Wednesday, July 20, 2005

இம்ரானா - ஊடகங்களின் பலாத்காரம்

போனமாதம் நடந்த ஒரு விஷயமாக இருந்தாலும் ஊடகங்களால் கை, கால் வைத்து ஊதி பெரிதாக்கப்பட்டதால் சினிமா படமாகப்போகும் நிலைக்கு தற்போது வந்து நிற்கிறது. உத்தரப்பிரதேசம் மாநிலம் முஜாபர்பூர் நகர் அருகில் உள்ள சர்தவால் கிராமத்தைச் சேர்ந்த நூர் இலாஹியின் மனைவி இம்ரானா (வயது 28) கடந்த ஜுன் மாதம் (2005) அவரது சொந்த மாமனார் அலி முஹம்மது என்பவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்பதே வழக்கு.

தனது கணவர் ஊரில் இல்லாத இரவில் மாமனார் தன் கைகளால் வாயை பொத்தியும் இம்ரானாவின் கைகளை கட்டியும் பாலியல் பலாத்காரம் செய்ததாக இம்ரானாவின் தரப்பு குற்றச்சாட்டு.

ஆரம்பத்தில் தன் மீது சுமத்தப்பட்ட பாலியல் பலாத்காரம் குற்றச்சாட்டை மாமனார் முஹம்மது அலியும் அவரின் உறவினர்களும் மறுத்துவிடுகின்றனர். இச்செய்தி அவ்வூரில் பரவுகிறது. நூர் இலாஹியின் உறவினர்களான ஜமீல் மற்றும் ஷா-தீன் ஆகிய இருவரும் அவ்வூரின் மதரசா மவ்லவி முஹம்மது ஷமீம் என்பவரிடம் சாதாரணமாக இவ்விசயத்தை சொல்கிறார்கள். இவர் ஃபத்வா கொடுப்பவரோ அல்லது ஃபத்வா கொடுப்பதற்கு தேவையான விஷய ஞானம் உள்ளவரோ அல்ல. ஷரியத் சட்டம் எதையும் பார்க்காமல் அந்த கணவன் மனைவி பந்தம் ரத்து ஆகிவிடும் என்றும் கற்பழித்தவரே அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் எந்த ஒரு ஆதாரத்தையும் முன் வைக்காமல் ஒரு முட்டாள்தனமான கருத்தை சொல்கிறார். இதனைத்தான் ஊடகங்கள் "லோக்கல் ஷரியத் கோர்ட்" என்று வெளியிட்டது.

இம்ரானாவின் செய்தியை அறிந்த உள்ளூர் "தைனிக் ஜாகரன்" என்ற ஹிந்தி பத்திரிகையின் நிருபர் இச்செய்தியை பிரசுரிக்காமல் இருக்க அக்குடும்பத்தினரிடம் பத்தாயிரம் ரூபாய் பணம் கேட்கிறார். ஏழை குடும்பத்தினரால் கொடுக்க முடியாததால் அதனை பிரசுரித்துவிடுகிறார். அதனை ஜீ டீ.வி. கொத்திக்கொள்ள அதிலிருந்து மற்ற சானல்கள், பத்திரிகைகள், செய்தி ஏஜன்சிகள் என அவரவருக்கு தேவையான செய்திகளை தடவி பப்ளிசிட்டி செய்து கொண்டன.

மீடியா வழி வந்த இச்செய்தியை முன்வைத்து "ராஷ்ட்ரிய சஹாரா" என்ற உருது பத்திரிகையின் சார்பாக தாருல் உலூம் தேவ்பந்தி நிறுவனத்திடம் மேற்கண்ட விஷயத்திற்கு கருத்து கேட்கப்படுகிறது.

தாருல் உலூம் தேவ்பந்த் என்பது இந்தியாவில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் ஏற்றுக்கொண்ட ஒரு தீர்ப்பு நிறுவனம் ஒன்றும் அல்ல. பிரிவுகளை கண்டிக்கும் இஸ்லாமிய மார்க்கத்தில் ஹனஃபி இமாம் கருத்துகளை ஏற்றுக்கொண்டதாக சொல்லப்படும் ஒரு பிரிவினரின் மதரஸா மட்டுமே அது.

"முன்னர் நடந்துபோன சம்பவங்களைத் தவிர உங்கள் தந்தைகள் திருமணம் செய்துகொண்ட பெண்களில் எவரையும் (அவர்கள் இறந்த பின்னர் இனி) நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள். நிச்சயமாக இது மானக்கேடானதாகவும், வெறுக்கக் கூடியதாகவும், தீய வழியாகவும் இருக்கின்றது." (திருக்குர்ஆன் 4:22) என்ற வசனத்தை மேற்கோள் காட்டி "மாமனாரால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட பெண்ணின் திருமணம் உறவு முறிந்துவிடும் என்று தாருல் உலூம் தேவ்பந்த் கருத்து கூறியுள்ளது.

இது இம்ரானா சார்பாக சொல்லப்பட்ட ஃபத்வா அல்ல என்றும் பொதுவாக கேட்கப்பட்ட கருத்துக்குரியது என்றும் தாருல் உலூம் இதற்கு மறுப்பு வெளியிட்டுள்ளது.

அதே தீர்ப்பில் அப்பெண்ணை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியவருக்கே திருமணம் செய்து வைக்கவேண்டும் என்று பேசப்படும் கருத்தை பலமாக ஆட்சேபித்து தவறு என்றும் திட்டவட்டமாக சொல்லப்பட்டுள்ளது.

இஸ்லாத்தை பொறுத்தவரை ஒரு தீர்ப்பு சொன்னால் அது யாராக இருந்தாலும் அதற்கான இஸ்லாமிய ஆதாரத்தை முன்வைக்க வேண்டும். அதன்படிதான் அத்தீர்ப்பு சரியா? தவறா? என்று உரசி பார்க்கப்படும். இஸ்லாத்திற்கு முரணாக இருக்கும்போது சாதாரண பிரஜைக்கும் இத்தவறை சுட்டிக்காட்ட உரிமை உண்டு.

"பாலியல் வன்புணர்ச்சிக்கு குற்றவியல் சட்டபடி தண்டனை தர வேண்டும். சேர்ந்து வாழ்வது குறித்து அந்தக் கணவன் -மனைவிதான் முடிவு செய்ய வேண்டும். அப்பெண் மீது தவறில்லாத போது அவரை எதற்காக தண்டிக்க வேண்டும்" என்பதாக முஸ்லிம் அல்லாதவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

இஸ்லாம் பாலியல் வன் புணர்ச்சி செய்தவரை மரண தண்டனைக்கு உட்படுத்தி, பாதிக்கப்பட்ட அப்பெண் கணவனுடன் சேர்ந்து வாழ்வதில் எந்த தடையும் விதிக்கவில்லை.

இஸ்லாமிய ஆதாரத்தின் படி

1. கற்பழிக்கப்பட்டப் பெண், கற்பழித்தவனை "இவன்தான் என்னைக் கெடுத்தான்" என்று அடையாளம் காட்டினால் போதும் வேறு சாட்சிகள் தேவையில்லை என்பதை நபிமொழியிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். (இது, கற்பழிப்பை நிரூபிக்க நான்கு சாட்சிகள் வேண்டும் என்று சொல்பவர்கள் கவனத்திற்கு)

2. பலவந்தமாகக் கற்பழிக்கப்பட்டப் பெண் குற்றவாளி இல்லை - அதனால் அவளுக்கு தண்டனை கிடையாது.

