் குறிப்பிட்டிருப்பது எனக்கு கிடைத்த தகவல்களிலிருந்து முரண்பாடாக இருக்கிறது. நான் பார்த்தவரைக்கும், கேள்விப்பட்டவரைக்கும் எந்தவொரு இஸ்லாமிய அமைப்பும் களப்பணியில் இல்லை. உங்களுக்கு கிடைத்த தகவல்களை தயவு செய்து சரிபார்க்கவும்

Abu Umar said...

Sure, I will verify the information and come back to you.

Abu Umar said...

/****
பி.டி.ஐ. செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் பொறையாரிலிருந்து எழுதியுள்ள செய்தியில் நாகை மாவட்டத்தில் எவ்வித வேறுபாடுமின்றி தமுமுக செய்துள்ள சேவையை பாராட்டியுள்ளார்.
****/

Dear Rajini Ramki,
My information is true.

For your Reference:

Hindu-Muslim? No! Humanity is supreme at calamity

http://news.indiainfo.com/2004/12/31/3112calamity.html

Porayar: Serving humanity is supreme at the time of calamities. This was witnessed at the graveyard of the famous Dargah at Nagore where bodies of people of different religion were buried.

It is reported that more than 250 bodies have been buried in Porayar, out of which 150 are Muslims. The remaining were bodies of Hindus and Christians.

Over 500 people have lost their lives in Nagore alone and more than 2000 people were rendered homeless. They were lodged at Nagore dargah. Among the 2000, most of the people are Hindus. They are being fed and taken care of by the Dargah administration and by the volunteers of Tamil Nadu Muslim Munnetra Kazhagam (TMMK), dargah sources said.

Mohammed Arif, a TMMK volunteer at Nagore said, "Religious feelings such as Hindus or Muslims doest not arise at all. Serving the humanity is supreme."

Similar help is being rendered at the Tranquebar Mosque. TMMK volunteers are actively carrying out relief measures all over the district.

PTI

Anonymous said...

அன்பின் ராம்கி,

1. 28/12/04 அன்றைய சன் டி.வி இரவு செய்தியில் 'உள்ளூர் முஸ்லிம் தன்னார்வ அமைப்புகள் நிவாரண பணியில் ஈடுப்பட்டுள்ளனர்' என்ற செய்தி. (அன்றைய தினமே இதனை குறித்து நான் ஜாபர் அலியின் பதிவிலே பின்னூட்டம் செய்திருக்கிறேன்).

2. 29/12/04 சன் டி.வி இரவு செய்தியில் நாகூர் முஸ்லிம் ஜமாத்தை சேர்ந்தவர்களின் களப்பணி பற்றிய பேட்டி ஒளிப்பரப்பானது.(அரசு உதவி இன்னும் கிடக்கவில்லை, நாங்களெ சொந்த செலவில் செய்கிறோம் என்றார்)

3. 02/01/05 அன்று சிங்கப்பூர் தமிழ் தொலைக்காட்சி செய்தியில் கடலூர் முஸ்லிம் ஜமாத்தினரின் நிவாரண பணிகளையும் பள்ளிவாசலில் தங்கி இருக்கும் பாதிக்க்கப்பட்டோரையும் ஒளிப்பரப்பினார்கள்.

4. 01/01/05 அன்று பி.பி.சி யில் நாகூர் தர்காவில் தங்கவைக்கப்பட்டிருந்தோரையும் அவர்களுக்கான உணவு தயாரிக்கும் வேலைகளையும் நேரடி ஒளிப்பரப்பில்
காட்டினார்கள்.

5. சென்ற வார (05/01/05) ஜூனியர் விகடனில் 'நெகிழ வைக்கும் பரங்கிப் பேட்டை நிவாரணம்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை.

இவைகளெல்லாம் என் கண்ணில் பட்டவைகள் மட்டும் தான்.(தேதிகளை நினைவில் இருந்து எழுதுகிறேன்)

இவைகளை பதிவு செய்த CD க்களை தேடி அனுப்புவது மிக சுலபம், ஆனால் அதை விட நீங்களே நேரில் சென்று காண்பது இன்னும் சுலபம்.

துரியோதனன் நகர்வலம் சென்று மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று கண்டுவந்து சொன்ன கதை தான் என் நினைவுக்கு வருகிறது, உங்களை நினைக்கும் போது.

இஸ்மாயில், சிங்கை.

Anonymous said...

இதோ சற்று முன் கண்ட இன்னொரு செய்தி தட்ஸ்தமிழ் இணையதளத்தில்.
http://www.thatstamil.com/news/2005/01/05/muslim.html

இஸ்மாயில், சிங்கை.

அபு யாசிர் said...

ரஜினி ராம்கி...
எழுதுவது போன்றன்று, தினகரன் பத்திரிக்கையில் பரங்கிப்பேட்டையில் முஸ்லிம்களின் மீட்புப்பணியை பாராட்டி எழுதி இறுந்தது.

Abu Umar said...

/****
மத்திய அமைச்சர் எ.ராஜா ஆளுநர் பர்னாலாவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் தமுமுக தொண்டை குறிப்பாக எழுதியுள்ளார்
****/

http://sify.com/cities/fullstory.php?id=13639763

எனது இத்தகவலுக்கும் இங்கு Reference கொடுத்துள்ளேன்:

Union Minister seeks Barnala''s intervention

New Delhi, Dec 30: Union Minister for Environment and Forests A Raja today sought the intervention of Tamil Nadu Governor S S Barnala so that immediate relief and rehabilitation measures are undertaken in the quake and tsunami-affected areas of the state.

In a letter to the Governor, the Minister, who is also a member of the Cabinet Committee on Disaster Management, said during his visit to the affected areas in Tamil Nadu, there was "neither relief measures to the affected people nor attempts to remove the decaying bodies by the state government."

"On the contrary, the bodies were being removed by TMMK volunteers and youths belonging to the NGOs with the help of a few political parties like the DMK," he said.

The worst part is that the state government has not come forward to provide hand gloves to the youths assisting in the operation and also not undertaken steps to administer antidotes to them, he added. (Agencies)