Monday, August 01, 2005

சவுதி மன்னர் ஃபஹத் காலமானார்

சவுதி அரேபியாவின் மன்னர் ஃபஹத் இப்னு அப்துல் அஜீஸ் அல்-சவூத் காலாமனார். மன்னர் ஃபஹத் நோயுற்று இருந்ததால் இளவரசர் அப்துல்லாஹ் இப்னு அப்துல் அஜீஸ் அல்-சவூத் ஆட்சி பொறுப்பை கவனித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

15 comments:

Abu Umar said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அவரை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக.

சுட்டுவிரல் said...

உங்களின் சுறுசுறுப்பான பதிவுக்கு பாராட்டுக்கள்.
செய்தியைக் கேட்டறிந்து உடன் தமிழ்மணம் திறக்க உங்கள் பதிவு அங்கே!

'மர்ஹூம்' அவர்கள். அதன் பொருள் படி'இறைஅருள் பெற்றவர்' ஆக பிரார்த்தனைகள்.

contivity said...

உங்கள் பதிவு பார்த்து தான் செய்தி தெரிந்து கொண்டேன்.. அவருக்காகப் பிரார்த்திப்போம்

நல்லடியார் said...

சவூதியின் மன்னர் என்பதை விட "இரண்டு புனித இறையில்லங்களின் பராமரிப்பாளர்" என சொல்லிக் கொண்ட மன்னர் ஃபஹத் அவர்கள், உலகம் முழுதும் இலவசமாக குர்ஆனை மொழி பெயர்ப்புடன் அல் ஃபஹத் அறக்கட்டளை மூலம் வெளியிட்டார்கள்.

அல்லாஹ் அவர்களின் நல்ல செயல்களை பொறுந்திக் கொள்வானாக.

அல்லாஹ்விடமிருந்தே வந்தோம், மீண்டும் அவனிடமே மீள்பவர்களாக இருக்கிறோம்.

அபூ முஹை said...

அப்துல் அஜீஸின் மகன் ஃபஹதுக்கு அல்லாஹ் அருள்புரிவானாக!

நல்லடியார் said...

மன்னர் இறப்புக்கு தேசிய விடுமுறை இல்லையாமே! உண்மையா?

அப்துல் குத்தூஸ் said...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்.

மன்னர் இறந்த செய்தி மக்கள் அனைவரையும் வருத்தப்பட வைத்தது மற்றும் அல்லாஹ்விடம் அவருக்காக பிரார்த்தனை செய்யவும் வைத்தது. ஆனால் அன்னாரின் இறப்பு யாரையும் கலங்க வைக்க வில்லை. மிகவும் அமைதியாக காட்சி அளிக்கின்றது. மக்கள் அனைவரும் அவர்களுடைய அன்றாட வாழ்கை ஓட்டத்தில் ஓடியவர்களாகவே உள்ளனர். மன்னரின் இறப்பை ஒரு அறிவிப்பாக அறிவித்துவிட்டு தங்களின் தொழிலில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டனர்.

மன்னரின் இறப்பின் பொருட்டால் நாட்டின் எதிர்காலம் என்ன ஆகும் என்ற கேள்வி யாருக்கும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

அன்னாரின் இறப்பிற்காக எந்த ஒரு தொழிலகமும் விடுமுறை அறிவித்ததாகத் தெரியவில்லை.

''மன்னரே ஆனாலும் இறப்பு ஒரு நாள் அனைவருக்கும் வந்தே தீரும்''

நிச்சயமாக நாமே உயிர் கொடுக்கிறோம் நாமே மரிக்கும்படிச் செய்கிறோம் - அன்றியும் நம்மிடமே (எல்லோரும்) மீண்டு வர வேண்டியிருக்கிறது. (திருமறைக் குர்ஆன் 50:43 )

நல்லடியார் said...

எதற்கெடுத்தாலும் சவூதி..சவூதி என மேற்கோள் காட்டும் அறிவுஜீவிகள், நேசத்திற்குறிய மன்னரே இறந்தாலும் சாதாரண 'மைய்யித்' தான் என தேசிய விடுமுறை அறிவிக்காத முன்மாதிரியை அறியட்டும்.

அழகப்பன் said...

இஸ்லாம் மன்னராட்சி முறையை ஏற்றுக் கொள்ளவில்லை. எனினும், இதுவரை சவூதி மன்னர்கள் அரசியலமைப்பு தவிர மற்ற ஏனைய பெரும்பாலான துறைகளில் இஸ்லாமிய அடிப்படையிலேயே ஆட்சி செய்து வருகின்றனர் என்பதறிந்து மகிழ்வடைகிறேன்.

மன்னர் இறந்ததற்காக தேசிய விடுமுறை அறிவிக்கப்படாதது மட்டுமின்றி, அவர் அடக்கம் செய்யவிருப்பதும் பொது அடக்கவிடத்தில்தான் என்பது சகோதரத்துவம் பேசும் அனைவரும் போற்றக்கூடிய விஷயமாகும். அதுமட்டுமின்றி அவரது உடல் சாதாரண ஆம்புலன்ஸ் (தமிழறிஞர்கள் தமிழ்படுத்தவும்) வண்டியில் ஏற்றப்பட்டு இராணுவ அணிவகுப்பு எதுவுமின்றி பள்ளிக்கு கொண்டு செல்லப்படவிருக்கிறது.

அரச குடும்பத்தினர் மட்டுமின்றி பொதுமக்களும் கலந்து கொள்ளலாம். ஆனால் எவ்வித கோஷங்களோ, கொடிகளை உயர்த்திப் பிடிப்பதோ கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இறந்துவிட்ட மன்னரின் பாவங்களை எல்லாம் வல்ல இறைவன் மன்னிப்பதுடன், உள்ளம் இறந்து போய் இருக்கும் மக்களின் உள்ளங்கள் உயிர் பெறச்செய்வானாக.

http://english.aljazeera.net/NR/exeres/514555A8-18C9-4739-B45B-5E359E2A6C66.htm

அழகப்பன் said...

அப்துல் குத்தூஸ் அவர்களின் பார்வைக்கு...

நான் சென்ற ஆண்டு இஸ்லாத்தில் இணைந்தேன். இஸ்லாம் குறித்து உங்களிடம் சில விளக்கங்கள் பெற வேண்டும். என்னுடைய மின் அஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்.
adiraialagappan@gmail.com

அப்துல் குத்தூஸ் said...

//* azhagappan said...
அப்துல் குத்தூஸ் அவர்களின் பார்வைக்கு...

நான் சென்ற ஆண்டு இஸ்லாத்தில் இணைந்தேன். இஸ்லாம் குறித்து உங்களிடம் சில விளக்கங்கள் பெற வேண்டும். என்னுடைய மின் அஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். *//

சகோதரர் அழகப்பன் அவர்களுக்கு நான் உங்களின் மின் அஞ்சலுக்கு என்னுடைய மின் அஞ்சலை அனுப்பியுள்ளேன். என்னுடைய அஞ்சலின் மூலம் என்னிடம் தொடர்பு கொள்ளலாம். நன்றி.

Abu Umar said...

நேற்று (02 ஆகஸ்ட் 2005) அஸர் தொழுகைக்குப் பிறகு மன்னர் ஃபஹத் அவர்களின் ஜனாஸா (இறந்த உடல்) பொது அடக்கஸ்தளத்தில் அடக்கம் செய்யப்பட்டது. புருணை சுல்தான் உட்பட பல முஸ்லிம் நாட்டு தலைவர்களும் வந்திருந்தார்கள்.

ஜோர்டான் நாட்டு மன்னர் ஹுசைன் இறுதி ஊர்வலத்தையும் இந்நிகழ்ச்சியையும் கண்டவர்களுக்கு பல வேற்றுமைகள் புரிந்திருக்கும்.

அதிரைக்காரன் said...
This comment has been removed by a blog administrator.
அதிரைக்காரன் said...

ஐக்கிய அரபு அமீரக மன்னர் ஷேக் ஜயாதின் கல்லறை Vs. உலகின் மூன்றாவது பணக்காரராக இருந்த சவூதி மன்னர் ஃபஹத்தின் மண்ணறை

Unknown said...

very good example of simplicity as following Prophet Mohamed (S.A.W)