3. கற்பழித்தவனுக்கே மரண தண்டனை.

4. "அல்லாஹ்வின் தூதரே! நான்தான் அவளைக் கெடுத்தவன்" என்று உண்மையை ஓப்புப் கொண்டு முன் வந்தவருக்கே கற்பழிக்கப்பட்டப் பெண்ணைத் திருமணம் செய்து வைக்கும்படி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தீர்ப்பு வழங்கவில்லை!

இனி இம்ரானாவின் விஷயத்துக்கு வருவோம்.

"உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளாதீர்கள்" (திருக்குர்ஆன், 4:23)

மகனின் மனைவி அதாவது மருமகளை, மகன் இறந்து விட்டால் அல்லது மகன் மனைவியை விவாகரத்துச் செய்தால் கூட அந்தப் பெண்ணை அவருடைய தந்தைத் திருமணம் செய்யக்கூடாது என்று 4:23ம் வசனம் தடை விதிக்கிறது. திருமணம் செய்துகொள்ள விலக்கப்பட்ட, தன் மகனின் மனைவியை திருமண உறவையும் கடந்து பலாத்காரம் செய்தது கீழ்த்தரமான செயல் -இச்செயலுக்கு மகனின் மனைவியை கற்பழித்தத் தந்தைக்கே மணமுடிப்பது குற்றவாளிக்கு பரிசளிப்பது போன்றதாகும்.

கற்பழித்தவன்தான் குற்றவாளி, கற்பழிக்கப்பட்டப் பெண் நிரபராதி - அவள் தவறுக்கு உடன்படவில்லை - நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம் "நீ செல்! அல்லாஹ் உன்னை மன்னித்து விட்டான்" என்று கூறினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இப்படிச் சொல்லியிருப்பது பலவந்தப்படுத்தப்பட்டவர்கள் குற்றமற்றவர்கள் என்பதைத் தெளிவுப்படுத்துகிறது. மேலும் திருக்குர்ஆன் நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் மீது குற்றமில்லை (5:3) என்று கூறுகிறது.

இம்ரானா குற்றமற்றவர் என்பதால் அவர் தன் கணவரோடு சேர்ந்து வாழ்வதற்கு இஸ்லாத்தில் எந்த தடையும் இல்லை. இம்ரானா தன் கணவரோடு சேர்ந்து வாழலாம் என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடாகும்.

ஒரு ஏழை குடும்பத்தில் நடந்த ஒரு சொத்து தகராறு, உள்ளூர்வாதிகளால் கண், காது, மூக்கு வைத்து பேசப்பட்டு பிறகு விவகாரம், ஊடகங்களால் சரியாக விசாரிக்காமல் ஊதி பெரிதாக்கி விட்டன.

சம்பவம் நடந்தது ஜுன் 3-ந்தேதி. செய்தி திரிக்கப்பட்டு - ஜோடிக்கப்பட்டு வெளியே வந்தபிறகு சம்பந்தப்படாதவர்கள் 15-ந் தேதிதான் லோக்கல் மவ்லவியிடம் சாதாரணமாக கருத்து கேட்டிருக்கிறார்கள். அதன் மறுநாள் 16-ந்தேதி காவலர்களால் கைது செய்யப்படுகிறார். இதன் பிறகே இம்ரானா காவல் நிலையம் கேட்டுக்கொண்டதற்கிணங்க புகார் பதிவு செய்கிறார். சம்பவம் நடந்து சுமார் 2 வாரம் கழித்துதான் புகார் பதிவு செய்யப்படுகிறது. ஜுன் 20-ந்தேதி இம்ரானா முஜஃபர் நகர் கோர்ட்டில் ஆஜராகிறார்.

இதற்கு பின்னணியில் இருப்பது வீட்டை விற்பது சம்பந்தமாக நூர் இலாஹிக்கும் அவரின் தந்தை அலி முஹம்மதுக்கும் நடந்த பிரச்சினையாகும். அலி முஹம்மது 20 ஆயிரம் ரூபாய் கடனை அடைக்க வீட்டை விற்க முற்படுகிறார். ஆனால் நூர் இலாஹியும் அவரது மனைவி இம்ரானாவும் இதனை எதிர்க்கிறார்கள். சம்பவம் நடப்பதற்கு 3 நாட்கள் முன்பாக விஷம் குடித்து தற்கொலை செய்ய முற்பட்டு தோற்றுவிடுகிறார். பிறகுதான் இத்தகைய குற்றாச்சாட்டு இம்ரானாவினால் வைக்கப்படுகிறது.

59 வயது பெரியவர் ஒரு இளவயது பெண்ணை வீட்டில் பெரியவர்கள் இருக்கும்போது கற்பழிக்க முடியுமா என்பதுதான் இங்கு கேள்வி. அலி முஹம்மதுவின் மனைவியாகிய மூதாட்டி தன் கணவரால் இத்தகைய செயலை செய்யமுடியாது என்று கண் கலங்குகிறார். நூர் இலாஹியிடம் உங்களின் தாய் அவ்வாறு ஒன்றும் நடக்கவில்லை என்று சொல்கிறாரே அவரை நம்புகிறீர்களா? என்று கேட்ட போது, ஆமாம் அவரின் பேச்சை நம்புகிறேன் என்கிறார். உங்கள் தந்தை இத்தகைய செயலை செய்யமுடியுமா? என்று கேட்டதற்கு அவ்வாறு செய்ய முடியாது என்கிறார். இது பலரின் முன்னிலையில் இம்ரானாவின் சகோதரர்கள் இருவரும் அங்கு இருந்தும் இந்த பதிலை நூர் இலாஹி சொல்கிறார். இம்ரானாவும் தான் எந்த ஃபத்வாவையும் கேட்கவில்லை என்று மறுத்துவிடுகிறார்.

இம்ரானா தரப்பு குற்றச்சாட்டு தவிர இம்ரானாவுக்கு சாதகமான எந்த ஆதாரமும் இல்லை என்றும் இது ஒரு சொத்து தகராறு என்கிறது அவுட்லுக் எக்ஸ்பிரஸ் மற்றும் தி ஹிந்து. மாமனாரின் சொத்துக்களை அபகரிக்க மகனும் மருமகளும் நடத்திய நாடகம் என்பதும் மற்றவர்களின் வாதம். இம்ரானாவின் வயது 28, அவரது மாமனாரின் வயது 59. இம்ரானா கற்பழிக்கப்படும்போது முரண்டுபிடித்து அழுதிருந்தாலும் 100 சதுர அடிமட்டுமே உள்ள அவ்வீட்டில் 5 பெரியவர்களும் 7 குழந்தைகளுக்கும் கேட்டிருக்குமே என்பதுதான் இம்ரானாவிற்கு எதிரான நிலை. அலி முஹம்மது துப்பாக்கியை காட்டி மிரட்டினார் என்ற ஒரு செய்தியும் அவரை கைது செய்யும்போது எந்த துப்பாக்கியையும் போலிசார் பறிமுதல் செய்யவில்லை என்பதிலிருந்து பொய்யாகி விடுகிறது.

இந்நிகழ்ச்சியை இஸ்லாத்தை எதிர்ப்பவர்களும் இந்தியாவின் காவி இயக்கங்களும் இஸ்லாத்திற்கெதிரான ஆயுதமாக கையில் எடுத்துள்ளன. அத்வானி, அருண்ஜேட்லி முதல் அசோக் சிங்கால் வரை பொது சிவில் சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்றும் முஸ்லிம் தனியார் சட்டத்தை தூக்கி எறிய வேண்டும் என்று கதற ஆரம்பித்துவிட்டார்கள்.

ஒரு பெண்ணுரிமை இயக்கம் இம்ரானாவிற்கு 5 ஆயிரம் ரூபாய் பேரத்திற்கு "தான் முஸ்லிம் தனியார் சட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை" என்றும் "சிவில் கோர்ட் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன்" என்றும் சொல்லுமாறு கேட்டுள்ளார்கள்.

இஸ்லாத்தினை வேரறுக்க இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கங்கள் கீழ்கண்ட வழிகளை கையாளுவது உண்டு.

1) முஸ்லிம்கள் எங்கு தவறு செய்தாலும் அதனை ஊடகங்களில் பதியவைப்பது.

2) அவ்வாறு முஸ்லிம்கள் தவறு செய்யவில்லை என்றால் அதற்கு சாதகமான சம்பவங்களின் வழியே முஸ்லிம்கள் தவறு செய்திருக்கலாம் (suspection) என்று பிரச்சாரம் செய்து ஊடகங்களில் பதிய வைத்துவிடுவது.
3) இத்தகைய விஷயங்கள் இஸ்லாத்திற்கெதிரானது என்று ஆதாரங்களைக்காட்டி சொன்னால் கூட, அதனை காதில் போட்டுக்கொள்ளாமல் இச்சம்பவங்களை இஸ்லாத்தின் வழிமுறையாக பிரச்சாரம் செய்வது.
4) பதிய வைத்த செய்திகளுக்கு எதிரான உண்மை சம்பவங்கள் தலை தூக்குமானால், பிறிதொரு காலத்தில் பதிய வைத்த இச்செய்தியை இஸ்லாத்தின் அசிங்கங்களாக பிரச்சாரம் செய்வது.

5) இந்தியாவை பொறுத்தவரை இதுபோன்ற சம்பவங்கள் தலைதூக்கும்போதெல்லாம் "பொது சிவில் சட்டம் தேவை" என்று கூப்பாடு போடுவது காவி இயக்கங்களின் வழிமுறையாகும்.

இந்த தீர்ப்பு தவறானது என்று இஸ்லாமிய இயக்கங்களால் பிரச்சாரம் செய்யப்பட்டாலும் இச்செய்தியை ஆறப்போட்டு சில வருடங்கள் சென்று "முட்டாள்தனமான இஸ்லாத்தின் தீர்ப்பு" என்று இஸ்லாத்தின் மீது சேறுவாறி இறைக்க இச்சம்பவத்தை பயன்படுத்துவார்கள். எதிர்காலத்தில் வெறும் வாய்களுக்கு அவல் கிடைத்த மாதிரி தவறான ஊடக வழிச் செய்திகளை வைத்து நடக்காத ஒன்று நடந்ததாக சொல்ல நல்லதொரு வாய்ப்பு. இதுவே நிகழ்கால இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரங்களின் மூலம் நமக்கு கிடைக்கும் படிப்பினையாகும்.


"கணவன் மனைவியும்" சேர்ந்து வாழக்கூடாது என்று தாருல் உலூம் சொன்ன முட்டாள்தனமான கருத்து, முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் இஸ்லாமிய அறிஞர்களால் உலகஅளவில் கண்டனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. (இதற்கான பல ஆதாரங்களை நம்மால் எடுத்து வைக்க முடியும்). மத்ஹப் போன்ற பிரிவுகளை எதிர்க்கும் இஸ்லாமிய இயக்கங்களுக்கு மத்ஹபின் பெயரால் நடந்த நிகழ்கால தடுமாற்றத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல நல்லதொரு வாய்ப்பாக அமைந்துவிட்டது.


"இஸ்லாம்" தொடர்ந்து ஊடகத்தினால் தாக்கப்படுவதால் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அதிகமான முஸ்லிம்களின் ஊடகங்களில் "கணவன் மனைவி சேர்ந்து வாழ்வதற்கு தடை இல்லை" என்ற கருத்தை வலியிறுத்தினர். மற்றபடி இத்தகைய கற்பழிப்பு நடந்ததா என்ற செய்தியோ அல்லது இதற்கு பின்னணியில் உள்ள செய்தியோ முன்னுரிமை அளிக்கப்படவில்லை. குறிப்பிட்ட பத்திரிக்கைகளைத் தவிர.

1400 ஆண்டுகளுக்கு முன்னரே அறியாமைகளை போக்கிய ஒரு மார்க்கத்தின் பெயரால் இத்தகைய அசிங்கங்கள் நடப்பதுதான் கேலிக்கூத்தாக இருக்கிறது.

பிரிக்கப்படாத கணவன் மனைவியை சேர்ந்து வாழ்வதற்காக பல பெண்ணுரிமை இயக்கங்கள் போராட்டம் நடத்துகின்றன. தீர்ப்பு கூறும் அவையிடம் இந்த விவகாரம் முறையாக எடுத்துச் செல்லப்படவும் இல்லை. சம்பந்தப்பட்டவர் கேட்காத ஃபத்வா-வை சம்பந்தப்படுத்தி ஊடகங்களும் காவி இயக்கங்களும் அரசியல் நடத்துகின்றன.

இம்ரானா தனது மாமனாரால் பலாத்காரம் செய்யப்பட்டாரோ இல்லையோ ஆனால் ஊடகங்கள் அப்பணியைச் செய்து கொண்டிருக்கின்றன.



References:
http://www.milligazette.com/dailyupdate/2005/20050714b.htm
Also read:
Muslim Political Council's report on the Imrana episode
Text of the Question and fatwa on Imrana
Statements on Imrana case
"Deoband Fatwa"

islamonline.org
arabnews

http://www.expressindia.com/fullstory.php?newsid=49943
http://www.hindu.com/thehindu/holnus/001200507031202.htm

http://abumuhai.blogspot.com/2005/06/blog-post_30.html
http://athusari.blogspot.com/2005/07/blog-post_06.html

http://timesofindia.indiatimes.com/articleshow/1158204.cms
http://www.expressindia.com/fullstory.php?newsid=5042

30 comments:

supersubra said...

தங்கள் கருத்து மிக்கவும் சரியானதே.
ஒரு சிலர் செய்யும் தவறு அவர் எந்த மதமோ அல்லது பிரிவோ அதன் மீதே தூறு வாரி இழைக்கும் கொடுமை
எப்பொழுதும் நடந்துகொண்டிருக்கின்றது. காஞ்சி சங்கராச்சாரியார் செய்த தவறும் இத்தகையதே. அதை பார்ப்பன சமூகத்தின் ஒட்டு மொத்த தவறாக சித்தரிக்கும்
பத்திரிக்கைகள்தான் இம்ரான் விவகாரத்தையும் சித்தரிக்கின்றன. அவர்களுக்கு தேவையானதெல்லாம் சூடான செய்திகளே.

குழலி / Kuzhali said...

//ஒரு ஏழை குடும்பத்தில் நடந்த ஒரு சொத்து தகராறு, உள்ளூர்வாதிகளால் கண், காது, மூக்கு வைத்து பேசப்பட்டு பிறகு விவகாரம், ஊடகங்களால் சரியாக விசாரிக்காமல் ஊதி பெரிதாக்கி விட்டன//

நிச்சயமாக இது பாலியல் வன்முறையில்லை அப்படித்தானே?! ஊடகங்கள் பெரிதாக்கிவிட்டன என்கின்றீர்?

உங்கள் கருத்து உண்மையாகவும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்

ஆனால் ஒரு வாதம் வைத்தீர்களே அதைத்தான் சற்றும் ஏற்க முடியவில்லை

//இம்ரானாவின் வயது 28, அவரது மாமனாரின் வயது 59. இம்ரானா கற்பழிக்கப்படும்போது முரண்டுபிடித்து அழுதிருந்தாலும் 100 சதுர அடிமட்டுமே உள்ள அவ்வீட்டில் 5 பெரியவர்களும் 7 குழந்தைகளுக்கும் கேட்டிருக்குமே என்பதுதான் இம்ரானாவிற்கு எதிரான நிலை. //


மகனின் மனைவியை பெண்டாண்ட நிகழ்ச்சி மிக சமீபத்தில் பரங்கிப்பேட்டையில் நடந்தது, சில மாதங்களுக்கு முன் பரங்கிப்பேட்டையிலே மகனின் புது மனைவியை மகன் துபாய் சென்றிருந்தபோது பெண்டாடி அதில் அந்த பெண் இறந்தும் போய்விட்டார், இதில் மாமனாரின் வயது 60 பெண்ணின் வயதோ 20, குற்றச்சாட்டை வைத்தது பெண்ணின் அண்ணன்,தாய் மற்றும் சொந்தக்காரர்கள், குடும்ப மருத்துவர் பாலியல் பலாத்காரம் நிகழ்த்தப்பட்டுள்ளது என சடலத்தை ஆராய்ந்து கூறியும் வேக வேகமாக சடலம் புதைக்கப்பட்டு அந்த சடலம் மீண்டும் பிரேத பரிசோதனைக்கு தோண்டியெடுக்கப்படக்கூடாது என ஜமாத் தடுத்தது (இதற்கும் மத கோட்பாட்டைதான் துணைக்கு அழைத்தனர்), இத்தனையையும் தெளிவாக சன் தொலைக்காட்சியில் "குற்றம் நடந்தது என்ன?" என்ற நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்டவர்கள், குற்றம் சாட்டப்படவர்கள்,அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் ஜமாத் உறுப்பினர்கள் என பல தரப்பட்டவர்களிடமிருந்தும் பேட்டி எடுத்து காண்பித்தனர்... இதற்கென்ன சொல்கின்றீர்?!

தெருத்தொண்டன் said...

//இம்ரானாவின் வயது 28, அவரது மாமனாரின் வயது 59. இம்ரானா கற்பழிக்கப்படும்போது முரண்டுபிடித்து அழுதிருந்தாலும் 100 சதுர அடிமட்டுமே உள்ள அவ்வீட்டில் 5 பெரியவர்களும் 7 குழந்தைகளுக்கும் கேட்டிருக்குமே என்பதுதான் இம்ரானாவிற்கு எதிரான நிலை. //


வாழ்க ஆண் மக்கள்!
"உலகில் இது வரை வன்புணர்தலே நடக்கவில்லை. பெண் முரண்டு பிடிக்கலாம்.அழலாம்.இன்னும் என்னென்னவோ செய்யலாம். இதையெல்லாம் செய்யாத பெண் விருப்பத்துடன் தான் உறவு கொண்டாள்.. " ஆகா, அற்புதம்..
எந்த மதமாக இருந்தால் என்ன , ஆண்கள் ஆண்கள் தான்.

http://theruththondan.blogspot.com

இப்னு ஹம்துன் said...

//அவர்களுக்கு தேவையானதெல்லாம் சூடான செய்திகளே.//
நன்றி சூப்பர் சுப்ரா!

நண்பர் குழலி அவர்கள் பரங்கிபேட்டை சம்பவம் குறித்து எழுதியிருப்பதால் ஒரு பரங்கிபேட்டைகாரனாக நான் அறிந்த செய்திகளைத்தருகின்றேன்.

பரங்கிபேட்டை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பையும் ஒரே ஊர்க்காரன் என்ற முறையில் நானறிவேன். இரு தரப்பாரும் நானறிந்த வரை (என்னிடம் பழகியுள்ளது வரை) நல்லவர்களே! யார் மீது குற்றம் என்று இரு தரப்பையும் விசாரித்தும் விளங்க முடியவில்லை.
ஆனாலும் சில தகவல்கள் அறிய முடிந்தது:
1) ஆரம்பத்தில் 'வரதட்சணைக் கொடுமை' காரணமாக கொன்று விட்டனர் என்று பேச்சிருந்தது.
2).பிரேத பரிசோதனைக்குப் பின் 'தற்கொலை' என்று டி.எஸ்.பி.பேட்டி அளித்ததாக தினத்தன்ந்தி செய்தி.
3). முந்தையா செஇதிக்கு மறுப்பு. 'யூகம்' என்று அறிவிப்பு.
4).'வரதட்சனைக் கொடுமை' என்பது மெல்ல பரிணாம மாற்றம் அடைந்து 'மாமனாரின் காமவெறியாக' மாறுகிறது.
5). கடைசியில் 'தற்கொலைக்குத் தூண்டியதாக' மாமனாரை போலிஸ் கைது செய்கிறது.
6). சுனாமியின் போது 'இந்தியாவுக்கே சிறப்பான முன்மாதிரி' என்று மாவட்ட ஆட்சியர்களாலும் மற்ற மீடியாக்களாலும் பாராட்டபட்ட பரங்கிப்பேட்டை ஜமாத் 'சன் டி.வி'க்கு மட்டும் பேட்டி அளிக்க மறுப்பு.(நான் ஜமாத்தில் உறுப்பினன் இல்லை என்பதையும் சொல்லி விடுகிறேன்). அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் 'முந்தைய சம்பவத்தில்' தங்கள் தரப்பை பேட்டி கேட்க்காமல் ஒரு தரப்பாகவே 'பேட்டி' எடுத்தது.

நானும் தொலை தூரத்தில் இருப்பதால் உண்மையில் என்ன நடந்தது என்று எனக்கும் தெரியாது. நானும் யார் தரப்பிலும் இல்லை.
ஆனாலும் ஒன்று விளங்க முடிகிறது: உண்மையின் அஸ்திவாரத்திலிருந்து விடுபட்டு 'காற்றில்' தான் சர்ச்சைகள் நடக்கின்றன. (மத சர்ச்சைகளையும் சேர்த்துத் தான் சொல்கிறேன்).

'உண்மை'க்காக நடக்கும் வாள் சண்டைகளில் 'உண்மை' தான் முதலில் இறக்கிறது எனப்து மட்டும் உண்மை.

பாபு said...

//காஞ்சி சங்கராச்சாரியார் செய்த தவறும் இத்தகையதே. அதை பார்ப்பன சமூகத்தின் ஒட்டு மொத்த தவறாக சித்தரிக்கும்
பத்திரிக்கைகள்தான் இம்ரான் விவகாரத்தையும் சித்தரிக்கின்றன. அவர்களுக்கு தேவையானதெல்லாம் சூடான செய்திகளே.//

But as far as I know, Muslims are not against to punish the culprit 'Maamanaar' if proved.

But for Kanchi Sankarachari, even the political equations are rechanged and the TOP TOP administrators/politicians are coming to rescue him is the wonder. isn't it?
hmmmmm... 'ELLORUM INNAATTU MANNAR'

குழலி / Kuzhali said...

//சுனாமியின் போது 'இந்தியாவுக்கே சிறப்பான முன்மாதிரி' என்று மாவட்ட ஆட்சியர்களாலும் மற்ற மீடியாக்களாலும் பாராட்டபட்ட பரங்கிப்பேட்டை ஜமாத் 'சன் டி.வி'க்கு மட்டும் பேட்டி அளிக்க மறுப்பு.//

பரங்கிப்பேட்டை ஜமாத்தைப்பற்றி எமக்கு மிக நல்ல அபிப்பராயம் உண்டு, இந்துக்களும் இசுலாமியர்களும் பெருமளவில் வாழ்ந்த போதும் எந்த ஒரு மதப்பிரச்சினைகளும் வராமல் நல்லதொரு புரிதலுடனும் சகோதரத்துவத்துடனும் ஒருவருக்கொருவர் காலம் காலமாக வாழ்ந்து வருகின்றனர் என்பது மத வெறிபிடித்தலையும் மற்ற சில ஊர்கள் வெட்கப்படும்படியானதொரு ஊர் பரங்கிப்பேட்டை என்பது சத்தியமான உண்மை, அங்கிருக்கும் சில இசுலாமிய நண்பர்கள் எங்களுக்கு குடும்ப நண்பர்கள்.

//அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் 'முந்தைய சம்பவத்தில்' தங்கள் தரப்பை பேட்டி கேட்க்காமல் ஒரு தரப்பாகவே 'பேட்டி' எடுத்தது.
//
அந்த ஒலிபரப்பை நான் பார்த்தேன், அதில் சில ஜமாத் உறுப்பினர்களிடம் சன் தொலைக்காட்சி நிருபர் கேள்விகேட்டபோது எந்த பதிலும் சொல்லாமல் மவுனமாக இருந்ததும் அவர்களுக்கு பேட்டியளிக்க மறுத்ததும் அந்த நிகழ்ச்சியில் காட்சிப்படமாக காண்பிக்கப்பட்டது, அது மட்டுமின்றி "இவர்களின் மவுனத்திற்கு காரணம் என்ன?" என்று கேள்வியும் அந்த நிகழ்ச்சியில் எழுப்பினர்?

தற்கொலையோ கொலையோ எதுவானாலும் அரசாங்க அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை தோண்டி எடுக்க முயற்சித்தபோது தடுக்கப்பட்டது என்னளவில் நியாயமாகத்தெரியவில்லை. தினத்தந்தியில் தான் இதை நான் படித்தேன்.

மேலும் குடும்ப மருத்துவரும் கூட சன் தொலைக்காட்சியில் பேட்டி அளித்திருந்தார், அவரும் கூட சடலத்தை சோதித்தபோது நகக்கீறல்களும் காயங்களும் இருந்தது என கூறினார், ஆனால் வேக வேகமாக சடலம் புதைக்கப்பட்டதில் உண்மையும் சேர்ந்து புதைக்கப்பட்டுவிட்டது.

உண்மை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

இங்கே பரங்கிப்பேட்டை சம்பவத்தை சொன்னதற்கான முக்கிய காரணம் கீழ் கண்ட வரிகள் தானே தவிர மதத்தை விமர்சிப்பதல்ல என் நோக்கம்...

//இம்ரானாவின் வயது 28, அவரது மாமனாரின் வயது 59. இம்ரானா கற்பழிக்கப்படும்போது முரண்டுபிடித்து அழுதிருந்தாலும் 100 சதுர அடிமட்டுமே உள்ள அவ்வீட்டில் 5 பெரியவர்களும் 7 குழந்தைகளுக்கும் கேட்டிருக்குமே என்பதுதான் இம்ரானாவிற்கு எதிரான நிலை. //

காம வெறி பிடித்த மாமனார்கள் மதங்களையும் தாண்டி இருப்பது என்பது மிக நிதர்சனமான உண்மை.

குழலி / Kuzhali said...

முந்தைய பின்னூட்டத்தில் ஒரு கருத்தை கூறாமல் விட்டு விட்டேன், இது மாதிரியான பல பாலியல் பலாத்காரங்கள் குடும்ப கவுரவம், எதிர்கால வாழ்க்கை என்று வீதிக்கு வராமலே முடங்கிவிடுகின்றன, மிகச்சில மட்டுமே வெளியில் வருகின்றன, இப்படிப்பட்ட நிலையில் பெரும்பாலும் முதலில் விமர்சிக்கப்படுவது பாதிக்கப்பட்ட பெண்ணின் ஒழுக்கம் தான், பல பாலியல் பலாத்கார வழக்குகளில் அந்த பெண்ணின் ஒழுக்கத்தைதான் முதலில் சந்தேகத்திற்குள்ளாக்குகின்றது குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு, அது நிரூபிக்க முடியாவிட்டாலும் ஒரு சந்தேகத்தை கிளப்பிவிடுகின்றது...

contivity said...

குழலி அவர்களே..

//காம வெறி பிடித்த மாமனார்கள் மதங்களையும் தாண்டி இருப்பது என்பது மிக நிதர்சனமான உண்மை.//

மிகச்சரியாகச் சொன்னீர்கள். இப்படிப்பட்ட படு பாதகச் செயலைச் செய்பவர் எவராயினும் மிகக் கடுமையாகத் தண்டிக்கப் பட வேண்டும் என்பதை யாரும் மறுக்க இயலாது. அதேவேளையில் இம்மாதிரி மனிதத் தன்மையற்ற செயலகளுக்கு மதச்சாயம் பூசி சம்பந்தப்பட்டவர் சார்ந்திருக்கும் மதத்தைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதை என்ன வென்று சொல்வது?

வள்ளுவப் பெருந்தகை சொன்னது நினைவுக்கு வருகிறது.
"எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு"

இப்னு ஹம்துன் said...

அன்பின் குழலி,
உங்களின் நல்ல மனத்தையும் நோக்கங்களை நானும் அறிவேன்.

பரங்கிப்பேட்டை சம்பவத்தை பொறுத்தவரை
தொலை தூரத்தில் இருப்பதால் உண்மையில் என்ன நடந்தது என்று எனக்கும் தெரியாது. நானும் யார் தரப்பிலும் இல்லை என்பதை மீண்டும் சொல்லிக்கொண்டு....

'உண்மை அறிந்தவர்கள் சிலர்' சன் டி.வி. நிருபரிடம் வாய் திறக்காதது பற்றி இரு தருப்பிலும் முணுமுணுப்புகள் இருந்ததாகத்தான் நானும் அறிய வருகிறேன்.

நீங்கள் சொன்னது போல உண்மை எப்படியும் இருக்கலாம்.

பரங்கிப்பேட்டை பற்றிய உங்கள் நல் அபிப்ராயங்களுக்கு நன்றி.
'கண்ணேறு பட்டுற போவுது'. (கோச்சுக்காதிங்க..... சும்மா டமாஷ்.தான்).

Abu Umar said...

குழலி,
ஊடகங்கள் இவ்விஷயத்தில் என்னவெல்லாம் புரட்டல் செய்தது என்பதை ஆதாரத்துடன் எழுதியுள்ளேன். மீண்டும் ஒரு முறை படியுங்கள்.

வீட்டு திண்ணையில் படிக்காத பாட்டிகள் கூடி, பட்டிணத்திற்கு போய் படிக்கும் பக்கத்து வீட்டு மாணவியைப் பற்றி செய்யும் ஆராய்ச்சியைவிட என்ன மேன்மையான ஒன்றை இவ்விஷயத்தில் இந்த ஊடகம் செய்துவிட்டது?

ஊடகம் இவ்விஷயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்ததன் நோக்கம் பாதிக்கப்பட்டவர், பாதிப்படைந்தவர் மற்றும் அது சம்பந்தமான நிகழ்ச்சி எல்லாம் இஸ்லாம் சம்பந்தப்பட்டதாக இருந்ததால்தான்.

நீங்கள் ஒப்புமை செய்த பரங்கிப்பேட்டை சம்பவத்திற்கும் தற்போது நடந்த சம்பவத்திற்கும் எந்த சம்பந்தமில்லை. நீங்கள் சொன்ன விஷயத்தில் பாதிக்கப்பட்டவர் இறந்துவிட்டார். கொலைக்கு காரணம் யார் என்று தெரியாமல் இருக்கலாம்.

இம்ரானா அப்படியல்ல. உயிரோடு உள்ளார். மருத்துவ பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளது. பாலியல் பலாத்காரம் கிரிமினல் குற்றம் என்பதால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக சட்டரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. பலாத்காரம் நிரூபிக்கப்பட்டால் குற்றம் செய்தவருக்கு அதிகபட்ச தண்டணை கொடுக்க வேண்டும் என்பது எனது கருத்து.

இப்படித்தான் ஒரு ஊரில் ஒரு மாமனார் தவறு செய்தாராம் அதனால் இவரும் தவறு செய்திருப்பார் என்று சொல்லுவது வேடிக்கையாக இருக்கிறது.

குழலி,
"நீங்கள்" என்று பொதுவாக எழுதக்கூடியவர் "நீர்" என்று எழுதினால் நடைமுறையில் அதற்கு என்ன அர்த்தம்?

நான் உங்களை பார்த்தது கிடையாது. பரஸ்பரம் எழுத்துக்கள் மூலமாகத்தான் கேரக்டரை புரிந்துக்கொள்ள முடிகிறது.

தெருத்தொண்டனுக்கு,
பாலியல் பலாத்காரம் செய்தவனுக்கு இஸ்லாம் வழங்குவது மரண தண்டனையாகும். பாதிக்கப்பட்ட பெண் கணவனுடன் சேர்ந்து வாழ தடையும் இல்லை. மேலும் சுட்டியை சொடுக்கி இன்றைய செய்தியை படியுங்கள்

Brouhaha over a fatwa

குழலி / Kuzhali said...

//இப்படித்தான் ஒரு ஊரில் ஒரு மாமனார் தவறு செய்தாராம் அதனால் இவரும் தவறு செய்திருப்பார் என்று சொல்லுவது வேடிக்கையாக இருக்கிறது.//

நான் சொல்ல வந்தது அது அல்ல, வயதானவர் பாலியல் பலாத்காரம் செய்யமுடியுமா? என்ற கேள்வி நீங்கள் கூறிய அந்த மாமனாருக்கு 59 வயது என்று கூறியதிலிருந்தது எழுந்தது அதற்காகத்தான் பாலியல் பலாத்காரத்திற்கு வயது ஒரு தடையல்ல என்றேன்.

//
குழலி,
"நீங்கள்" என்று பொதுவாக எழுதக்கூடியவர் "நீர்" என்று எழுதினால் நடைமுறையில் அதற்கு என்ன அர்த்தம்? //
ஆ... என்ன இது? நீர் என்பதும் மரியாதை விகுதிதான், அது மட்டுமல்லாமல், இந்த வாங்க போங்க வெல்லாம் கோயம்புத்தூர் பேச்சு வழக்கைபோல எங்களது பேச்சு வழக்கில் இயற்கையாக கலந்தது அல்ல, சாதரணமாக நீ,வா,போ என்றுதான் எங்கள் பகுதி பேச்சு வழக்கு அமையும், இந்த வாங்க, போங்க வெல்லாம் யோசித்து யோசித்தோ அல்லது சேர்க்க வேண்டுமே என சேர்த்து எழுதுவது,பேசுவது, சில சமயங்கள் இந்த ங்க்.. என்னையும் அறியாமல் விடுபட்டுவிடும்

G.Ragavan said...

விடயம் பத்திரிகைச் செய்தியானது தவறா என்று சொல்ல முடியவில்லை. இது இந்து வீட்டில் நடந்திருந்தாலும் வெளியே வந்திருக்கிறதே.

எது எப்படியோ பல குற்றங்கள் இதனால் வந்துள்ளன.

Abu Umar said...

ராகவன்,

பத்திரிகை எந்த விஷயங்களில் புரட்டு செய்துள்ளது என்று சொல்லியுள்ளேன்.

ஒரு செய்தியை வெளியில் கொண்டுவருவது தப்பு அல்ல. செய்தியை புரட்டுவது தவறு.

உண்மையான செய்தியை வெளி உலகிற்கு காட்ட விரும்புகிறவன் ஏன் பணம் கேட்கிறான்?

பணம் கேட்கிறவன் எப்படி உண்மை செய்தியை பிரசுரிப்பான் என்று நம்புகிறீர்கள்?

//எது எப்படியோ பல குற்றங்கள் இதனால் வந்துள்ளன.//

இதனால் அவர்களின் புரட்டுகள் சரியாகிவிடுமா?

நல்லடியார் said...

பாலியல் பலாத்காரம் தண்டனையோடு முடிந்து விடுவதில்லை. பலாத்காரத்திற்குள்ளானவரின் எதிர்காலம், குழந்தைகளின் மனநிலை இவற்றை கருத்தில் கொண்டு ஊடகங்களில் அவர்களின் பெயர் போன்ற அடையாளங்களை வெளியிடக் கூடாது என்பது மனிதாபிமான நியதி.

இம்ரானா விஷயத்தில் வரிந்து கட்டிக் கொண்டு நின்ற பத்திரிக்கைகள் இத்தகைய எந்த அணுகுமுறையயும் பின்பற்றாதன் மூலம் பத்திரிக்கை தருமத்தைக் காட்டியுள்ளனர்.

இப்பிரச்சினையை அரசியலாக்கி சமாஜ்வாதி கட்சியும், பா.ஜ.கவும் ஆதாயம் பெற முயல்கின்றன என்று அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத் தலைவர் சபாஷினி அலியும், பிருந்தா காரட்டும் கூறியுள்ளனர். ஒரு தொலைக்காட்சி கலந்துறையாடலில்:

தேவ் பந்தின் தீர்ப்பை முலயாம் சிங் சான்றோர்கள் அளித்த தீர்ப்பாக வர்ணித்தும், பா.ஜ.க. ஏதோ பெண்கள் உரிமையை காப்பதற்காக அவதாரம் எடுத்தது போல் பேசுவது வேடிக்கையாக உள்ளது. இப்பிரச்சினையை மையமாக வைத்து ஆர்.எஸ்.எஸ் & பா.ஜ.க பொதுவான சிவில் சட்டம் தேவை என்று பிரச்சினையை எழுப்பி, இஸ்லாம் பெண்களுக்கு எதிரான மதம் போன்று சித்தரிக்க முயலுகின்றனர். இதே ராஜஸ்தான் பா.ஜ.க. அரசு 'சதி'யை தெய்வீகமாக சித்தரித்து புத்தகமாகவே வெளியிட்டுள்ளது. மத்திய பிரதேச பா.ஜ.க. முதலமைச்சர் பாபுலால் கவுர், குழந்தைத் திருமணங்களை தன்னால் தடை செய்ய முடியாது என பகிரங்கமாகவே கூறியுள்ளார்.

இன்னொரு பக்கம் இம்ரானா பிரச்சினையை வைத்து மதவெறுப்பைத் தூண்டி குளிர்காயவும் சில சக்திகள் முயலுகின்றன.

சுய மரியாதைத் திருமணத்தை சட்டப் பூர்வமாக்க வேண்டும் என கருணாநிதி பிரதமருக்கு கடிதம் எழுதியதைப் பற்றி கருத்து தெரிவித்த பரிவாரங்கள், இந்து மதத்தை அழிக்க கருணாநிதி முயல்வதாக குற்றம் சாட்டினார்கள்.

எனவே இதுபோன்ற அரசியல் கட்சிகள், தனிப்பட்ட பெண் சம்பந்தப் பட்ட வாழ்க்கைப் பிரச்சினையை தேசிய அரசியலாக்கக் கூடாது"
என்று கூறியது கவனிக்கப் படவேண்டும்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்க அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் ஒன்று திரண்டுள்ளது ஆறுதலான செய்தி!

நல்லடியார் said...

தேவ்பந்த் அத்தகைய தீர்ப்பு வழங்கவில்லை என மறுத்திருப்பதும், ஊடங்கங்கள் கொடூரமான ஃபத்வா நகலை வெளியிடாததும் கவனிக்கப் பட வேண்டும்.

இந்திய சுதந்திரப் போரில் ஆங்கிலேயருக்கு எதிராக காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தை ஆதரித்து முஸ்லிம்கள் ஆங்கிலம் கற்பது ஹராம் என்று தீர்ப்பு வழங்கியதும் இந்த தேவ்பந்த் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாபு said...

முஸ்லிம் பெயரில் ஒரு குற்றம் தென்பட்டுவிட்டாலே போதும் அதை வைத்து எப்படியாவது இஸ்லாமைத் தாக்க வேண்டும் என்கிற காவி அரசியல்வாதிகளின் மனப்பான்மை தான் இதில் நன்கு வெளிப்பட்டது. (இத்தனைக்கும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுந்தண்டனைத் தருவதில் எந்த முஸ்லிமும் குறுக்கே வருவதில்லை, தேவையுமில்லை).

"எந்த ஜாதி மதத்தவராக இருந்தாலும் இ.பி.கோ (குற்றவியல் சட்டங்கள்) இந்தியாவில் அனைவருக்கும் ஒன்று தான்" என்பதை மூடி மறைத்துவிட்டு 'பொது சிவில் சட்டம்' என்கிற அவசியமற்ற கூப்பாடுகள்.

சங்கராச்சாரியார் ஒருவர் கைது செய்யப்பட்ட போது, அவர் மீது குற்றம் இல்லாத பட்சத்தில் தானே வெளிவருவார் என்றுசட்டத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் 'தினம் ஒரு தர்ணா பொழுதொரு போராட்டம்' என்று அலைந்தவர்களின் செயல்களிலிருந்து நம்மைப்போல் பொதுமக்கள் 'விளங்கிக்கொண்டால்' சரி.

அப்பாவி said...

//இந்திய சுதந்திரப் போரில் ஆங்கிலேயருக்கு எதிராக காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தை ஆதரித்து முஸ்லிம்கள் ஆங்கிலம் கற்பது ஹராம் என்று தீர்ப்பு வழங்கியதும் இந்த தேவ்பந்த் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.//

பிற சமூகங்களுடன் ஒப்பிடும்போது இந்திய முஸ்லிம்கள் கல்வியில் பின் தங்கி இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமா? உண்மைதான் என்றால், இது இந்திய சுதந்திரப்போருக்கு முஸ்லிம்களின் ஒரு மாபெரும் பங்களிப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.

இப்படிக்கு
அப்பாவி

வாசகன் said...

// * முஸ்லிம்களின் ஒரு மாபெரும் பங்களிப்பு என்றுதான் சொல்ல வேண்டும். *

பங்களிப்பா? முட்டாள்தனமாக அல்லவாப்படுகிறது இப்பொழுது? //

என்ன சொல்ல வருகிறீர்(கள்)?

விமான நிலையங்களுக்கும் -வீர- சவர்க்கார்கள் பெயர்களே வைக்கப்பட்டுக்கொண்டிருக்க.....

முஸ்லிம்கள் முறையான 'இட ஒதுக்கீட்டினை'க் கேட்டு கையேந்தி நிற்கிற அவலத்தையா..?

ஃபாசிச சக்திகள் நம்மண்ணில் இனியும் தலையெடுக்க மாட்டார்கள் என்று நம்புவோம். 'நம்பிக்கை' தானே வாழ்க்கை.

வாசகன் said...

ஊடகப் புரட்டுகளை உடைத்துக் காட்டுவது போல முஸ்லிம்கள் எல்லாத்துறைகளிலும் தம் பங்களிப்பைத் தர முன் வந்தால்; அதற்காக தம் சமூகத்தாலாயே ஊக்குவிக்கப்படவும் செய்தால், அப்புறம் எந்த வாத்தியாரும் "பாய்களெல்லாம் ஏண்டா படிக்க வர்ரீங்க"ந்னு சொல்ல மாட்டார். அப்படிச் சொல்பவர் 'வாத்தியாராக'வும்
இருக்க மாட்டார்.

G.Ragavan said...

மீடியாக்களில் புரட்டு என்பது வருந்தத் தக்க செய்தி. மீடியா புரட்டு செய்தது என்பதைச் சொல்வதன் மூலம், அதற்குப் பின்னால் நடந்தவைகள் அனைத்தும் தவறு என்ற தொனியில் அனைவரும் பேசுவது போல உள்ளது. எல்லாரும் தவறு செய்கையில் மீடியாக்களுக்கு அந்த உரிமை இல்லாமலா போய் விடும்?

அப்துல் குத்தூஸ் said...

//* எல்லாரும் தவறு செய்கையில் மீடியாக்களுக்கு அந்த உரிமை இல்லாமலா போய் விடும்? *//

தவறு செய்வது ஒரு உரிமையா? என்ன சொல்கின்றீர்கள் சகோதரர் G. இராகவன்.

Anonymous said...

Anbin Kuzhalikku,
//நான் சொல்ல வந்தது அது அல்ல, வயதானவர் பாலியல் பலாத்காரம் செய்யமுடியுமா? என்ற கேள்வி நீங்கள் கூறிய அந்த மாமனாருக்கு 59 வயது என்று கூறியதிலிருந்தது எழுந்தது அதற்காகத்தான் பாலியல் பலாத்காரத்திற்கு வயது ஒரு தடையல்ல என்றேன்.//

Thankal Sahotharar Abu Umarin Antha Passage-i Thavaraaha purinthulleerhazho entru thontruhirathu.
//

Anonymous said...

//இம்ரானாவின் வயது 28, அவரது மாமனாரின் வயது 59. இம்ரானா கற்பழிக்கப்படும்போது முரண்டுபிடித்து அழுதிருந்தாலும் 100 சதுர அடிமட்டுமே உள்ள அவ்வீட்டில் 5 பெரியவர்களும் 7 குழந்தைகளுக்கும் கேட்டிருக்குமே என்பதுதான் இம்ரானாவிற்கு எதிரான நிலை. //
Oru chiriya Edaththil Balaathkaaram Nadakkum Pothu Mattulla Yaarukkume Chiriya chalanam kooda kelkkamal antha balaathkaaram nadanthathu enbathai eppadi yettu kolla mudiyum. Ethai than Sahotharar Abu Umar Koora vanthiruppaar Ena ninaikkiren.

இப்னு ஹம்துன் said...

//இந்தியாவில் ஏதோ இம்ரானா மட்டும்தான் கற்பழிக்கப் பட்டது போல் ஊடகங்கள் ஊடு கட்டி அடிப்பதன் பின்னனியில் உள்ள கும்பலின் நோக்கம் இம்ரானாவுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்பதி இல்லை, இசுலாம் கலங்கப்பட வேண்டும்//

ஆரோக்கியம் உள்ளவரே!

கலங்குவது 'நீர்' தான்.
அவர்கள் செய்வது 'களங்கம்' அய்யா!
(எழுத்துப்பிழையை சுட்டவே இப்பின்னூட்டம்).

வாசகன் said...

//மீடியாக்களில் புரட்டு என்பது வருந்தத் தக்க செய்தி. மீடியா புரட்டு செய்தது என்பதைச் சொல்வதன் மூலம், அதற்குப் பின்னால் நடந்தவைகள் அனைத்தும் தவறு என்ற தொனியில் அனைவரும் பேசுவது போல உள்ளது. //

அன்பின் ராகவன்,

மீடியாக்கள் பல நல்ல காரியங்களையும் செய்திருக்கின்றன என்பதை யாரும் மறுக்கயியலாது.
ஆனால், ஒரு ஜனநாயக குடியரசின் நான்காம் தூணாகிய அவை தன்னிலை பிறழும் போது 'ஆதிக்க சக்திகள்' ஒரு குறிப்பிட்ட மத/சமூகத்தின் மீது சேறு வாரி இறைக்க அவற்றையே தந்திரமாகப் பயன்படுத்திக்கொள்கின்றன. அது தான் இந்த முஸ்லிம் சகோதரர்களின் ஆதங்கமும் என்று கருதுகிறேன்.

ஆதிக்க சக்திகளின் புரட்டுகளை வெளிப்படுத்தும் போது 'தன்னிலை பிறழ்ந்த மீடியாவையும் எடுத்துக்காட்டுவது தவறாகாது தானே!

G.Ragavan said...

அப்துல் குத்தூஸ், தவறு செய்வது உரிமையென்று சொல்லவில்லை. என்னுடைய பதிவில் இழையோடும் லெசான கிண்டலையும் கவனியுங்கள்.

G.Ragavan said...

//எது எப்படியோ பல குற்றங்கள் இதனால் வந்துள்ளன.//

இதனால் அவர்களின் புரட்டுகள் சரியாகிவிடுமா?

இல்லை அபு உமர். நிச்சயமாக இல்லை. நான் அதை மறுக்கவும் இல்லை. நான் சொல்ல வந்தது மீடியாக்களின் புரட்டினால் பின்னால் நடந்தவைகள் அனைத்தும் மறக்கப் படவேண்டியது என்ற தொனி தவறு என்றுதான். இஸ்லாம் என்றில்லை. இந்துக்கள் என்றில்லை. கிருஸ்துவர்கள் என்றில்லை. மத அமைப்புகளைச் சேர்ந்தவர்களே தவறு செய்கிறார்கள். பத்திரிக்கைக்காரர்கள் செய்வது புதிதாகப் படவில்லை என்றுதான் சொல்ல வந்தேன்.

அழகப்பன் said...

G.Ragavan said...
//எல்லாரும் தவறு செய்கையில் மீடியாக்களுக்கு அந்த உரிமை இல்லாமலா போய் விடும்? //

//என்னுடைய பதிவில் இழையோடும் லெசான கிண்டலையும் கவனியுங்கள்.//

//இஸ்லாம் என்றில்லை. இந்துக்கள் என்றில்லை. கிருஸ்துவர்கள் என்றில்லை. மத அமைப்புகளைச் சேர்ந்தவர்களே தவறு செய்கிறார்கள்.//

ராகவன் அவர்களே! சரியாகச் சொன்னீர்கள். தவறு அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களுமே செய்கிறார்கள். ஆனால் முஸ்லிம்களில் எவரேனும் தவறு செய்துவிட்டால் இந்த மீடியாக்கள் இஸ்லாத்தை வம்பிக்கிழுக்கின்றன என்பதே முஸ்லிம்களின் ஆதங்கம். உதாரணமாக ஜெயந்திரர் அவர்கள் கைது செய்யபட்டபோது (கைது செய்யப்பட்ட விதம் முஸ்லிமகளில் பெரும்பாண்மையோருக்கு ஏற்புடைத்தன்று) மீடியாக்களோ அல்லது முஸ்லிம் அமைப்புகளோ ஒட்டுமொத்த இந்து மதத்தை விமர்சிக்கவில்லை. ஆனால் முஸ்லிம்களில் எவரேனும் தவறு செய்துவிட்டால் இஸ்லாத்திற்கெதிராக மீடியாக்களும், இந்து மத தலைவர்களும் எழுத, பேசச் செய்கின்றனர் என்பதுதான் முஸ்லிம்களின் ஆதங்கம்.

Abu Umar said...


Imrana on video - no rape

இப்னு ஹம்துன் said...

PLS READ THIS ALSO:
http://keetru.com/anicha/Nov05/marx.html