Tuesday, June 21, 2005

நகர்ந்து வருமா மலைத்தொடர்

நாம் சென்றுகொண்டிருக்கும் திசையில் ஒரு ஆரஞ்சு வண்ண மலைத்தொடர் திடீரென முளைத்துள்ளது. அதுவும் 4000 அடிகளுக்கு மேல் உயரமுடையது.

படத்தை பெரிதாக்கி பார்க்க இங்கு சொடுக்கவும்

திடீரென முளைத்த மலைத்தொடர் நம்மை நோக்கி நகர்ந்து வருகின்றது.


படத்தை பெரிதாக்கி பார்க்க இங்கு சொடுக்கவும்

மிக அருகில்..


படத்தை பெரிதாக்கி பார்க்க இங்கு சொடுக்கவும்

ரொம்ம்ம்ப பக்கத்தில்..


படத்தை பெரிதாக்கி பார்க்க இங்கு சொடுக்கவும்

நம்மையே சூழ்ந்துவிட்டதே!


படத்தை பெரிதாக்கி பார்க்க இங்கு சொடுக்கவும்

மதியம்தான் ஆகுது. அதற்குள் இருட்டிவிட்டதே.

இப்படி ஒரு சூழ்நிலையில் நீங்கள் அகப்பட்டால் என்ன செய்வீர்கள்?.

மத்திய கிழக்கு நாடுகளில் எப்போதாவது இந்த மணற்காற்று (Sandstorm) வீசுவதுண்டு. நீங்கள் இப்பாலைவன பிரதேசத்திற்கு புதியவராக இருந்து தன்னந்தனியாக வாகனத்தில் பயணிக்கும்போது இத்தகைய மணற்காற்றை எதிர்கொண்டால் பயத்தை தருவதில் ஆச்சரியம் இல்லை. மாலை நேரமாக இருந்தால் இதன் வண்ணம் சற்று கறுமை கலந்த வண்ணத்தில் தோன்றும்.

பாலைவன திறந்தவெளி பகுதியில் மணிக்கு 180 கி.மீ (மணிக்கு 110 மைல்) வேகத்துடனும், கட்டிடங்கள் அடர்ந்த இடமாக இருக்கும்போது இதன் வீரியம் மணிக்கு 95 கி.மீ (மணிக்கு 60 மைல்) வேகத்திற்கு குறையாமலும் இருப்பதுண்டு. இத்தகைய மணற்காற்று எப்பொழுதாவது வந்தாலும் சொல்லிவிட்டு வருவதும் இல்லை.

இத்தகைய நிகழ்வை எதிர்கொண்டது ஒரு தடவை மட்டுமே.

கடந்த 26.04.2005 அன்று இதுபோன்ற மணற்காற்றுதான் (sandstorm) ஈராக் அல்-அசத் விமானபடை தளத்தை தாக்கியது.

No comments: