Thursday, July 07, 2005

நான்தான் உங்கப்பன்டா..

உலகத்தில் நாட்டுக்கு நாடு, மனிதனுக்கு மனிதன் என்று எவராக இருந்தாலும் போட்டி போட்டுக்கொண்டு "உனக்கு அப்பன் நானடா" என்று முன்னேறி வருகிறார்கள். இந்த முன்னேற்றம் மனித வாழ்க்கையை உயர்த்துமானால் அது அவசியமான முன்னேற்றம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் பகட்டுக்காகவும், பெருமைக்காகவும்தான் எனும்போது சற்று சிந்திக்க வேண்டியுள்ளது.

இவர்களின் முன்னேற்றம் யார் "அதிக நேரம் முத்தம் கொடுப்பது" என்பதிலும், பாம்பு பல்லி போன்ற விஷ ஜந்துக்களை கடித்து விழுங்குவதிலும், உடைந்த பிளேடுகள், கிளாஸ் தூள்கள் திண்பதிலும் என்று தொடர்கிறது. இந்த போட்டா போட்டிகள் கடுமையான பயிற்சி மேற்கோண்டு செய்யும்போது பணம் இருப்பவர்கள் மட்டும் சும்மா இருப்பார்களா?

வளர்ப்பு மகனின் திருமணமாகட்டும், இங்கிலாந்து ராணிகளின் திருமணமாகட்டும் அல்லது அரபு ஷேக்குகளின் ஆடம்பர திருமணமாகட்டும் - ஏற்கனவே இருக்கும் ரிக்கார்டுகளை உடைக்கக்கூடிய அளவுக்கு ஆடம்பரங்களை புதிது புதிதாக கண்டுபிடிக்கிறார்கள்.

முன்னால் உலகப்பணக்காரர்களில் முதன்மையானவரும் இந்நாள் உலக பணக்காரர்களில் ஒருவருமான புருணை சுல்தான் சுமார் 100 மில்லியன் டாலருக்கு போயிங் கம்பெனியிலிருந்து வாங்கிய விமானத்தை அப்படியே வாகோ-வுக்கு அனுப்பி மேலும் 120 மில்லியன் டாலர்களை செலவிட்டு அலங்கரித்துள்ளார். இந்த சொகுசு விமானத்தில் கை அலம்பும் தொட்டி கூட முழுமையான தங்கத்தினால் ஆனது. அதிலும் ஒன்று லாலிக் படிகத்தினால் (Lalique Crystal) செய்யப்பட்டது. மீத விஷயங்களை படங்களைப் பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.



















1 comment:

Sardhar said...

ஹலோ அபூ உமர்,

ஒங்களோட பதிவ ஒட்டின ஒரு விஷயத்த இங்க எழுதியிருக்கேன். படிச்சிட்டு ஒங்க கருத்த சொல்லுங்க.

http://sardhar.blogspot.com/2005/07/blog-post.html

அன்புடன், சர்தார்