Monday, September 12, 2005

குஜராத்: திட்டமிட்ட வெறியாட்டம் - 4

திட்டங்களுக்கு செயல் வடிவம் கொடுக்கப்படுகிறது

இந்த பாசிஸ வெறியர்களிடமிருந்து தப்பித்து கொள்ளுங்கள், VHPயினர் ஆயுதங்களுடன் கூட்டங்கூட்டமாக வருகிறார்கள் என்று சக இந்துக்கள் பதட்டத்துடன் வந்து சொன்னார்கள். வெறியர்களிடமிருந்து தப்பி பிழைக்க, கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்து மூட்டை கட்டி கொண்டு கண்மண் தெரியாமல் ஓடினார்கள் முஸ்லிம்கள்.

தப்பியவர்கள் போக மீதமுள்ள முஸ்லிம்களை இந்த வெறியர்கள் துண்டு துண்டாக வெட்டி போட்டார்கள். ரோடெங்கும் மூட்டை முடிச்சுகள் சிதறி கிடந்தன. இடையிடேயே முஸ்லிம்களின் சதை துண்டுகள். பாசிஸ கொடியவர்கள் ஒரு சிறிய சூட்கேஸை கூட விட்டு வைக்கவில்லை. அதையும் பெட்ரோல் விட்டு எரித்துவிட்டார்கள்.

எங்கும் கலக்கம், பதட்டம், பீதி. தப்பி பிழைத்த முஸ்லிம்கள், பயத்தில் உறைந்து போய் நின்றார்கள். வெறித்து பார்த்த கொண்டிருக்கும் அவர்களின் முகத்தில் எப்போதும் மெல்லியதாய் கண்ணீர் வழிந்து கொண்டே இருக்கிறது.

கோத்ரா நிகழ்வுக்கு பிறகு, இந்த சந்தர்ப்பத்திற்காக காத்துகொண்டிருந்த VHP, மறுநாள் பிப்ரவரி 28, 2002 அன்று சிறிதும் தாமதம் செய்யாமல் பந்திற்கு அழைப்புவிடுத்தது. இதற்கிடையில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நாட்டின் அனைத்து இடங்களுக்கும் செய்திகளாக பத்திரிக்கை வழி வந்து சேர்ந்தது. இதனையும் கச்சிதமாக செய்தார்கள் ஆட்சியில் அமர்ந்திருக்கும் சங்பரிவாரத்தினர். முஸ்லிம் பயங்கரவாதிகள் ராமபக்தர்களை எரித்து கொன்றார்கள் என்ற செய்தியை கேள்விபட்டவுடன் இந்துக்கள் ஆவேசம் அடைவார்கள் என்று எதிர்ப்பார்த்தார்கள். அப்படியே நடந்தது.

VHP அழைப்பு விடுத்த பந்திற்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றால் நம் கடைகள், தொழில்சாலைகளை எல்லாம் அடித்து நொறுக்கிவிடுவார்கள் என்று பயந்த குஜராத் மக்கள் பந்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். குஜராத் நகரங்கள் எல்லாம் அமைதியில் ஆழ்ந்தது. அந்த அமைதியை கொஞ்சம் நீடிக்கவிடவில்லை VHP, பஜ்ரங்தள், ஆர்எஸ்எஸ் வெறியர்கள். ஏற்கனவே தாம் போட்டு வைத்த திட்டங்களை செயல்படுத்த தலைபட்டார்கள்.

முஸ்லிம்களின் கடைகள் குறிவைத்து அழித்தல்

கையில் தாம் சேகரித்து வைத்திருந்த பட்டியலை எடுத்துகொண்டார்கள். கடைவீதிக்கு வந்தார்கள். வரிசை கிரமாக முஸ்லிம்களின் கடைகள் குறிவைத்து அழிக்கப்பட்டது. எரித்துவிடப்பட்டது. இந்து தீவிரவாதிகள், முதலில் கடைகளுக்குள் புகுந்து தன்னால் இயன்ற வரை அனைத்து சாமான்களை கொள்ளையடித்தார்கள். இவர்கள் அனைவரும் ஏழ்மையால் வாடுபவர்கள் அல்லர். பசி பட்டினி என்று பிச்சையெடுக்கும் பிச்சைகாரர்கள் அல்லர். வருமானத்திற்கு வழியில்லாதவர்களும் அல்லர். இந்த தீவிரவாதிகளில் பெரும்பாலோர் நடுத்தர வயதுடைய, திடகாத்திர உடலுடைய, போதுமான பொருளாதார வளமுடையவர்கள். முஸ்லிம்களின் கடைகளை சூறையாடுவதற்கு போட்டிபோட்டு கொண்டு வந்தனர். இதில் பெரும் பெரும் செல்வந்தர்களும் தன்னுடைய காரை நிறுத்திவிட்டு கடைகளில் கொள்ளையடித்து சென்றனர் என்பதுதான் வேதனையான விஷயம்.

இவர்கள் திருடிகொண்டிருக்கும் போது, போலீஸ்காரர்கள் வேகமாக வந்தார்கள். போலீஸ் படையை பார்த்தவுடன் தீவிரவாதிகள் நிலைகுலைந்தார்கள். எங்கே போலீஸ் நம்மை கைது செய்துவிடுவார்களோ என்று ஓட்டம் பிடிக்க தொடங்கினர். ஓடியவர்கள் திரும்பி பார்த்த போதுதான் அவர்களுக்கு தெரிந்தது. இந்த போலீஸ்காரர்கள் நம்மை பிடிக்க வரவில்லை. முஸ்லிம்களின் கடைகளில் உள்ள சாமான்களை சூறையாட வந்தவர்கள் என்று. பின்னர் இந்த தீவிரவாதிகள் போலீஸ் பந்தோபஸ்துடன் திருட்டை தொடர்ந்தார்கள். இயன்றதை சுருட்டிகொண்டார்கள். மீதமுள்ளது யாருக்கும் பயன்படகூடாது என்று கடைக்குள் பெட்ரோலை ஊற்றினர். தீ வைத்தனர். அந்த கடை ஜுவாலை விட்டு எரிவதை கண்டு குதூகலித்தனர். இனி கடையில் ஒன்றும் தேராது என்று ஊர்ஜிதம் செய்து கொண்டு அடுத்த கடைக்கு சென்றனர். இப்படியாக முஸ்லிம்களின் கடைகள் குறிவைத்து சூறையாடப்பட்டு பின்னர் எரியூட்டப்பட்டது.

முஸ்லிம்கள் தங்களின் கடைகளின் பெயர்களை முஸ்லிம் பெயர்களுக்கு சற்றும் சம்பந்தமில்லாத பெயர்களை – பொதுபெயர்களைதான் வைத்திருந்தார்கள். இருந்தும் அந்த கடைகள் எல்லாம் சரியாக குறிபார்த்து அழிக்கப்பட்டது. எந்த அளவுக்கென்றால், கடைவிதீயில் எல்லா கடைகளும் இந்துக்களுக்கு சொந்தமானதாக இருக்கும். மூலையில் ஒரு முஸ்லிம் கடைவைத்திருப்பார். அவரை பார்த்தால் முஸ்லிம்களுக்கே உரிய அடையாளங்களான தொப்பியோ, தாடியோ எதுவும் இருக்காது. அந்த கடையின் பெயரும் இது ஒரு முஸ்லிமின் கடை என்று பறையடிக்காது. இருந்தும் அந்த கடை – அது ஒரு சின்ன பெட்டியாக இருந்தாலும், அது ஒரு முஸ்லிமிற்கு சொந்தமானது என்பதால் அழிவுக்கு உள்ளானது. தீயிட்டு கொளுத்தப்பட்டது. அந்த சின்ன இபட்டி கடையின் மூலம் வரும் சிறிய வருமானமும் அழிக்கப்பட்டு அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாமல் ஆக்கப்பட்டது. சின்ன பெட்டி கடைகள் மட்டுமல்ல பெரும் பெரும் தொழில் நிறுவனங்களுக்கும் இதே நிலை தான்.

இந்த வகுப்புவாத பாசிஸ்ட்டுகள் யார் யாருக்கு எந்தெந்த தொழில் நிறுவனங்கள் சொந்தம் என்ற விவரங்களை தெரிவிக்கும் அரசு ஆவண காப்பகங்ளோடு நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததால் மட்டுமே இவர்கள் இப்படி முஸ்லிம்களின் தொழில் நிறுவனங்களை மிகச்சரியாக அடையாளம் கண்டு அழிக்க முடிந்தது என்பதை நாம் இங்கு கவனிக்கவேண்டும்.

இந்துக்களின் கடைகளுக்கு மத்தியில் ஒரு முஸ்லிம் ஹோட்டல். அதன் பெயர் (Hotel Tasty) ஹோட்டல் டேஸ்டி. இது ஒரு முஸ்லிமிற்கு சொந்தமானது என்று யாருக்கும் தெரியாது. ஹோட்டல் பெயரும் கூட ஒரு பொதுவான பெயர் தான். ஆனால் அந்த ஹோட்டல் வகுப்புவாத VHP, பஜ்ரங்தள தீவிரவாதிகளால் அடித்து நொறுக்கப்பட்டது.

அடுத்து ஹேன்ஸ் இன் என்றொரு தங்கும் விடுதி. இது முஸ்லிமின் தங்கும் விடுதி என்று யாருக்கு அடையாளம் காணமுடியும்? இந்த வகுப்புவாதிகளுக்கு மட்டும் தான் தெரியும். சக முஸ்லிமுக்கு கூட அடையாளம் தெரியாத ஒரு லாட்ஜ். ஆனால் சரியாக அடையாளம் காணப்பட்டு இடித்து தரைமட்டாக்கப்பட்டது.

இதேபோல் ஒரு ரெடிமேட் ஆடையகம், கார் கம்பெனி என்று எதையும் விட்டு வைக்கவில்லை இந்த வெறியர்கள். எப்படி விட்டுவைப்பார்கள்? முஸ்லிமின் சொத்துக்களை அழித்து அவர்களை பிச்சைக்காரர்கள் ஆக்கவேண்டும் என்பது அவர்களின் வாழ்க்கை இலட்சியம் ஆயிற்றே. பாவம் இந்த பரிதாப முஸ்லிம். இவர்களின் வாழ்வில் என்ன தான் இலட்சியம் இருக்கிறது என்று பிறர் பரிதாப படக்கூடிய அளவிற்கு, அனுதாப படக்கூடிய அளவிற்கு முஸ்லிமின் நிலை இன்று.

நம்மை பார்த்து அடுத்தவர் பொறாமை படலாம். ஆனால் அய்யோ பாவம் என்று அனுதாப படக்கூடிய அளவிற்கு ஆகிடகூடாது அல்லவா?.

Ref:
ரியாஸ் அஹ்மத் அவர்களின் குஜராத் கலவர தொகுப்பு

No comments: