Sunday, October 30, 2005

யூத பாசிசவாதிகளின் மனிதாபிமானம்

யூத பாசிச காவலர்களின் அடாவடிதனத்தைப் பார்வையிட இங்கு சொடுக்குங்கள்.

12 comments:

dondu(#11168674346665545885) said...
This comment has been removed by a blog administrator.
நல்லடியார் said...
This comment has been removed by a blog administrator.
நல்லடியார் said...

அபூ உமர்,

டெம்ப்ளேட் சிதைந்துள்ளது. கவனிக்கவும்

நல்லடியார் said...

திரு.டோண்டு ராகவன் அவர்களுக்கு,

தாங்கள் இஸ்ரேலிய ஆதரவாளர் எனச் சொல்லிக் கொள்வதில் பெருமிதம் அடைகிறீர்கள் என்று நினைக்கிறேன். (உங்களின் அது பற்றிய பதிவுகளை முழுதும் படிக்கவில்லை). ஒருவேளை ஜெர்மானிய நியோநாஜிக்களுடன் இருக்கும் தொடர்பால் இருக்கலாம்.

இப்பதிவில் அபூஉமர் ஒரு புகைப்பட தொடுப்பைக் கொடுத்துள்ளார். அதற்கு பதிலாக நீங்கள் இன்னொரு தொடுப்பைக் கொடுத்துள்ளீர்கள். இதன் மூலம் நீங்கள் சொல்ல வருவது என்ன? இஸ்ரேலின் அடாவடித்தனங்களை நியாயப்படுத்துவதா? தெளிவு படுத்துங்கள் பிளீஸ்.

Abu Umar said...

நன்றி, நல்லடியார்,

டெம்ப்ளேட்டிற்கு எந்தப்பிரச்சினையும் இல்லை. டோண்டு கொடுத்த தொடுப்பின் காரணமாக குறிப்பிட்ட பதிவு மட்டும் ஒரு பக்கமாக இழுத்து நிற்கிறது.

தொடுப்பு கொடுப்பவர்கள் தொடுப்பின் விபர இடத்தில், நீண்ட தொடுப்பின் விலாசத்தை பதிவதால், டெம்ப்ளேட் இழுத்துக்கொண்டு போய்விடுவது தவிற்க இயலாதது. அதுவும் வலதுபக்க Sidebar எனபதால் பாதிப்பு அதிகம்.

இதுபோன்று தொடுப்பு கொடுப்பதை, எந்த பதிவிலும் தவிற்கும்படி கேட்டுக்கொள்கிறேன். தொடுப்பின் விபரம் பெரிதாக இருந்தால், "Link" என்பதாகவோ, "இங்கு சொடுக்குங்கள்" என்பதாகவோ இடலாம்.

அவ்வாறு செய்யாத தொடுப்பு மறுமொழிகள் நீக்கப்படுவதை தவிர வேறு வழி இல்லை.

dondu(#11168674346665545885) said...

அபு உமர் அவர்களே மன்னிக்கவும். ஹைப்பர்லிங் எப்படி கொடுப்பது என்று தெரியவில்லை. பதிவு போடும்போது அதற்கான ஏற்பாடுகள் இருப்பதால் பிரச்சினை இல்லை. பின்னூட்டம் போடும்போது அதை செயல்படுத்தத் தெரியவில்லை.

நல்லடியார் அவர்களே, நான் தீவிர இஸ்ரேலிய ஆதரவாளன் என்பது இங்கு எல்லோருக்கும் தெரிந்ததே. அது பற்றி ஐந்து பதிவுகள் போட்டுள்ளேன். நேரம் இருக்கும்போது படிக்கவும்.

"ஒருவேளை ஜெர்மானிய நியோநாஜிக்களுடன் இருக்கும் தொடர்பால் இருக்கலாம்."
உங்கள் லாஜிக் எனக்குப் புரியவில்லை. ஜெர்மானிய நியோநாஜிக்கள் எப்போது இஸ்ரவேலர்களின் ஆதரவாளர் ஆனார்கள்?

தங்கள் நாட்டை உலக வரைபடத்திலிருந்தே ஒழிக்க வேண்டும் என்பதை வெளிப்படையாகக் கூறுபவர்களிடம் இஸ்ரேல் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?

கூறப்போனால் இந்தியா இப்போது எதிர்க்கொள்ளும் தீவிரவாதத்தை இஸ்ரேலின் துணையை நாடினால் சற்று நல்ல முறையில் எதிர்கொள்ள முடியும் என நினைக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Abu Umar said...

Dear Aathavan,

பிளாக்கர் கணக்கு வலைப்பதிவுகளில் மறுமொழி பதியுமிடத்தில் தொடுப்பு கொடுப்பதற்கு எளிதான வழி :

1) உங்களின் பிளாக்கர் கணக்கில் புதிய செய்தியை பதிவதற்காக திறந்து அதில் Edit html என்பதை தேர்வு செய்யுங்கள்.

2) மறுமொழியினை இங்கு தட்டச்சு செய்யுங்கள். Hyperlink கொடுப்பதற்கு வசதியான பொத்தானை சொடுக்கி தேவையான வாக்கியத்தின் மீது தொடுப்பு கொடுங்கள். இப்பொழுது html code-ல் தொடுப்பு இருப்பதை பார்ப்பீர்கள்.

3) இதனை காப்பி செய்து, எங்கு மறுமொழி இடவேண்டுமோ அங்கு சென்று Paste செய்யுங்கள். பிறகு Preview பார்த்து அத்தொடுப்பு ஒழுங்காக வேலை செய்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள தொடுப்பின்மீது மவுஸை வைத்து வலது சொடுக்கி Open in New window (If you are using IE) என்று என்று கட்டளையிட்டு சரியான பக்கம் திறக்கப்பட்டால் மறுமொழியை சேமித்துவிடுங்கள்.

அவ்வளவுதான்.

புதியவர்களுக்கு வசதியாக இருக்கும் இவ்வழி, டோண்டுவின் கீழ்கண்ட வாசகங்களிலிருந்துதான் எனக்கு உதித்தது.

//அபு உமர் அவர்களே மன்னிக்கவும். ஹைப்பர்லிங் எப்படி கொடுப்பது என்று தெரியவில்லை. பதிவு போடும்போது அதற்கான ஏற்பாடுகள் இருப்பதால் பிரச்சினை இல்லை. பின்னூட்டம் போடும்போது அதை செயல்படுத்தத் தெரியவில்லை.//

- Abu Umar

dondu(#11168674346665545885) said...

பாலஸ்தீனியர்களின் கொடுஞ்செயலைப் பார்க்க இங்கு செல்லவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

இப்போது டெம்ப்ளேட் சரியாகி விட்டது அல்லவா? உதவிக்கு நன்றி. சம்பந்தப்பட்டப் பின்னூட்டத்தை இப்போது சரியாக்கி இட்டுள்ளேன். பழையதை அழித்து விட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Amar said...
This comment has been removed by a blog administrator.
Amar said...
This comment has been removed by a blog administrator.
G.Ragavan said...

ஒவ்வொரு ஊர்களிலும் ஒவ்வொரு பிரச்சனை. அதனால் ஒவ்வொரு விதமான எதிர் விளைவுகள். யூதர்கள் என்றாலே பாசிசவாதிகள் என்று தோன்றும் படியாக இருக்கிறது உங்கள் தலைப்பு. நமது நாட்டிலும் கூட குண்டு வெடிக்கிறது. அதற்காக ஒரு குறிப்பிட்ட இனத்தைக் குறித்துச் சொல்வது முறையாகாது என்று தோன்றுகிறது.

நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள்? சில இஸ்ரேலியச் சிப்பாய்கள்ள் ஒருவனை வதைத்திருக்கின்றார்கள். அதற்கு இப்படி ஒரு தலைப்பு. இதை எப்படிப் புரிந்து கொள்வது? யூதர்கள் என்றாலே பாசிசவாதிகள் என்றா?