Thursday, September 22, 2005

குஜராத்: திட்டமிட்ட வெறியாட்டம் - 6

2002க்கு முன் நடந்த கலவரங்களினால் பெரும்பாலான முஸ்லிம்கள் இப்பவும் தலை நிமிர முடியாமல், அடிமைகளை போல வாழ்கின்றனர். மீதமுள்ளவர்களையும் அழித்து அவர்களின் சொத்துகளையும் அழித்து அடிமையின் நிலைக்கு கொண்டு செல்ல மீண்டும் ஒரு கலவரம் வெடித்தது. அது தான் 2002 கலவரம்.

இந்த கலவரத்தில், இதற்கு முன் எப்போதும் நடந்திராத அளவுக்கு கொலைகளும், கொள்ளைகளும், கற்பழிப்புகளும் நடந்தது. மதவெறிபிடித்த இந்துக்கள் வெறிபிடித்த மிருகத்தை விட மிகமோசமாக நடந்து கொண்டனர். 'இவர்களெல்லாம் மனிதர்கள் தானா? இவர்களின் நெஞ்சில் கொங்சமும் ஈரம் இல்லையா? இவர்களின் இதயம் என்ன கருங்கல்லினால் ஆனதா? தான் எந்த ஜாதி என்று தனக்கே தெரியாத பிஞ்சுக்களை கூட விட்டு வைக்கவில்லையே இந்த ரத்த வெறி பிடித்த அரக்கர்கள்' என்று கூறும் அளவுக்கு இவர்களின் அடாவடித்தனம் இருந்ததென்றால், இவர்கள் இதையெல்லாம் ஏன் செய்கிறார்கள்? இதனால் இவர்கள் சாதிக்க நினைப்பதென்ன? என்று முஸ்லிம்களே உங்களை நீங்களே என்றேனும் கேட்டதுண்டா?

கையில் சூலாயுதம் போன்ற கத்தி, வீச்சறிவாள், நீண்ட கத்தி, நெற்றியில் காவி நிற துணி, கண்களில் மதவெறியுடன் ரத்தத்தை தேடி – முஸ்லிமின் ரத்தத்தை தேடி அலைந்தனர் இந்து மத வெறிபிடித்த கயவர்கள். கையில் கிடைத்தவர்களை எல்லாம் துண்டு துண்டாக வெட்டிப்போட்டனர். ரோடெங்கும் முஸ்லிம்களின் உடல் அங்கொன்றும் இங்கொன்றுமாக. தான் கொண்டு வந்த பெட்ரோலை முஸ்லிம்களின் மேல் ஊற்றி நெருப்பிட்டு கொளுத்தினார்கள். முஸ்லிம் சகோதரன் 'லாயிலாஹா இல்லல்லாஹ்' என்று சொன்ன ஒரே காரணத்திற்காக கதறி, கதறி கருகி சாம்பலானான். வீட்டை பூட்டி தண்ணீரை நிரப்பி மின்சாரம் வைத்து கொன்றார்கள். அவர்கள் ஒரு இந்துவாக இருந்திருந்தால் இன்று உல்லாசமாக இருந்திருப்பார்கள். இப்படி நாம் இடிந்த சகோதர, சகோதரிகள் ஒன்றல்ல, இரண்டல்ல கிட்டதட்ட 15,000த்திற்கும் மேல்.

அவர்கள் பட்ட துன்பங்கள் எழுதினால் ஏடு தாங்காது. அவர்கள் முஸ்லிம் என்ற காரணத்தினால் எத்தனை துன்பங்களை அனுபவித்தனர்.

பாத்திமா பீவி என்றொரு பெண். இந்து மத வெறி பிடித்த மிருகங்களிடமிருந்து தப்பி பிழைத்து ஓடி வந்தார். ஓடி வந்த இவருக்கு அங்கிருந்த போக்குவரத்து தொழிலாளர்களின் குடியிருப்பு அடைக்கலம் கொடுத்தது. தங்சம் புகுந்தார். இவரை போல பல பெண்களும் தங்களின் உயிரை கையில் பிடித்து கொண்டு ஏற்கனவே அங்கு தங்சம் புகுந்திருந்தனர். அப்பா ஒரு வழியாக பிழைத்தோம் என்று பெரு மூச்சுவிட்ட நேரம், அங்கே காவல் துறையினர் வந்தார்கள். எல்லோரையும் 'இது நீங்கள் மரணிக்க வேண்டிய இரவு' கூறி இழுத்து சென்றார்கள். குடியிருப்பில் இருந்தவர்கள் காவல் துறையினருக்கு மண்ணெண்ணை, மற்றும் எரிபொருள்களை கொடுத்துதவினார்கள். அந்த எரிபொருள்களால் முஸ்லிம்களை முதலில் குளிக்க வைத்தார்கள். பின்னர் அவர்களை எல்லாம் வேக வைத்தார்கள் காவல் துறையினர். பரிதாப முஸ்லிம்கள் எரிந்து சாம்பலானார்கள். எரித்தவர்கள் பாத்திமா பீவி மறைந்திருந்ததை கண்டு கொள்ளவில்லை. சக முஸ்லிம்கள் தன் கண் முன்னால் எரிந்து, வெந்து சாம்பலாகியதை கண்டு பாத்திமா பீவியின் உள்ளம் துடித்தது. கண்கள் தாரை தாரையாய் கண்ணீர் வடித்து.


Ref:
ரியாஸ் அஹ்மத் அவர்களின் குஜராத் கலவர தொகுப்பு

(குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த திட்டமிடப்பட்ட மனித உரிமை மீறலை மூடி மறைத்திட நினைக்கும் பாசிச சங்பரிவார கூட்டத்தினருக்கு எதிரான தொடர்)

No comments: