Monday, September 26, 2005

குஜராத்: திட்டமிட்ட வெறியாட்டம் - 7

முஸ்லிம்களை தீயிட்டு கொளுத்திய கயவர்கள் எந்த வித சலனமும் இல்லாது அமைதியாக திரும்ப சென்றனர், தங்களுடைய வேலை முடிந்த திருப்தியில். எரிந்து கொண்டிருந்த முஸ்லிம்களின் கதறல் இவர்களை இம்மி அளவும் கரைத்திட வில்லை. மாறாக எரிவதை கண்டு ரசித்தார்கள். இவர்களின் கல் மனதுக்கு இன்னொரு சான்றாக அமைந்தது சாலியா பீவி என்ற பெண்ணுக்கு இவர்கள் செய்த கொடுமை.

முஸ்லிம் பெண்களே முக்கிய இலக்கு

சிலுவை போரின் போது, கிருஸ்தவ மதவெறியர்கள் தான் போகும் இடமெல்லாம் முஸ்லிம்களை கொலை செய்து கொண்டே சென்றார்கள். முழங்கால் அளவு ரத்தம் ஓடும் அளவுக்கு அப்பாவி முஸ்லிம்களையும், பெண்களையும், குழந்தைகளையும் கொலை செய்தார்கள். அவர்கள் கர்பிணி பெண்ணை கூட விட்டு வைக்கவில்லை. அவளின் வயிற்றில் உள்ளது ஆணா? பெண்ணா? என்று போட்டி வைத்து, அவளின் வயிற்றை கிழித்து, குழந்தையை வெளியே எடுத்து சுவரின் மேல் வீசியடித்து கொலை செய்தார்கள் அந்த கொடியவர்கள்.

காய்கறி சமைத்து கொண்டிருந்த ஒரு முஸ்லிம் தாயிடம், மாமிசம் கொண்டு வருகிறேன் என்று கூறி தெருவில் விளையாடி கொண்டிருந்த அந்த தாயின் பிள்ளைகளில் இளசாக தேர்வு செய்து, அதனை வெட்டி கூறு போட்டு அந்த தாயிடம் கொடுத்து சமைக்க செய்து தானும் உண்டு, அந்த தாயையும் உண்ணவைத்தார்கள் கொசோவோவில் செர்பிய வெறிபிடித்த கயவர்கள். ஈவு இரக்கமற்ற கொடியவர்கள்.

இதேபோன்று தான் பாகல்பூரில் 1979ல் நடந்த கலவரத்தில் ஒரு கர்பிணி பெண்ணை தண்டவாளத்தில் கிடத்தி வயிற்றில் கல்லால் அடித்தே கொன்றார்கள் இந்த பாசிஸ்ட்டுகள்.

இதையெல்லாம் விட கொடுமை குஜராத்தில் அரங்கேற்றப்பட்டது சாலியா பீவிக்கு. இவரும் ஒரு கர்பிணி பெண். தான் ஈன்றெடுக்க போகும் குழந்தையை நினைத்து பூரிப்பில் இருந்தாள். தன் குழந்தையை அப்படி வளர்க்க வேண்டும், இப்படி வளர்க்க வேண்டும் என்று கற்பனை கோட்டைகளை கட்டி கொண்டிருந்த வேளை, பாசிஸ கயவர்கள் இவளை தர தரவென்று இழுத்து சென்றனர். கத்தினாள், கதறினாள் எந்த பிரயோஜனமும் இல்லை. அவளை காப்பாற்றுவதற்கும் யாருமில்லை. ரத்தவெறி பிடித்த மிருகங்கள், தன் பசியை தீர்த்து கொண்டது. கர்பிணியான சாலியா பீவியின் வயிற்றை கிழித்து, குழந்தையை எடுத்து எரிந்த கொண்டிருக்கும் தீயில் வீசியெறிந்தார்கள். உலகத்தையும், அதிலுள்ள மதவெறியர்களின் மிருகச்செயலையும் கண்டிராத, கேட்டிராத அந்த பச்சிளம் குழந்தை எரிந்து சாம்பலானது. கர்பிணியின் வயிற்றை கிழிக்கவும், அதிலிருந்து குழந்தையை எடுக்கவும், அதனை நெருப்பிட்டு கொளுத்தவும் நிச்சயமாக மனிதர்களால் முடியவே முடியாது. வயிறு பிளக்கப்பட்டு அந்த பெண் துடித்து துடித்து செத்த காட்சி இவர்களின் மனதை கொஞ்சமும் இளகச்செய்யவில்லை. இவர்களின் இதயம் கருங்கல்லைவிட கடினமானது என்பதை நிருபித்தார்கள்.

Ref:
ரியாஸ் அஹ்மத் அவர்களின் குஜராத் கலவர தொகுப்பு

(குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த திட்டமிடப்பட்ட மனித உரிமை மீறலை மூடி மறைத்திட நினைக்கும் பாசிச சங்பரிவார கூட்டத்தினருக்கு எதிரான தொடர்)

No comments: