Tuesday, September 27, 2005

இந்தியாவில் இஸ்லாம்-3

ஆண்டு - தேதிகளில் காணப்படும் குளறுபடிகள்

இன்று நம் கைகளில் இருக்கும் வரலாற்று நூல்களில் காணப்படும் ஆண்டு தேதிகள் உண்மையானவையல்ல. வரலாற்று நூல்களில் கி.பி.10-ம் நூற்றாண்டிற்கு முன்புள்ள அனைத்தும் ஜோதிட முறையில் கணித்து எழுதப்பட்டவை. ஒவ்வொரு அரசர்களும் ஆட்சி பீடத்தில் ஏறும் நாள் முதல் ஆட்சி ஒழியும் நாள்வரையிலான ஆண்டுகள்தான் அன்று கணக்கிடப்பட்டு வந்தன. தொடர்ச்சியான ஒரு ஆண்டு கி.பி.10-வது நூற்றாண்டுக்கு முன்புவரை நடைமுறையில் இல்லாமல் இருந்தது. கீழே தந்துள்ள தகவல்கள் இதை உறுதிப்படுத்துகின்றன.

சோழநாட்டு அரசன், முதல் ராஜராஜன் காலத்தில் குமரி மாவட்டத்திலுள்ள சுசீந்திரம் என்ற ஊரில் ஒரு பாறை மீது பொறிக்கப்பட்ட கல்வெட்டில் கீழ்வருமாறு பொறிக்கப்பட்டுள்ளது:-

5 "............" செழியரை தேசுகொள்கோ இராசராச -

6 கேசரின் மர்க்குயாண்டு பதினைஞ்சு இவ்வாண்டு கன்னி நாயிற்று

முப்பதாந் (தேதி) செவ்வாய்கிழமை .........." என்று காணப்படுகிறது. இங்கு எந்த ஆண்டு பொறிக்கப்பட்டது என்று குறிப்பிடவில்லை. அவர்(அரசர்) ஆட்சிபீடம் ஏறிய பதினைந்தாவது ஆண்டில் எழுதிக் கொடுத்தது என்று மட்டுமே காணப்படுகிறது.

"This date has been Calculated and Verified by Prof.Kielhorn and the result published in the Epigraphia indica, Volume 5th P.48, as Tuesday 29th August 999 A.D."

அந்த கல்வெட்டில் காணப்படும் வாசகத்தை பேராசிரியர் கீல்ஹான் என்பவர் கணித்து கி.பி.999 ஆகஸ்டு கன்னி மாதம் 29 தேதி செவ்வாய்க்கிழமை என்ற முடிவுக்கு வந்ததாக திரு. டி.ஏ. கோபிநாத ராவ் குறிப்பிடுகிறார்.

ஜோதிட முறையிலும், அல்லாமலும் கணித்து எழுதப்பட்ட ஆண்டுகளே வரலாற்றில் நாம் வாசிக்கும் ஆண்டுகள். இவை உண்மையானவை என்று கூற முடியாது. இருந்தாலும் உண்மை என்று நம்பித்தான் தீரவேண்டும்.

ஜோதிட மூலமும் அல்லாமலும் கணித்து எழுதிய ஆண்டுகளில் எவ்வளவோ தவறுகள் நடந்ததுண்டு. கேரளாவில் 'திருவல்லம்' என்ற ஊரில் உள்ள ஒரு கல்வெட்டில் காணப்படும் ஆண்டின் நடுவிலுள்ள எண் தெளிவில்லாமல் இருந்தது. இதை 319வது ஆண்டு என்று பேராசிரியர் சுந்தரம்பிள்ளை குறிப்பிட்டார். 399 என்று கே.வி. சுப்பிரமணிய ஐயர் அதை திருத்தம் செய்தார்.

இதில் எது சரி? எது தவறு? 80 ஆண்டுகளுடை இடைவெளி. பிறகு அக்கல்வெட்டில் உள்ள வாசகம் ஒன்றை எடுத்து சோதிட அடிப்படையில் கணக்கிட்டனர். "விருச்சிகத்தில் வியாழன் நின்றயாண்டு மகர ஞாயிற்று செய்த காரியமிது" என்று சொல்லில் வரும் வியாழனுடைய நிலையை கணக்கிட்டு 399 என்ற முடிவுக்கு வந்தனர். (பேராசிரியர் இளம்குளம் குஞ்சன் பிள்ளை - 'கேரள வரலாற்றின் இருள் சூழ்ந்த ஏடுகள்' பக்கம்-139.)

இப்படி பெரும்பான்மையான ஆண்டுகள் எல்லாம் ஜோதிட முறையில் கணித்து எழுதப்பட்ட ஆண்டுகளேயன்றி உண்மையான ஆண்டுகள் அல்ல என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இதுபோன்று சில ஊர் பெயர்களும் சில மன்னர்களுடைய பெயர்களும் திட்டவட்டமாக உறுதி செய்யப்படாதவை.

ஒரே மன்னரை பல பெயர்களில் குறிப்பிடுவதையும் அதே மன்னர் வேறுபட்ட காலங்களில் ஆட்சி புரிந்து வந்ததாகக் குறிப்பிடுவதையும் நாம் பார்க்க முடிகிறது. ஆகையால் ஜோதிட முறையில் கணித்து எழுதப்பட்ட ஆண்டுகளை உண்மை என நம்பி நாம் வரலாறுகளை அணுகுவது சரியாகப்படவில்லை.

கொல்லம் ஆண்டு (A.D.825) துவங்குவதற்கு முன்னும் ஓர் சில நூற்றாண்டுகளுக்குப் பிறகும் தொடர்ச்சியான ஓர் ஆண்டு பண்டைய தமிழ்நாட்டில் நடைமுறையில் இல்லாமலிருந்ததுதான் இந்தக் குழப்ப நிலைகளுக்கு அடிப்படைக் காரணம்.

கிறிஸ்தவ ஆண்டையோ, அதற்குப் பின் வந்த கொல்லம் ஆண்டையோ எந்த அரசரும் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஏதேனும் அரசர் பதவி ஏற்றது முதல் அவர் பதவி விட்டு இறங்கியது வரையிலான வருடங்களை நடைமுறைப்படுத்தினர். இதனால்தான் 10-வது நூற்றாண்டு முன் உள்ள ஆண்டுகளை சரியான முறையில் குறிப்பிட்டு எழுத முடியாமல் போய் விட்டது.

"After doing all this the perumal left the sandy island of Tirunavayi with the people of the veda and descended from a ship at kodungallur harbour and entered the palace of kodungallur with a view to proceed to Mecca (Cheramran embarked for Mecca with the people of veda) it was in the Kali Year(A.D.355)
(Malabar manuel by willian Logan, P.279, A.D.355)

இவ்வாறு 'கேரள உற்பத்தி' என்ற பண்டைக்கால கேரள வரலாற்று நூலில் குறிப்பிட்டிருப்பதாக லோகன் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார். கலி ஆண்டை கணக்கிட்டு 'கேரளா உற்பத்தி' நூலாசிரியர் ஏ.டி.355-ல் சேரமான் பெருமாள் என்ற சேரநாட்டு அரசர் இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொள்வதற்காக கொடுங்கல்லூர் துறைமுகத்திலிருந்து கப்பலேறி பயணமானார் என்று குறிப்பிட்டுள்ளார்.

கலி ஆண்டிற்கு சமமான கி.பி.ஆண்டை கணக்கிட்டபோது தவறு நடந்ததாகத் தெரிகிறது. கி.பி.579-ல் தானே பெருமானார்(ஸல்) அவர்கள் பிறந்தார்கள். நபி பெருமானார்(ஸல்) அவர்கள் பிறப்பதற்கும் 224 ஆண்டுகளுக்கு முன் சேரமான் பெருமாள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்காக மக்கா பயணமானார் என்று குறிப்பிடும் ஆண்டில் எவ்வளவு தவறுகள் வந்துள்ளது என்று புலனாகிறது அல்லவா.

இதே போன்றுதான் நபிகள் பெருமானார்(ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்திருந்த பள்ளி பாண பெருமாள் என்று சேரமன்னர் முதற்கொண்டு முதல் சேர வம்சத்தின் கடைசி பெருமாளான சேரமான் பெருமாள் நாயனார் வரையிலான நீண்ட இரண்டு நூற்றாண்டுகளில் வருடங்களில் பல குளறுபடிகள் காணப்படுகின்றன.

இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் தொடர்ச்சியான ஒரு ஆண்டை பின்பற்றி வராததும், இந்த நூற்றாண்டுகளை இருண்ட காலமென உதாசீனப்டுத்தியதுமேயாகும்.

தொடரும்..

மக்கள் உரிமை வாரஇதழ் : செப்டம்பர் 09 - 15, 2005

Monday, September 26, 2005

குஜராத்: திட்டமிட்ட வெறியாட்டம் - 7

முஸ்லிம்களை தீயிட்டு கொளுத்திய கயவர்கள் எந்த வித சலனமும் இல்லாது அமைதியாக திரும்ப சென்றனர், தங்களுடைய வேலை முடிந்த திருப்தியில். எரிந்து கொண்டிருந்த முஸ்லிம்களின் கதறல் இவர்களை இம்மி அளவும் கரைத்திட வில்லை. மாறாக எரிவதை கண்டு ரசித்தார்கள். இவர்களின் கல் மனதுக்கு இன்னொரு சான்றாக அமைந்தது சாலியா பீவி என்ற பெண்ணுக்கு இவர்கள் செய்த கொடுமை.

முஸ்லிம் பெண்களே முக்கிய இலக்கு

சிலுவை போரின் போது, கிருஸ்தவ மதவெறியர்கள் தான் போகும் இடமெல்லாம் முஸ்லிம்களை கொலை செய்து கொண்டே சென்றார்கள். முழங்கால் அளவு ரத்தம் ஓடும் அளவுக்கு அப்பாவி முஸ்லிம்களையும், பெண்களையும், குழந்தைகளையும் கொலை செய்தார்கள். அவர்கள் கர்பிணி பெண்ணை கூட விட்டு வைக்கவில்லை. அவளின் வயிற்றில் உள்ளது ஆணா? பெண்ணா? என்று போட்டி வைத்து, அவளின் வயிற்றை கிழித்து, குழந்தையை வெளியே எடுத்து சுவரின் மேல் வீசியடித்து கொலை செய்தார்கள் அந்த கொடியவர்கள்.

காய்கறி சமைத்து கொண்டிருந்த ஒரு முஸ்லிம் தாயிடம், மாமிசம் கொண்டு வருகிறேன் என்று கூறி தெருவில் விளையாடி கொண்டிருந்த அந்த தாயின் பிள்ளைகளில் இளசாக தேர்வு செய்து, அதனை வெட்டி கூறு போட்டு அந்த தாயிடம் கொடுத்து சமைக்க செய்து தானும் உண்டு, அந்த தாயையும் உண்ணவைத்தார்கள் கொசோவோவில் செர்பிய வெறிபிடித்த கயவர்கள். ஈவு இரக்கமற்ற கொடியவர்கள்.

இதேபோன்று தான் பாகல்பூரில் 1979ல் நடந்த கலவரத்தில் ஒரு கர்பிணி பெண்ணை தண்டவாளத்தில் கிடத்தி வயிற்றில் கல்லால் அடித்தே கொன்றார்கள் இந்த பாசிஸ்ட்டுகள்.

இதையெல்லாம் விட கொடுமை குஜராத்தில் அரங்கேற்றப்பட்டது சாலியா பீவிக்கு. இவரும் ஒரு கர்பிணி பெண். தான் ஈன்றெடுக்க போகும் குழந்தையை நினைத்து பூரிப்பில் இருந்தாள். தன் குழந்தையை அப்படி வளர்க்க வேண்டும், இப்படி வளர்க்க வேண்டும் என்று கற்பனை கோட்டைகளை கட்டி கொண்டிருந்த வேளை, பாசிஸ கயவர்கள் இவளை தர தரவென்று இழுத்து சென்றனர். கத்தினாள், கதறினாள் எந்த பிரயோஜனமும் இல்லை. அவளை காப்பாற்றுவதற்கும் யாருமில்லை. ரத்தவெறி பிடித்த மிருகங்கள், தன் பசியை தீர்த்து கொண்டது. கர்பிணியான சாலியா பீவியின் வயிற்றை கிழித்து, குழந்தையை எடுத்து எரிந்த கொண்டிருக்கும் தீயில் வீசியெறிந்தார்கள். உலகத்தையும், அதிலுள்ள மதவெறியர்களின் மிருகச்செயலையும் கண்டிராத, கேட்டிராத அந்த பச்சிளம் குழந்தை எரிந்து சாம்பலானது. கர்பிணியின் வயிற்றை கிழிக்கவும், அதிலிருந்து குழந்தையை எடுக்கவும், அதனை நெருப்பிட்டு கொளுத்தவும் நிச்சயமாக மனிதர்களால் முடியவே முடியாது. வயிறு பிளக்கப்பட்டு அந்த பெண் துடித்து துடித்து செத்த காட்சி இவர்களின் மனதை கொஞ்சமும் இளகச்செய்யவில்லை. இவர்களின் இதயம் கருங்கல்லைவிட கடினமானது என்பதை நிருபித்தார்கள்.

Ref:
ரியாஸ் அஹ்மத் அவர்களின் குஜராத் கலவர தொகுப்பு

(குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த திட்டமிடப்பட்ட மனித உரிமை மீறலை மூடி மறைத்திட நினைக்கும் பாசிச சங்பரிவார கூட்டத்தினருக்கு எதிரான தொடர்)

Thursday, September 22, 2005

இந்தியாவில் இஸ்லாம்-2

கவனக்குறைவால் அழிந்துப்போன விலைமதிப்பற்ற ஆவணங்கள்

சங்க காலத்துக்குப் பின்னர் கி.பி. 6, 7, 8 நூற்றாண்டுகள் தமிழகத்தையும், கேரளாவையும் பொறுத்தவரையில் வரலாற்றில் இருண்ட காலமாகும்(?) "சங்க காலத்தைப் பின்தொடருவது வரலாற்று ரீதியாகப் பார்ப்பின் விடியாத இரவு. தொடர்ந்து மூன்று நூற்றாண்டுகளுக்கு அதிகமான காலத்தைப் பற்றி நமக்கு எதுவும் அறிய வாய்ப்பில்லை" என்று திரு. கே.ஏ. நீககண்ட சாஸ்திரி தனது தென்னிந்திய வரலாறு (மலையாள மொழிபெயர்ப்பு) நூலில் பக்கம் 159-ல் குறிப்பிடுகிறார்.

இங்கு இஸ்லாத்தின் தோற்றமும் வளர்ச்சியும் இம்மூன்று இருண்ட நூற்றாண்டுகளுக்குள் அடங்குவதால் இன்றைய வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்குத் தேவையான தடயங்கள் எதுவும் கிடைக்க வாய்ப்பின்றி தவிக்கின்றனர்.

தென்னிந்தியாவிலுள்ள வல்லரசுகளான சாளுக்கியர், பல்லவர், பாண்டியர், இராஷ்ட்டிகூடர் போன்றவர்கள் கேரளா (சேரநாடு) மீது படையெடுத்த குறிப்புகளில் காணப்படும் சில செய்திகள் இந்த இருண்ட காலத்தைப் பற்றி நமக்குச் சில அறிவுகள் புகட்டுகின்றன.

நம்மைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமான இம்மூன்று நூற்றாண்டுகளில் நிகழ்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சிகளை நாம் தெரிந்து கொள்வதற்கான கல்வெட்டுகளோ, இலக்கியங்களோ, செப்பேடுகளோ எதுவும் நம் பார்வைக்குக் கிடைக்காமல் போய்விட்டது துர்பாக்கியம் என்றே கூறவேண்டும்.

நிலைமை இவ்வாறிருக்க, எதை ஆதாரமாகக் கொண்டு "இந்த விடியாத இரவில்" நடந்த சரித்திரச் சிறப்புமிக்க உலகளாவிய உன்னதமான ஒரு மார்க்கம் நம்நாட்டிற்குள் முதன்முதலாக அடியெடுத்து வைத்த சுபமுகூர்த்தத்தைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும்? எதிர்வரும் தலைமுறையினருக்கு எடுத்துக் கூறுவது எவ்வாறு?

இந்தியாவின் வடபகுதி வாயிலாக முகமது இபுனுகாசிமையும், அவரைத் தொடர்ந்து வந்தவர்களையும் இந்தியாவை ஆக்கிரமிக்க வந்தவர்களாகச் சித்தரிப்பதற்குப் பெரும் சிரமம் மேற்கொண்டு பல பிறமொழி நூல்களைத் தேடிக் கண்டுபிடித்து, மொழியாக்கம் செய்து தங்கள் கற்பனைக்கேற்றவாறு இந்திய வரலாற்றைத்திறம்பட சிருஷ்டித்தவர்கள், இந்தியாவின் தென்பகுதியில் இஸ்லாம் தோன்றியது குறித்து சரிவர ஆராயாமலும், கவனம் செலுத்தாமலும் மவுனமாக இருந்து விட்டனர்.

இந்தியாவுக்குள் இஸ்லாம் ஆக்கிரமிப்பாளர்கள் உருவத்தில் அத்துமீறி நுழைந்தது என்ற அவர்களுடைய கூற்றைப் பொய்ப்பிக்கும்படி மேற்கு கடற்கரைப் பகுதிகளில் இஸ்லாம் அமைதியாகத் தோன்றிப் பரவிய உண்மையைத் தெரிந்த வெள்ளையர்களும் அவர்களுடைய வழித்தோன்றல்களான இந்திய வரலாற்று ஆசிரியர்களும் ஒளிமயமான இந்த மூன்று நூற்றாண்டுகளையும் வரலாற்றில் இருண்ட காலம் என்று சித்தரித்து உதாசீனம் செய்துவிட்டனர்.

மக்கள் மத்தியில் கருத்து வேற்றுமை எனும் படம் எடுக்கும் பாம்பை ஏவிவிட்டு தம் ஆட்சியை உறுதிப்படுத்த வெள்ளையர்கள் செய்த சதித்திட்டம்தான் இந்த உதாசீனம். இது பிற்காலத்தில் ஆராய்ச்சியாளர்களுக்குப் பல வரலாற்று நிஜங்களை ஆராய்ந்து அறியத்தடயங்கள் இல்லாமல் தடையாகிவிட்டது.

ஆனால் பெருமானார்(ஸல்) அவர்கள் காலத்தில் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் வருகைதந்த அரபி வணிகர்களும் இஸ்லாமிய பிரச்சாரகர்களும் தம் வருகைகளைக் குறிக்கும் சில ஆவணங்களை இங்கு விட்டுச் சென்றனர் என்பது உண்மையேயாகும். அவைகள் கேரளக் கடற்கரைப் பகுதிகளில் அன்று கட்டிய பள்ளிவாசல்களிலும் சில முக்கிய முஸ்லிம் பிரமுகர்களிடம் இருந்து வந்ததாகக் கூறப்படுகின்றன.

முஸ்லிம் மூதாதையர்களின் கவனக் குறைவாலும், அவற்றின் விலைமதிப்பு என்னவென்று அறியாததாலும் பலவும் அழிந்து போய்விட்டன. எஞ்சிய சிலவற்றை போர்ச்சுக்கீசியருடைய படையெடுப்பின் போது முஸ்லிம்களைக் கூட்டுக்கொலை செய்த வேளையிலும் பழங்கால மஸ்ஜித்களை இடித்துத் தரைமட்டமாக்கிய நாசச் செயலிலும் காணாமற் போய்விட்டன.

சில ஆவணங்கள் இன்னும் எஞ்சியுள்ளதாகத் தெரிய வருகிறது. அவைகள் ஆராய்ச்சியாளர்களுக்குப் பயனளிக்காதவாறு சில சுயநலக் கும்பல்களிடம் சிக்கிவிட்டதாக அறியமுடிகிறது.

சமீபகாலம் வரையிலும் தேங்காய் பட்டினம் மாலிக் இபுனுதினார் பள்ளிவாசலில் ஒரு பழங்கால அரபிக் கையெழுத்துச் சுவடி இருந்து வந்தது. இப்பணிக்காக அந்த அரபிக் கையெழுத்துப் பிரதியைப் பார்வையிட விரும்பிச் சென்ற போது எங்கோ தவறிவிட்டதாக அங்கு அப்போது இருந்த பேஷ் இமாம் அவர்கள் பதிலளித்தார்கள். நண்பர் பேராசிரியர் திருமலர் எம்.எம். மீரான் பிள்ளை அவர்களிடம் அக்கையெழுத்துச் சுவடியில் காணப்படும் சில ஆண்டுகளும் இடங்களும் அடங்கிய சிறு குறிப்பு ஒன்று உள்ளது. அதை ஒரு ஆவணமாக மேற்கோள் காட்ட முடியாத நிலை.

இப்படிப்பட்ட வரலாற்று ஆவணங்களை நம்மவர்கள் இழந்துவிட்ட காரணத்தினால் வரலாற்று உண்மைகளை அறிய முற்படுவோருக்கு ஏமாற்றம்தான் எஞ்சுகிறது.

சேரமான் பெருமாள் ஹிஜ்ரி ஆண்டு 10-ல் (ஏ.டி.632) செஹர்முஹல்லாவில் இறைவனடி சேர்ந்ததைக் குறிக்கும் மிகப்பழமையான அரபுக் கையெழுத்துப் பிரதி ஒன்று கேரளாவில் வளர்ப்பட்டணம் காசி இம்பிச்சிக்கோயா என்ற மார்க்க அறிஞரிடம் இருப்பதாக மறைந்த வரலாற்று ஆசிரியர் பேராசிரியர் ஜனாப் பி.ஏ. செய்யது முஹம்மது என்பவர் "முகல் சாம்ராஜ்ஜியத்தின் ஊடே ஒரு பயணம்" என்ற வரலாற்றுக் கட்டுரைத் தொகுப்பு நூலில் (பக்கம் 103) குறிப்பிட்டுள்ளார்.

முக்கியமான இந்த ஆவணம் இன்று யாரிடமுள்ளது என்று யாருக்குத்தான் தெரியும்? நம்பகமான பல வரலாற்று ஆவணங்கள் நம்மவர்களிடமிருந்தும் நமக்கு பயனற்றதாகப் போய்விட்ட ஏக்கத்தோடு பிற வரலாற்று ஆசிரியர்கள் எழுதிவைத்த வரலாற்று வரிகளுக்கிடையில் ஒளிந்து கிடக்கும் உண்மைகளைத்தேடி கண்டுபிடிக்கவேண்டிய சிரமம் மிகுந்த பணிமை இன்றைய வரலாற்று ஆசிரியர்கள் மேற்கொள்கின்றனர்.

1857-க்குப் பின் இன்று வரையிலும் எழுதப்பட்டுள்ள வரலாற்று நூல்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறிக் கிடக்கின்ற சில வரலாற்றுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு பெருமானார்(ஸல்) அவர்கள் காலத்திலேயே இஸ்லாம் இந்தியாவில் மேற்கு கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் தோன்றிவிட்டது என்ற உண்மையை அடுத்த இதழில் ஆராய்வோம்.

தொடரும்..

மக்கள் உரிமை வாரஇதழ் : செப்டம்பர் 02 - 08, 2005

குஜராத்: திட்டமிட்ட வெறியாட்டம் - 6

2002க்கு முன் நடந்த கலவரங்களினால் பெரும்பாலான முஸ்லிம்கள் இப்பவும் தலை நிமிர முடியாமல், அடிமைகளை போல வாழ்கின்றனர். மீதமுள்ளவர்களையும் அழித்து அவர்களின் சொத்துகளையும் அழித்து அடிமையின் நிலைக்கு கொண்டு செல்ல மீண்டும் ஒரு கலவரம் வெடித்தது. அது தான் 2002 கலவரம்.

இந்த கலவரத்தில், இதற்கு முன் எப்போதும் நடந்திராத அளவுக்கு கொலைகளும், கொள்ளைகளும், கற்பழிப்புகளும் நடந்தது. மதவெறிபிடித்த இந்துக்கள் வெறிபிடித்த மிருகத்தை விட மிகமோசமாக நடந்து கொண்டனர். 'இவர்களெல்லாம் மனிதர்கள் தானா? இவர்களின் நெஞ்சில் கொங்சமும் ஈரம் இல்லையா? இவர்களின் இதயம் என்ன கருங்கல்லினால் ஆனதா? தான் எந்த ஜாதி என்று தனக்கே தெரியாத பிஞ்சுக்களை கூட விட்டு வைக்கவில்லையே இந்த ரத்த வெறி பிடித்த அரக்கர்கள்' என்று கூறும் அளவுக்கு இவர்களின் அடாவடித்தனம் இருந்ததென்றால், இவர்கள் இதையெல்லாம் ஏன் செய்கிறார்கள்? இதனால் இவர்கள் சாதிக்க நினைப்பதென்ன? என்று முஸ்லிம்களே உங்களை நீங்களே என்றேனும் கேட்டதுண்டா?

கையில் சூலாயுதம் போன்ற கத்தி, வீச்சறிவாள், நீண்ட கத்தி, நெற்றியில் காவி நிற துணி, கண்களில் மதவெறியுடன் ரத்தத்தை தேடி – முஸ்லிமின் ரத்தத்தை தேடி அலைந்தனர் இந்து மத வெறிபிடித்த கயவர்கள். கையில் கிடைத்தவர்களை எல்லாம் துண்டு துண்டாக வெட்டிப்போட்டனர். ரோடெங்கும் முஸ்லிம்களின் உடல் அங்கொன்றும் இங்கொன்றுமாக. தான் கொண்டு வந்த பெட்ரோலை முஸ்லிம்களின் மேல் ஊற்றி நெருப்பிட்டு கொளுத்தினார்கள். முஸ்லிம் சகோதரன் 'லாயிலாஹா இல்லல்லாஹ்' என்று சொன்ன ஒரே காரணத்திற்காக கதறி, கதறி கருகி சாம்பலானான். வீட்டை பூட்டி தண்ணீரை நிரப்பி மின்சாரம் வைத்து கொன்றார்கள். அவர்கள் ஒரு இந்துவாக இருந்திருந்தால் இன்று உல்லாசமாக இருந்திருப்பார்கள். இப்படி நாம் இடிந்த சகோதர, சகோதரிகள் ஒன்றல்ல, இரண்டல்ல கிட்டதட்ட 15,000த்திற்கும் மேல்.

அவர்கள் பட்ட துன்பங்கள் எழுதினால் ஏடு தாங்காது. அவர்கள் முஸ்லிம் என்ற காரணத்தினால் எத்தனை துன்பங்களை அனுபவித்தனர்.

பாத்திமா பீவி என்றொரு பெண். இந்து மத வெறி பிடித்த மிருகங்களிடமிருந்து தப்பி பிழைத்து ஓடி வந்தார். ஓடி வந்த இவருக்கு அங்கிருந்த போக்குவரத்து தொழிலாளர்களின் குடியிருப்பு அடைக்கலம் கொடுத்தது. தங்சம் புகுந்தார். இவரை போல பல பெண்களும் தங்களின் உயிரை கையில் பிடித்து கொண்டு ஏற்கனவே அங்கு தங்சம் புகுந்திருந்தனர். அப்பா ஒரு வழியாக பிழைத்தோம் என்று பெரு மூச்சுவிட்ட நேரம், அங்கே காவல் துறையினர் வந்தார்கள். எல்லோரையும் 'இது நீங்கள் மரணிக்க வேண்டிய இரவு' கூறி இழுத்து சென்றார்கள். குடியிருப்பில் இருந்தவர்கள் காவல் துறையினருக்கு மண்ணெண்ணை, மற்றும் எரிபொருள்களை கொடுத்துதவினார்கள். அந்த எரிபொருள்களால் முஸ்லிம்களை முதலில் குளிக்க வைத்தார்கள். பின்னர் அவர்களை எல்லாம் வேக வைத்தார்கள் காவல் துறையினர். பரிதாப முஸ்லிம்கள் எரிந்து சாம்பலானார்கள். எரித்தவர்கள் பாத்திமா பீவி மறைந்திருந்ததை கண்டு கொள்ளவில்லை. சக முஸ்லிம்கள் தன் கண் முன்னால் எரிந்து, வெந்து சாம்பலாகியதை கண்டு பாத்திமா பீவியின் உள்ளம் துடித்தது. கண்கள் தாரை தாரையாய் கண்ணீர் வடித்து.


Ref:
ரியாஸ் அஹ்மத் அவர்களின் குஜராத் கலவர தொகுப்பு

(குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த திட்டமிடப்பட்ட மனித உரிமை மீறலை மூடி மறைத்திட நினைக்கும் பாசிச சங்பரிவார கூட்டத்தினருக்கு எதிரான தொடர்)

Monday, September 19, 2005

இந்தியாவில் இஸ்லாம்-1

புதிய வரலாற்றுத் தொடர் - தோப்பில் முஹம்மது மீரான்

தோப்பில் முஹம்மது மீரான் அவர்கள் நாடறிந்த நல்ல சிறந்த எழுத்தாளர், பிரபல நாவலாசிரியர். தோப்பில் மீரான் எழுதிய நாவல்கள்-புதினங்கள், பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கான வாசகர்களால் பாராட்டப்பட்டவைகளாகும்.

'ஒரு கடலோர கிராமத்தின் கதை' 'கூனன் தோப்பு' 'தங்கராசு' இவைகள் மீரானின் சிறந்த படைப்புகள்.

தோப்பில் மீரான் தனது எழுத்துப்பணிகளை நாவலாசிரியர் என்ற அளவில் நிறுத்திக் கொள்ளவில்லை. அவர் வரலாற்று கட்டுரைகளையும் வடிவமைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அவருடன் நானும் பங்குக் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. அந்த நிகழ்ச்சியில் தனது உரையில் கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் முன்பு நடத்தி வந்த 'உங்கள் தூதுவன்' மாத இதழில் தான் எழுதிய வரலாற்றுக் கட்டுரைகளை நினைவு கூர்ந்து பேசினார் தோப்பில் மீரான். அந்த உரையை கேட்ட நான் நீங்கள் இந்தியாவில் இஸ்லாம் தோன்றிய வரலாறு தொடரை தமிழகத்தில் வரும் முஸ்லிம் தமிழ் இதழ்களில் அதிகம் விற்பனையாகும் 'மக்கள் உரிமை' இதழில் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அதன் பயனாகவே இந்த இதழில் அந்த தொடர் ஆரம்பமாகிறது.

இந்தியாவில் இஸ்லாம் தோன்றிய வரலாறு என்று இப்புதிய வரலாற்றுத் தொடரில் வரலாற்றில் மறைக்கப்பட்ட பல உண்மைச் சம்பவங்களை அறிய வேண்டிய அரிய செய்திகளை கல்வெட்டுகள் போன்ற வரலாற்றுச் சான்றுகளுடன் இக்கட்டுரை தொடரில் வழங்க உள்ளார் தோப்பில் மீரான் அவர்கள்.

- பேராசிரியர்: எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், வெளியீட்டாளர்

இந்தியாவில் இஸ்லாம் மார்க்கம் பரவியதைப் பற்றி வரலாற்று அறிஞர்கள் பலரும் பற்பல கருத்துக்களை வெளியிடுகின்றனர். கி.பி.711-ல் முகமது இபுனுகாசிம், சிந்து வழியாகப் படையெடுத்து வந்த பிறகுதான் இஸ்லாம் இங்கு பரவியது என்றும், நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலத்திலேயே தென் இந்தியாவில் மேற்கு, கிழக்கு கடற்கரைப்பகுதிகளில் ஏற்கனவே இஸ்லாம் தோன்றிவிட்டது எனவும் பலவாறாகச் சொல்லப்படுகிறது.

இதில் எது உண்மை, எது பொய் என்று வரலாறு ஆசிரியர்கள் எனக் கூறப்படுபவர்கள் யாருமே திட்டவட்டமாகத் தங்கள் முடிவைத் தெரியப்படுத்தியதாகத் தெரியவில்லை. சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு வரலாற்றில் சில குளறுபடிகள் ஊடுருவியதால் உண்மைகளை அதன் நிஜநிலையில் தெரிந்து கொள்ளச் சிரமங்கள் பல ஏற்படுகின்றன.

தென்னகத்தின் மேற்கு, கிழக்கு கடலோரப் பகுதிகளில்தான் முதன்முதலாக இந்தியாவில் இஸ்லாம் தோன்றியது எனக் காட்டுவதற்கான அடிப்படை ஆவணங்கள் எதையுமே அதிகாரப்பூர்வமான நமது வரலாற்று விற்பன்னர்கள் யாரும் மேற்கோள் காட்டவில்லை.

ஆதாரம் எதுவுமின்றி மொட்டையாக வடபகுதியில் தோன்றுவதற்கு முன்மேற்கு கடலோரப் பகுதிகளில் இஸ்லாம் பரவியதாகக் கூறி முடிக்கின்றனர். ஆதாரமற்ற இக்கூற்றை சிலர் மறுக்கின்றனர். முகம்மது இப்னுகாசிம் சிந்து மார்க்கமாக கூரிய வாளேந்தி வந்து இரத்தம் சொட்டச் சொட்ட இஸ்லாத்தைப் பரப்பினார் என்று உறுதிப்படுத்த சில ஆவணங்களை முன்வைக்கின்றனர்.

சில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பாக கேரள மாநிலத்தைச் சார்ந்தவர்கள் மலபார் கடற்கரை வாயிலாகத்தான் முதன்முதலாக இஸ்லாம் இந்தியாவில் தோன்றியது என்று கூறுகின்றனர். அதற்குப் பழங்கால அரபி நாணயங்கள் சிலவற்றையும், சில பள்ளிவாசல்களில் பொறிக்கப்பட்டுள்ள ஹிஜ்ரி ஆண்டுக் குறிப்புகளையும் ஆதாரம் காட்டுகின்றனர்.

அந்த ஹிஜ்ரி ஆண்டுகள் உண்மையானவைகளல்ல என்று வேறு சில வரலாற்று ஆசிரியர்கள் மறுக்கின்றனர். இவர்கள் தம் மறுப்பை உண்மைப்படுத்துவதற்காக சில பலகீனமான ஆவணங்களையும் காட்டுகின்றனர்.

இந்தியாவில் இஸ்லாம் தோன்றியதைப் பற்றியும், அது தென்னகத்தின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் தான் முதலில் தோன்றியது என்றும் வாதாடுபவர்களும், எதிர்வாதம் புரிபவர்களும் "இந்திய வரலாற்று ஆசிரியர்கள்" என்ற அந்தஸ்தைப் பெறாதவர்கள். அதனால் இவர்களுடைய கருத்துக்களை வரலாற்றுப் புலிகள் யாரும் ஏற்றுக் கொள்வதாகத் தெரியவில்லை. ஆனால் அந்தஸ்து பெற்ற வரலாற்று ஆசிரியர்கள் இதைப்பற்றிய உண்மையைத் தெரிந்து கொள்ளவோ, தெரிந்தவற்றை வெளியே சொல்லவோ தயங்குகின்றனர்.

வெள்ளையர்கள் கோடிட்டுக் காட்டிய, தடம் நோக்கி நடந்த நம் வரலாற்று ஆசிரியர்களானாலும் சரி, மேல்நாட்டு ஆசிரியர்களானாலும் சரி, இந்திய வரலாற்றுப் பக்கங்கள் தென்னகத்திற்கு குறிப்பாக கேரளத்திற்கும், தமிழகத்திற்கும் போதிய இடஒதுக்கீடு செய்யவில்லை. இந்தக் கஞ்சத்தனமான இடஒதுக்கீட்டின் இருக்கமான பகுதியில் இஸ்லாத்தின் வருகையைப் பற்றி ஆராய்ந்து எழுத இடமில்லாமல் போய்விட்டது.

- தோப்பில் முஹம்மது மீரான்

நன்றி: மக்கள் உரிமை | ஆகஸ்ட் 26 - செப் 01, 2005

தொடரும்..

குஜராத்: திட்டமிட்ட வெறியாட்டம் - 5

இப்படியாக ஒரு சாரார் கடைவீதிகளில் உள்ள முஸ்லிம்களின் கடைகள், தொழில் நிறுவனங்கள், ஹோட்டல்கள் என்று எதையும் விட்டுவைக்காமல் தான் கொண்டுவந்த பட்டியலை சரிபார்த்து, சரிபார்த்து தங்களுடைய வேலையை கச்சிதமாக செய்து கொண்டிருந்த வேளை, மற்றவர்கள் - இந்து பயங்கரவாதிகள் முஸ்லிம்களின் குடியிருப்புகளுக்கு சென்றார்கள்.

அர்பான் நகர் என்றொரு இடம். இதில் முஸ்லிம்கள் கணிசமாக வாழ்ந்து வந்தார்கள். அழகான இந்த நகர் நாளை எரிந்து சாம்பல் ஆகும் என்று யாரும் நினைத்துகூட பார்க்கவில்லை. எங்கு நோக்கினாலும் இடிக்கபட்ட வீடுகள். புதிதாக வண்ணம் பூசப்பட்ட வீட்டின் சுவரில் படிந்திருந்த கரும்புகை, நான் பயங்கரவாதிகளால் கேஸ் அடித்து தீயூட்டப்பட்டேன் என்று சொல்லாமல் சொல்லிற்று. எரிந்த வீட்டின் உள்ளிருந்து எரிந்த போன முஸ்லிமின் உடலிருந்து வந்த அழுகிய நாற்றம் அங்கிருந்தவர்களை இங்கே வராதீர்கள். வந்தால் உங்களுக்கும் இந்த கதிதான் என்று கூறி விரட்டியடித்தது. எங்கும் துயரம், கலக்கம்.

இந்த நகரில் உள்ள முஸ்லிம்களை அழிப்பதற்காக, வகுப்புவெறியர்களின் ஒரு பெரும் கூட்டம் ரோட்டோரத்தில் வந்து கூடியது. இந்த கூட்டத்தை கட்டுப்படுத்த, வழிநடத்த ஒரு தளபதி தேர்ந்தெடுக்க பட்டிருந்தார். அவர் பெயர் ரவீந்தர் சர்மா. இவர் பஜ்ரங்தளத்தை சேர்ந்தவர்.

முதலில் முஸ்லிம்களின் மீது கற்களை எறிந்தார்கள். அதை தொடர்ந்து அங்கிருந்த காவல் நிலையத்தை சார்ந்த பூபார்டன் காட்வி என்ற காவலர் துப்பாக்கியை கொண்டு முஸ்லிம்களை நோக்கி சுட ஆரம்பித்தார். இதில் அந்த பகுதியில் உள்ள ரெடிமேட் கடையில் வேலை செய்து வந்த, பீகாரை சேர்ந்த ஒரு முஸ்லிம் காயம்பட்டு வீழ்ந்தான். காவலுக்கு கெட்டிகார காவலர்கள் இவரை காப்பாற்றி இருக்கலாம். ஆனால் வகுப்புவெறி தலைக்கேறிய காவலர்கள் பாசிஸ்ட்டுகளோடு சேர்ந்துகொண்டு அந்த இளைஞனின் மீது பெட்ரோலை ஊற்றினார்கள். தீயிட்டு கொளுத்தினார்கள். அங்கே அந்த முஸ்லிம் கறிகட்டையாக உருமாற்றம் பெற்றான் இந்த பாசிஸ்ட்டுகளின் கரங்களால்.

இந்த காட்சி கண்ட முஸ்லிம்கள் விழித்து கொண்டார்கள். இனி இவர்கள் நம் வீடுகளுக்கும் தீயிட்டு கொளுத்துவார்கள் என்ற பயந்து அப்போதே தயார் ஆனார்கள் (அப்போது தான் தயார் ஆனார்கள்) பதிலடி கொடுப்பதற்கு. பஜ்ரங்தளத்தினர் முன்னேறினார்கள். முஸ்லிம்களும் அவர்களை தடுத்து நிறுத்திட முயற்சி செய்தார்கள். அங்கே ஒரு தெருச்சண்டை நடந்தது. முஸ்லிம்கள் இயன்றதை செய்தார்கள். பாசிஸ காவலர்கள் முஸ்லிம்களை சுட தொடங்கினர். துப்பாக்கி சூட்டிற்கு பலியானர்கள் முஸ்லிம்கள் அனைவரும்.

உடனே பஜ்ரங்தளத்தினர், தாங்கள் தயாராக கொண்டுவந்திருந்த பெட்ரோல் மற்றும் கேஸ் சிலிண்டர்களையும் திறந்துவிட்டார்கள் முஸ்லிம்களின் வீடுகளின் மீதும், கடைகளின் மீதும். முஸ்லிம்கள் தப்பி பிழைக்க வழியில்லாமல் தீயுடன் கருகி சாம்பல் ஆனார்கள்.

இதுபோல கலவரம் குஜராத்திற்கு புதிதல்ல. இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து பல கலவரங்களை சந்தித்துள்ளது குஜராத். நாட்டின் எதாவது ஒரு பகுதியில் சின்ன பிரச்னை ஏற்பட்டாலும், உடனே பாதிப்புக்கு உள்ளாவது இந்த குஜராத் தான். இதனால் தான் குஜராத்தை எந்த நேரத்திலும் கலவரம் வெடிக்கும் பகுதி (Sensitive Area) என்று கூறுவார்கள். காரணம் நாடு பிரிவினையின் போது, பாகிஸ்தானிலிருந்த இந்துக்களை அங்கிருந்த முஸ்லிம்கள் விரட்டியடித்தார்கள். அப்படி விரட்டியடிக்கப்பட்ட இந்துக்கள் குஜராத்தில் தான் தஞ்சம் அடைந்தார்கள் என்று காலங்காலமாக நம்பி வருகின்றனர். இந்த நம்பிக்கையை VHP, பஜ்ரங்தளத்தினர் அடிக்கடி ஊதி பெரிதாக்கி வருகின்றனர். தாங்கள் விரட்டியடிக்கப்பட்டதற்கு இந்த முஸ்லிம்கள் தான் காரணம் என்று தங்கள் ஆத்திரத்தை இந்த அப்பாவி முஸ்லிம்களின் மேல் காட்டுகிறார்கள்.

இவர்கள் முஸ்லிம்களிடம் ஆத்திரத்தை காட்டும் போதெல்லாம், அங்கே ஒரு கலவரம் வெடிக்கும். அப்பாவி முஸ்லிம்கள் அங்கே வெட்டி கூறுபோடப்படுவார்கள். முஸ்லிம் பெண்கள் கதற கதற நடுதெருவில் நிர்வாணப்படுத்தப்பட்டு கும்பல் கும்பலாக கற்பழிக்கப்படுவார்கள். பின்னர் இந்த ரத்தவெறி பிடித்த மிருகங்கள், ஈவு இரக்கமின்றி எரியும் நெருப்பில் முஸ்லிம்களை வீசியெறிந்து அவர்கள் கதறும் காட்சியை கண்டு ரசிப்பார்கள். எதிர்த்து கேட்க யாரும் இல்லாததால் குஜராத்தில் ஆர்எஸ்எஸ், VHP, பஜ்ரங்தளத்தினர் ஒரு ரவுடி ராஜாங்கத்தையே இதுவரை நடத்திவந்துள்ளனர். இப்படி நடந்த கலவரங்களில் முக்கியமானது 1947, 1952, 1959, 1961, 1965, 1967, 1972, 1974, 1980, 1983, 1989, 1990, 1992 கலவரங்கள். இந்த கலவரங்களால் அதிகமாக பாதிப்புக்கு உள்ளானது முஸ்லிம்கள் தான். வீடுகளையும், குருவி போல் சேர்த்து வைத்த சொத்துகளையும் இழந்த இவர்கள் ரயில் தண்டவாளம் அருகே சிறு குடிசைகள் அமைத்து கொண்டு தங்கள் வாழ்வை தொடர்கின்றார்கள்.

Ref:
ரியாஸ் அஹ்மத் அவர்களின் குஜராத் கலவர தொகுப்பு

Wednesday, September 14, 2005

ஆங்கிலேயர் மூட்டிய பகைமைத் தீ

ஜெ. ராஜா முகமதுவின் கடிதம்: 'ஆங்கிலேயர் மூட்டிய பகைமைத் தீ'

ஆனந்த விகடன் 17.4.05 இதழில் 'கற்றதும் பெற்றதும்' பகுதியில் சுஜாதா வைஷ்ணவஸ்ரீ எழுதியுள்ள ஸ்ரீரங்கம் தல வரலாறு கூறும் கோயில் ஒழுகு புத்தகத்தில் வரும் செய்திகளை அலசியுள்ளார். ஸ்ரீரங்கத்திற்குத் சித்திரைத் தேர் இழுக்க வரும் கோவிந்தா கூட்டம் பாடும் நாட்டுப்புறப் பாடல்களில் வரலாற்றுச் செய்திகள் பிரதிபலிக்கக்கூடும் எனவும், கி.பி. 1323இல் முகம்மதியர் படையெடுப்பின்போது 13,000 வைஷ்ணவர்கள் கொல்லப்பட்ட நிகழ்ச்சி பற்றி ஏதாவது செய்தி கிடைக்கலாம் எனவும் தனது விபரீதக் கற்பனையைக் கடைவிரித்துள்ளார்! வரலாற்று நூல்களில் காணாத விஷயம்!

இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததா? 1323இல் டெல்லி சுல்தான் முகம்மது பின் துக்ளக் தமிழகத்தின் மீது படையெடுத்து வெற்றி கொண்டு மதுரையில் ஆட்சியமைத்தார். இந்தப் படையெடுப்பின்போது முஸ்லிம்களின் படை ஸ்ரீரங்கம் சென்றது குறித்தும் அங்கு 13000 வைஷ்ணவ பிராமணர்களைக் கொன்றது குறித்தும் முஸ்லிம் வரலாற்று ஆசிரியர்களின் குறிப்பில் செய்தி ஏதும் இல்லை. சமகாலத்துத் தமிழ்நாட்டு வரலாற்று ஆசிரியர்களின் குறிப்பிலும் செய்தி ஏதும் இல்லை. மாலிக்காபூரின் படையெடுப்பை சுஜாதா குறிப்பிடுகிறார் போலும். ஆனால் இது நடந்தது 1311இல். மாலிக் காபூரின் படையெடுப்பு குறித்து அமீர் குஸ்ருவின் குறிப்புகள் மட்டுமே சான்றாகக் காட்டப்படுகின்றன. வேறு சான்றுகள் எதுவும் இல்லை. மாலிக் காபூரின் படையெடுப்பு நிகழ்ந்த ஊர்கள், கொள்ளையடித்துச் செல்லப்பட்ட பொருட்களின் அளவு ஆகியன குறித்து வரலாற்று ஆய்வாளர்களிடையே வண்டி வண்டியாய்க் கருத்து வேற்றுமை உண்டு.

திருச்சிப் பகுதியில் 26.03.1311 முதல் 01.04.1311 வரை ஏழு நாட்கள் பிர்துல், காந்தூர், ஜல்கோட்டார், பிரமஸ்த்புரி ஆகிய இடங்களை மையமாகக் கொண்டு சண்டை நடைபெற்றதாக குஸ்ருவின் குறிப்பு கூறுகிறது. இவை எந்த ஊராக இருக்கலாம் என அடையாளம் கண்டுபிடிக்க முற்பட்ட வரலாற்று ஆசிரியர்கள் தங்கள் மனம்போல் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டிருக்கின்றனர். இதைப் பற்றி அதிகமாக எழுதி இருப்பவர் கிருஷ்ணசாமி ஐயங்கார் (புத்தகம்: South India and Her Mohammedan Invaders) மேற்சொன்ன ஊர்களில் பிரமஸ்த் புரி என்பரை ஏதாவது ஒரு பெரிய கோயில் நகரத்துடன் தொடர்புபடுத்திவிட தண்டப் பிரயத்தனப்பட்டிருக்கிறார் ஐயங்கார். இவ்வூர் சீர்காழி, சிதம்பரம் ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் ஆகிய ஊர்களில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம் என அனுமானிக்கிறார். ஸ்ரீரங்கம் என அறுதியிட்டுச் செல்ல அவரால் முடியவில்லை. சிதம்பரம்தான் என அடித்துக் கூறுகிறார் சத்தியநாத ஐயர். இல்லை, இல்லை காஞ்சீபுரம் என்கிறார் நீலகண்ட சாஸ்திரி. ஸ்ரீரங்கமாக இருக்கலாம் என இன்னொருவர் கூறுகிறார். எத்தனை முரண்பாடு!

எனவே, ஸ்ரீரங்கத்தில் மாலிக் காபூர் படையெடுப்பு நடைபெற்றதா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. சரி, ஸ்ரீரங்கத்தில் மாலிக் காபூர் படையெடுப்பு நடந்ததாகவே வைத்துக்கொள்ளுவோம். அப்போது 13000 வைணவ பிராமணர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற புள்ளி விவரத்தை எந்த சென்சஸ் புத்தகத்திலிருந்து சுஜாதா எடுத்தார்?

பிராமணர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எப்போதும் நெருங்கிய நல்லுறவு உண்டு. முஸ்லீம் மன்னர்களின் அமைச்சர்களாகவும் உயர் அதிகாரிகளாகவும் பிராமணர்களே இருந்துள்ளனர். திப்புவின் அமைச்சர் பூரணய்யா ஒரு பிராமணர். திப்புவின் மறைவிற்குப் பிறகு திப்புவின் மகனிடம் நாடு ஒப்படைக்கப்பட வேண்டுமென ஆங்கிலேய அரசுடன் வாதாடியவர். இதுபோல் இன்னும் பல அரிய செய்திகள் உண்டு. ஒரு காதல் கதையைக் கேளுங்கள்!

திருவரங்கன் திருமேனியைக் கண்டு காதல் கொண்டு தனது காதல் நிறைவேறாததால் ஸ்ரீரங்கம் வந்து செத்து மடிந்த டில்லி சுல்தானிய இளவரசிக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் துலுக்க நாச்சியார், பீவி நாச்சியார் என்ற பெயரில் இன்றும் வழிபாடு நடைபெறுகிறது. இதை 1961இல் வி. ஹரிராவ் எழுதியுள்ள ஸ்ரீரங்கம் கோவில் ஒழுகு சிறப்பித்துக் கூறுகிறது. இது சமய நல்லிணக்கம் நிமித்தம் ஏற்பட்ட பாசமும் நேசமும் நிறைந்த கதையாகக்கூட இருக்கலாம். இதை ஏன் சுஜாதா கண்டுகொள்ளவில்லை? வெட்கமா?

இந்திய இனங்களுக்கிடையே பகைமைத் தீயை உண்டாக்க 150 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் திட்டமிட்டு இந்திய வரலாற்றைத் திரித்து எழுதினர். இதன் ஒரு பகுதிதான் மாலிக் காபூர் படையெடுப்பு குறித்த செய்தியும்! இது குறித்து நமது நாட்டு வரலாற்று ஆசிரியர்கள் மேலாய்வு செய்யாமல் கிளிப்பிள்ளைகளாக இருந்து வந்துள்ளனர். உண்மை புதைந்து போயிற்று! ஆங்கிலேயர் மூட்டிய பகைமைத் தீ இன்னும்கூட எரிந்துகொண்டுதான் இருக்கிறது. தனது பங்கிற்கு சுஜாதாவும் கொஞ்சம் நெய் அபிஷேகம் செய்திருக்கிறார்! சுஜாதாவிடம் ஆதாரம் இருந்தால் காட்டட்டும். ஏற்றுக்கொள்ளவும் விவாதிக்கவும் தயார். அமைதிப் பூங்காவாக விளங்கும் தமிழகத்தில் வேண்டாம் இந்த விஷ(ம)ப் பிரச்சாரம்! சுஜாதா போன்ற எழுத்தாளர்கள் சமுதாய நல்லிணக்கச் சிந்தனையுடன் எழுதுவது நல்லது. தமிழ் வார இதழ்களில் நம்பர் ஒன்-ஆக விளங்கும் ஆனந்த விகடனில் இப்படிப்பட்ட அரைகுறைச் செய்திகள் வருவது வருத்தத்தை அளிக்கிறது.

இப்படிக்கு
ஜெ. ராஜா முகமது

('தமிழக முஸ்லிம்களின் கடல் வாணிப வரலாறும், சமுதாய வாழ்க்கையும்' என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற டாக்டர் ஜெ. ராஜா முகமது தமிழ்நாடு அரசு அருங்காட்சியகத் துறையின் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவரது 'புதுக்கோட்டை மாவட்ட வரலாறு', பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாற்று மாணவர்களுக்குப் பாட நூலாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது)

நன்றி: காலச்சுவடு

விஷ வித்துக்களை விதைப்பது போலாகும்

கோம்பை எஸ். அன்வரின் கடிதம்: "விஷ வித்துக்களை விதைப்பது போலாகும்"

ஆனந்த விகடனின் வாசகனாகிய நான், கடந்த 17.04.05 தேதியிட்ட இதழில் திரு. சுஜாதாவின் 'கற்றதும் பெற்றதும்' பகுதியைப் படித்து அதிர்ந்துபோனேன். ஸ்ரீரங்கத்தில் தேர் இழுக்கும் கோவிந்தா கூட்டத்தினரின் நாட்டுப்புறப் பாடலை ஆராய்ந்தால், கி.பி. 1323இல் முகமதியர் படையெடுப்பின்போது 13,000 ஸ்ரீ வைஷ்ணவர்கள் கொல்லப்பட்டது பற்றி ஏதாவது செய்தி கிடைக்கலாம் என்று 'கோயில் ஒழுகு' கூறுவதாக ஒரு பெரும் குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். இச்செய்தி என்னை அதிர்ச்சியடையச் செய்தாலும், நம்மை ஆண்ட ஜரோப்பியக் காலனிய ஆதிக்கவாதிகள் பிரித்தாளும் சூழ்ச்சியோடும் மத ரீதியாகப் போரிட்ட (Crusade) தங்களுடைய வரலாற்றின் பிரதிபலிப்பாக இந்திய வரலாற்றை எழுதும்போது தெரிந்தோ தெரியாமலோ பல தவறுகளுடன், பாரபட்சமாகவே எழுதியுள்ளனர் என்பதை நன்கறிந்தவன் நான். அத்தகைய வரலாற்றைக் காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று 50 ஆண்டுகளுக்கு மேலாகியும் நம்மவர்கள் சிலர் அறியாமையிலும் பலர் அரசியல் சுயநோக்குடனும் பின்பற்றிவருகின்றனர். இத்தகைய தவறான வரலாற்றுத் தகவல்களால் நாம் இந்தியப் பிரிவினை, மதக் கலவரங்கள், பாபர் மசூதி இடிப்பு என்று அதன் பலனை இன்னமும் அனுபவித்துவருகின்றோம்.

'முகம்மதியர்கள் படையெடுப்பு' என்ற வார்த்தைப் பிரயோகமே தவறானது, மிகவும் ஆபத்தானது. ஏனென்றால் படையெடுப்பு என்ற வார்த்தை கொலை, கொள்ளை போன்றவற்றையே நமக்கு நினைவுபடுத்தக்கூடியது. அது மட்டுமன்றி முகம்மதியர்கள் படையெடுப்பின் மூலம் மட்டுமே இந்தியாவிற்கு வந்தனர் என்ற தவறான கருத்தையும் இது சித்தரிக்கின்றது.

எனது பள்ளிப் பிராயத்தில் விளையாட்டு, சண்டை சச்சரவில் முடிவுறும்போது பாகிஸ்தானுக்குப் போக வேண்டியதுதானே துலுக்கா என்று அவமதிக்கப்பட்டிருக்கின்றேன். என்னுடைய இந்த வலி பள்ளிப் பருவத்தில் பல முஸ்லிம் சிறுவர்கள் இன்று அனுபவித்து வருவதுதான்.

அச்சிறு பிராயத்திலேயே என் வீட்டில் நிலவிய தீவிர தமிழ்ப் பற்றும், தமிழர் என்பதில் என் உற்றார் உறவினர் கொண்டிருந்த பெருமையும் என்னை சக மாணவர்கள் சிலரின் அவமதிப்பை அலட்சியப்படுத்த உதவியது. இன்று நான் வரலாற்றின் பக்கங்களைப் புரட்டும்பொழுது 2000 வருடத்திற்கு மேலான தமிழக அரேபியக் கடல் வணிகத் தொடர்பினாலும் அந்த வணிக மற்றும் கலாச்சார உறவுகளினால் அரேபியாவில் இஸ்லாம் மலர்ந்த சிறிது காலகட்டத்திலேயே தமிழகத்திலும் அமைதியாக இஸ்லாம் காலடி பதித்தது என்பதை உணர்கின்றேன்.

இதற்கான ஆதாரம், இன்றும் திரு. சுஜாதாவின் சொந்த ஊரான ஸ்ரீரங்கத்திற்கு அருகில் திருச்சி நகரில், கோட்டை இரயிலடியில் கி.பி. 734இல் (ஹிஜ்ரி 116ல்) கட்டப்பட்ட 'கல்லுப்பள்ளி' என்றழைக்கப்படும் பள்ளிவாசலில் காணலாம். திருச்சி அன்று சோழர்களின் வசம் இருந்திருக்கலாம். தமிழக மன்னர்கள் இஸ்லாமியரின் தொழுகைக்காகப் பள்ளிவாசல்கள் கட்டிக்கொள்ள நிலத்தை தானம் செய்ததற்கும் வரி விலக்கம் அளித்ததற்கும் சான்றுகள் உள்ளன. இராமநாதபுரத்திலிருந்து கீழக்கரை செல்லும் வழியில் உள்ள திருப்புல்லாணியில் உள்ளது வைணவக் கோயிலான ஜெகநாதர் சுவாமி கோயில். இந்த ஆலயத்தில் 'கீழச் செம்பி நாட்டுப் பவுத்திர மாணிக்கப் பட்டணத்து கீழ்பால் சோனகச் சாமந்த பள்ளிக்கு இறையிலிவரி விலக்குடன் மானியம் ஆகக் கொடுத்த நிலங்கள்' பற்றிய மாறவர்மன் சுந்தர பாண்டியனின் (கி.பி. 1239-1251) கல்வெட்டினைக் காணலாம். சோனகர் என்பது தமிழக முஸ்லிம்களை அக்காலத்தில் குறிக்கும் சொல்.

இப்பகுதியைச் சார்ந்த தகியுத்தீன் கி.பி. 1286 காலகட்டத்தில் பாண்டிய மன்னரின் அமைச்சராகவும், தளபதியாகவும் 'கறுப்பாறு காவலன்' எனும் கடலாதிக்க அதிபராகவும் இருந்து, ஈழ நாட்டின் மீது படையெடுத்து வெற்றி பெற்று வந்ததனை ஏ.வி. சுப்பிரமணிய ஐயர் தமது 'புராதன தக்காணம்' எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். ஆக தமிழகத்திலேயே வாழ்ந்தது மட்டுமல்லாமல் தமிழக அரசர்களின் படைகளில்கூடத் தமிழக முஸ்லிம்கள் இடம்பெற்றிருந்தபோது 'முகம்மதியப் படையெடுப்பு' என்ற வார்த்தைப் பிரயோகம் மிகத் தவறானதாகவே படுகின்றது.

தவிரவும் இந்திய வரலாற்றில் 'முகம்மதியர் படையெடுப்பு' என்றால் கொலை, கொள்ளை, கோயில் இடிப்பு என்ற மாயை உள்ளது. வரலாற்றைச் சற்றுக் கூர்ந்து கவனித்தால் சேர, சோழர், பாண்டியர், சாளுக்கியர், ஹொய் சாலர்களின் படையெடுப்புகளிலும் கொலை, கொள்ளை, கோயில் இடிப்பு மற்றும் சிலைகளை அபகரித்தல் போன்றவை நடந்தேயுள்ளன.

11ஆம் நூற்றாண்டில் சோழர்களின் படையெடுப்பு குறித்து அங்கலாய்க்கும் மேற்கு சாளுக்கியக் கல்வெட்டுக்களைப் படித்துப் பாருங்கள். அதேபோல் 15ஆம் நூற்றாண்டில் கýங்க மன்னன் கபிலேஸ்வர கஜபதியாவானின் தமிழகப் படையெடுப்பில் கோயில்கள் இடித்துத் தள்ளப்பட்டு அங்குள்ள ஆபரணங்களும், சிலைகளும் அபகரிக்கப்பட்டன. இதுபோல் எண்ணற்ற ஆதாரங்களுடன் கூடிய வரலாற்று நிகழ்வுகளை எம்மால் எடுத்து வைக்க இயலும். ஆனால் இது அன்றைய கால கட்டத்தின் இயல்பு என்பதாலும், ஆறிப்போன இரணங்களை மீண்டும் கிளறுவதாக அமையும் என்ற பொறுப்புணர்வினாலும் தவிர்க்கிறோம்.

இத்தகைய சிந்தனையுடனே திரு. சுஜாதா மேற்கோள் காட்டியுள்ள 'கோயில் ஒழுகு' நூலை பெறப்பெற்று வாசித்தோம். முதலில் கண்ணில்பட்டது எண்ணிக்கைப் பிழை. நூலில் குறிப்பிடப்பட்டுள்ள 12,000 ஸ்ரீவைஷ்ணவர்கள், 13,000 ஆக சுஜாதாவின் 'கற்றதும் பெற்றதும்' கட்டுரையில் உயர்ந்திருக்கிறார்கள். இதனை அச்சுப் பிழை என்று ஒதுக்கிவிடலாம். ஆனால் நூலை வாசிக்கும்போது நூலாசிரியரே பல இடங்களில், இப்படையெடுப்புகள் குறித்து சரியான ஆதாரங்கள் இல்லை, ஒருமுறை நிகழ்ந்ததா அல்லது இருமுறை நிகழ்ந்ததா எனத் தெரியவில்லை என்று குழப்பத்துடனே எழுதியுள்ளார்.

நூலைப் புரட்டுகையில் இன்னொரு குறிப்பும் நமது கண்ணில்பட்டது. பக்கம் 468இல் 'பன்னீராயிரவர் முடிதிருத்திய பன்றியாழ்வான் மேட்டுக் கலகம்' என்பது 'பன்னீராயிரம் குடிமக்களுடைய தலையைத் துண்டிக்கப்பட்ட நிகழ்ச்சி என்று பொருள்படும்' என்று விளக்கம் காணப்படுகிறது. ஆக 12,000 குடிமக்கள் ஸ்ரீவைஷ்ணவர்களாக அவதாரம் எடுத்துவிட்டனரா என்று தெரியவில்லை.

இவ்வாறாகப் பல கேள்விக்குரிய முரண்பாடுகளுடன், சங்கப் பரிவாரத்தின் பத்திரிகையான 'பாஞ்சஜன்ய'த்தில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதிவந்த 'கோயிலொழுகு' நூல் ஆசிரியர் ஸ்ரீ வைஷ்ணவஸ்ரீ அ. கிருஷ்ணமாச்சார்யராலேயே குழப்பமான, முரண்பாடான தகவல் என்று வர்ணிக்கப்பட்ட சம்பவத்தை திரு. சுஜாதா அவர்கள் பல இலட்சம் தமிழ் மக்கள் படிக்கும் ஆனந்த விகடனில் வெளியிட்டிருப்பது வேதனையானது, வருந்தத்தக்கது. இத்தகைய தகவல் வரலாற்று பிரக்ஞையற்ற முஸ்லிம்களிடையே தேவையற்ற குற்ற உணர்ச்சியையும் தூண்டும். இந்துக்களும் இஸ்லாமியரும் தமிழர்கள் என்ற அடிப்படையில் 1000 ஆண்டுகளுக்கு மேலாக ஒன்றாக வாழ்ந்துவரும் தமிழகத்தில் இது போன்ற ஆதாரமற்ற கருத்துக்களை முன்னிலைப்படுத்துவது விஷவித்துகளை விதைப்பது போலாகும்.

எழுத்தாளர்களுக்கு, அதுவும் முன்னிலைப் பத்திரிகைகளில் எழுதும் எழுத்தாளர்களுக்கு சமூகப் பொறுப்பு வேண்டும். இனியாவது திரு. சுஜாதா இது போன்ற ஆதாரமற்ற தகவல்களை முன்னிலைப்படுத்தாமல் இருப்பது நல்லது.

இப்படிக்கு
கோம்பை எஸ். அன்வர்

(செய்தியாளர், இதழியல் புகைப்படக்காரர் மற்றும் குறும்பட இயக்குநர் என்று பல தளங்களில் இயங்கும் எஸ். அன்வர், தற்சமையம் வேலூரின் வரலாறு குறித்து ஒரு குறும்படத்தை இயக்கிவருகிறார்.)

நன்றி: காலச்சுவடு

Monday, September 12, 2005

குஜராத்: திட்டமிட்ட வெறியாட்டம் - 4

திட்டங்களுக்கு செயல் வடிவம் கொடுக்கப்படுகிறது

இந்த பாசிஸ வெறியர்களிடமிருந்து தப்பித்து கொள்ளுங்கள், VHPயினர் ஆயுதங்களுடன் கூட்டங்கூட்டமாக வருகிறார்கள் என்று சக இந்துக்கள் பதட்டத்துடன் வந்து சொன்னார்கள். வெறியர்களிடமிருந்து தப்பி பிழைக்க, கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்து மூட்டை கட்டி கொண்டு கண்மண் தெரியாமல் ஓடினார்கள் முஸ்லிம்கள்.

தப்பியவர்கள் போக மீதமுள்ள முஸ்லிம்களை இந்த வெறியர்கள் துண்டு துண்டாக வெட்டி போட்டார்கள். ரோடெங்கும் மூட்டை முடிச்சுகள் சிதறி கிடந்தன. இடையிடேயே முஸ்லிம்களின் சதை துண்டுகள். பாசிஸ கொடியவர்கள் ஒரு சிறிய சூட்கேஸை கூட விட்டு வைக்கவில்லை. அதையும் பெட்ரோல் விட்டு எரித்துவிட்டார்கள்.

எங்கும் கலக்கம், பதட்டம், பீதி. தப்பி பிழைத்த முஸ்லிம்கள், பயத்தில் உறைந்து போய் நின்றார்கள். வெறித்து பார்த்த கொண்டிருக்கும் அவர்களின் முகத்தில் எப்போதும் மெல்லியதாய் கண்ணீர் வழிந்து கொண்டே இருக்கிறது.

கோத்ரா நிகழ்வுக்கு பிறகு, இந்த சந்தர்ப்பத்திற்காக காத்துகொண்டிருந்த VHP, மறுநாள் பிப்ரவரி 28, 2002 அன்று சிறிதும் தாமதம் செய்யாமல் பந்திற்கு அழைப்புவிடுத்தது. இதற்கிடையில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நாட்டின் அனைத்து இடங்களுக்கும் செய்திகளாக பத்திரிக்கை வழி வந்து சேர்ந்தது. இதனையும் கச்சிதமாக செய்தார்கள் ஆட்சியில் அமர்ந்திருக்கும் சங்பரிவாரத்தினர். முஸ்லிம் பயங்கரவாதிகள் ராமபக்தர்களை எரித்து கொன்றார்கள் என்ற செய்தியை கேள்விபட்டவுடன் இந்துக்கள் ஆவேசம் அடைவார்கள் என்று எதிர்ப்பார்த்தார்கள். அப்படியே நடந்தது.

VHP அழைப்பு விடுத்த பந்திற்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றால் நம் கடைகள், தொழில்சாலைகளை எல்லாம் அடித்து நொறுக்கிவிடுவார்கள் என்று பயந்த குஜராத் மக்கள் பந்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். குஜராத் நகரங்கள் எல்லாம் அமைதியில் ஆழ்ந்தது. அந்த அமைதியை கொஞ்சம் நீடிக்கவிடவில்லை VHP, பஜ்ரங்தள், ஆர்எஸ்எஸ் வெறியர்கள். ஏற்கனவே தாம் போட்டு வைத்த திட்டங்களை செயல்படுத்த தலைபட்டார்கள்.

முஸ்லிம்களின் கடைகள் குறிவைத்து அழித்தல்

கையில் தாம் சேகரித்து வைத்திருந்த பட்டியலை எடுத்துகொண்டார்கள். கடைவீதிக்கு வந்தார்கள். வரிசை கிரமாக முஸ்லிம்களின் கடைகள் குறிவைத்து அழிக்கப்பட்டது. எரித்துவிடப்பட்டது. இந்து தீவிரவாதிகள், முதலில் கடைகளுக்குள் புகுந்து தன்னால் இயன்ற வரை அனைத்து சாமான்களை கொள்ளையடித்தார்கள். இவர்கள் அனைவரும் ஏழ்மையால் வாடுபவர்கள் அல்லர். பசி பட்டினி என்று பிச்சையெடுக்கும் பிச்சைகாரர்கள் அல்லர். வருமானத்திற்கு வழியில்லாதவர்களும் அல்லர். இந்த தீவிரவாதிகளில் பெரும்பாலோர் நடுத்தர வயதுடைய, திடகாத்திர உடலுடைய, போதுமான பொருளாதார வளமுடையவர்கள். முஸ்லிம்களின் கடைகளை சூறையாடுவதற்கு போட்டிபோட்டு கொண்டு வந்தனர். இதில் பெரும் பெரும் செல்வந்தர்களும் தன்னுடைய காரை நிறுத்திவிட்டு கடைகளில் கொள்ளையடித்து சென்றனர் என்பதுதான் வேதனையான விஷயம்.

இவர்கள் திருடிகொண்டிருக்கும் போது, போலீஸ்காரர்கள் வேகமாக வந்தார்கள். போலீஸ் படையை பார்த்தவுடன் தீவிரவாதிகள் நிலைகுலைந்தார்கள். எங்கே போலீஸ் நம்மை கைது செய்துவிடுவார்களோ என்று ஓட்டம் பிடிக்க தொடங்கினர். ஓடியவர்கள் திரும்பி பார்த்த போதுதான் அவர்களுக்கு தெரிந்தது. இந்த போலீஸ்காரர்கள் நம்மை பிடிக்க வரவில்லை. முஸ்லிம்களின் கடைகளில் உள்ள சாமான்களை சூறையாட வந்தவர்கள் என்று. பின்னர் இந்த தீவிரவாதிகள் போலீஸ் பந்தோபஸ்துடன் திருட்டை தொடர்ந்தார்கள். இயன்றதை சுருட்டிகொண்டார்கள். மீதமுள்ளது யாருக்கும் பயன்படகூடாது என்று கடைக்குள் பெட்ரோலை ஊற்றினர். தீ வைத்தனர். அந்த கடை ஜுவாலை விட்டு எரிவதை கண்டு குதூகலித்தனர். இனி கடையில் ஒன்றும் தேராது என்று ஊர்ஜிதம் செய்து கொண்டு அடுத்த கடைக்கு சென்றனர். இப்படியாக முஸ்லிம்களின் கடைகள் குறிவைத்து சூறையாடப்பட்டு பின்னர் எரியூட்டப்பட்டது.

முஸ்லிம்கள் தங்களின் கடைகளின் பெயர்களை முஸ்லிம் பெயர்களுக்கு சற்றும் சம்பந்தமில்லாத பெயர்களை – பொதுபெயர்களைதான் வைத்திருந்தார்கள். இருந்தும் அந்த கடைகள் எல்லாம் சரியாக குறிபார்த்து அழிக்கப்பட்டது. எந்த அளவுக்கென்றால், கடைவிதீயில் எல்லா கடைகளும் இந்துக்களுக்கு சொந்தமானதாக இருக்கும். மூலையில் ஒரு முஸ்லிம் கடைவைத்திருப்பார். அவரை பார்த்தால் முஸ்லிம்களுக்கே உரிய அடையாளங்களான தொப்பியோ, தாடியோ எதுவும் இருக்காது. அந்த கடையின் பெயரும் இது ஒரு முஸ்லிமின் கடை என்று பறையடிக்காது. இருந்தும் அந்த கடை – அது ஒரு சின்ன பெட்டியாக இருந்தாலும், அது ஒரு முஸ்லிமிற்கு சொந்தமானது என்பதால் அழிவுக்கு உள்ளானது. தீயிட்டு கொளுத்தப்பட்டது. அந்த சின்ன இபட்டி கடையின் மூலம் வரும் சிறிய வருமானமும் அழிக்கப்பட்டு அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாமல் ஆக்கப்பட்டது. சின்ன பெட்டி கடைகள் மட்டுமல்ல பெரும் பெரும் தொழில் நிறுவனங்களுக்கும் இதே நிலை தான்.

இந்த வகுப்புவாத பாசிஸ்ட்டுகள் யார் யாருக்கு எந்தெந்த தொழில் நிறுவனங்கள் சொந்தம் என்ற விவரங்களை தெரிவிக்கும் அரசு ஆவண காப்பகங்ளோடு நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததால் மட்டுமே இவர்கள் இப்படி முஸ்லிம்களின் தொழில் நிறுவனங்களை மிகச்சரியாக அடையாளம் கண்டு அழிக்க முடிந்தது என்பதை நாம் இங்கு கவனிக்கவேண்டும்.

இந்துக்களின் கடைகளுக்கு மத்தியில் ஒரு முஸ்லிம் ஹோட்டல். அதன் பெயர் (Hotel Tasty) ஹோட்டல் டேஸ்டி. இது ஒரு முஸ்லிமிற்கு சொந்தமானது என்று யாருக்கும் தெரியாது. ஹோட்டல் பெயரும் கூட ஒரு பொதுவான பெயர் தான். ஆனால் அந்த ஹோட்டல் வகுப்புவாத VHP, பஜ்ரங்தள தீவிரவாதிகளால் அடித்து நொறுக்கப்பட்டது.

அடுத்து ஹேன்ஸ் இன் என்றொரு தங்கும் விடுதி. இது முஸ்லிமின் தங்கும் விடுதி என்று யாருக்கு அடையாளம் காணமுடியும்? இந்த வகுப்புவாதிகளுக்கு மட்டும் தான் தெரியும். சக முஸ்லிமுக்கு கூட அடையாளம் தெரியாத ஒரு லாட்ஜ். ஆனால் சரியாக அடையாளம் காணப்பட்டு இடித்து தரைமட்டாக்கப்பட்டது.

இதேபோல் ஒரு ரெடிமேட் ஆடையகம், கார் கம்பெனி என்று எதையும் விட்டு வைக்கவில்லை இந்த வெறியர்கள். எப்படி விட்டுவைப்பார்கள்? முஸ்லிமின் சொத்துக்களை அழித்து அவர்களை பிச்சைக்காரர்கள் ஆக்கவேண்டும் என்பது அவர்களின் வாழ்க்கை இலட்சியம் ஆயிற்றே. பாவம் இந்த பரிதாப முஸ்லிம். இவர்களின் வாழ்வில் என்ன தான் இலட்சியம் இருக்கிறது என்று பிறர் பரிதாப படக்கூடிய அளவிற்கு, அனுதாப படக்கூடிய அளவிற்கு முஸ்லிமின் நிலை இன்று.

நம்மை பார்த்து அடுத்தவர் பொறாமை படலாம். ஆனால் அய்யோ பாவம் என்று அனுதாப படக்கூடிய அளவிற்கு ஆகிடகூடாது அல்லவா?.

Ref:
ரியாஸ் அஹ்மத் அவர்களின் குஜராத் கலவர தொகுப்பு

Sunday, September 04, 2005

குஜராத்: திட்டமிட்ட வெறியாட்டம் - 3

மேலும் பெட்ரோலை ஊற்றி எரிப்பதற்கும், கேஸ் அடித்து எரிப்பதற்கும் முறையாக பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்காக இவர்கள் லட்சக்கணக்கில் செலவழித்திருக்கிறார்கள். இந்த பயிற்சிகளை எல்லாம் இவர்கள் மிகவும் சிரமங்களை மேற்கொண்டு தான் எடுக்கிறார்கள் என்பதை நாம் பல நேரங்களில் உணர மறுக்கிறோம். அனைத்தையும் நாம் இலகுவாக பெற்றிட முடியும் என்று அவர்கள் நினைக்கவில்லை. மாறாக கஷ்டப்படாமல் எதையும் சாதிக்க முடியாது. உடலை வருத்தாமல் நம் இலக்கை அடைய முடியாது என்பதை அவர்கள் நன்றாக உணர்ந்தே இருக்கிறார்கள்.

1993ல் பம்பாய் கலவரத்தில் முஸ்லிம்களை அழிப்பதற்கு இவர்கள் ஹிட்லரின் பாணியை கையாண்டார்கள். வாக்களர் பட்டியலை வைத்துகொண்டு முஸ்லிம்களின் வீடுகளில் முதல் நாள் இரவோடு இரவாக பெயிண்டினால் அடையாளம் இட்டார்கள். அடுத்த நாள் அந்த வீடுகளை எல்லாம் சூறையாடி, தீயிட்டு கொளுத்தினார்கள். தீயுடன் சேர்ந்து முஸ்லிம்களின் உடல் ஜுவாலை விட்டு எரிவதைக் கண்டு ரசித்தார்கள்.
இதே பாணியை சற்று நவீன படுத்தி குஜராத்தை அழித்தார்கள். காலம் மாறுகிறது. விஞ்ஞானம் வளர்கிறது. பாசிஸ சிந்தனையும் நவீனப்படுகிறது.

இனப்படுகொலை நடத்தப்பட்ட பல மாதங்களுக்கு முன்பே முஸ்லிம்களின் வீடுகள், முஸ்லிம்களின் கடைகள், வியாபார நிறுவனங்கள், முஸ்லிம்களின் ஹோட்டல்கள், ரெஸ்டாரெண்ட்கள், முஸ்லிம்கள் முதலீடு செய்திருக்கும் நிறுவனங்கள் ஆகியவைகளின் பட்டியல் தயார் செய்யபட்டது. ரேசன் கார்டுகளை வைத்து முஸ்லிம்களின் வீட்டு முகவரியை எடுத்தார்கள். இந்த முகவரிகளை மாநகராட்சியனரும், ரேசன் கார்டு வினியோகம் செய்யும் அதிகாரிகளும் கொடுத்து உதவினர். அது மட்டுமல்ல மாநில தேர்தல் ஆணையமே இவர்களுக்கு வாக்களர் பட்டியலை கொடுத்து உதவி செய்தது. இவர்கள் கஷ்டப்படகூடாது என்று அதிகாரிகளுக்கு அவ்வளவு அக்கறை. (FrontLine March 29, 2002)

மேலும் பள்ளிவாசல் எத்தனை இருக்கின்றன? எங்கெங்கு இருக்கின்றன? தர்காக்கள், முஸ்லிம்கள் முக்கியமாக கருதும் இடங்கள், முஸ்லிம்களால் நடத்தப்படும் அலுவலகங்கள், இப்படி எதையும் விட்டுவைக்காமல் ஒரு முழு அளவிளான பட்டியல் திரட்டப்பட்டது.

குஜராத் கலவரத்தில் சுமார் 500 பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்கள் தரைமட்டமாக்கப்பட்டன. படங்களுக்கு இங்கு சுட்டவும்.

கலவரங்களுக்கு பல நாட்கள் முன்பே, 'முஸ்லிம் கடைகளில் வாங்காதே! பொருளாதார புறக்கணிப்பு ஒன்றே வழி! இன்று முதல் நாம் சபதம் ஏற்போம். நான் முஸ்லிம் கடைகளில் வாங்கமாட்டேன்! அவர்களின் உணவகங்களில் உண்ண மாட்டேன். ஹிந்து பணிமனைகளிலேயே நமது வாகனங்களைப் பழுது பார்ப்போம். முஸ்லிம் பணிமனைகளில் பழுது பார்க்க மாட்டோம். ஊசியிலிருந்து தங்கம் வரை எதையும் நாம் முஸ்லிம்களிடம் வாங்க மாட்டோம்.

முஸ்லிம்களுக்கு வேலை கொடுக்க மாட்டோம். அவர்களிடம் வேலை செய்ய மாட்டோம். அவர்களுக்கு வாடகைக்கு வீடோ, கடையோ கொடுக்க மாட்டோம். அவர்களிடம் வாடகைக்கு வீடோ, கடையோ எடுக்க மாட்டோம். முஸ்லிம்களுக்கு கல்வி கற்று கொடுக்க மாட்டோம். கல்வியை பெற மாட்டோம்.' என்ற இந்த துண்டு பிரசுரத்தை வெளியிட்டார்கள். மேலும் இதை பத்து பேருக்கு நகல் எடுத்து கொடுக்கும் படி கேட்டு பிரசுரம் வெளியிடப்பட்டிருந்தது.

அக்டோபர் மாதம் 1989, பாகல்பூர் 1000 முஸ்லிம்களை காவு கொண்ட கலவரம். இதே விஹிப, பஜ்ரங்தள் முன்னின்று நடத்தியது. அந்த கலவரத்திலும், இதே போன்ற துண்டு பிரசுரம் இப்படி கேட்டு கொண்டது: 'முஸ்லிம்களை துடைத்தெறிய வேண்டும், மிஞ்சியவர்களை பிச்சைகாரர்கள் ஆக்கவேண்டும்' என்று. அதேபோல் குஜராத்திலும் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.

இத்தோடு மட்டுமல்லாது பள்ளிவாசல்களை இடிக்க எங்கிருந்து புல்டோசர்களை கொண்டு வரவேண்டும். எத்தனை புல்டோசர்கள் பயன்படுத்தபட வேண்டும். இடிபாடுகளை அகற்றுவதற்கு எத்தனை கார்ப்பரேஷன் லாரிகள் பயன்படுத்தபட வேண்டும். இடிபாடுகளை எங்கே கொட்ட வேண்டும் என்ற அனைத்தையும் இவர்கள் ஏற்கனவே திட்டமிட்டு வைத்திருந்திருக்கிறார்கள்.

எனவே, இவர்கள் வெகு நாட்களுக்கு முன்னரே கலவரத்தை தொடங்க திட்டம் போட்டு வைத்து விட்டார்கள். கோத்ரா நிகழ்வை இவர்கள் ஒரு சாக்காக எடுத்து கொண்டார்கள் என்பதை வாசகர்கள் மீண்டும் நன்றாக உணரவேண்டும்.

Ref:
ரியாஸ் அஹ்மத் அவர்களின் குஜராத் கலவர தொகுப்பு